TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-12
இந்திய வரலாற்றுக் கேள்விகள் மற்றும் பதில்கள் (ஐரோப்பிய வருகை முதல் விவசாயிகள் கிளர்ச்சிகள் வரை)
ஆவணங்கள் மற்றும் பதிவுகள்
- ஆனந்தரங்கம் எழுதிய குறிப்புகள், 1736 முதல் 1760 வரையிலான பிரெஞ்சு-இந்திய உறவு முறையை அறிய உதவுகின்றன.
- தமிழ்நாடு ஆவணக்காப்பகம் என்று அழைக்கப்படும் சென்னை பதிப்பாசனம், சென்னையில் அமைந்துள்ளது.
- சென்னை நாட்குறிப்புப் பதிவுகள் டாட்வெல் முயற்சியால் 1917 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன.
- ஆங்கிலேயரால் 1690 இல் கடலூரில் கட்டப்பட்ட கோட்டை: புனித டேவிட் கோட்டை.
- 'மாலுமி ஹென்றி' என்று அறியப்பட்ட போர்ச்சுகீசிய இளவரசர்: இளவரசர் ஹென்றி.
- தென்னாப்பிரிக்காவின் தென்முனையை பார்த்தலோமியோ டயஸ் அடைந்தபோது அவருக்கு ஆதரவளித்த மன்னர்: மன்னர் இரண்டாம் ஜான்.
- வாஸ்கோடகாமாவின் வழியைப் பின்பற்றி 1500 ஆம் ஆண்டில் இந்தியா வந்த இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி: அல்வாரிஸ் காப்ரல்.
- போர்ச்சுகீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம்: கொச்சின்.
- இந்தியாவில் புகையிலை சாகுபடியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய ஐரோப்பியர்கள்: போர்ச்சுகீசியர்.
- போர்ச்சுகீசியரால் 1556 இல் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்ட இடம்: கோவா.
- 'இந்திய மருத்துவ தாவரங்கள்' என்ற நூல் ஓர் ஐரோப்பிய எழுத்தாளரால் கோவாவில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டு: 1563.
- நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி நிறுவனம் அரசிடம் அனுமதி பெற்ற ஆண்டு: 1602.
- போர்ச்சுகீசியரிடமிருந்து நாகப்பட்டினத்தைக் கைப்பற்றியதன் மூலம் டச்சுக்காரர்கள் தங்களை தென்னிந்தியாவில் வலிமைப்படுத்திக் கொண்டனர்.
- டச்சுக்காரர்களின் தலைநகரம் ஆரம்பத்தில் பழவேற்காடாக இருந்தது, 1690 இல் நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது.
- டச்சுக்காரர்களால் 1613 இல் பழவேற்காட்டில் கட்டப்பட்ட கோட்டை: கெல்டிரியா கோட்டை.
- இங்கிலாந்து ராணி எலிசபெத் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு அனுமதிப் பட்டயம் வழங்கிய நாள்: கி.பி. 1600 டிசம்பர் 31.
- ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை 1611 இல் நிறுவிய இடம்: மசூலிப்பட்டினம்.
- சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கரிடமிருந்து மெட்ராசைக் குத்தகைக்குப் பெற்ற ஆங்கில வணிகர்: பிரான்சிஸ் டே.
- ஆங்கிலேயரால் கட்டப்பட்ட முதல் கோட்டையாகவும் கிழக்குப்பகுதியின் தலைமையிடமாகவும் விளங்கியது: புனித ஜார்ஜ் கோட்டை.
- இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் பம்பாய் தீவை போர்ச்சுகீசிய மன்னரிடமிருந்து சீதனமாகப் பெற்றார்.
- கிழக்கிந்திய கம்பெனி 1698 இல் ஜமீன்தாரி உரிமையைப் பெற்ற மூன்று கிராமங்கள்: சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர்.
- டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க பட்டயம் வெளியிட்ட நாள்: 1616 மார்ச் 17.
- டேனியர்கள் தரங்கம்பாடியைத் தங்களது மொழியில் அழைத்த விதம்: டானஸ்பெர்க்.
- பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தை 1664 இல் உருவாக்கியவர்: கால்பர்ட்.
- பிரான்காய்ஸ் கரோன் தலைமையின் கீழ் பிரெஞ்சு குழு இந்தியா வந்த ஆண்டு: 1667.
- இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தைச் சூரத் நகரில் நிறுவியவர்: கரோன்.
- பாண்டிச்சேரியில் பிரான்காய்ஸ் மார்ட்டின் கட்டிய கோட்டை: செயின்ட் லூயிஸ் கோட்டை.
- முகலாய ஆளுநரான செயிஸ்டகானின் அனுமதி பெற்று பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி சந்திரநாகூர் நகரை நிர்மாணித்த ஆண்டு: 1673.
- சுவீடன் கிழக்கிந்திய கம்பெனி ஜோதன்பர்க் என்பவரால் நிறுவப்பட்ட ஆண்டு: 1731.
- 1756 இல் நடைபெற்ற இருட்டறை துயரச் சம்பவத்தில் மூச்சுத் திணறி இறந்தவர்கள்: 123 பேர்.
- சிராஜ்-உத்-தௌலா படைகளுக்கும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே பிளாசிப் போர் நடைபெற்ற நாள்: 1757 ஜூன் 23.
- பிளாசிப் போரில் இராபர்ட் கிளைவ் தலைமையிலான படைகள் தோற்கடித்தது: சிராஜ்-உத்-தௌலாவின் படைகளை.
- பிளாசிப் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: அலிநகர் உடன்படிக்கை.
- பக்சார் போர் நடைபெற்ற நாள்: 1764 ஆம் ஆண்டு அக்டோபர் 22.
- பக்சார் போரில் கூட்டணிக் படைகளைத் தோற்கடித்த ஆங்கிலப்படைத் தளபதி: ஹெக்டர் மன்றோ.
- பக்சார் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை (1765 பிப்ரவரி 20): அலகாபாத் உடன்படிக்கை.
- பக்சார் போருக்குப் பிறகு வங்காளத்தில் இரட்டையாட்சி முறையைக் கொண்டு வந்தவர்: இராபர்ட் கிளைவ்.
- அடையாறு போர் (1746) நடைபெற்றது: கர்நாடக நவாப் அன்வாருதீனுக்கும் பிரெஞ்சுப் படைக்கும் இடையே.
- முதல் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: அய்-லா-சப்பேல் உடன்படிக்கை (1748). இதன் மூலம் மதராஸ் ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
- ஆம்பூர் போரில் (1749) தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட கர்நாடக நவாப்: அன்வாருதீன்.
- அன்வாருதீன் கொல்லப்பட்ட பிறகு திருச்சிராப்பள்ளிக்குத் தப்பி ஓடிய அவரது மகன்: முகமது அலி.
- ராபர்ட் கிளைவ் ஆங்கிலேய மற்றும் இந்திய படைகளுடன் ஆற்காட்டைத் தாக்கி கைப்பற்றிய ஆண்டு: கி.பி. 1751.
- இரண்டாம் கர்நாடகப் போர் (1755) முடிவுக்கு வந்த உடன்படிக்கை: பாண்டிச்சேரி உடன்படிக்கை.
- வந்தவாசிப் போரில் (1760 ஜனவரி 22) பிரெஞ்சு படையை முற்றிலும் தோற்கடித்த ஆங்கிலப்படைத் தளபதி: ஜெனரல் அயர் கூட்.
- மூன்றாம் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: பாரிசு உடன்படிக்கை (1763).
- முதல் ஆங்கிலேய மைசூர் போரில் (1767) ஹைதராபாத் நிசாமிற்கு உதவிய ஆங்கிலத் தளபதி: ஜோசப் ஸ்மித்.
- முதல் ஆங்கிலேய மைசூர் போரில் ஆங்கிலப் படையைத் தோற்கடித்து மங்களூரைக் கைப்பற்றிய மைசூர் ஆட்சியாளர்: ஹைதர் அலி.
- முதல் ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: 1769 மதராஸ் உடன்படிக்கை.
- இரண்டாம் ஆங்கில மைசூர் போரின் போது சர் அயர்கூட் ஹைதர் அலியைத் தோற்கடித்த இடம்: பரங்கிப்பேட்டை (1781).
- இரண்டாம் ஆங்கில மைசூர் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: 1784 மங்களூர் உடன்படிக்கை.
- மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை கையெழுத்தான ஆண்டு: 1792.
- நான்காம் ஆங்கிலேய மைசூர் போரில் திப்புவின் மீது வெல்லெஸ்லி பிரபு போர் தொடுத்த ஆண்டு: 1799.
- 1775 இல் ஆங்கிலேயருக்கும் ரகுநாதராவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்: சூரத் ஒப்பந்தம்.
- பூனாவின் பாதுகாப்பரசுடன் 1776 இல் புரந்தர் ஒப்பந்தத்தைச் செய்துகொண்ட ஆங்கிலேயர்: கர்னல் அப்டன்.
- 1782 ஆம் ஆண்டு மே 17 இல் வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே கையெழுத்தான ஒப்பந்தம்: சால்பை ஒப்பந்தம்.
- முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் முடிவில் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்: இரண்டாம் மாதவராவ்.
- 1802 இல் வெல்லெஸ்லி பிரபு பஸ்ஸீன் உடன்படிக்கையைச் செய்துகொண்டவர்: இரண்டாம் பாஜிராவ் பேஷ்வா.
- இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஆங்கிலேயரின் இராணுவம் போரிட்ட தலைமையாளர்: ஆர்தர் வெல்லஸ்லி.
- மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஈடுப்பட்ட நாக்பூரின் ஆட்சியாளர்: இரண்டாம் மூதோஜி போன்ஸ்லே.
- மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஈடுப்பட்ட இந்தூரின் ஆட்சியாளர்: மூன்றாம் மல்ஹர் ராவ் ஹோல்கர்.
- சிவில் சர்வீஸ் என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியது: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால்.
- 1860 இல் ஒழுங்கு முறை ஆணையின் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதிகபட்ச வயது குறைக்கப்பட்ட அளவு: 22 ஆக.
- இந்திய ஆட்சிப் பணி சட்டம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஆண்டு: 1861.
- 1863 இல் ஐசிஎஸ் (ICS) தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்: சத்தியேந்திரநாத் தாகூர்.
- இந்திய ஆட்சிப் பணியில் 33 சதவீதம் இந்தியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தவர்கள்: மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு.
- மத்தியில் கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக வழிவகை செய்த சட்டம்: 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
- ஆங்கிலேயர் காலத்தில் இராணுவத்தில் இந்தியர்களுக்கான அதிகபட்ச உயர் பதவி: சுபேதார்.
- காரன்வாலிஸ் பிரபு முறையான காவல் துறையை உருவாக்கிய ஆண்டு: 1791.
- காரன்வாலிஸ் அமைத்த 'தானாக்கள்' என்ற காவல் பகுதிகளின் தலைவர்: தரோகா என்று அழைக்கப்பட்டார்.
- இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, நீதி வழங்கும் அதிகாரத்தை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக் கொண்ட ஆண்டு: 1772.
- ஆங்கிலேயர் காலத்தில் சிவில் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் முறையே அழைக்கப்பட்ட பெயர்கள்: திவானி அதாலத் மற்றும் பௌஜ்தாரி அதாலத்.
- வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் அமைக்கப்பட்ட முதல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி: சர் எலிஜா இம்பே.
- மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி: சர் திருவாரூர் முத்துசாமி.
- சுதேச அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வெல்லெஸ்லி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்: துணைப்படைத்திட்டம் (1798).
- வெல்லெஸ்லி பிரபு அறிமுகப்படுத்திய துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் நாடு: ஹைதராபாத்.
- டல்ஹௌசி பிரபு சுதேச மன்னர்களின் நாடுகளை இணைக்க 1848 இல் அறிமுகப்படுத்திய கொள்கை: வாரிசு இழப்புக் கொள்கை.
- 1857 ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்த டல்ஹௌசியின் கொள்கை: வாரிசு இழப்புக் கொள்கை.
- 1765 இல் வங்காளம், பீகார் மற்றும் ஒரிசாவில் வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றவர்: இராபர்ட் கிளைவ்.
- ஓராண்டு நில வருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நில வருவாய் திட்டமாக மாற்றிய தலைமை ஆளுநர்: வாரன் ஹேஸ்டிங்ஸ்.
- காரன்வாலிஸ் பிரபு நில வருவாய் திட்டத்தை 1793 இல் மாற்றியது: பத்தாண்டு நில வருவாய் திட்டமாக.
- நிலையான நிலவருவாய் திட்டம் வேறு அழைக்கப்படும் பெயர்கள்: ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி.
- இரயத்துவாரி முறை தாமஸ் மன்றோ மற்றும் கேப்டன் ரீட் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு: 1820.
- இரயத்துவாரி முறையில் விளைச்சலில் பாதியாக இருந்த நிலவருவாயை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்தவர்: தாமஸ் மன்றோ.
- மகல்வாரி முறை யாருடைய சிந்தனையில் உதித்த திட்டம்: ஹோல்ட் மெகன்சி.
- இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட் வழிகாட்டுதலின்படி 1833 இல் மகல்வாரி முறையில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்தவர்: வில்லியம் பெண்டிங் பிரபு.
- மகல்வாரி முறையில் நிலவருவாயைக் கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்குச் செலுத்த நியமிக்கப்பட்டவர்: ஒரு கிராமத் தலைவர்.
- 1855-56 இல் விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம்: சந்தால் கலகம்.
- சந்தால் கலகத்தில் 10,000 வீரர்களை ஒன்றுகூட்டி ஆயுதம் ஏந்திய புரட்சியை நடத்திய சகோதரர்கள்: சித்து மற்றும் கங்கு.
- 1859-60 இல் வங்காளத்தில் நடைபெற்ற அவுரிப் புரட்சி வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது: இண்டிகோ கலகம்.
- செப்டம்பர் 1859 இல் நாதியா மாவட்டத்தில் நடைபெற்ற அவுரிப் கலகங்களை நடத்தியவர்கள்: திசம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ்.
- வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவர 'நீல் தர்பன்' என்ற நாடகத்தை எழுதியவர்: தீனபந்து மித்ரா.
- பாப்னா விவசாய எழுச்சி வங்காளத்தில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில் ஆரம்பிக்கப்பட்டவர்: கேசப் சந்திரா ராய்.
- 1875 ஆம் ஆண்டு உள்ளூர் வட்டிக்காரர்களின் அடக்குமுறையை எதிர்த்து பூனா மாவட்ட விவசாயிகள் ஈடுபட்ட கலகம்: தக்காண கலகம்.
- தக்காண கலகத்தின் விளைவாக விவசாயிகளின் குறைகளை களைய நிறைவேற்றப்பட்ட சட்டம்: தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம்.
- 1890-1900 காலகட்டத்தில் நகர்ப்புற வட்டிக்காரர்களின் ஒடுக்குமுறைகளைத் தடுக்கப் புரட்சியில் ஈடுபட்ட விவசாயிகள்: பஞ்சாப் விவசாயிகள்.
- 1917-18 இல் பீகாரில் உள்ள சம்பரான் என்ற இடத்தில் ஐரோப்பிய பண்ணையாளர்களை எதிர்த்துப் போராடியவர்கள்: விவசாயிகள்.
- சம்பரான் விவசாயிகளின் பிரச்சினை தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் ஓர் உறுப்பினராக இணைத்துக்கொள்ளப்பட்டவர்: மகாத்மா காந்தி.
- சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு: மே 1918.
- 1918 இல் இடையராத பஞ்சத்தின் காரணமாக குஜராத்தின் கேடா மாவட்டத்தில் நடைபெற்ற வரிகொடா இயக்கம்: கேடா (கைரா) சத்தியாகிரகம்.
- 1921 இல் மாப்ளா என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் விவசாயிகள் ஆங்கில அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சி: மாப்ளா கிளர்ச்சி.


0 Comments