TRB TET EDUCATION கல்வி உளவியல் 100 வினா-விடைகள் - PART 23


வினா எண் 1. பள்ளி முன் பருவம் என்பது எந்த பருவம்?

  1. a) 0-1 ஆண்டுகள்.
  2. b) 3-6 ஆண்டுகள்.
  3. c) சமூக மனப்பரின்மை.
  4. d) இவையனைத்தும்.

விடை : b) 3-6 ஆண்டுகள்.

வினா எண் 2. தொடக்க கல்வி பயில பள்ளிக்கு வரும் போது குழந்தையின் எது 90 சதவீதம் வளர்ச்சி அடைந்துவிடுகிறது?

  1. a) மூளை.
  2. b) எலும்பு மண்டலம்.
  3. c) நாக்கு.
  4. d) நரம்பு மண்டலம்.

விடை : a) மூளை.

வினா எண் 3. அறிதல் திறன் வளர்ச்சி எத்தனை படிநிலைகளில் நடைபெறுவதாக உளவியல் அறிஞர் பியாஜே கூறினார்?

  1. a) 2.
  2. b) 3.
  3. c) 4.
  4. d) 5.

விடை : c) 4.

வினா எண் 4. மனிதன் வளர்ச்சி நிலையை எரிக்சன் எத்தனை படிநிலைகளாக கூறினார்?

  1. a) 4.
  2. b) 5.
  3. c) 7.
  4. d) 8.

விடை : d) 8.

வினா எண் 5: இந்த விளையாட்டு முறையில் மாணவரோ, ஆசிரியரோ அல்லது சமுதாயமோ சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்?

  1. a) பாவனை நடிப்பு.
  2. b) பங்கேற்பு நாடகம்.
  3. c) வார்த்தை விளையாட்டு.
  4. d) சொற்கோபுரம்.

விடை : b) பங்கேற்பு நாடகம்.

வினா எண் 6: மனவெழுச்சி என்பது?

  1. a) மன உணர்ச்சிகளை மேலோங்கி நிற்கும் நனவு நிலை.
  2. b) உள்ளத்தையும் உடலையும் கிளர்ச்சியுறச் செய்யும் ஓர் உணர்வு நிலை.
  3. c) நெருக்கடி நிலைகளில் கிளர்ச்சியடையும் சூழலை ஆதரித்தோ.
  4. d) இவை அனைத்தும்.

விடை : b) உள்ளத்தையும் உடலையும் கிளர்ச்சியுறச் செய்யும் ஓர் உணர்வு நிலை.

வினா எண் 7: அதிக அளவில் கவலைப்படுவதின் விளைவு?

  1. a) தெளிவற்ற மனநிலை.
  2. b) மாய ஒளி.
  3. c) மாயத்தோற்றம்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 8: தவறாமல் பள்ளிக்கு வருதல் என்பது?

  1. a) தன்னிணக்கம்.
  2. b) சமூக இணக்கம்.
  3. c) பள்ளி இணக்கம்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : c) பள்ளி இணக்கம்.

வினா எண் 9: பிறக்கும் பொழுது குழந்தை மூளையின் நிறை?

  1. a) 450 கிராம்.
  2. b) 350 கிராம்.
  3. c) 250 கிராம்.
  4. d) 520 கிராம்.

விடை : b) 350 கிராம்.

வினா எண் 10: கற்றலுக்கு ஏற்ற பருவம் எது?

  1. a) வாலிப பருவம்.
  2. b) பிள்ளை பருவம்.
  3. c) முதுமை பருவம்.
  4. d) அனைத்தும்.

விடை : b) பிள்ளை பருவம்.

வினா எண் 11: சிந்தித்தல் என்பது?

  1. a) உணர்வுப்பூர்வமான செயல்.
  2. b) விளையாட்டு செயல்.
  3. c) அறிவார்ந்த செயல்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : c) அறிவார்ந்த செயல்.

வினா எண் 12: மொழி என்பது?

  1. a) பிறர் கருத்துகளை அறிய தேவைப்படுவது.
  2. b) சிந்திப்பதற்கு பயன்படுகிறது.
  3. c) கற்பனை செய்ய முடியும்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 13: நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை என அழைக்கப்படுபவர்?

  1. a) அலெக்சாண்டர்.
  2. b) பியாஜே.
  3. c) ஆல்பிரட் பினே.
  4. d) எரிக்சின்.

விடை : c) ஆல்பிரட் பினே.

வினா எண் 14: நுண்ணறிவு = பொதுக்காரணி (G) + சிறப்புக் காரணி (S) கூறியவர்?

  1. a) தார்ன்டைக்.
  2. b) ஸ்பியர்மென்.
  3. c) அலெக்சாண்டர்.
  4. d) ஆல்பிரட் பினே.

விடை : b) ஸ்பியர்மென்.

வினா எண் 15: பன்மை நுண்ணறிவு என்ற கருத்தை வெளியிட்டவர்?

  1. a) தர்ஸ்டன்.
  2. b) ஸ்பியர்மென்.
  3. c) கர்டனர்.
  4. d) அலெக்சாண்டர்.

விடை : c) கர்டனர்.

வினா எண் 16: நுண்ணறிவு என்பது தொடர்ந்து வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என கருதியவர்?

  1. a) கர்டனர்.
  2. b) பினே.
  3. c) ஸ்பியர் மென்.
  4. d) தர்ஸ்டன்.

விடை : b) பினே.

வினா எண் 17: நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்?

  1. a) ஸ்பியர் மென்.
  2. b) கர்டனர்.
  3. c) பினே.
  4. d) டெர்மன்.

விடை : d) டெர்மன்.

வினா எண் 18: புதியனவற்றைக் கண்டுபிடித்தலுக்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர்?

  1. a) கிரகாம் வாலஸ்.
  2. b) கிரகாம் பெல்.
  3. c) ராமானுஜம்.
  4. d) எரிக்சன்.

விடை : a) கிரகாம் வாலஸ்.

வினா எண் 19: ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது?

  1. a) பற்றுகள்.
  2. b) கல்வி.
  3. c) ஒப்பார் குழு.
  4. d) ஆசிரியர் குழு.

விடை : c) ஒப்பார் குழு.

வினா எண் 20: குழந்தையின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது?

  1. a) குமாரப் பருவம்.
  2. b) முதுமைப் பருவம்.
  3. c) வாலிபப் பருவம்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : a) குமாரப் பருவம்.

வினா எண் 21: யுனஸ்கோவின் டெலார்ஸ் அறிக்கை எத்தனை விதமான கற்றல் திறன்களை வளர்க்க வேண்டுமென கூறுகிறது?

  1. a) 4.
  2. b) 5.
  3. c) 6.
  4. d) 7.

விடை : a) 4.

வினா எண் 22: மனிதன் ஒரு சமூக விலங்கு என கூறியவர்?

  1. a) காந்தியடிகள்.
  2. b) அரிஸ்டாட்டில்.
  3. c) புத்தர்.
  4. d) சாக்ரட்டீஸ்.

விடை : b) அரிஸ்டாட்டில்.

வினா எண் 23: குழந்தைகளிடம் இயற்கையாகவே மொழியை கற்கும் திறன் உள்ளது என்றவர்?

  1. a) கோம்ஸ்கி.
  2. b) GCLDIT.
  3. c) காரல் கவுஸ்கி.
  4. d) அனைத்தும் சரி.

விடை : a) கோம்ஸ்கி.

வினா எண் 24: இவற்றில் தார்ண்டைக்கின் கற்றல் விதி?

  1. a) ஆயத்தவிதி.
  2. b) பயிற்சி விதி.
  3. c) விளைவு விதி.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 25: ஆக்க நிலையுறுத்திக் கற்றலை சோதனையின் மூலம் நிரூபித்தவர்?

  1. a) பாவ்லவ்.
  2. b) ஸ்கின்னர்.
  3. c) எரிக்சன்.
  4. d) டொனால்டோ.

விடை : a) பாவ்லவ்.





வினா எண் 26: உட்காட்சி மூலம் கற்றல் நிகழ்வதை சோதனையின் மூலம் நிரூபித்தவர்?

  1. a) எரிக்சின்.
  2. b) ஸ்கின்னர்.
  3. c) கோலர்.
  4. d) பாவ்லவ்.

விடை : c) கோலர்.

வினா எண் 27: ஐ.நா. சபை குழந்தைகளுக்காக உலகளவில் வரையறுக்கப்பட்ட உரிமை?

  1. a) உயிருடன் வாழ்வது.
  2. b) ஆரோக்கியமான உடல்.
  3. c) மனவளர்ச்சி பெற, பாதுகாப்புடன் வாழ.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 28: 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியக் கொள்கை?

a) 1984.
b) 1985.
c) 1986.
d) 1987.

விடை : c) 1986.

வினா எண் 29: கல்வி என்பது?

  1. a) வளர்த்தல், வெளிக்கொணர்தில்.
  2. b) உள்ளதை சிறக்கச் செய்தல்.
  3. c) செயல்படாது அடங்கியிருக்கும் ஆற்றல்களை வெளிப்படுத்துதல்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 30: உளவியல் எனும் சொல் எந்த மொழி சொல்?

  1. a) இலத்தீன்.
  2. b) கிரேக்கம்.
  3. c) ஆங்கிலம்.
  4. d) பிரெஞ்ச்.

விடை : b) கிரேக்கம்.

வினா எண் 31: மனம் எத்தனை நிலைகளில் இயங்குகிறது?

  1. a) மூன்று.
  2. b) நான்கு.
  3. c) ஐந்து.
  4. d) ஆறு.

விடை : a) மூன்று.

வினா எண் 32: இவர்களில் உளவியலை நடத்தையியல் என்று குறிப்பிடுபவர்?

  1. a) J.B. வாட்சன், டோல் மன்.
  2. b) ஹப், கத்தரே.
  3. c) ஸ்கின்னர்.
  4. d) அனைவரும்.

விடை : a) J.B. வாட்சன், டோல் மன்.

வினா எண் 33: உளப்பகுப்புக் கோட்பாட்டை நிறுவியவர்?

  1. a) ஆட்லர்.
  2. b) சிக்மண்ட் ப்ராய்டு.
  3. c) காரல் ரோஜர்ஸ்.
  4. d) மாஸ்லோ.

விடை : b) சிக்மண்ட் ப்ராய்டு.

வினா எண் 34: பகுப்பு உளவியலை நிறுவியவர்?

  1. a) சிக்மண்ட் ப்ராய்டு.
  2. b) கார்ல் ரோஜர்ஸ்.
  3. c) யூங்.
  4. d) மாஸ்லோ.

விடை : c) யூங்.

வினா எண் 35: புள்ளியியல் அடிப்படையில் தனிநபர் வேறுபாடுகளை அளவிட்டவர்?

  1. a) சிக்மண்ட் பிராடு.
  2. b) ஆல்பர்ட் பைனட்.
  3. c) சர் பிரான்சிஸ் கல்டன்.
  4. d) வெஸ்லர்.

விடை : c) சர் பிரான்சிஸ் கல்டன்.

வினா எண் 36: வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை உருவாக்கியவர்?

  1. a) ஸ்கின்னர்.
  2. b) ஆல்பர்ட் பைனட்.
  3. c) வெஸ்லர்.
  4. d) சிக்மண்ட் பிராடு.

விடை : c) வெஸ்லர்.

வினா எண் 37: பரிசோதனை என்பது?

  1. a) பங்கேற்கா உற்று நோக்கல்.
  2. b) இயற்கையான செயற்கையான உற்று நோக்கல்.
  3. c) கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கல்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : c) கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்றுநோக்கல்.

வினா எண் 38: வினா வரிசை முறையை உளவியல் ஆராய்ச்சிக்கு முதன் முதலில் பயன்படுத்தியவர்?

  1. a) ஷிர்லி.
  2. b) ஆல்ஸ்டைன்.
  3. c) பிரான்சிஸ் கால்டன்.
  4. d) லான்.

விடை : c) பிரான்சிஸ் கால்டன்.

வினா எண் 39: இவற்றில் உளவியலின் பிரிவு?

  1. a) பொது உளவியல், குழந்தை உளவியல்.
  2. b) நெறிபிறழ் உளவியல், உடற்கூறு உளவியல்.
  3. c) ஒப்பீட்டு உளவியல், சமூக உளவியல், நடைமுறை உளவியல்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 40: எச்.சி. லிண்ட்கிரேன் கருத்துப்படி கல்வி உளவியலின் முக்கியக் கூறானது?

  1. a) கற்கும் முறைகள்.
  2. b) கற்கும் அனுபவங்கள்.
  3. c) கற்கும் சூழ்நிலைகள்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 41: மனிதனது வளர்ச்சியும், அதனின்று எழும் அவனது நடத்தையும் உறுதி செய்யும் காரணிகளில் முக்கியமானவை?

  1. a) மரபு நிலை.
  2. b) சூழ்நிலை.
  3. c) கற்பிக்கும் முறை.
  4. d) A மற்றும் B.

விடை : d) A மற்றும் B.

வினா எண் 42: மனித உடலில் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன?

  1. a) 43.
  2. b) 44.
  3. c) 45.
  4. d) 46.

விடை : d) 46.

வினா எண் 43: வளர்ச்சி என்பது?

  1. a) ஓர் உயிரின் உருப்பெருக்கம்.
  2. b) அளவு அதிகரித்தல்.
  3. c) முன்னேற்றம்.
  4. d) A மற்றும் B.

விடை : d) A மற்றும் B.

வினா எண் 44: வளர்ச்சியின் பெரும் எல்லைக்குப் பெயர்?

  1. a) முன்னேற்றம்.
  2. b) முதிர்ச்சி.
  3. c) வளர்ச்சி.
  4. d) தேய்மானம்.

விடை : b) முதிர்ச்சி.

வினா எண் 45: இது புவிஈர்ப்புக்கு எதிரான போராட்டமாகும்?

  1. a) உடல் வளர்ச்சி.
  2. b) உடலியக்கங்களின் வளர்ச்சி.
  3. c) அறிவு வளர்ச்சி.
  4. d) A மற்றும் B.

விடை : b) உடலியக்கங்களின் வளர்ச்சி.

வினா எண் 46: இவற்றில் மனித வளர்ச்சியை பாதிக்கும் காரணி?

  1. a) நாளமில்லாச் சுரப்பிகள், காற்றோட்டம்.
  2. b) உண்ணும் உணவின் தன்மை, வெளிச்சம்.
  3. c) சமுதாயப் பண்பாடு, நுண்ணறிவு, பால் சார்ந்த பண்புகள்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 47: 3 முதல் 6 வயது வரை உள்ள காலம்?

  1. a) முன் குழந்தைப் பருவம்.
  2. b) பின் குழந்தை பருவம்.
  3. c) முன் குமரப் பருவம்.
  4. d) பின் குமரப் பருவம்.

விடை : a) முன் குழந்தைப் பருவம்.

வினா எண் 48: குமரப் பருவத்தை சிக்கலான அமைதியற்ற பருவம் என குறிப்பிட்டவர்?

  1. a) கோல்.
  2. b) பீஜே.
  3. c) ஸ்டான்லி ஹால்.
  4. d) புரூணர்.

விடை : c) ஸ்டான்லி ஹால்.

வினா எண் 49: கவனித்தல் என்பது?

  1. a) ஓர் அறிவு சார்ந்த செயல்.
  2. b) கவனித்தலில் மனவெழுச்சி.
  3. c) முயற்சி.
  4. d) இவை அனைத்தும்.

விடை : a) ஓர் அறிவு சார்ந்த செயல்.

வினா எண் 50: கவனவீச்சறி கருவி எதை அளந்தறிய பயன்படுகிறது?

  1. a) கவனம்.
  2. b) அறிவுக் கூர்மை.
  3. c) மறதி.
  4. d) காட்சி கவனவீச்சு.

விடை : d) காட்சி கவனவீச்சு.

வினா எண் 51: இவற்றில் முக்கிய அகக்காரணி?

  1. a) விருப்பார்வம்.
  2. b) உடல்நிலை.
  3. c) மனநிலை.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 52: புலன் காட்சி என்பது?

  1. a) புலன் காட்சி = புலன் உணர்வு + கவனம்.
  2. b) புலன் காட்சி = புலன் உணர்வு + சிந்தனை.
  3. c) புலன் காட்சி = புலன் உணர்வு + பொருள்.
  4. d) புலன் காட்சி = புலன் உணர்வு + அறிவுபெறல்.

விடை : c) புலன் காட்சி = புலன் உணர்வு + பொருள்.

வினா எண் 53: குறுகிய இடைவெளிகளைப் பூர்த்தி செய்து, காணும் பொருட்களை முழுமைப்படுத்தி, காணும் தன்மை?

  1. a) தொடர்ச்சி விதி.
  2. b) ஒப்புடைமை விதி.
  3. c) மூட்ட விதி.
  4. d) முழுமைக் காட்சி விதி.

விடை : c) மூட்ட விதி.

வினா எண் 54: புலன் காட்சியை முதலில் தோற்றுவித்த ஒரு பொருள் இன்றியே அப்பொருள் பற்றி உணர்தலை?

  1. a) சாயல்.
  2. b) மனபிம்பம்.
  3. c) இல்பொருள் காட்சி.
  4. d) A மற்றும் B.

விடை : d) A மற்றும் B.

வினா எண் 55: சிந்தித்தல் என்பது நமது உடலில் உள்ள பேச்சுறுப்புகளின் அசைவு என்று கூறியவர்?

  1. a) வைகாட்ஸ்கி.
  2. b) வாட்சன்.
  3. c) பியாஜே.
  4. d) புரூணர்.

விடை : b) வாட்சன்.

வினா எண் 56: உலகின் இயல்பான மொழிகள் யாவற்றுக்கும் சில பொதுவான பண்புகள் உள்ளன என கூறியவர்?

  1. a) சோம்ஸ்கி.
  2. b) ஆஸ்குட்.
  3. c) செவியோக்.
  4. d) ஸ்கின்னர்.

விடை : a) சோம்ஸ்கி.

வினா எண் 57: எரிக்சன் எத்தனை வளர்ச்சி நிலைகளை குறிப்பிட்டுள்ளார்?

  1. a) நான்கு.
  2. b) ஆறு.
  3. c) எட்டு.
  4. d) பத்து.

விடை : c) எட்டு.

வினா எண் 58: மனித மனவெழுச்சிகள் இயல்பூக்கங்களிலிருந்து உருவாகுபவை என்ற கருத்தை தெரிவித்தவர்?

  1. a) ஹார்லக்.
  2. b) கோல்பர்க்.
  3. c) எரிக்சன்.
  4. d) மக்டூகல்.

விடை : d) மக்டூகல்.

வினா எண் 59: இவற்றில் அடிப்படை மனவெழுச்சிகள்?

  1. a) சினம்.
  2. b) மகிழ்ச்சி, துயரம்.
  3. c) அச்சம்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 60: வாட்சன் என்பவரது கருத்துப்படி இது அடிப்படை மனவெழுச்சி?

  1. a) சினம்.
  2. b) அச்சம்.
  3. c) அன்பு.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 61: குழவிப் பருவத்திலும் முன்பிள்ளைப் பருவத்திலும் மனவெழுச்சிகளில் ஓர் இருமுகப்போக்கு நிலை தோன்றுகிறது என்று கூறியவர்?

  1. a) மக்டூகல்.
  2. b) ரீபோ.
  3. c) ஃப்ராய்டு.
  4. d) பிரிட்ஜஸ்.

விடை : d) பிரிட்ஜஸ்.

வினா எண் 62: உளவியலாளர்கள் ஒழுக்க வளர்ச்சியில் எத்தனை நிலைகளை குறிப்பிடுகின்றனர்?

  1. a) மூன்று.
  2. b) நான்கு.
  3. c) ஐந்து.
  4. d) ஆறு.

விடை : a) மூன்று.

வினா எண் 63: தற்கருத்து என்பது?

  1. a) ஒருவன் கொண்டுள்ள மனப்பான்மைகள்.
  2. b) ஒருவன் கொண்டுள்ள உணர்ச்சிகள்.
  3. c) ஒருவன் கொண்டுள்ள பலவீனங்கள்.
  4. d) A மற்றும் B.

விடை : d) A மற்றும் B.

வினா எண் 64: கற்றலுக்கு ஓர் உந்துதல் அவசியம் என்று குறிப்பிட்டவர்?

  1. a) கேட்ஸ்.
  2. b) ரீபோ.
  3. c) மெக்கானல்.
  4. d) மக்டூகல்.

விடை : d) மக்டூகல்.

வினா எண் 65: ஆக்க நிலையிறுத்தம் மூலம் கற்றல் யாருடன் தொடர்புடையது?

  1. a) பாவ்லாவ்.
  2. b) தான்டைக்.
  3. c) எரிக்சன்.
  4. d) மக்டூகல்.

விடை : a) பாவ்லாவ்.

வினா எண் 66: ஸ்கின்னர் தனது ஆய்வுக்கு எந்த உயிரினத்தை பயன்படுத்தினார்?

  1. a) நாய்.
  2. b) எலி.
  3. c) பூனை.
  4. d) குரங்கு.

விடை : b) எலி.

வினா எண் 67: உட்காட்சி வழிக் கற்றலை விளக்குவதில் கோஹ்லர் எந்த உயிரினத்தை வைத்து பரிசோதனை நடத்தினார்?

  1. a) நாய்.
  2. b) முயல்.
  3. c) மனிதகுரங்கு.
  4. d) எலி.

விடை : c) மனிதகுரங்கு.

வினா எண் 68: நினைவு கூர்தலில் எத்தனை படிநிலைச் செயல்கள் நிகழ்கின்றன?

  1. a) மூன்று.
  2. b) நான்கு.
  3. c) ஐந்து.
  4. d) ஆறு.

விடை : b) நான்கு.

வினா எண் 69: STM எனப்படுவது?

  1. a) நிலையான நினைவு.
  2. b) குறுகிய கால நினைவு.
  3. c) நீண்ட கால நினைவு.
  4. d) புலனறிவு நினைவு.

விடை : b) குறுகிய கால நினைவு.

வினா எண் 70: இவற்றில் மறத்தல் கோட்பாடானது?

  1. a) குறுக்கீட்டுக் கோட்பாடு.
  2. b) படிமாறாக் கோட்பாடு.
  3. c) வெளிக்கொணர்தலில் ஏற்படும் தடங்கல்.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 71: இரட்டைக் காரணி கோட்பாட்டை 1904-ல் வெளியிட்டவர்?

  1. a) ஸ்பியர்மென்.
  2. b) பீனே.
  3. c) எரிக்சன்.
  4. d) அண்டர்வுட்.

விடை : a) ஸ்பியர்மென்.

வினா எண் 72: பல்காரணிக் கொள்கை?

  1. a) தர்ஸ்டன்.
  2. b) ஸ்பியர்மென்.
  3. c) ஸ்டொடார்ட்.
  4. d) தார்ண்டைக்.

விடை : d) தார்ண்டைக்.

வினா எண் 73: கார்டனரின் பல்வகை நுண்ணறிவுக் கோட்பாட்டின் வகை?

  1. a) மொழியியல் நுண்ணறிவு.
  2. b) தர்க்கரீதியான கணித நுண்ணறிவு.
  3. c) இடரீதியான நுண்ணறிவு.
  4. d) இவை அனைத்தும்.

விடை : d) இவை அனைத்தும்.

வினா எண் 74: முதல் உலகப் போரின் போது அமெரிக்காவில் போர்ப்படைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்க இந்த சோதனை நடத்தப்பட்டது?

  1. a) ஆல்பா சோதனை.
  2. b) பீட்டா சோதனை.
  3. c) தொகுதிச் சோதனை.
  4. d) A மற்றும் B.

விடை : d) A மற்றும் B.

வினா எண் 75: இவர்களில் உருவ அமைப்புத் தொடர் சோதனையை உருவாக்கியவர்?

  1. a) கேட்டல்.
  2. b) ரேவன்.
  3. c) தார்ண்டைக்.
  4. d) ஆர்தர்.

விடை : b) ரேவன்.

வினா எண் 76: கிரகாம் வாலிஸ் கருத்துப்படி ஆக்க சிந்தனையில் எத்தனை படிநிலைகள் காணப்படுகின்றன?

  1. a) நான்கு.
  2. b) ஐந்து.
  3. c) ஆறு.
  4. d) ஏழு.

விடை : a) நான்கு.

வினா எண் 77: படிநிலைத் தேவைகள் கோட்பாடு?

  1. a) மக்டூகல்.
  2. b) ஹல்லின்.
  3. c) மாஸ்லோ.
  4. d) எரிக்சன்.

விடை : c) மாஸ்லோ.

வினா எண் 78: அடைவு ஊக்கி பற்றி வளையம் வீசும் சோதனை மூலம் நிரூபித்தவர்?

  1. a) அட்கின்சன்.
  2. b) மாஸ்லே.
  3. c) மெக்லிலெண்டு.
  4. d) ஷெரிப்.

விடை : c) மெக்லிலெண்டு.

வினா எண் 79: ஆங்கிலத்தில் ஆளுமையை குறிக்கும் பர்ஸனாலிடி எனும் சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?

  1. a) ஜெர்மனி.
  2. b) லத்தீன்.
  3. c) கிரேக்கம்.
  4. d) அரபி.

விடை : b) லத்தீன்.

வினா எண் 80: கிரெட்ச்மர் என்பார் உடல் அமைப்பின் அடிப்படையில் மனிதர்களை எத்தனை வகைப்படுத்தினார்?

  1. a) மூன்று.
  2. b) நான்கு.
  3. c) ஐந்து.
  4. d) ஆறு.

விடை : a) மூன்று.

வினா எண் 81: மனிதர்களை அகமுகன், புறமுகன் என்று வகைப்படுத்தியவர்?

  1. a) எய்ஸென்க்.
  2. b) யூங்.
  3. c) லிப்பிட்.
  4. d) ஒயிட்.

விடை : b) யூங்.

வினா எண் 82: ஃப்ராய்டின் ஆளுமை வளர்ச்சியின் படிநிலைகள்?

  1. a) மூன்று.
  2. b) நான்கு.
  3. c) ஐந்து.
  4. d) ஆறு.

விடை : c) ஐந்து.

வினா எண் 83: தாழ்வுச் சிக்கல் எனும் கருத்தை உருவாக்கியவர்?

  1. a) ஆட்லர்.
  2. b) யூங்.
  3. c) பீஜே.
  4. d) A மற்றும் B.

விடை : a) ஆட்லர்.

வினா எண் 84: மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டினை குறிப்பதாகும் என்பது யாருடைய கூற்று?

  1. a) கால்.
  2. b) ஹோட்பீல்டு.
  3. c) முர்ரே.
  4. d) லாம்பிரோஸோ.

விடை : b) ஹோட்பீல்டு.

வினா எண் 85: இவர்களில் வழிகாட்டுதல் என்பதற்கான வரையறை வழங்கியவர்?

  1. a) ஆர்தர் ஜெ. ஜோன்ஸ்.
  2. b) குரோ.
  3. c) ஜான் டியூப்ளே.
  4. d) A மற்றும் B.

விடை : d) A மற்றும் B.

வினா எண் 86: உளவியல் என்பது?

  1. a) ஆன்மாவைப் பற்றி ஆராயும் அறிவியல்.
  2. b) மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.
  3. c) மனத்தைப் பற்றி ஆராயும் அறிவியல்.
  4. d) நனவு நிலையைப் பற்றி ஆராயும் அறிவியல்.

விடை : b) மனித நடத்தையை ஆராயும் அறிவியல்.

வினா எண் 87: "சைக்காலஜி" (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்?

  1. a) கிரேக்க மொழிச் சொல்.
  2. b) லத்தீன் மொழிச் சொல்.
  3. c) ஜெர்மானிய மொழிச் சொல்.
  4. d) ஆங்கில மொழிச் சொல்.

விடை : a) கிரேக்க மொழிச் சொல்.

வினா எண் 88: மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது?

  1. a) தர்க்கவியல்.
  2. b) அறிவியல்.
  3. c) உளவியல்.
  4. d) தத்துவயியல்.

விடை : a) தர்க்கவியல்.

வினா எண் 89: "உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல" என்று கூறியவர்?

  1. a) வுண்ட்.
  2. b) கான்ட்.
  3. c) பார்ட்.
  4. d) வாட்சன்.

விடை : b) கான்ட்.

வினா எண் 90: "பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் ஆகும்" இதனைக் கூறியவர்?

  1. a) சி.இ. ஸ்கின்னர்.
  2. b) பி.எப்.ஸ்கின்னர்.
  3. c) ஏ.குரோ.சி.
  4. d) இ.ஏ.பீல்.

விடை : c) ஏ.குரோ.சி.

வினா எண் 91: "ஒருவனுக்குத் தரப்படும் கல்வியும், பயிற்சியும், அவன் வளரும் சூழ்நிலையும் அவனை உருவாக்குகின்றன. ஆனால் மரபு நிலைக்கு எங்குப் பங்கும் இல்லை" எனக் கூறியவர்?

  1. a) கால்டன்.
  2. b) பியர்சன்.
  3. c) வாட்சன்.
  4. d) கார்ல் யூங்.

விடை : c) வாட்சன்.

வினா எண் 92: ஒவ்வொரு உயிரணுவிலும் உள்ள குரோமோசோம் ஜோடிகளின் எண்ணிக்கை?

  1. a) 22 ஜோடி.
  2. b) 23 ஜோடி.
  3. c) 46 ஜோடி.
  4. d) 13 ஜோடி.

விடை : b) 23 ஜோடி.

வினா எண் 93: அனிச்சையாகச் செயல்கள் நிறைந்த பருவம்?

  1. a) தொட்டுணரும் பருவம்.
  2. b) மனச்செயல்களுக்கு முந்தைய பருவம்.
  3. c) கண்கூடாக பார்ப்பதைக் கொண்டு செயல்படும் பருவம்.
  4. d) செயல்பாட்டுப் பருவம்.

விடை : a) தொட்டுணரும் பருவம்.

வினா எண் 94: அறிவு வளர்ச்சியின் வேகம் எந்தப் பருவத்தில் அதிகம்?

  1. a) சிசுப் பருவம்.
  2. b) குழவிப் பருவம்.
  3. c) பிள்ளைப் பருவம்.
  4. d) குமரப்பருவம்.

விடை : b) குழவிப் பருவம்.

வினா எண் 95: குழந்தையின் பாலினத்தை முடிவு செய்யும் உயிரியல் கூறு?

  1. a) மரபு.
  2. b) குரோமோசோம்கள்.
  3. c) ஜீன்கள்.
  4. d) சூழ்நிலை.

விடை : b) குரோமோசோம்கள்.

வினா எண் 96: "அடலசன்ஸ்" எனப்படும் சொல் எந்த மொழிச் சொல்?

  1. a) கிரேக்க மொழிச்சொல்.
  2. b) இலத்தீன் மொழிச்சொல்.
  3. c) அரேபிய மொழிச்சொல.
  4. d) ஜெர்மன் மொழிச் சொல்.

விடை : b) இலத்தீன் மொழிச்சொல்.

வினா எண் 97: பியாஜேயின் அறிவுத் திறன் வளர்ச்சி நிலைகளில் முதல் வளர்ச்சி நிலையாக எதனைக் குறிப்பிடுகின்றார்?

  1. a) முன் செயல்பாட்டு நிலை.
  2. b) முறையான செயல் நிலை.
  3. c) புலனியக்க நிலை.
  4. d) திட்டமிட்ட செயல் நிலை.

விடை : c) புலனியக்க நிலை.

வினா எண் 98: குமரப்பருவத்தினரின் தீவிர சமூக விரோத நடத்தைக்கு என்ன பெயர்?

  1. a) நெறி பிறழ் நடத்தை.
  2. b) பிரச்சனை நடத்தை.
  3. c) தற்காப்பு நடத்தை.
  4. d) அசாதாரண நடத்தை.

விடை : a) நெறி பிறழ் நடத்தை.

வினா எண் 99: மரபுக்கு மற்றொரு பெயர்?

  1. a) செயற்கை.
  2. b) இயற்கை.
  3. c) உயிரியல்.
  4. d) உடற்கூறு.

விடை : b) இயற்கை.

வினா எண் 100: மனச் செயல்கள் எதனை மையமாக கொண்டு செயல்படுகின்றன?

  1. a) பெருமூளை.
  2. b) சிறுமூளை.
  3. c) முகுளம்.
  4. d) நாளமில்லாச் சுரப்பிகள்.

விடை : a) பெருமூளை.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement