12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1
1. பூமியில் முதல் உயிரினங்கள் தோன்றியது.
அ) காற்றில்.
ஆ) நிலத்தில்.
இ) நீரில்.
ஈ) மலைப்பகுதியில்.
விடை : இ) நீரில்.
2. இயற்கைத் தேர்வு வழி சிற்றினத் தோற்றம் என்ற நூலை வெளியிட்டவர்.
அ) சார்லஸ் டார்வின்.
ஆ) லாமார்க்.
இ) வீஸ்மன்.
ஈ) ஹியூகோ டி விரிஸ்.
விடை : அ) சார்லஸ் டார்வின்.
3. கீழ்க்கண்டவற்றில் எது ஹியூகோ டி விரிஸின் பங்களிப்பு ?
அ) திடீர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு.
ஆ) இயற்கைத் தேர்வுக் கோட்பாடு.
இ) முயன்று பெற்றபண்பு மரபுப்பண்பாதல் கோட்பாடு.
ஈ) வளர்கரு பிளாசக் கோட்பாடு.
விடை : அ) திடீர் மாற்றத் தேர்வுக் கோட்பாடு.
4. பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளின் இறக்கைகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.
அ) பரவல் முறை தகவமைப்பு.
ஆ) குவி பரிணாமம்.
இ) விரி பரிணாமம்.
ஈ) மாறுபாடுகள்.
விடை : ஆ) குவி பரிணாமம்.
5. தொழிற்சாலை மெலானினாக்கம் என்ற நிகழ்வு கீழ்க்கண்ட எதனை விளக்குகிறது ?
அ) இயற்கைத் தேர்வு.
ஆ) தூண்டப்பட்ட திடீர்மாற்றம்.
இ) இனப்பெருக்கத் தனிமைப்படுத்தல்.
ஈ) புவியியல் தனிமைப்படுத்தல்.
விடை : அ) இயற்கைத் தேர்வு.
6. டார்வினின் குருவிகள் கீழ்க்கண்ட எதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும் ?
அ) இணைப்பு உயிரிகள்.
ஆ) பருவகால வலசை போதல்.
இ) தகவமைப்பு பரவல்.
ஈ) ஒட்டுண்ணி வாழ்க்கை முறை.
விடை : இ) தகவமைப்பு பரவல்.
7. வளர்கரு பிளாசக் (Germplasm) கோட்பாட்டைக் கூறியவர் யார் ?
அ) டார்வின்.
ஆ) ஆகஸ்ட் வீஸ்மேன்.
இ) லாமார்க்.
ஈ) ஆல்ஃப்ரட் வாலாஸ்.
விடை : ஆ) ஆகஸ்ட் வீஸ்மேன்.
8. புதைபடிவங்களின் வயதைத் தீர்மானிக்க உதவுவது ?
அ) மின்னணு நுண்ணோக்கி.
ஆ) புதைபடிவங்களின் எடை.
இ) கார்பன் முறை வயது கண்டறிதல்.
ஈ) படிவங்களின் எலும்புகளை ஆராய்தல்.
விடை : இ) கார்பன் முறை வயது கண்டறிதல்.
9. புதைபடிவங்கள் பொதுவாக எங்கு காணப்படுகிறது ?
அ) வெப்பப் பாறைகள்.
ஆ) உருமாறும் பாறைகள்.
இ) எரிமலைப் பாறைகள்.
ஈ) படிவுப் பாறைகள்.
விடை : ஈ) படிவுப் பாறைகள்.
10. ஒரு உயிரினத்தின் பரிணாம வரலாறு எவ்வாறு அழைக்கப்படும் ?
அ) மூதாதைத் தன்மை.
ஆ) ஆன்ட்டோஜெனி.
இ) பைலோஜெனி(இன வரலாறு).
ஈ) தொல்லுயிரியல்.
விடை : இ) பைலோஜெனி(இன வரலாறு).
11. ஊர்வன இனத்தின் பொற்காலம்.
அ) மீசோசோயிக் பெருங்காலம்.
ஆ) சீனோசோயிக் பெருங்காலம்.
இ) பேலியோஸோயிக் பெருங்காலம்.
ஈ) புரோட்டிரோசோயிக் பெருங்காலம்.
விடை : அ) மீசோசோயிக் பெருங்காலம்.
12. எந்தக் காலம் 'மீன்களின் காலம்' என அழைக்கப்படுகிறது ?
அ) பெர்மியன்.
ஆ) டிரையாசிக்.
இ) டிவோனியன்.
ஈ) ஆர்டோவிசியன்.
விடை : இ) டிவோனியன்.
13. நவீன மனித இனம் எந்த காலத்தைச் சேர்ந்தது?
அ) குவார்டெர்னரி.
ஆ) கிரட்டேஷியஸ்.
இ) சைலூரியன்.
ஈ) கேம்ப்ரியன்.
விடை : அ) குவார்டெர்னரி.
14. நியாண்டர்தால் மனிதனின் மூளை அளவு
அ) 650-800 க. செ.மீ.
ஆ) 1200 க. செ.மீ.
இ) 900 க.செ.மீ.
ஈ) 1400 க. செ.மீ.
விடை : ஈ) 1400 க. செ.மீ.
15. டார்வினின் கூற்றுப்படி, கரிம பரிணாமத்திற்கான காரணம்
அ) ஒரே சிற்றினத்திற்குள் போராட்டம்.
ஆ) சிற்றினங்களுக்கு இடையே உள்ள போராட்டம்.
இ) நெருங்கிய தொடர்புடைய சிற்றினங்களுக்குள் போட்டி.
ஈ) இடையூறு செய்யும் சிற்றினம் காரணமாக உணவு உண்ணும் திறன் குறைதல்.
விடை : ஆ) சிற்றினங்களுக்கு இடையே உள்ள போராட்டம்.
16. ஒரு இனக்கூட்டம் ஹார்டி வீன்பெர்க் சமநிலையில் எப்போது இருக்காது ?
அ) உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும்போது.
ஆ) திடீர்மாற்றம் இல்லாத நிலையில்.
இ) வலசை போதல் இல்லாத நிலையில்.
ஈ) இனக்கூட்டத்தின் அளவு பெரிதாக இருந்தால்.
விடை : அ) உயிரினங்கள் தேர்வு செய்து கலவியில் ஈடுபடும் போது.


0 Comments