12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 6 பரிணாமம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 34
கேள்வி 34 : சிற்றினங்கள் மரபற்றுப்போவதால் ஏற்படும் மூன்று தாக்கநிலைகளை விவரி.
விடை :
- சிற்றினம் மரபற்றுப் போதல்:
- இது சுற்றுச்சூழலில் ஏற்படும் (வெள்ளம் போன்ற நிகழ்வின் காரணமாகவும்) அல்லது நோய் அல்லது உணவு பற்றாக்குறை போன்ற உயிரியல் காரணங்களாலும் ஒரு சிற்றினம் முழுமையாக நீக்கப்படுவது ஆகும்.
- பெருந்திரள் மரபற்றுப்போதல்:
- ஒரு நிலப்பரப்பு அல்லது சூழ்நிலை மண்டலத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சிற்றினங்கள் எரிமலை வெடிப்பு போன்ற காரணங்களால் ஒரே நேரத்தில் அழிந்து போகின்றன.
- கேம்பிரியன் பருவத்திலிருந்து ஐந்து முக்கிய பெருந்திரள் மரபற்றுப் போதல் நிகழ்ந்துள்ளன. இவை K-T மறைவு என அழைக்கப்படுகின்றன.
- உலக அளவில் மரபற்றுப்போதல்:
- பெருமளவிலான சிற்றினங்கள் அல்லது பெரிய வகைப்பாட்டுக் குழுக்கள், கண்டங்கள் அளவில் அல்லது உலக அளவில் மரபற்றுப் போகின்றன.
- எடுத்துக்காட்டுகள்: உறை பனி உலகம் அல்லது CO2 அளவு அதிகரித்ததன் காரணமாக நிகழ்ந்த மரபற்றுப்போதல்.
- இவ்வாறு மரபற்று போதலால் புதிய வாழிடங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனால் பெரும்பான்மை அழிவிலிருந்து தப்பிய உயிரினங்கள் விரிந்து பரவிட ஏதுவாகிறது.


0 Comments