TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-14
- ஆனந்தரங்கம் எழுதிய குறிப்புகள்: பிரெஞ்சு - இந்திய உறவு முறையைப் பற்றி அறிய உதவுகிறது.
- ஆசியாவின் மிகப் பெரிய ஆவணக்காப்பகம்: புதுடெல்லியில் அமைந்துள்ளது.
- தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் வேறு பெயர்: சென்னை பதிப்பாசனம்.
- இந்தியாவின் மிகப்பெரிய தேசிய அருங்காட்சியகம் (1949-ல் நிறுவப்பட்டது): டெல்லியில் உள்ளது.
- நவீன இந்தியாவின் முதல் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டு: கி.பி. 1862 (ஆங்கிலேய ஆட்சியில்).
- விக்டோரியா ராணிக்குப் பிறகு பிரிட்டிஷ் அரியணை ஏறிய மன்னர்: மன்னர் ஏழாம் எட்வர்டு.
- இந்திய ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் அதிகாரத்தைப் பெற்ற ஆண்டு: 1935.
- கடலூரில் 1690ல் கட்டப்பட்ட கோட்டை: புனித டேவிட் கோட்டை.
- பார்த்தலோமியோ டயஸ் தென்னாப்பிரிக்காவின் தென்முனையை அடைந்த ஆண்டு: 1487.
- பார்த்தலோமியோ டயஸை ஆதரித்த போர்ச்சுகல் மன்னர்: மன்னர் இரண்டாம் ஜான்.
- வாஸ்கோடகாமாவை கள்ளிக்கோட்டையில் வரவேற்ற இந்திய மன்னர்: மன்னர் சாமரின்.
- அல்வாரிஸ் காப்ரல் இந்தியா வந்த கப்பல்கள் மற்றும் வீரர்கள் எண்ணிக்கை: 13 கப்பல்களில்.
- போர்ச்சுகீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம்: கொச்சின்.
- 1505-ல் போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்ட முதல் ஆளுநர்: பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா.
- நீலநீர்க்கொள்கையைப் பின்பற்றிய போர்ச்சுக்கீசிய ஆளுநர்: பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா.
- பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றியவர்: அல்போன்சோ -டி-அல்புகர்க்.
- போர்ச்சுகீசிய கவர்னர் நினோ-டி-குன்கா தலைநகரை மாற்றிய இடம்: கொச்சியிலிருந்து கோவாவிற்கு.
- இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்திய ஐரோப்பியர்கள்: போர்ச்சுக்கீசியர்.
- போர்ச்சுகீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்ட ஆண்டு: 1556.
- நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகம் செய்ய அரசிடம் அனுமதி பெற்ற ஆண்டு: 1602.
- டச்சுக்காரர்களின் முதல் வர்த்தக மையம் இந்தியாவில் நிறுவப்பட்ட இடம்: மசூலிப்பட்டினம்.
- ஆங்கிலேய வணிகக்குழுவிற்கு அனுமதிப் பட்டயம் வழங்கிய பிரிட்டிஷ் அரசி: இங்கிலாந்து ராணி எலிசபெத்.
- சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கரிடம் இருந்து மெட்ராஸைப் பெற்ற ஆங்கில வணிகர்: பிரான்சிஸ் டே.
- இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் திருமணம் செய்துகொண்ட போர்ச்சுகீசிய இளவரசி: காதரின்.
- சுதாநுதி, காளிகட்டம், கோவிந்தபூர் கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையை கிழக்கிந்திய கம்பெனி பெற்ற ஆண்டு: 1698.
- டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கப் பட்டயம் வெளியிட்டவர்: டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன்.
- டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாகச் செயல்பட்ட இடம்: செராம்பூர்.
- டென்மார்க் அரசரால் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிஞர்: சீகன்பால்கு.
- பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தை 1664-ல் உருவாக்கிய அமைச்சர்: கால்பர்ட்.
- தூரக்கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்ய சுவீடன் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப்பட்ட ஆண்டு: 1731.
- 1756ல் சிராஜ்-உத்-தெளலாவின் படைவீரர்கள் இருட்டறையில் அடைத்த ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை: 146 பேர்.
- பிளாசிப்போர் யாருடைய அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கி வைத்தது: ஆங்கிலேயர்களது அதிகாரம்.
- ஆங்கிலேயர்கள் தவறாகப் பயன்படுத்திய சுங்க வரிவிலக்கு ஆணை: தஸ்தக்.
- அலகாபாத் உடன்படிக்கை கையெழுத்தான நாள்: 1765 பிப்ரவரி 20.
- அடையாறு போர் (1746) நடைபெற்ற இடம்: அடையாறு நதிக்கரையில் அமைந்துள்ள சாந்தோம்.
- ஆம்பூர் போரில் அன்வாருதீன் தோற்கடிக்கப்பட்ட பின் திருச்சிராப்பள்ளிக்குத் தப்பியோடிய அவரது மகன்: முகமது அலி.
- இரண்டாம் கர்நாடகப் போரின் போது ஆற்காட்டை (கி.பி. 1751ல்) தாக்கிய ஆங்கிலேயர்: ராபர்ட் கிளைவ்.
- பாண்டிச்சேரி உடன்படிக்கை கையெழுத்தான ஐரோப்பிய நாடுகள்: பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள்.
- வந்தவாசிப் போரில் லாலி தலைமையிலான பிரெஞ்சு படையைத் தோற்கடித்த ஆங்கிலேய தளபதி: ஜெனரல் அயர் கூட்.
- முதல் ஆங்கிலேய மைசூர் போரில் மைசூர் மீது 1767ல் படையெடுத்தவர்: ஹைதராபாத் நிசாம்.
- 1781ல் சர் அயர்கூட் ஹைதர் அலியை தோற்கடித்த இடம்: பரங்கிப்பேட்டை.
- மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை.
- 1775ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் ரகுநாதராவுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம்: சூரத் ஒப்பந்தம்.
- 1776ல் பூனாவின் பாதுகாப்பரசுடன் கர்னல் அப்டன் செய்துகொண்ட ஒப்பந்தம்: புரந்தர் ஒப்பந்தம்.
- இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஆங்கிலேயப் படைக்குத் தலைமை தாங்கியவர்: ஆர்தர் வெல்லஸ்லி.
- போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர்கள் நியமனத்தை முதலில் அறிமுகப்படுத்திய சட்டம்: 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
- அரசு ஊழியர்கள் நியமன போட்டித் தேர்விற்கான ஆரம்ப அதிகபட்ச வயது: 23 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
- இந்திய ஆட்சிப் பணியில் இந்தியர்களின் சதவீதத்தை 33 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்தவர்கள்: மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு.
- மத்தியில் கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக வழிகோலிய சட்டம்: 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்.
- ஆங்கிலேயர் காலத்தில் இராணுவத்தில் இந்தியர்களுக்கான மிக உயர்ந்த பதவி: சுபேதார்.
- காரன்வாலிஸ் பிரபு 1791ல் முறையாக உருவாக்கியது: காவல் துறை.
- சரகங்கள் அல்லது தானாக்கள் என்ற காவல் பகுதிகளின் தலைவராகச் செயல்பட்டவர்: தரோகா.
- ஆங்கிலேயர் ஆட்சியில் கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள்: சௌகிதார்கள்.
- 1772ல் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு நீதி வழங்கும் அதிகாரத்தை ஏற்றது: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி.
- ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றவியல் நீதிமன்றம்: பௌஜ்தாரி அதாலத் என்று அழைக்கப்பட்டது.
- வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்: சர் எலிஜா இம்பே.
- மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி: சர் திருவாரூர் முத்துசாமி.
- துணைப்படைத் திட்டத்தை வெல்லெஸ்லி பிரபு அறிமுகப்படுத்திய ஆண்டு: 1798.
- துணைப்படைத் திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட சுதேச அரசு: ஹைதராபாத்.
- வாரிசு இழப்புக் கொள்கையை டல்ஹௌசி பிரபு அறிவித்த ஆண்டு: 1848.
- 1857 பெரும் புரட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்த டல்ஹௌசியின் கொள்கை: வாரிசு இழப்புக் கொள்கை.
- 1765ல் வங்காளம், பீகார், ஒரிசாவில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றவர்: இராபர்ட் கிளைவ்.
- ஓராண்டு நில வருவாய் திட்டத்தை ஐந்தாண்டு திட்டமாக மாற்றிய ஆளுநர்: வாரன் ஹேஸ்டிங்ஸ்.
- காரன்வாலிஸ் பிரபு பத்தாண்டு நில வருவாய் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஆண்டு: 1793.
- இரயத்துவாரி முறை தாமஸ் மன்றோ மற்றும் கேப்டன் ரீட் ஆகியோரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு: 1820.
- இரயத்துவாரி முறையில் நில வருவாய் விளைச்சலில் பாதியிலிருந்து குறைக்கப்பட்ட அளவு: மூன்றில் ஒரு பங்காக.
- மகல்வாரி முறையில் சில அடிப்படை மாற்றங்களை கொண்டுவந்த தலைமை ஆளுநர்: வில்லியம் பெண்டிங் பிரபு.
- மகல்வாரி முறையில் நிலவருவாயை அரசுக்கு செலுத்த நியமிக்கப்பட்டவர்: கிராமத் தலைவர்.
- சந்தால் மக்கள் பீகாரில் வேளாண்மை செய்த குன்றுகள்: ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகில்.
- சித்து மற்றும் கங்கு என்ற சகோதரர்கள் 10,000 வீரர்களைத் திரட்டிய கிளர்ச்சி: சந்தால் கலகம்.
- ஐரோப்பிய தோட்டக்காரர்கள் விவசாயிகளை வளர்ப்பதற்குக் கட்டாயப்படுத்தியது: இண்டிகோவை.
- 1859ல் நாதியா மாவட்டத்தில் நடைபெற்ற அவுரிப் புரட்சியை நடத்தியவர்கள்: திசம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ்.
- பாப்னா விவசாய எழுச்சியை யூசுப்சாகி பர்கானாவில் ஆரம்பித்து வைத்தவர்: கேசப் சந்திரா ராய்.
- தக்காண கலகம் (1875) ஆரம்பிக்கப்பட்ட மாவட்டம்: பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள்.
- தக்காண விவசாயிகளின் குறைகள் களையப்பட்ட சட்டம்: தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம்.
- நகர்ப்புற வட்டிக்காரர்களின் ஒடுக்கு முறைகளைத் தடுக்கப் புரட்சியில் ஈடுபட்ட விவசாயிகள்: பஞ்சாப் விவசாயிகள்.
- பீகாரில் சட்டத்திற்குப் புறம்பான முறையில் அவுரி சாகுபடி செய்யப்பட்ட இடம்: சம்பரான்.
- சம்பரான் விவசாயச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு: மே 1918.
- கேடா மாவட்டத்தில் விவசாயம் பொய்த்ததற்குக் காரணம்: இடையராத பஞ்சம்.
- மாப்ளா என்று அழைக்கப்பட்டவர்கள்: முஸ்லீம் விவசாயிகள்.
- பர்தோலி சத்தியாகிரகம் யாருடைய தலைமையில் நடைபெற்றது: சர்தார் வல்லபாய் பட்டேல்.
- விஸ்வநாதர் பாளையக்காரர் முறையை ஏற்படுத்த யாருடன் கலந்தாலோசித்தார்: அமைச்சர் அரியநாதருடன்.
- பாளையக்காரர் முறையின் கீழ் நாடு பிரிக்கப்பட்ட பாளையங்களின் எண்ணிக்கை: 72 பாளையங்களாக.
- மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருந்தனர்: பூலித்தேவர்.
- வீரபாண்டியபுரத்தை ஆட்சி செய்த கட்டபொம்மனின் தந்தை: ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.
- 1798ல் நிலுவைத் தொகையைச் செலுத்த கட்டபொம்மனுக்குக் கடிதம் எழுதிய கலெக்டர்: காலின் ஜாக்சன்.
- மேஜர் பானர்மேன் தன்னுடைய படையைப் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி நகர்த்திய நாள்: 1799 செப்டம்பர் 5.
- வேலுநாச்சியார் சிவகங்கையின் எந்த மன்னருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார்: முத்து வடுகநாதர்.
- காளையார் கோவில் போரில் முத்துவடுக நாதரைக் கொன்ற படைகள்: ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகள்.
- வேலுநாச்சியார் யாருடைய பாதுகாப்பில் விருப்பாச்சியில் வாழ்ந்தார்: கோபால நாயக்கர்.
- வேலுநாச்சியாரின் படைத்தளபதியாக இருந்து தற்கொலைத் தாக்குதல் நடத்திய வீராங்கனை: குயிலி.
- மருது சகோதரர்களின் பெற்றோர் பெயர்கள்: பொன்னாத்தாள் மற்றும் மூக்கைய்யா பழனியப்பன்.
- சின்ன மருது சிவகங்கையின் எந்த மன்னரிடம் பணிபுரிந்தார்: முத்துவடுக நாத பெரிய உடையதேவர்.
- மருது சகோதரர்கள் திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை வெளியிட்ட மாதம்: ஜூன் 1801.
- தீரன் சின்னமலை பிறந்த இடம்: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையம்.
- வேலூர் கோட்டையில் புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியவர்: அக்னியூ.
- 'வேதம்' என்ற சொல் பெறப்பட்ட மொழிச் சொல்: சமஸ்கிருதம்.
- டெல்லியில் ஒரு மதரசாவை நிறுவிய முதல் இஸ்லாமிய ஆட்சியாளர்: இல்துத்மிஷ்.
- கல்கத்தாவில் டாக்டர் மிடில்டன் தொடங்கிய மிஷினரி கல்லூரி: பிஷப் கல்லூரி என்று அழைக்கப்பட்டது.
- பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்று கூறியவர்: எட்வர்ட் பெயின்ஸ்.


0 Comments