12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 32
கேள்வி 32 :
விடை :
சிற்றினமாக்கம்
சிற்றினம் என்பது மரபு ரீதியாகத் தனித்துவம் வாய்ந்ததும், இனப்பெருக்கத் தன்மையுடையதுமான இயற்கையான இனக்கூட்டம் ஆகும்.
சிற்றினமாக்கம் என்பது ஒரு சிற்றினம் பரிணாம மாற்றம் அடைந்து ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வேறுபட்ட சிற்றினங்களாகப் பிரிந்து மாறுவதாகும்.
வகைகள்
- ஓரிடச் சிற்றினமாக்கம் (இனப்பெருக்கம் சார்ந்த சிற்றினமாக்கம்)
- இந்த முறையில், ஒற்றை மூதாதையிடமிருந்து இரண்டு புதிய சிற்றினங்கள் பரிணாமம் பெற்றுத் தோன்றுகின்றன.
- இரண்டு புதிய சிற்றினங்களும் ஒரே புவிப் பகுதியிலேயே வாழ்கின்றன.
- வேற்றிடச் சிற்றினமாக்கம் (புவி சார்ந்த சிற்றினமாக்கம்)
- இந்த முறையில், ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த இனக்கூட்டம் புவியியல் தடையின் காரணமாகப் பிரிக்கப்படும்போது, அவற்றுக்கிடையேயான மரபணு ஓட்டம் தடுக்கப்படுகிறது.
- இவ்வாறு பிரிக்கப்பட்ட இனக்கூட்டம் பரிணாமம் அடைந்து இரண்டு புதிய சிற்றினங்களாக மாறுகின்றன.


0 Comments