TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-16
ஆங்கிலேய - பிரெஞ்சு மோதல்கள் மற்றும் இந்திய ஆட்சியாளர்கள்
- ஆனந்தரங்கம் பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் (1736-1760) பிரெஞ்சு வர்த்தகத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிந்தார்.
- 1696-ல் சுதாநுதியில் கட்டப்பட்ட கோட்டை, வில்லியம் கோட்டை என 1700-ல் அழைக்கப்பட்டது.
- இருட்டறை துயரச் சம்பவம் கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் நடந்தது; இதில் 146 ஆங்கிலேயர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
- பிளாசிப் போர் (1757, ஜூன் 23): சிராஜ்-உத்-தௌலாவுடன் பிரெஞ்சுக் கூட்டணி சேர்ந்திருந்தது.
- பக்சார் போர் (1764): சுஜா-உத்-தௌலா, இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோரின் கூட்டுப்படை தோற்கடிக்கப்பட்டது.
- அடையாறு போர் (1746): பிரெஞ்சுப் படையிடம் தோற்ற கர்நாடக நவாப் அன்வாருதீன்.
- அய்-லா-சப்பேல் உடன்படிக்கை (1748) மூலம் மதராஸ் ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
- இரண்டாம் கர்நாடகப் போரின் போது நாசிர் ஜங் தக்காணத்தில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
- ராபர்ட் கிளைவ் 1751-ல் ஆற்காட்டைத் தாக்கி கைப்பற்ற ஆங்கிலேய மற்றும் இந்திய படைகளைப் பயன்படுத்தினார்.
- வந்தவாசிப் போரில் (1760) ஜெனரல் அயர் கூட், லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையை முற்றிலுமாக தோற்கடித்தார்.
- முதல் ஆங்கிலேய மைசூர் போர் முடிவில் மதராஸ் உடன்படிக்கை (1769) கையெழுத்தானது.
- சர் அயர்கூட் ஹைதர் அலியை 1781-ல் பரங்கிப்பேட்டையில் தோற்கடித்தார்.
- ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை (1792) காரன்வாலிஸ் மற்றும் திப்பு சுல்தான் இடையே கையெழுத்தானது.
- மராத்திய சுதந்திரத்தை காப்பாற்ற முயற்சித்த தெளலத் ராவ் சிந்தியா மற்றும் ரகோஜி போன்ஸ்லே ஆகியோரை தோற்கடித்த ஆங்கிலத் தளபதி ஆர்தர் வெல்லஸ்லி.
- இந்திய அரசுச் சட்டம் (1858): போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர்கள் நியமனத்தை உறுதி செய்தது.
- காரன்வாலிஸ் பிரபு:
- தானாக்கள் (காவல் பகுதிகள்) 1791-ல் ஏற்படுத்தப்பட்டன.
- நிலையான நில வருவாய் திட்டம் 1793-ல் பத்தாண்டு திட்டமாக மாற்றப்பட்டது.
- திவானி அதாலத் மற்றும் பௌஜ்தாரி அதாலத் 1772-ல் ஏற்படுத்தப்பட்டன.
- சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களை ஏற்படுத்தியதன் மூலம் கம்பெனியின் இரட்டை ஆட்சி 1772-ல் ஒழிக்கப்பட்டது.
- துணைப்படைத் திட்டத்தை முதலில் ஏற்றுக்கொண்ட நாடு ஹைதராபாத்.
- வாரிசு இழப்புக் கொள்கை மூலம் சுதேச மன்னர்களின் நாடுகளை ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தவர் டல்ஹௌசி பிரபு.
- இரயத்துவாரி முறை: பம்பாய், மதராஸ், அசாம் மற்றும் கூர்க் மாகாணங்களில் ஆங்கிலேயரால் கொண்டு வரப்பட்டது.
- ரிப்பன் பிரபுவின் தீர்மானம்: 'உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்' எனக் கருதப்படுகிறது.
- போர்த்துகீசீயர்கள் 1534 முதல் பம்பாயை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
- விவசாயிகளின் எழுச்சியாகக் கருதப்பட்ட முதலாவது கலகம் பீகாரில் உள்ள ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகில் வேளாண்மை செய்துவந்த மக்களால் தொடங்கப்பட்டது.
- இண்டிகோ கலகம் (1859): விவசாயிகள் இண்டிகோவை (அவுரி) வளர்க்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
- நீல் தர்பன் நாடகம் மக்கள் மற்றும் அரசின் கவனத்திற்கு விவசாயிகளின் துயரங்களைக் கொண்டு செல்ல எழுதப்பட்டது.
- பூனா கலகம் (1875): விவசாயிகள் உள்ளூர் வட்டிக்காரர்களுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டனர்.
- சம்பரான் விவசாயச் சட்டம் மே 1918-ல் நிறைவேற்றப்பட்டது.
- கேடா சத்தியாகிரகம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது.
- மாப்ளா என்று அழைக்கப்பட்ட முஸ்லீம் விவசாயிகள் இந்து ஜமீன்தார்கள் மற்றும் ஆங்கில அரசால் அடக்கப்பட்டு சுரண்டப்பட்டனர்.
- பர்தோலி (1928): அரசு நிலவருவாயை 30 சதவீதம் உயர்த்தியது.
- மதுரை நாயக்கர்: விஸ்வநாதர் 1529-ல் பதவியேற்றார். அவரது அமைச்சர் அரியநாதர்.
- கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் கட்டபொம்மனின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
- பூலித்தேவர்: திருநெல்வேலியின் அருகிலிருந்த நெற்கட்டும் செவல் பாளையத்தின் பாளையக்காரர்.
- வீரபாண்டிய கட்டபொம்மன்: மனைவி பெயர் ஜக்கம்மாள்.
- 1798-ல் கட்டபொம்மன் தனது அமைச்சர் சிவசுப்பிரமணியத்துடன் ராமநாதபுரத்தில் இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சனை சந்தித்தார்.
- கட்டபொம்மனை கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான்.
- கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியம் நாகலாபுரத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
- காளையார் கோவில் போர்: முத்துவடுக நாதரை ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகள் கொன்றன.
- வேலுநாச்சியார்:
- பாதுகாப்பளித்தவர்: கோபால நாயக்கர் (விருப்பாச்சி).
- மீண்டும் முடிசூட்டிக்கொள்ள உதவியவர்கள்: மருது சகோதரர்கள்.
- சின்ன மருது: ஆங்கிலேயர்களுக்கெதிரான தீவிர நடவடிக்கைகளால் 'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்பட்டார்.
- மருது சகோதரர்கள்: 1801 அக்டோபர் 24-ல் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிடப்பட்டனர்.
- கர்நாடக உடன்படிக்கை (1801, ஜூலை 31): தமிழ்நாட்டின் மீது ஆங்கிலேயர் நேரடி கட்டுப்பாட்டைப் பெற்றனர்.
- தீரன் சின்னமலை:
- இயற்பெயர்: தீர்த்தகிரி.
- ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்த முறை: கொரில்லா போர் முறை.
- வேலூர் கலகம் (1806):
- சென்னை மாகாண படைத்தளபதி: சர் ஜான் கிரடாக்.
- கிளர்ச்சியாளர்கள் புதிய ஆட்சியாளராக அறிவித்தவர்: பதே ஹைதர்.
- 1857 புரட்சி:
- உடனடிக் காரணம்: எல்பீல்டுரக துப்பாக்கி.
- மீரட்டில் மூன்றாம் குதிரைப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் புரட்சியில் ஈடுபட்ட நாள்: 1857 மே 10.
- ஜான்சியிலிருந்து தப்பிய இராணி லட்சுமிபாய் இணைந்தவர்: தாந்தியா தோபே.
- ஆங்கிலப் படை குவாலியரை மீண்டும் கைப்பற்றிய ஆண்டு: ஜூன் 1858.
- டெல்லியை மீண்டும் கைப்பற்றிய ஆங்கில படைத்தளபதி (1857 செப்டம்பர் 20): நிக்கல்சன்.
- விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை (1858) மூலம் இந்தியாவின் நிர்வாகம் ஆங்கில அரசுக்கு மாற்றப்பட்டது.
- தட்சசீலம்:
- உலக பாரம்பரியத் தளம் என யுனெஸ்கோ அறிவித்த ஆண்டு: 1980.
- இடிபாடுகளைக் கண்டுபிடித்தவர்: அலெக்சாண்டர் கன்னிங்காம் (19 ஆம் நூற்றாண்டின் மத்தியில்).
- நாளந்தா பல்கழைக்கழகம்: தற்போதைய பீகாரில் ராஜகிருகத்தில் அமைந்துள்ள பழமையான பல்கலைக்கழகம்.
- இடைக்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் கல்வி வளர்ச்சிக்காக அமைக்கப்பட்ட மடம்: அஹோபில மடம்.
- கல்கத்தாவின் முதல் பேராயரான டாக்டர் மிடில்டன் தொடங்கிய மிஷினரி கல்லூரி பின்னாளில் பிஷப் கல்லூரி என அழைக்கப்பட்டது.
- பம்பாயில் எல்பின்ஸ்டன் பெயரால் நிறுவப்பட்ட கல்லூரி ஆங்கில கல்வியை வழங்கியது.
- கல்வியின் மூன்றாம் கட்டம் (அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம்): 1854-ஆம் ஆண்டு சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கையுடன் தொடங்குகிறது.
- வார்தா கல்வித் திட்டம் (1937): உருவாக்கியவர் காந்தியடிகள்.
- உயர்கல்வியின் தரத்தை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்ட பரிந்துரையின் பேரில்: டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு.
- முதல் தேசியக் கல்விக் கொள்கை (1968): இந்தியக் கல்வி வரலாற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது.
- அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA): 15 முதல் 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வியை அளிப்பதற்கான திட்டம்.
- பல்லவர் காலம்: கல்வி நிறுவனங்கள் கடிகை என அழைக்கப்பட்டன.
- திருவிடைக்காளை கல்வெட்டு: நூலகத்தைப் பற்றி குறிப்பிடுகிறது.
- வீரராஜேந்திர சோழனின் கல்வெட்டு (திருவாடுதுறை): மருத்துவப்பள்ளி பற்றி குறிப்பிடுகிறது.
- பாண்டியர் காலம்: ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் சாலபோகம் என அழைக்கப்பட்டன.
- இரண்டாம் சரபோஜி: தஞ்சாவூரில் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடத்தை அமைத்த மராத்திய ஆட்சியாளர்.
- சென்னை பல்கலைக்கழகம்: ஆங்கிலேய ஆட்சியில் தமிழகத்தில் முதல் பல்கலைக்கழகம், 1857-ல் நிறுவப்பட்டது.
- அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: 1929 ஆம் ஆண்டு சிதம்பரத்தில் அமைக்கப்பட்டது.
- எட்வர்ட் பெயின்ஸ்: பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா எனக் கூறினார்.
- தாதாபாய் நௌரோஜி: செல்வச் சுரண்டல் கோட்பாட்டில் இந்தியாவின் செல்வங்கள் பிரிட்டனுக்கு சுரண்டப்படுவதைக் குறிப்பிட்டார்.
- டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம்: 1907-ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் அமைக்கப்பட்டது.
- ஆங்கிலேயர்களால் 1853-ல் அறிமுகப்படுத்தப்பட்ட போக்குவரத்து முறை: இருப்புப் பாதைகள் (இரயில்வே).
- புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகாமையில் இந்தியர்கள் வசித்த பகுதி: கருப்பு நகரம்.
- சந்திரகிரியின் ராஜா மஹால் அரண்மனையால் பிரான்சிஸ் டேவிற்கு தொழிற்சாலை கட்ட நிலம் மானியமாக வழங்கப்பட்ட ஆண்டு: 1639.
- முகலாய ஆட்சியாளர் அக்பர் சதி முறையினை ஒழிக்க முயன்றார்.
- லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி: 1916 இல் டெல்லியில் தொடங்கப்பட்டது.
- 1870-ல் இயற்றப்பட்ட சட்டம்: பெண் சிசுக்கொலை நடைமுறையை தடை செய்தது.
- 1846 ஆம் ஆண்டில் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச திருமண வயது: 10 வயது.
- சதி எனும் பழக்கத்தை குற்றவியல் நீதிமன்றங்களின் நீதிபதிகள் ரத்து செய்ததை கண்ட ஆளுநர்: வில்லியம் பெண்டிங் பிரபு.
- தேவதாசி முறை ஒழிப்பு:
- டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாருக்கு துணைநின்ற பெண்மணி: மூவலூர் ராமாமிர்தம்.
- சென்னை சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றுவதில் முக்கிய கருவியாகச் செயல்பட்டவர்: பெரியார் ஈ.வெ.ரா.
- பண்டித ரமாபாய் விதவைகளுக்காக 'சாரதா சதன்' எனும் அமைப்பினை பம்பாயில் திறந்தார்.
- பெண்களுக்கான தேசிய ஆணையம்: 1992 ஜனவரியில் பெண்களுக்காக அமைக்கப்பட்ட தேசிய அமைப்பு.
- 'பெட்ரஸ்' (Petrus) என்ற கிரேக்க சொல்லின் பொருள்: பாறைகள்.
- மிகப் பழமையான படிவுப் பாறைகள் (3.9 பில்லியன் ஆண்டுகள் வயதுடைய): கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
- மெட்டாமார்பிக் என்பதில் உள்ள 'மெட்டா' (Meta) மற்றும் 'மார்பா' (Morpha) என்ற கிரேக்க சொற்களின் பொருள்: மாற்றம் மற்றும் வடிவம்.
- அயன மண்டல ஈரக் காலநிலைப் பகுதிகளில் 1 செ.மீ மண் உருவாக சுமார் 200 வருடங்கள் ஆகும்.
- சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோடு வரைபடத்தில் குறிக்கப்படுவது: ஐசெல்லோபார்.
- ஹிரோஷிமா அணுகுண்டை விட 400 மடங்கு அதிக கதிர்வீச்சு வெளிப்பட்ட அணு விபத்து: செர்னோபில் அணு உலை விபத்து.
- உலக மண் நாள்: டிசம்பர் 5 ஆம் நாள்.
- இத்தாலியில் உள்ள மவுண்ட் வெசூலியஸ் மற்றும் மவுண்ட் எட்னா: செயல்படும் எரிமலைகளுக்கு உதாரணம்.
- அண்டார்டிகாவில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள்: தட்சின் கங்கோத்ரி, மைத்ரேயி மற்றும் பாரதி.
- இந்திய புள்ளிவிவர நிபுணர் பேரா.பி.சி.மஹலானோபிஸ் உருவாக்கிய மாதிரி: ப்ரீட்மேன்-மஹலானோபிஸ் மாதிரி.
- உச்சநீதிமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 145-ன் படி ஒழுங்குபடுத்தப்பட்ட ஆண்டு: 1966.


0 Comments