TNPSC TRB TET 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 7th Social Science Part-5
நிலப்பரப்பு மற்றும் நீர்நிலைகள் (Landforms and Water Bodies)
- 'V' வடிவ பள்ளத்தாக்கு: ஆற்றில் வேகமாக ஓடும் நீரானது பள்ளத்தாக்கைச் செங்குத்தாக அரித்து ஆழமாக்குவதால் உருவாகும் நிலத்தோற்றம்.
- மியாண்டர் ஆறு (துருக்கி): 'ஆற்று வளைவு' (Meanders) என்ற சொல் உருவான ஆசிய மைனர் ஆற்றின் பெயர்.
- குதிரைக் குளம்பு ஏரி (Oxbow Lake): ஆற்று வளைவு, ஆற்றிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு ஏரியாக உருவெடுப்பது.
- லெவீஸ் அல்லது உயர் அணை (Levees): வெள்ளச்சமவெளியின் உயர்ந்த ஆற்றங்கரைகள்.
- நயாகரா நீர்வீழ்ச்சி: கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
- விக்டோரியா நீர்வீழ்ச்சி: ஆப்பிரிக்காவில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது.
- சர்க்குகள் (Cirques): மலைச்சரிவில் பனியரிப்பால் ஏற்படும் நாற்காலி போன்ற நிலத்தோற்றம்.
- டார்ன் ஏரி (Tarn Lake): பனி உருகும் போது சர்க்குகள் நீரால் நிரப்பப்பட்டு உருவாகும் ஏரி.
- அரெட்டுகள் (Aretes): இரண்டு சர்க்குகள் இணைந்து உருவாகும் கத்திமுனைக் குன்றுகள்.
- 'U' வடிவ பள்ளத்தாக்கு: பனியாற்றின் பக்கவாட்டு மற்றும் செங்குத்து அரிப்பினால் ஏற்படும் பள்ளத்தாக்கு.
- மொரைன்கள் (Moraines): பனியாற்றினால் கடத்தப்பட்டு படியவைக்கப்படும் மணல் மற்றும் வண்டல் படிவுகள்.
- காளான் பாறை (Mushroom Rock): பாறையின் அடிப்பகுதி குறுகலாகவும் மேற்பகுதி அகன்றும் அரிக்கப்பட்டு உருவாகும் தோற்றம்.
- காற்று அரிப்புத் தனிக்குன்றுகள் (Inselbergs): தனித்து விடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் தூண் போன்ற தோற்றம்.
- பிறைவடிவ மணல் குன்றுகள் (Barchans): பாலைவனங்களில் காற்று வீசும் போது உருவாகும் பிறைச்சந்திர தோற்றமுடன் கூடிய மணல் மேடுகள்.
- கோபி பாலைவனம்: வடக்கு சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் (லெஸ்) கடத்தப்பட்ட பாலைவனம்.
- கடல் ஓங்கல் (Sea Cliff): கடல் அலைகளின் மோதலினாலும் அரிப்பினாலும் கடலை நோக்கிச் செங்குத்தாக நிற்கும் பாறைகள்.
- மியாமி கடற்கரை (அமெரிக்கா): உலகிலேயே மிக நீளமான கடற்கரை.
- காயல்கள் அல்லது உப்பங்கழிகள் (Lagoons): ஒடிசாவிலுள்ள சிலிக்கா ஏரி இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
- காக்கசாய்டு: ஐரோப்பிய இனத்தவர்கள் சேர்ந்த மனித இனப்பிரிவு.
- மங்கோலாய்டு: ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படும் வெளிர் மஞ்சள் நிறத் தோல் கொண்ட இனம்.
- சிந்து சமவெளி நாகரிகம்: இந்தியாவில் திராவிடர்களின் முதல் நிலைத் தோற்றமாகக் கருதப்படுவது.
- சினகாக் (Synagogue): யூத மதம் (ஜூடாய்ஸம்) கொண்டுள்ள வழிபாட்டுத் தலம்.
- 22 மொழிகள்: இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை.
- வட்டவடிவக் குடியிருப்புகள் (Circular Settlements): ஏரிகள் மற்றும் குளங்களின் அருகில் ஒரு மையப்பகுதியைச் சுற்றி காணப்படும் குடியிருப்புகள்.
- நட்சத்திர வடிவக் குடியிருப்புகள் (Star Shaped Settlements): சாலைகள் ஒன்றுசேரும் இடங்களிலிருந்து எல்லா திசைகளிலும் பரவி காணப்படும் குடியிருப்புகள்.
- மாநகரம் (City): 1,00,000 மக்கள் தொகைக்கு மேல் இருந்தால் அழைக்கப்படுவது.
- கல்கத்தா: இந்தியாவில் நகர்ப்புறப் பகுதி மீப்பெரு நகரமாகப் பகுக்கப்பட்ட நகரம்.
- செயற்கைக்கோள் நகரம் (Satellite Town): அதிக அளவு மக்கள் தொகையைக் கொண்ட பெரு நகரங்களுக்கு வெளியே வடிவமைக்கப்படும் வீடுகள்.
- 12 முக்கிய நகரங்கள்: தமிழ்நாட்டில் சிறப்புப் பொருளாதார நகரங்களாக மாற்றப்பட உள்ளவை.
- பிப்ரவரி 21: பன்னாட்டு தாய்மொழி தினம்.
- மே 21: உலக கலாச்சார பல்வகை நாள் கடைபிடிக்கப்படும் தேதி.
- த்ரீகார்ஸ் அணை நீர் மின் சக்தி திட்டம்: சீனாவில் அமைந்துள்ளது.
- பரானா நதி: இட்டைப்பு அணை நீர் மின் சக்தி திட்டம் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
- தெகிரி அணை: உத்ரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள நீர்மின் சக்தி திட்டம்.
- இரும்புத்தாது: எஃகு உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படும் தாது.
- கஞ்சமலை: தமிழ்நாட்டில் இரும்புத்தாது கிடைக்கும் மலை.
- சிலி: தாமிர உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் நாடு.
- கர்நாடகா: இந்தியாவில் தங்கத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலம்.
- துராலுமின்: தூய அலுமினியத்துடன் சிறிய அளவிலான பிற உலோகங்களைச் சேர்ப்பதன் மூலம் உருவாகும் உயர்ரக உலோகக்கலவை.
- ஆஸ்திரேலியா: உலகின் முன்னணி பாக்ஸைட் உற்பத்தி செய்யும் நாடு.
- கினியா: உலகின் நான்கில் ஒரு பங்கு பாக்ஸைட் தாது படிவுகள் உள்ள நாடு.
- சேர்வராயன் மலை (சேலம்): தமிழகத்தில் பாக்ஸைட் படிவுகள் அதிகளவில் உள்ள மலை.
- மெக்ஸிகோ: வெள்ளி உற்பத்தியில் முன்னணி நாடாக விளங்கும் நாடு.
- தென் ஆப்பிரிக்கா: மாங்கனீசு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடு.
- மைக்கா: மின்தொழில்களில் காப்புப்பொருளாகப் பயன்படுத்தப்படும் கனிமம்.
- சுண்ணாம்புக்கல்: போர்ட்லேண்ட் சிமெண்ட் தயாரிக்கப்படுவது.
- முற்றா நிலக்கரி அல்லது பீட்: நிலக்கரியின் வகைகளில் முதலில் உருவாகும் நிலக்கரியின் பெயர்.
- அஸ்ஸாம்: இந்தியாவில் பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் திக்பாய் பகுதி அமைந்துள்ள மாநிலம்.
- இராமநாதபுரம்: கமுதி சூரிய ஒளி மின்சக்தி திட்டம் அமைந்துள்ள மாவட்டம்.
- A3 (Accessibility, Accommodation, Attractions): சுற்றுலாவின் மூன்று முக்கிய கூறுகளை இணைக்கும் கோட்பாடு ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது.
- கலாச்சாரச் சுற்றுலா (Cultural Tourism): காஸ்ட்ரோனமி (உணவுச் சுற்றுலா) இதன் அம்சத்தை குறிக்கிறது.
- ஜோக் நீர்வீழ்ச்சி: கர்நாடகாவில் உள்ள ஷிமோகோ மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி (இந்தியாவின் நயாகரா): கேரள மாநிலத்தில் உள்ளது.
- காசிரங்கா தேசிய பூங்கா: புலி, மான், எருமை போன்ற விலங்குகளுக்காக அறியப்படுகிறது.
- கிர் தேசிய பூங்கா (குஜராத்): சிங்கத்தின் சரணாலயம்.
- பரத்பூர் பறவை சரணாலயம்: இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது.
- தனுஷ்கோடி: நீல ரத்தின நிறத்தில் காணப்படும் கடல்நீரைக் கொண்ட கடற்கரை.
- மராரி கடற்கரை: இரண்டு மணல் திட்டுகளுக்கு இடையே தொட்டில் போன்ற அமைப்பில் உள்ள கடற்கரை.
- கும்பக்கரை நீர்வீழ்ச்சி: தமிழ்நாட்டில் பாம்பார் ஆற்றில் சிற்றருவிகளாக உருவாகும் நீர்வீழ்ச்சி.
- சுருளி நீர்வீழ்ச்சி (நில நீர்வீழ்ச்சி / மேகமலை நீர்வீழ்ச்சி): இவ்வாறு அழைக்கப்படுவது.
- கோடியக்கரை வனவிலங்குச் சரணாலயம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- காரைவெட்டி பறவைகள் சரணாலயம்: அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
- முக்கூர்த்தி தேசிய பூங்கா: தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.
- ஏற்காடு (ஏரிக் காடுகள்): ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் மலைவாழிடம்.
- வெள்ளயங்கிரி மலை: தெற்கின் கைலாஷ் என அழைக்கப்படும் மலை.
- அமெரிக்கோ வெஸ்புகி: 1507 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு பெயர் சூட்டக் காரணமாக இருந்த இத்தாலிய ஆய்வாளர்.
- பனாமா நிலசந்தி: வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் நிலப்பகுதி.
- பேரிங் நீர்ச்சந்தி: வட அமெரிக்காவை ஆசியாவில் இருந்து பிரிக்கும் நீர்ச்சந்தி.
- மெக்கென்லீ சிகரம் (6194 மீ): கடல் மட்டத்திலிருந்து உயரத்தோடு அமைந்துள்ள வட அமெரிக்காவின் உயரமான சிகரம்.
- மேற்கத்திய கார்டில்லெராஸ் (Western Cordilleras): ராக்கி மலைத்தொடரும் கடற்கரை மலைத்தொடரும் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.
- மிஸிஸிப்பி மற்றும் மிஸ்சௌரி ஆறுகள்: வட அமெரிக்காவின் மிகநீளமான ஆறுகள்.
- கொலராடோ ஆறு: கிராண்ட் கேன்யான் எனப்படும் மிகப்பெரிய பள்ளத்தாக்கினை கொலம்பியா பீடபூமியில் உருவாக்கிய ஆறு.
- ரியோ கிரேன்டி நதி: அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் எல்லையாக அமைந்துள்ள நதி.
- மிஸிஸிப்பி ஆறு: பெரிய சேற்று ஆறு என்ற புனைப் பெயருடன் அழைக்கப்படும் ஆறு.
- வட அமெரிக்கா: உலகின் முதல் கோதுமை ஏற்றுமதியாளராக விளங்கும் கண்டம்.
- இஃக்லூ (Igloo): பனிக்கட்டிகளை கொண்டு எக்ஸிமோக்கள் கட்டும் வீடுகள்.
- 4 மணி கடிகார மழை (4 O'clock Rain): பூமத்திய ரேகையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் பிற்பகலில் நிகழும் வெப்பச்சலன மழை.
- அமேசான் ஆறு: தென் அமெரிக்காவின் மிக நீண்ட ஆறு.
- ஈட்டி மரப்பட்டை: மலேரியாவிற்கான கியூனைன் மருந்து இதிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
- கியுபிராகோ: கோடாலி உடைப்பான் என அழைக்கப்படும் கடினமான மரம்.
- பிரன்ஹா (Piranha): அமேசான் நதியில் காணப்படும் கடுமையான மாமிச உண்ணி வகை மீன்.
- பிரேசில்: உலகின் காபி பானை (Coffee Pot) என அழைக்கப்படும் நாடு.
- தென் அமெரிக்கா: உலகில் சோடியம் நைட்ரேட் படிவுகள் இயற்கையாகக் கிடைக்கும் ஒரே கண்டம்.
- அட்டகாமா பாலைவனம்: பெரு நாட்டில் உள்ள உலகின் மிகப்பெரிய தாமிரச் சுரங்கம் அமைந்துள்ள பாலைவனம்.
- நில அளவைப் படங்கள் (Cadastral): கிராமம் மற்றும் நகர்ப்புறங்களின் வரைபடங்களைக் குறிக்கின்றன.
- கார்டோகிராஃபர் (Cartigrapher): நில வரைபடத்தை வரைந்து உருவாக்குபவர்.
- சுனாமி (Tsu-Nami): 'சு' என்பது துறைமுகம், 'னாமி' என்பது அலைகள்.
- 2006 டிசம்பர் 25: இந்திய அரசால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) உருவாக்கப்பட்ட ஆண்டு.
- பயன்பாட்டை உருவாக்குதல்: பொருளாதாரத்தில் 'உற்பத்தி' என்னும் சொல் எதைக் குறிக்கிறது.
- வேளாண்மை: முதன்மை நிலை உற்பத்தியில் முதலிடம் அளிக்கப்படும் தொழில்.
- நாடுகளின் செல்வமும் அவற்றை உருவாக்குகின்ற காரணிகளும்: ஆடம்ஸ்மித் வேலை பகுப்பு முறையை அறிமுகப்படுத்திய நூல்.
- விகிதாச்சார வரி (Proportional Tax): வருமான அளவைப் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியாக விதிக்கப்படும் வரி.
- மறைமுக வரி (Indirect Tax): விற்பனை வரி அல்லது மதிப்பு கூட்டு வரி (VAT) இதற்கு உதாரணம்.
- ஹரியானா (2003): இந்தியாவில் முதன்முதலில் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்பட்ட மாநிலம்.
- 0.5%: தூய்மை பாரத வரியின் வரி விகிதம்.
- 1971: சுவிட்சர்லாந்து நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்ட ஆண்டு.
- சட்டப்பிரிவு 16: பொது வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கும் சட்டப்பிரிவு.
- ஒரு கட்சி முறை (Single Party System): சீனா, வட கொரியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் நடைமுறையில் உள்ள கட்சி முறை.
- யானை மற்றும் சிங்கம்: விலங்குகளின் சின்னங்களை வழங்குவதை தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ள நிலையில், அதற்கு விதிவிலக்காக வழங்கப்பட்டுள்ள சின்னங்கள்.
- ஆகாசவானி: 1956ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு செயல்பட்டு வரும் பெயர்.


0 Comments