TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-17
ஆங்கிலேயர் ஆட்சியில் முக்கிய நிகழ்வுகளும் நிர்வாகமும்: கேள்விகள் மற்றும் பதில்கள்
ஆங்கிலேயர் வருகை மற்றும் போர்கள்:
- 1639ல் மெட்ராசை ஆங்கிலேயர்களுக்கு குத்தகைக்கு வழங்கிய சந்திரகிரி மன்னர் யார்?
விடை: சென்னப்ப நாயக்கர். - 123 ஆங்கிலேயர்கள் மூச்சுத் திணறி இறந்த 'இருட்டறை துயரச் சம்பவம்' எங்கு நடைபெற்றது?
விடை: கல்கத்தாவின் வில்லியம் கோட்டையில் உள்ள காற்று புகாத இருட்டறையில். - பக்சார் போரில் (1764) சுஜா-உத்-தௌலா, இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோரின் கூட்டுப்படையை தோற்கடித்த ஆங்கிலத் தளபதி யார்?
விடை: ஹெக்டர் மன்றோ. - பக்சார் போருக்குப் பிறகு வங்காளத்தில் இரட்டையாட்சி முறையைக் கொண்டு வந்தவர் யார்?
விடை: இராபர்ட் கிளைவ். - பிளாசிப் போர் எந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுக்கு வந்தது?
விடை: அலிநகர் உடன்படிக்கை. - ஆம்பூர் போருக்குப் பின் ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனவர் யார்?
விடை: அன்வாருதீனின் மகன் முகமது அலி. - வந்தவாசிப் போரில் (1760) லாலி தலைமையிலான பிரெஞ்சு படையை தோற்கடித்த ஆங்கிலத் தளபதி யார்?
விடை: ஜெனரல் அயர் கூட். - முதல் ஆங்கிலேய மைசூர் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது?
விடை: 1769 மதராஸ் உடன்படிக்கை. - 1781-ல் சர் அயர்கூட் ஹைதர் அலியை எந்த இடத்தில் தோற்கடித்தார்?
விடை: பரங்கிப்பேட்டை. - இரண்டாம் ஆங்கில மைசூர் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை எது?
விடை: 1784 மங்களூர் உடன்படிக்கை. - மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுத்தானது?
விடை: 1792. - நான்காம் ஆங்கிலேய மைசூர் போரில் (1799) திப்பு சுல்தான் மீது போர் தொடுத்த கவர்னர் ஜெனரல் யார்?
விடை: வெல்லெஸ்லி பிரபு.
- 1776-ல் மராத்தியர்களுடன் புரந்தர் ஒப்பந்தத்தை செய்து கொண்ட ஆங்கிலேயர் யார்?
விடை: கர்னல் அப்டன். - சால்பை ஒப்பந்தம் (1782) யார் யாருக்கிடையே கையெழுத்தானது?
விடை: வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா. - 1802-ல் வெல்லெஸ்லி பிரபு யாருடன் பஸ்ஸீன் உடன்படிக்கையை செய்து கொண்டார்?
விடை: இரண்டாம் பாஜிராவ் பேஷ்வா. - இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் இந்திய ஆட்சியாளர்களை இணைத்து ஆங்கிலேயர்களை எதிர்க்க முயற்சி செய்த ஹோல்கர் ஆட்சியாளர் யார்?
விடை: யஷ்வந்த ராவ் ஹோல்கர். - மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஈடுபட்ட நாக்பூரின் ஆட்சியாளர் யார்?
விடை: இரண்டாம் மூதோஜி போன்ஸ்லே. - மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஈடுபட்ட இந்தூரின் ஆட்சியாளர் யார்?
விடை: மூன்றாம் மல்ஹர் ராவ் ஹோல்கர்.
- 1858-ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதிகபட்ச வயது எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டது?
விடை: 23 ஆக. - 1876-ல் சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதிகபட்ச வயது எவ்வளவாக குறைக்கப்பட்டது?
விடை: 19 ஆக. - மத்தியில் கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் மாகாணங்களில் மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக வழிவகை செய்த சட்டம் எது?
விடை: 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம். - ஆங்கிலேயர் காலத்தில் இந்தியர்களுக்கான மிக உயர்ந்த இராணுவப் பதவி எது?
விடை: சுபேதார். - 1791-ல் முறையான காவல் துறையை உருவாக்கிய கவர்னர் ஜெனரல் யார்?
விடை: காரன்வாலிஸ் பிரபு. - காரன்வாலிஸ் அமைத்த 'தானாக்கள்' என்ற காவல் பகுதிகளை நிர்வாகித்த தலைவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
விடை: தரோகா. - ஆங்கிலேயர் காலத்தில் கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் யார்?
விடை: சௌகிதார்கள். - 1772-ல் இரட்டை ஆட்சி முறையை ஒழித்து வரிவசூல் செய்வதையும், நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஏற்றது எது?
விடை: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி. - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் ஏற்படுத்தப்பட்ட சிவில் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை: திவானி அதாலத். - ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியால் ஏற்படுத்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை: பௌஜ்தாரி அதாலத். - வில்லியம் கோட்டையில் அமைக்கப்பட்ட முதல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யார்?
விடை: சர் எலிஜா இம்பே. - மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி யார்?
விடை: சர் திருவாரூர் முத்துசாமி.
- "இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு" என்பதை "இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு" என மாற்றியவர் யார்?
விடை: வெல்லெஸ்லி பிரபு. - துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் சுதேச நாடு எது?
விடை: ஹைதராபாத். - 1848-ல் வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?
விடை: டல்ஹௌசி பிரபு.
- 1765-ல் வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றவர் யார்?
விடை: இராபர்ட் கிளைவ். - ஐந்தாண்டு நில வருவாய் திட்டத்தை ஓராண்டு நில வருவாய் திட்டமாக மாற்றிய தலைமை ஆளுநர் யார்?
விடை: வாரன் ஹேஸ்டிங்ஸ். - ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி என பல பெயர்களில் அழைக்கப்பட்ட நிலவருவாய் திட்டம் எது?
விடை: நிலையான நிலவருவாய் திட்டம் (Permanent Settlement). - இரயத்துவாரி முறை பம்பாய், மதராஸ் தவிர வேறு எந்தப் பகுதிகளில் கொண்டு வரப்பட்டது?
விடை: அசாம் மற்றும் கூர்க். - இரயத்துவாரி முறையில் விளைச்சலில் பாதியாக இருந்த நிலவருவாயை மூன்றில் ஒரு பங்காக குறைத்தவர் யார்?
விடை: தாமஸ் மன்றோ. - 1833-ல் இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட் வழிகாட்டுதலின்படி மகல்வாரி முறையில் மாற்றங்களை கொண்டு வந்தவர் யார்?
விடை: வில்லியம் பெண்டிங் பிரபு. - மகல்வாரி முறையில் நிலவருவாயை கிராமம் முழுவதும் வசூல் செய்து அரசுக்கு செலுத்த நியமிக்கப்பட்டவர் யார்?
விடை: கிராமத் தலைவர்.
- சந்தால் மக்கள் பீகாரில் எந்தக் குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வேளாண்மை செய்து வந்தனர்?
விடை: ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகில். - சந்தால் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டதால் எந்த ஆண்டு அவர்கள் ஆயுதம் ஏந்திய புரட்சியில் ஈடுபட்டனர்?
விடை: 1856-ல். - சந்தால் கலகத்தில் 10,000 வீரர்களை ஒன்றுகூட்டி வழிநடத்திய சகோதரர்கள் யார்?
விடை: சித்து மற்றும் கங்கு. - செப்டம்பர் 1859-ல் நாதியா மாவட்டத்தில் இண்டிகோ கலகத்தை நடத்தியவர்கள் யார்?
விடை: திசம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ். - வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை வெளிப்படுத்த 'நீல் தர்பன்' நாடகத்தை எழுதியவர் யார்?
விடை: தீனபந்து மித்ரா. - பாப்னா விவசாய எழுச்சி எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
விடை: வங்காளத்தின் பாப்னாவில் உள்ள யூசுப்சாகி பர்கானாவில். - ஜமீன்தார்களின் அடக்குமுறைக்கு எதிராக பாப்னா விவசாய எழுச்சியை ஆரம்பித்தவர் யார்?
விடை: கேசப் சந்திரா ராய். - 1875-ல் பூனா மாவட்ட விவசாயிகள் உள்ளூர் வட்டிக்காரர்களின் அடக்குமுறையை எதிர்த்து ஈடுபட்ட கலகம் எது?
விடை: தக்காண கலகம். - தக்காண கலகத்தின் விளைவாக விவசாயிகளின் குறைகளை களைய நிறைவேற்றப்பட்ட சட்டம் எது?
விடை: தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம். - 1890-1900 காலகட்டத்தில் நகர்ப்புற வட்டிக்காரர்களின் ஒடுக்குமுறைகளைத் தடுக்கப் புரட்சியில் ஈடுபட்டவர்கள் யார்?
விடை: பஞ்சாப் விவசாயிகள். - ஐரோப்பிய பண்ணையாளர்கள் எங்கு சட்டத்திற்கு புறம்பான முறைகளில் அவுரி சாகுபடியை செய்தனர்?
விடை: பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரான் என்ற இடத்தில். - சம்பரான் விவசாயிகளின் குறைகள் விசாரிக்கப்பட்டு, விவசாயச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது?
விடை: மே 1918-ல். - 1918-ல் குஜராத்தின் கேடா மாவட்டத்தில் வரிகொடா இயக்கம் ஏற்படக் காரணம் என்ன?
விடை: இடையராத பஞ்சத்தின் காரணமாக விவசாயம் பொய்த்தது. - 1921-ல் ஆங்கில அரசிற்கும் இந்து ஜமீன்தார்களுக்கும் எதிராக கிளர்ச்சி செய்த முஸ்லீம் விவசாயிகள் யார்?
விடை: மாப்ளாக்கள். - எந்த மாதத்திற்குள் ஆங்கில அரசு மாப்ளா கிளர்ச்சியை இரக்கமின்றி அடக்கியது?
விடை: 1921 டிசம்பர் வாக்கில். - 1928-ல் பர்தோலி விவசாயிகள் யாருடைய தலைமையில் வரிகொடா இயக்கத்தை நடத்தினர்?
விடை: சர்தார் வல்லபாய் பட்டேல். - பர்தோலி சத்தியாகிரகத்தில் விவசாயிகளின் நிலம் எப்போது திருப்பித் தரப்பட்டது?
விடை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது.
- 1529-ல் விஸ்வநாதர் எந்த பகுதியின் நாயக்கராகப் பொறுப்பேற்றார்?
விடை: மதுரை நாயக்கராக. - விஸ்வநாதரின் அமைச்சராக செயல்பட்டவர் யார்?
விடை: அரியநாதர். - பாளையக்காரர் முறையின் கீழ் நாடு எத்தனை பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது?
விடை: 72 பாளையங்களாக. - கிழக்கு பாளையங்களில் இருந்த நாயக்கர்கள் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்?
விடை: கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ். - மேற்கு பாளையங்களில் இருந்த மறவர்கள் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்?
விடை: பூலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ். - தமிழ்நாட்டில் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் முன்னோடியாக இருந்தவர் யார்?
விடை: பூலித்தேவர். - பூலித்தேவர் எந்த பாளையத்தின் பாளையக்காரர் ஆவார்?
விடை: நெற்கட்டும் செவல். - இந்தியாவில் ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர் யார்?
விடை: பூலித்தேவர். - பாஞ்சாலங்குறிச்சியைத் தலைநகராகக் கொண்டு வீரபாண்டியபுரத்தை ஆட்சி செய்தவர் யார்?
விடை: ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன். - வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவியின் பெயர் என்ன?
விடை: ஜக்கம்மாள். - வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர்கள் யாவர்?
விடை: ஊமைத்துரை மற்றும் செவத்தையா. - 1798-ல் கட்டபொம்மனுக்கு நிலுவைத் தொகையை செலுத்தச் சொல்லி கடிதம் எழுதிய ராமநாதபுர கலெக்டர் யார்?
விடை: காலின் ஜாக்சன். - கட்டபொம்மனின் அமைச்சர் யார்?
விடை: சிவசுப்பிரமணியம். - சிவகங்கையின் மருது பாண்டியர் கூட்டமைப்பை உருவாக்கி வெளியிட்ட அறிக்கை எது?
விடை: திருச்சிராப்பள்ளி அறிக்கை (1801). - 1799 செப்டம்பர் 5-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் படையெடுத்துச் சென்ற ஆங்கிலேய அதிகாரி யார்?
விடை: மேஜர் பானர்மேன். - கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியம் எங்கு நடந்த சண்டையில் கைது செய்யப்பட்டார்?
விடை: கள்ளர்பட்டியில். - களப்பூர் காடுகளில் மறைந்திருந்த கட்டபொம்மனை கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் யார்?
விடை: புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான். - சிவசுப்பிரமணியம் எங்கு சிரச்சேதம் செய்யப்பட்டார்?
விடை: நாகலாபுரத்தில். - அக்டோபர் 17, 1799 அன்று கட்டபொம்மன் எந்தக் கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்?
விடை: கயத்தாறு கோட்டையில்.
- சிவகங்கையின் இராணி வேலுநாச்சியார் எந்த வயதில் முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்?
விடை: 16 ஆம் வயதில். - 1772-ல் காளையார் கோவில் போரில் முத்துவடுக நாதரைக் கொன்ற படைகள் எவை?
விடை: ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகள். - வேலுநாச்சியார் யாருடைய பாதுகாப்பில் விருப்பாச்சியில் வாழ்ந்தார்?
விடை: கோபால நாயக்கர் பாதுகாப்பில். - தற்கொலை தாக்குதல் நடத்தி ஆயுதக் கிடங்கை அழித்த வேலுநாச்சியாரின் படைத்தளபதி யார்?
விடை: குயிலி. - வேலுநாச்சியார் யாருடைய உதவியுடன் சிவகங்கையைக் கைப்பற்றி மீண்டும் இராணியானார்?
விடை: மருது சகோதரர்களின் உதவியுடன். - 'வீரமங்கை' மற்றும் 'தென்னிந்தியாவின் ஜான்சி ராணி' என அழைக்கப்படுபவர் யார்?
விடை: வேலுநாச்சியார்.
- மருது சகோதரர்களின் பெற்றோர் யாவர்?
விடை: பொன்னாத்தாள் மற்றும் மூக்கைய்யா பழனியப்பன். - 'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்பட்டவர் யார்?
விடை: சின்ன மருது (மருது பாண்டியன்). - சின்ன மருது எந்த மன்னரிடம் பணிபுரிந்தார்?
விடை: முத்துவடுக நாத பெரிய உடையதேவரிடம். - மருது சகோதரர்கள் திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை எப்போது வெளியிட்டனர்?
விடை: ஜூன் 1801-ல். - 1801 அக்டோபர் 24-ல் மருது சகோதரர்கள் எங்கு தூக்கிலிடப்பட்டனர்?
விடை: திருப்பத்தூர் கோட்டையில். - 1801 நவம்பர் 16-ல் ஊமைத்துரை மற்றும் செவத்தையா எங்கு தூக்கிலிடப்பட்டனர்?
விடை: பாஞ்சாங்குறிச்சியில். - எந்த உடன்படிக்கை மூலம் தமிழ்நாட்டின் மீது ஆங்கிலேயர் நேரடி கட்டுப்பாட்டைப் பெற்றனர்?
விடை: 1801 ஜூலை 31 கர்நாடக உடன்படிக்கை. - பாளையக்காரர் முறையை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கை எது?
விடை: கர்நாடக உடன்படிக்கை. - கொங்கு நாட்டுப் பாளையக்காரரான தீரன் சின்னமலையின் இயற்பெயர் என்ன?
விடை: தீர்த்தகிரி. - கொங்கு நாடு என்பது எந்தெந்தப் பகுதிகளை உள்ளடக்கியது?
விடை: சேலம், கோயம்புத்தூர், கரூர் மற்றும் திண்டுக்கல். - காவேரி, ஓடாநிலை மற்றும் அரச்சலூர் ஆகிய இடங்களில் ஆங்கிலப் படைகளைத் தோற்கடித்தவர் யார்?
விடை: தீரன் சின்னமலை. - தீரன் சின்னமலையை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்தவர் யார்?
விடை: அவரது சமையற்காரர் நல்லப்பன்.
- 1803-ல் சென்னை மாகாண கவர்னராகப் பதவியேற்றவர் யார்?
விடை: வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங். - இராணுவத்தில் பல கட்டுப்பாடுகளைத் தீவிரமாகக் கடைபிடிக்க வீரர்களை கட்டாயப்படுத்திய படைத்தளபதி யார்?
விடை: சர் ஜான் கிரடாக். - சிலுவை சின்னத்துடன் கூடிய புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்திய இராணுவத் தளபதி யார்?
விடை: அக்னியூ. - வேலூர் கலகத்தில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதல் பலியான ஆங்கிலேய அதிகாரி யார்?
விடை: கர்னல் பான்கோர்ட். - வேலூர் கலகத்தின் போது கிளர்ச்சியாளர்கள் புதிய ஆட்சியாளராக யாரை அறிவித்தனர்?
விடை: பதே ஹைதரை (திப்புவின் மூத்த மகன்). - வேலூர் கோட்டையில் ஆங்கிலக் கொடி இறக்கப்பட்டு எந்தக் கொடி ஏற்றப்பட்டது?
விடை: புலி உருவம் பொறித்த திப்புவின் கொடி.


0 Comments