12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 8 நோய்த்தடைக்காப்பியல் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 21 E
கேள்வி 21 E : வேறுபாடுகளை எழுதுக : உ) சுயதடைகாப்பு நோய் மற்றும் தடைகாப்புக் குறைவு நோய்
முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :
| சுயதடைகாப்பு நோய் (Autoimmune Disease) | தடைகாப்புக் குறைவு நோய் (Immunodeficiency Disease) |
|---|---|
| காரணம்: அயல் மூலக்கூறுகள் மற்றும் சுய மூலக்கூறுகளை (எதிர்ப்பொருள் தூண்டிகள்) பிரித்தறியும் திறன் உடலுக்கு இல்லாததால் ஏற்படும் வழக்கத்திற்கு மாறான தடைகாப்பு துலங்கல் ஆகும். | காரணம்: தடைக்காப்பு மண்டலத்தின் ஒன்று அல்லது அதற்கு மேலான ஆக்கக் கூறுகளின் செயல் இழப்பால் தடைக்காப்பு குறைவு நிலை ஏற்படுகிறது. |
| விளைவு: நமது உடல் தனது சொந்த திசுக்களை அழிக்கக்கூடிய சுய எதிர்ப்பொருட்களையும் மற்றும் செல்நச்சாக்க T செல்களையும் உற்பத்தி செய்கிறது. | காரணம்/தூண்டிகள்: மரபியல் குறைபாடுகள், கதிர்வீச்சு, செல்சிதைக்கும் மற்றும் நோய்த்தடைக்காப்பை ஒடுக்கும் மருந்துகள் போன்றவற்றால் இது ஏற்படுகிறது. |


0 Comments