TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-18
இந்திய வரலாறு, புவியியல் மற்றும் பொது அறிவு வினா விடைகள்
அலகு 1: வரலாற்று ஆதாரங்கள் மற்றும் ஐரோப்பிய வருகை
- ஆனந்தரங்கம் எழுதிய குறிப்புகள் எந்த காலகட்டத்தின் பிரெஞ்சு இந்திய உறவு முறையை விவரிக்கின்றன?
- விடை: 1736 லிருந்து 1760 வரையிலான காலகட்டத்தை.
- ஆசியாவில் உள்ள ஆவணக்காப்பகங்களிலேயே மிகவும் பெரியது எங்கு அமைந்துள்ளது?
- விடை: புதுடெல்லியில் (இந்திய தேசிய ஆவணக்காப்பகம்).
- சென்னை நாட்குறிப்பு பதிவுகள் வெளியிடப்பட பெரும் முயற்சி எடுத்தவர் யார்?
- விடை: டாட்வெல்.
- நவீன இந்தியாவின் முதல் நாணயம் ஆங்கிலேய ஆட்சியில் எந்த ஆண்டு வெளியிடப்பட்டது?
- விடை: கி.பி. 1862 ஆம் ஆண்டில்.
- 1938-ல் வெளியிடப்பட்ட இந்தியாவின் முதல் ரூபாய் நோட்டில் யாருடைய உருவம் பொறிக்கப்பட்டிருந்தது?
- விடை: ஆறாம் ஜார்ஜ்.
- 1690-ல் ஆங்கிலேயர்களால் புனித டேவிட் கோட்டை எங்கு கட்டப்பட்டது?
- விடை: கடலூரில்.
- 1487-ல் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த பார்த்தலோமியோ டயஸை ஆதரித்த மன்னர் யார்?
- விடை: மன்னர் இரண்டாம் ஜான்.
- அல்வாரிஸ் காப்ரல் எத்தனை வீரர்களுடன் 1500-ல் கள்ளிக்கோட்டையை அடைந்தார்?
- விடை: சில 100 வீரர்களுடன் (13 கப்பல்களில்).
- வாஸ்கோடகாமா 1524-ல் எத்தனையாவது முறையாக இந்தியா வந்தபோது காலமானார்?
- விடை: மூன்றாவது முறையாக.
- இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நீலநீர்க்கொள்கையைப் பின்பற்றியவர் யார்?
- விடை: பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா.
- பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவை அல்போன்சோ-டி-அல்புகர்க் எப்போது கைப்பற்றினார்?
- விடை: நவம்பர் 1510-ல்.
- போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் எந்தப் பயிரின் சாகுபடியை அறிமுகப்படுத்தினர்?
- விடை: புகையிலை சாகுபடியை.
- கோவாவில் 'இந்திய மருத்துவ தாவரங்கள்' என்ற நூல் எந்த ஆண்டு அச்சிடப்பட்டது?
- விடை: 1563-ல்.
- டச்சுக்காரர்கள் தங்களது முதல் வர்த்தக மையத்தை எங்கு நிறுவினர்?
- விடை: மசூலிப்பட்டினத்தில்.
- 1613-ல் டச்சுக்காரர்கள் கெல்டிரியா கோட்டையை எங்கு கட்டினர்?
- விடை: பழவேற்காட்டில்.
- இங்கிலாந்து ராணி எலிசபெத் லண்டன் வர்த்தகர்களுக்கு எந்த நாள் அனுமதிப் பட்டயம் வழங்கினார்?
- விடை: கி.பி.1600 டிசம்பர் 31 அன்று.
- 1639-ல் மெட்ராசை குத்தகைக்குப் பெற்ற ஆங்கில வணிகர் யார்?
- விடை: பிரான்சிஸ் டே.
- கல்கத்தா நகரம் எந்த மூன்று கிராமங்களின் ஜமீன்தாரி உரிமையைப் பெற்று உருவானது?
- விடை: சுதாநுதி, காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர்.
- 1616 மார்ச் 17-ல் டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க பட்டயம் வெளியிட்ட அரசர் யார்?
- விடை: டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன்.
- டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக விளங்கிய பகுதி எது?
- விடை: செராம்பூர்.
- மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் பிரெஞ்சு நிறுவனத்தை எந்த ஆண்டு உருவாக்கினார்?
- விடை: 1664-ல்.
- 1673-ல் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி சந்திரநாகூர் நகரை யார் அனுமதியுடன் நிர்மாணித்தது?
- விடை: வங்காள ஆளுநர் செயிஸ்டகான்.
- 1731-ல் சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர் யார்?
- விடை: ஜோதன்பர்க்.
- 146 ஆங்கிலேயர்களை இருட்டறையில் அடைத்த சிராஜ்-உத்-தெளலாவின் படைவீரர்கள் எத்தனை பேரின் மரணத்திற்கு காரணமாயினர்?
- விடை: 123 பேர்.
- 1757 ஜூன் 23-ல் நடைபெற்ற பிளாசிப்போரில் ஆங்கிலப் படைகளுக்குத் தலைமை தாங்கியவர் யார்?
- விடை: இராபர்ட் கிளைவ்.
- ஆங்கிலேயர்களின் 'தஸ்தக்' (சுங்க வரிவிலக்கு) ஆணையைத் தவறாகப் பயன்படுத்தியதால் கலகத்தில் ஈடுபட்டவர் யார்?
- விடை: மீர்காசிம்.
- பக்சார் போரில் சுஜா-உத்-தௌலா, இரண்டாம் ஷா ஆலம், மீர்காசிம் ஆகியோரைத் தோற்கடித்தவர் யார்?
- விடை: ஹெக்டர் மன்றோ.
- பக்சார் போருக்குப் பிறகு வங்காளத்தில் இரட்டையாட்சி முறையைக் கொண்டுவந்தவர் யார்?
- விடை: இராபர்ட் கிளைவ்.
- அடையாறு போர் (1746) சென்னையின் எந்த நதிக்கரையில் நடைபெற்றது?
- விடை: சாந்தோம் என்ற இடத்தில் அடையாறு நதிக்கரையில்.
- ஆம்பூர் போரில் (1749) கொல்லப்பட்ட கர்நாடக நவாப் யார்?
- விடை: அன்வாருதீன்.
- 1751-ல் ஆற்காட்டைத் தாக்கி அதனைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் யார்?
- விடை: ராபர்ட் கிளைவ்.
- வந்தவாசிப் போரில் (1760) பிரெஞ்சுப் படையை முற்றிலும் தோற்கடித்தவர் யார்?
- விடை: ஜெனரல் அயர் கூட்.
- 1767-ல் ஆங்கிலப் படை உதவியுடன் மைசூர் மீது படையெடுத்தவர் யார்?
- விடை: ஹைதராபாத் நிசாம்.
- சர் அயர்கூட் ஹைதர் அலியை எந்த ஆண்டு பரங்கிப்பேட்டையில் தோற்கடித்தார்?
- விடை: 1781-ல்.
- 1799-ல் திப்பு சுல்தான் மீது போர் தொடுத்த கவர்னர் ஜெனரல் யார்?
- விடை: வெல்லெஸ்லி பிரபு.
- 1775-ல் ஆங்கிலேயருக்கும் யாருக்கும் இடையே சூரத் ஒப்பந்தம் கையெழுத்தானது?
- விடை: ரகுநாதராவுக்கு இடையே.
- இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஆங்கிலேய இராணுவம் யாருடைய தலைமையில் போரிட்டது?
- விடை: ஆர்தர் வெல்லஸ்லியின் தலைமையில்.
- மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஈடுபட்ட இந்தூரின் ஆட்சியாளர் யார்?
- விடை: மூன்றாம் மல்ஹர் ராவ் ஹோல்கர்.
- போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர்கள் நியமனத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய சட்டம் எது?
- விடை: 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்.
- ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியரான சத்தியேந்திரநாத் தாகூர் எந்த ஆண்டு தேர்ச்சி பெற்றார்?
- விடை: 1863-ல்.
- இந்திய ஆட்சிப் பணியில் 33% இந்தியர்களைத் தேர்வு செய்யப் பரிந்துரைத்தவர்கள் யார்?
- விடை: மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு.
- ஆங்கிலேயர் காலத்தில் கிராமத்தைப் பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
- விடை: சௌகிதார்கள்.
- 1772-ல் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு நீதி வழங்கும் அதிகாரத்தை ஏற்ற அமைப்பு எது?
- விடை: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி.
- சிவில் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை முறையே எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: திவானி அதாலத் மற்றும் பௌஜ்தாரி அதாலத்.
- மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?
- விடை: சர் திருவாரூர் முத்துசாமி.
- துணைப்படைத் திட்டத்தை வெல்லெஸ்லி பிரபு எந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார்?
- விடை: 1798-ல்.
- 1848-ல் வாரிசு இழப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் யார்?
- விடை: டல்ஹௌசி பிரபு.
- ஓராண்டு நில வருவாய் திட்டத்தை ஐந்தாண்டு திட்டமாக மாற்றியவர் யார்?
- விடை: வாரன் ஹேஸ்டிங்ஸ்.
- காரன்வாலிஸ் பிரபு எந்த ஆண்டு பத்தாண்டு நில வருவாய் திட்டத்தை கொண்டு வந்தார்?
- விடை: 1793-ல்.
- நிலையான நிலவருவாய் திட்டம் வேறு எப்பெயர்களில் அழைக்கப்படுகிறது?
- விடை: ஜமீன்தாரி, ஜாகீர்தாரி, மல்குஜாரி மற்றும் பிஸ்வேதாரி.
- இரயத்துவாரி முறையை பம்பாய், மதராஸ் தவிர்த்து எந்த மாகாணங்களில் கொண்டு வந்தனர்?
- விடை: அசாம் மற்றும் கூர்க்.
- மகல்வாரி முறை என்பது யாருடைய சிந்தனையில் உதித்த திட்டம்?
- விடை: ஹோல்ட் மெகன்சி.
- மகல்வாரி முறையில் நிலவருவாயை வசூல் செய்து அரசுக்குச் செலுத்த யார் நியமிக்கப்பட்டார்?
- விடை: கிராமத் தலைவர்.
- சந்தால் மக்கள் பீகாரில் எந்தக் குன்றுகளுக்கு அருகில் வேளாண்மை செய்து வந்தனர்?
- விடை: ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகில்.
- சந்தால் கலகத்தில் 10,000 வீரர்களை ஒன்றுகூட்டிய சகோதரர்கள் யார்?
- விடை: சித்து மற்றும் கங்கு.
- வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை வெளிப்படுத்திய 'நீல் தர்பன்' நாடகத்தை எழுதியவர் யார்?
- விடை: தீனபந்து மித்ரா.
- பாப்னா விவசாய எழுச்சியை யூசுப்சாகி பர்கானாவில் ஆரம்பித்து வைத்தவர் யார்?
- விடை: கேசப் சந்திரா ராய்.
- 1875-ல் பூனா மாவட்ட விவசாயிகள் யாருடைய அடக்குமுறையை எதிர்த்துக் கலகம் செய்தனர்?
- விடை: உள்ளூர் வட்டிக்காரர்களின் அடக்குமுறையை.
- பஞ்சாப் விவசாயிகள் எந்தக் காலகட்டத்தில் வட்டிக்காரர்களின் ஒடுக்குமுறைகளைத் தடுக்கப் புரட்சியில் ஈடுபட்டனர்?
- விடை: 1890-1900.
- 1918-ல் இடையராத பஞ்சத்தின் காரணமாக குஜராத்தில் நடைபெற்ற வரிகொடா இயக்கம் எது?
- விடை: கேடா (கைரா) சத்தியாகிரகம்.
- மாப்ளா கிளர்ச்சியை ஆங்கில அரசு எந்த ஆண்டு இரக்கமின்றி அடக்கியது?
- விடை: 1921 டிசம்பர் வாக்கில்.
- 1928-ல் பர்தோலி விவசாயிகள் சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் ஏன் எதிர்ப்பினை தெரிவித்தனர்?
- விடை: அரசு நிலவருவாயை 30 சதவீதம் அளவிற்கு உயர்த்தியதால்.
- மதுரை நாயக்கரான விஸ்வநாதர் யாரோடு கலந்தாலோசித்து பாளையக்காரர் முறையை ஏற்படுத்தினார்?
- விடை: அமைச்சர் அரியநாதருடன்.
- நெற்கட்டும் செவல் என்ற பாளையத்தின் பாளையக்காரராக இருந்தவர் யார்?
- விடை: பூலித்தேவர்.
- வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தையின் பெயர் என்ன?
- விடை: ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.
- 1798-ல் நிலுவைத் தொகையை செலுத்தச் சொல்லி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதிய கலெக்டர் யார்?
- விடை: காலின் ஜாக்சன்.
- கள்ளர்பட்டியில் நடந்த சண்டையில் கைது செய்யப்பட்ட கட்டபொம்மனின் அமைச்சர் யார்?
- விடை: சிவசுப்பிரமணியம்.
- வேலுநாச்சியார் எந்த வயதில் சிவகங்கையின் இராஜா முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்?
- விடை: 16 ஆம் வயதில்.
- தற்கொலை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்த வேலுநாச்சியாரின் படைத்தளபதி யார்?
- விடை: குயிலி.
- மருது சகோதரர்களின் பெற்றோர் பெயர்கள் என்ன?
- விடை: பொன்னாத்தாள் மற்றும் மூக்கைய்யா பழனியப்பன்.
- ஆங்கிலேயர்களுக்கெதிரான தீவிர நடவடிக்கைகளால் 'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்பட்டவர் யார்?
- விடை: சின்ன மருது.
- மருது சகோதரர்கள் திருச்சிராப்பள்ளி பிரகடனத்தை எப்போது வெளியிட்டனர்?
- விடை: ஜூன் 1801-ல்.
- தீரன் சின்னமலை பிறந்த இடம் எது?
- விடை: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையம்.
- தீரன் சின்னமலையை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்தவர் யார்?
- விடை: சமையற்கார நல்லப்பன்.
- 1803-ல் சென்னை மாகாண கவர்னராக பதவியேற்றவர் யார்?
- விடை: வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
- வேலூர் கலகத்தின் போது புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்திய தளபதி யார்?
- விடை: அக்னியூ.
- வேலூர் கலகத்தில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதல் பலியான அதிகாரி யார்?
- விடை: கர்னல் பான்கோர்ட்.
- 1857 பெரும்புரட்சிக்கு உடனடிக்காரணமாக அமைந்த புதிய துப்பாக்கியின் பெயர் என்ன?
- விடை: எல்பீல்டுரக துப்பாக்கி.
- 1857 மார்ச் 29-ல் தனது உயரதிகாரியைச் சுட்டுக் கொன்ற இளம் சிப்பாய் யார்?
- விடை: மங்கள் பண்டே.
- டெல்லியை மீண்டும் கைப்பற்றி புரட்சியை அடக்கிய ஆங்கில படைத்தளபதி யார்?
- விடை: நிக்கல்சன்.
- தட்சசீல பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளைக் கண்டுபிடித்தவர் யார்?
- விடை: அலெக்சாண்டர் கன்னிங்காம்.
- டெல்லியில் ஒரு மதரசாவை நிறுவிய முதல் இஸ்லாமிய ஆட்சியாளர் யார்?
- விடை: இல்துத்மிஷ்.
- கல்கத்தாவில் பிஷப் கல்லூரி என அழைக்கப்பட்ட மிஷினரி கல்லூரியைத் தொடங்கியவர் யார்?
- விடை: டாக்டர் மிடில்டன்.
- வட்டார மொழிக் கல்வியினை தீவிரமாக முன்மொழிந்தவர் யார்?
- விடை: மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன்.
- பல்கலைக்கழக மானியக் குழு எதன் பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்டது?
- விடை: டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு (1948).
- பல்லவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
- விடை: கடிகை.
- பாண்டியர் காலத்தில் ஆசிரியர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்ட முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
- விடை: சாலபோகம்.
- தஞ்சாவூரில் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடத்தை அமைத்தவர் யார்?
- விடை: இரண்டாம் சரபோஜி.
- பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்று கூறியவர் யார்?
- விடை: எட்வர்ட் பெயின்ஸ்.
- 'செல்வச் சுரண்டல் கோட்பாடு' என்பதை முன்வைத்தவர் யார்?
- விடை: தாதாபாய் நௌரோஜி.
- இந்தியாவின் முதல் சணல் தொழிற்சாலை எங்கு தொடங்கப்பட்டது?
- விடை: கல்கத்தாவிற்கு அருகில் ரிஷ்ரா என்ற இடத்தில்.
- 1870-ல் முதல் காகித ஆலை எங்கு துவங்கப்பட்டது?
- விடை: பாலிகன்ஜ்.
- 'உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்' என யாருடைய தீர்மானம் கருதப்படுகிறது?
- விடை: ரிப்பன் பிரபுவின் தீர்மானம்.
- ராஜபுத்திர பெண்களின் கூட்டு தன்னார்வ தற்கொலை நடைமுறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
- விடை: ஜவ்கார்.
- வித்யாசாகரின் முயற்சியால் விதவை மறுமண சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது?
- விடை: 1856 இல்.
- பாறையியல் (Petrology) என்ற சொல்லில் 'பெட்ரஸ்' என்பதன் பொருள் என்ன?
- விடை: பாறைகள்.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருவுதலின் செயலாக்கத்தினால் உருவாகும் மண் எது?
- விடை: சரளை மண்.
- காற்றின் அழுத்தத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
- விடை: காற்றழுத்தமானி.
- அறிவார்ந்த மக்கள் வெளியேறுதல் (Brain Drain) எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- விடை: அறிவுசார் வெளியேற்ற விளைவு (Back Wash Effect).
- பண்டைய பாரசீகத்தின் முதல் மன்னரான மகா சைரஸ் தனது ஆணைகளை எந்த களிமண்ணில் பதிவு செய்துள்ளார்?
* விடை: சிலிண்டர் வடிவிலான சுட்ட களிமண்ணில்.


0 Comments