12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21 C

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21 C

கேள்வி 21 C : வேறுபாடுகளை எழுதுக : இ) செயலாக்க நோய்த்தடைகாப்பு மற்றும் மந்தமான நோய்த்தடைகாப்பு.


விடை :

செயலாக்க நோய்த்தடைக்காப்பு (Active Immunity) மந்தமான நோய்த்தடைக்காப்பு (Passive Immunity)
நோய்த்தடைகாப்புப் பொருட்கள் (எதிர்ப்பொருட்கள்) விருந்தோம்பியின் உடலிலேயே உருவாக்கப்படுகின்றன. நோய்த்தடைகாப்புப் பொருட்கள் (எதிர்ப்பொருட்கள்) விருந்தோம்பியின் உடலில் உருவாக்கப்படாமல், வெளியிலிருந்து பெறப்படுகின்றன. இதில் விருந்தோம்பியின் பங்கு இல்லை.
நுண்கிருமி அல்லது எதிர்பொருள் தூண்டிகளின் தூண்டுதலால் இவை உருவாகின்றன. வெளியிலிருந்து பெறப்பட்ட எதிர்ப்பொருட்களால் இந்தத் தடைகாப்பு ஏற்படுகிறது.
இது நீடித்த மற்றும் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. இது நிலையற்ற மற்றும் குறைந்த பாதுகாப்பையே அளிக்கிறது.
இதில் நோய்த்தடைகாப்பியல் நினைவாற்றல் உள்ளது. இதில் நோய்த்தடைகாப்பியல் நினைவாற்றல் இல்லை.
இவ்வகை நோய்த்தடைக்காப்பு செயல்திறன் பெற சிறிது காலம் தேவைப்படும். இவ்வகை நோய்த்தடைக்காப்பு உடனே உருவாகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement