12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Zoology Part-1

1. பிளாஸ்டிமோடியத்தால் ஏற்படும் மலேரியா ------------ மூலம் பரவுகின்றது.
அ) காற்று
ஆ) தொடர்பு
இ) உணவின் மீதுள்ள தெள்ளுப்பூச்சிகள்
ஈ) கொசு கடித்தல்
விடை : ஈ) கொசு கடித்தல்

2. 30 வயதுடைய பெண்ணிற்கு 14 மணி நேரமாக இரத்தம் கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த கேட்டினை ஏற்படுத்தும்?
அ) ஸ்ட்ரெப்டோகாக்கஸ் பயோஜென்ஸ்
ஆ) கிளாஸ்டிரிடியம் டிஃபிசைல்
இ) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே
ஈ) சால்மோனெல்லா என்ட்ரைடிடிஸ்
விடை : இ) ஷிஜெல்லா டிஸ்சென்ட்ரியே

3. கீழ்க்கண்ட எந்த நோய் நீர்த்திவலைகள் மூலம் பரவுகிறது?
அ) துலாரெமியா
ஆ) லிஸ்டெரியோசிஸ்
இ) சின்னம்மை
ஈ) புட்டாளம்மை
விடை : இ) சின்னம்மை

4. பிளாஸ்மோடியத்தின் புறச்சிவப்பணு சைஷோ கோனி நடைபெறும் இடம்
அ) இரத்த சிவப்பணு
ஆ)லியூக்கோசைட்டுகள்
இ) இரைப்பை
ஈ) கல்லீரல்
விடை : ஈ) கல்லீரல்

5. பி. வைவாக்ஸின் ஸ்போரோசோயிட்டுகள் ------------------ ல் உருவாக்கப்பட்டது.
அ) கேமிட்டோசைட்டுகள் (இனச்செல்கள்)
ஆ) ஸ்போரோபிளாஸ்டுகள்
இ) ஊசிஸ்டுகள்
ஈ) ஸ்போர்கள்
விடை : இ) ஊசிஸ்டுகள்

6. குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும் இளம்பிள்ளை வாதம் ----------------- வழியாக உடலில் நுழைகிறது.
அ) தோல்
ஆ) வாய் மற்றும் மூக்கு
இ) காதுகள்
ஈ) கண்கள்
விடை : ஈ) கண்கள்

7. ஆம்ஃபிடமைன்கள் மத்திய நரம்பு மண்டலத்தை (CNS) கிளர்வூட்டுபவையாகும். அதே போல் பார்பிடுரேட்டுகள் ஆகும்.
அ) மைய நரம்பு மண்டல கிளர்வூட்டி
ஆ) மன மருட்சி ஏற்படுத்துபவை
இ) அ மற்றும்ஆ இரண்டும்
ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி
விடை : ஈ) மைய நரம்பு மண்டல சோர்வூட்டி

8. மரிஜூவானா-------------லிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.
அ) சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்
ஆ) எர்காட் பூஞ்சை
இ) சணல் தாவர வேர்கள்
ஈ) கோகா தாவரம்
விடை : அ) சணல் செடியின் சருகுகள் மற்றும் பூக்கள்

9. சரியாக பொருந்திய இணையைத் தேர்ந்தெடு
அ) ஆம்ஃபிடமைன்கள்- கிளர்வூட்டி
ஆ) லைசர்ஜிக் அமிலம் டைஎத்திலமைடு-போதை மருந்து
இ) ஹெராயின் - உளவியல் மருந்து
ஈ) பென்சோடைஅசபைன்- வலி நீக்கி
விடை : அ) ஆம்ஃபிடமைன்கள்- கிளர்வூட்டி

10. மனிதனில் சேற்றுப்புண்ணை ஏற்படுத்துவது
அ) பாக்டீரியா
ஆ) பூஞ்சை
இ) வைரஸ்
ஈ) புரோட்டோசோவா
விடை : ஆ) பூஞ்சை

11. ------------------- அதிகமாக எடுத்துக் கொள்வது கல்லீரல் அழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
அ) அபின்
ஆ) மது
இ) புகையிலை
ஈ) கோகெய்ன்
விடை : ஆ) மது

12. மலேரியா ஒட்டுண்ணியின் ஸ்போரோசோயிட் _________ல் காணப்படுகிறது.
அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்
ஆ) மலேரியாவால் பாதிக்கப்பட்ட மனித இரத்த சிவப்பணுக்கள்
இ) நோய்த்தொற்றிய மனிதர்களின் மண்ணீரல்
ஈ) பெண் அனாபிலஸ் கொசுவின் குடல்
விடை : அ) நோய்த்தொற்றிய பெண் அனாபிலஸ் கொசுவின் உமிழ்நீர்

13. ஹீமோசோயின் என்பது
அ) ஹீமோகுளோபினின் முன்னோடி
ஆ) ஸ்ட்ரெப்டோகாக்கஸிலிருந்து வெளியேறும் நச்சு
இ) பிளாஸ்மோடியம் வெளியேறும் நச்சு இனத்திலிருந்து
ஈ) ஹீமோஃபைலஸ் வெளியேறும் நச்சு இனத்திலிருந்து
விடை : இ) பிளாஸ்மோடியம் வெளியேறும் நச்சு இனத்திலிருந்து

14. டாடுரா (Datura) தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் போதை மருந்து 
அ) மன மருட்சியை ஏற்படுத்துபவை
ஆ) சோர்வூட்டி
இ) கிளர்வூட்டி
ஈ) வலி நீக்கி
விடை : அ) மன மருட்சியை ஏற்படுத்துபவை

15. நோயூக்கிகள் மற்றும் அவைகள் உண்டாக்கும் நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான பொருந்து குறியீட்டை தேர்ந்தெடு.
i) லீஷமேனியா டோனோவனி - 1. அமீபியாசிஸ்
ii) உச்சரீரீயா பான்கிராஃப்டி. - 2. காலா-அசார் .
iii) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் - 3. தூக்க வியாதி.
iv) எண்டமீபா ஹிஸ்டாலிடிகா - 4. யானைக்கால் நோய்.

a) (A-ii), (B-iv), (C-iii), (D-i).
b) (A-ii), (B-iv), (C-i), (D-iii).
c) (A-iii), (B-i), (C-ii), (D-iv).
d) (A-i), (B-iv), (C-iii), (D-ii).

விடை : a) (A-ii), (B-iv), (C-iii), (D-i).

i) லீஷமேனியா டோனோவனி - 2. காலா-அசார் .
ii) உச்சரீரீயா பான்கிராஃப்டி. - 4. யானைக்கால் நோய்.
iii) டிரிப்பனோசோமா கேம்பியன்ஸ் - 3. தூக்க வியாதி.
iv) எண்டமீபா ஹிஸ்டாலிடிகா - 1. அமீபியாசிஸ்


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement