12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21 B
கேள்வி 21 B : வேறுபாடுகளை எழுதுக : ஆ) முதல் நிலை தடைகாப்பு துலங்கல்கள் மற்றும் இரண்டாம் நிலை தடைகாப்பு துலங்கல்கள்
விடை :
| முதல்நிலை தடைக்காப்பு துலங்கல்கள் (Primary Immune Response) | இரண்டாம் நிலை தடைக்காப்பு துலங்கல்கள் (Secondary Immune Response) |
|---|---|
| ஒரு எதிர்ப்பொருள் தூண்டி (Antigen) முதல் முறையாக நோய்தடைக்காப்பு அமைப்புடன் தொடர்பு கொள்ளும்போது இவை உருவாகின்றன. | முதல் நிலையில் சந்தித்த அதே எதிர்ப்பொருள் தூண்டியை இரண்டாவது அல்லது அடுத்தடுத்து எதிர்கொள்ளும் போது இத்தடைக்காப்பு துலங்கல்கள் ஏற்படுகின்றன. |
| உச்சநிலை செறிவு: எதிர்ப்பொருளின் செறிவு 7 முதல் 10 நாட்களில் உச்ச நிலையை அடைகிறது. | உச்சநிலை செறிவு: எதிர்ப்பொருளின் செறிவு 3 முதல் 5 நாட்களில் உச்ச நிலையை அடைகிறது (வேகமாக). |
| நேரம்: இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக அதிக நேரம் தேவைப்படுகிறது. | நேரம்: இவ்வகை நோய்தடைக்காப்பு உருவாக குறைவான நேரமே போதுமானது (விரைவாக). |
| அளவு நிலைப்புத்தன்மை: எதிர்ப்பொருள் அளவு விரைவாக வீழ்ச்சியடைகிறது (குறுகிய காலம் நீடிக்கிறது). | அளவு நிலைப்புத்தன்மை: எதிர்ப்பொருளின் அளவு நீண்ட காலம் உயர் நிலையில் உள்ளது (நீண்ட காலம் நீடிக்கிறது). |
| வெளிப்பாடு: இவை பெரும்பாலும் நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகின்றன. | வெளிப்பாடு: இவை எலும்புமஜ்ஜையில் தொடங்கி, தொடர்ந்து நிணநீர் முடிச்சுகள் மற்றும் மண்ணீரலால் வெளிப்படுத்தப்படுகின்றன. |


0 Comments