8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-20


TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-20
இந்திய வரலாற்று வினா விடைத் தொகுப்பு

இந்திய தேசிய ஆவணக்காப்பகம் மற்றும் அருங்காட்சியகம்:
  1. இந்திய அரசின் ஆவணங்களைப் பாதுகாக்கும் முதன்மைக் காப்பகம்: இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI)
  2. இந்திய தேசிய ஆவணக்காப்பகம் (NAI) அமைந்துள்ள இடம்: புதுடெல்லி
  3. தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தவர்: டாட்வெல்
  4. இந்தியாவின் மிகப்பெரும் தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் நிறுவப்பட்ட ஆண்டு: 1949 ஆம் ஆண்டு
  5. பிரெஞ்சு இந்திய உறவு முறை பற்றிய அன்றாட நிகழ்வுகளின் குறிப்புகளை (1736-1760 வரை) எழுதியவர்: ஆனந்தரங்கம்
ஆங்கிலேயர் கால நாணயங்கள் மற்றும் நிர்வாகம்:
  1. நவீன இந்தியாவின் முதல் நாணயம் ஆங்கிலேய ஆட்சியில் வெளியிடப்பட்ட ஆண்டு: கி.பி. 1862 ஆம் ஆண்டில்
  2. இராணி விக்டோரியாவுக்குப் பிறகு தனது உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட்ட பிரிட்டிஷ் மன்னர்: மன்னர் ஏழாம் எட்வர்டு
  3. 1938-ல் வெளியிடப்பட்ட இந்தியாவின் முதல் ரூபாய் நோட்டில் பொறிக்கப்பட்டிருந்த உருவம்: ஆறாம் ஜார்ஜ்
  4. 'சிவில் சர்வீஸ்' என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்திய அமைப்பு: ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி
  5. போட்டித் தேர்வு மூலம் அரசு ஊழியர்கள் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய சட்டம்: 1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம்
  6. அரசு ஊழியர்களைப் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கும் முறையை உறுதி செய்த சட்டம்: 1858ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
  7. சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதிகபட்ச வயது 22 ஆக குறைக்கப்பட்ட ஒழுங்கு முறை ஆணை ஆண்டு: 1860 ஆம் ஆண்டு
  8. இந்திய ஆட்சிப் பணி சட்டம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஆண்டு: 1861ஆம் ஆண்டு
  9. ஐசிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இந்தியர்: சத்தியேந்திரநாத் தாகூர் (கவிஞர் இரபீந்தரநாத் தாகூரின் மூத்த சகோதரர்)
  10. இந்திய ஆட்சிப் பணியில் இந்தியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு பரிந்துரைத்த சதவீதம்: 33 சதவீதம்
  11. மத்தியில் கூட்டாட்சி மற்றும் மாகாணங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையங்கள் உருவாக வழிவகை செய்த சட்டம்: 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
  12. ஆங்கிலேயர் காலத்தில் இராணுவத்தில் இந்தியர்களுக்கான மிக உயர்ந்த பதவி: சுபேதார்
காவல் மற்றும் நீதித்துறை:
  1. காரன்வாலிஸ் பிரபு முறையான காவல் துறையை உருவாக்கிய ஆண்டு: 1791-ல்
  2. காரன்வாலிஸ் அமைத்த 'தானாக்கள்' என்ற காவல் பகுதியின் தலைவர்: தரோகா
  3. கிராமத்தைப் பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள்: சௌகிதார்கள்
  4. 1772-ல் ஒழிக்கப்பட்டு, நீதி வழங்கும் அதிகாரத்தை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஏற்றுக்கொண்ட முறை: இரட்டை ஆட்சி முறை
  5. ஆங்கிலேயர் காலத்தில் குற்றவியல் நீதிமன்றம் அழைக்கப்பட்ட விதம்: பௌஜ்தாரி அதாலத்
  6. வில்லியம் கோட்டையில் அமைக்கப்பட்ட முதல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி: சர் எலிஜா இம்பே
  7. மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி: சர் திருவாரூர் முத்துசாமி
ஐரோப்பியரின் வருகை - போர்ச்சுக்கீசியர்கள்:
  1. 1487-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த போர்ச்சுக்கீசிய மாலுமி: பார்த்தலோமியோ டயஸ்
  2. பார்த்தலோமியோ டயஸை ஆதரித்த போர்ச்சுகல் மன்னர்: மன்னர் இரண்டாம் ஜான்
  3. வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப் பின்பற்றி 1500-ஆம் ஆண்டு இந்தியா வந்த போர்ச்சுக்கீசிய மாலுமி: அல்வாரிஸ் காப்ரல்
  4. வாஸ்கோடகாமா 1501-ல் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தது: இருபது கப்பல்களுடன்
  5. வாஸ்கோடகாமா நோய்வாய்ப்பட்டு காலமானது: மூன்றாவது முறையாக இந்தியா வந்தபொழுது
  6. போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரம்: கொச்சின்
  7. போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505-ல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர்: பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா
  8. இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அல்மெய்டா பின்பற்றிய கொள்கை: நீலநீர்க்கொள்கை
  9. பீஜப்பூர் சுல்தானிடமிருந்து 1510-ல் கோவாவைக் கைப்பற்றிய போர்ச்சுக்கீசியர்: அல்போன்சோ-டி-அல்புகர்க்
  10. போர்ச்சுக்கீசிய தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றியவர்: நினோ-டி-குன்கா
  11. இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்திய ஐரோப்பியர்கள்: போர்ச்சுக்கீசியர்கள்
  12. போர்ச்சுக்கீசியரின் செல்வாக்கினால் இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரையோர பகுதிகளில் பரவிய மதம்: கத்தோலிக்க கிறித்துவம்
  13. 'இந்திய மருத்துவ தாவரங்கள்' என்ற நூல் கோவாவில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட ஆண்டு: 1563-ல்
  14. கடலூரில் ஆங்கிலேயரால் 1690-ல் கட்டப்பட்ட கோட்டை: புனித டேவிட் கோட்டை
டச்சுக்காரர்கள்:
  1. நெதர்லாந்து ஐக்கிய கிழக்கிந்திய கம்பெனி தொடங்கப்பட்ட ஆண்டு: 1602-ல்
  2. டச்சுக்காரர்கள் இந்தியாவில் தங்களது முதல் வர்த்தக மையத்தை நிறுவிய இடம்: மசூலிப்பட்டினத்தில்
  3. டச்சுக்காரர்கள் தென்னிந்தியாவில் தங்களை வலிமைப்படுத்திக் கொள்ள யாரிடமிருந்து நாகப்பட்டினத்தைக் கைப்பற்றினர்: போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து
  4. டச்சுக்காரர்கள் 1613-ல் பழவேற்காட்டில் கட்டிய கோட்டை: கெல்டிரியா கோட்டை
ஆங்கிலேயர்கள்:
  1. கிழக்கிந்திய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு அனுமதிப் பட்டயம் வழங்கியவர்: இங்கிலாந்து ராணி எலிசபெத்
  2. ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை 1611-ல் நிறுவிய இடம்: மசூலிப்பட்டினத்தில்
  3. பிரான்சிஸ் டே என்ற ஆங்கில வணிகர் மெட்ராசை குத்தகைக்குப் பெற்றது: சந்திரகிரி மன்னரான சென்னப்ப நாயக்கரிடமிருந்து
  4. கிழக்குப்பகுதி முழுமைக்குமான ஆங்கிலேயர்களின் தலைமையிடமாக விளங்கிய கோட்டை: புனித ஜார்ஜ் கோட்டை
  5. போர்ச்சுக்கீசிய இளவரசி காதரினை திருமணம் செய்து கொண்டதற்காக பம்பாய் தீவை சீராகப் பெற்ற பிரிட்டிஷ் மன்னர்: மன்னர் இரண்டாம் சார்லஸ்
  6. சுதாநுதி, காளிகட்டம், கோவிந்தபூர் ஆகிய கிராமங்கள் பின்னாளில் வளர்ச்சி பெற்ற நகரம்: கல்கத்தா நகரமாக
  7. 1696-ல் சுதாநுதியில் கட்டப்பட்டு, பின்னாளில் வில்லியம் கோட்டை என அழைக்கப்பட்ட கட்டிடம் பெயர் மாற்றம் பெற்ற ஆண்டு: 1700-ல்
டேனியர்கள் (டென்மார்க்):
  1. டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்க 1616 மார்ச் 17-ல் பட்டயம் வெளியிட்டவர்: டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன்
  2. டேனியர்களின் இந்தியத் தலைமையிடம்: செராம்பூர்
  3. டேனியர்கள் தரங்கம்பாடியை தங்களது மொழியில் அழைத்த விதம்: டானஸ்பெர்க்
  4. இந்தியாவிற்கு டென்மார்க் அரசரால் அனுப்பி வைக்கப்பட்ட அறிஞர்: சீகன்பால்கு
பிரெஞ்சுக்காரர்கள்:
  1. மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் 1664-ல் உருவாக்கப்பட்ட நிறுவனம்: பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்
  2. 1667-ல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரெஞ்சு குழுவின் தலைவர்: பிரான்காய்ஸ் கரோன்
  3. இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசி நாடு: பிரான்சு
  4. பிரெஞ்சுக்காரர்களின் இரண்டாவது வர்த்தக மையம் நிறுவப்பட்ட இடம்: மசூலிப்பட்டினத்தில்
  5. பாண்டிச்சேரியில் 'செயின்ட் லூயிஸ் கோட்டை' எனப்படும் கட்டடத்தைக் கட்டியவர்: பிரான்காய்ஸ்மாட்டின்
  6. பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி யாருடைய அனுமதி பெற்று சந்திரநாகூர் என்ற நகரை நிர்மாணித்தது: முகலாய ஆளுநர் செயிஸ்டகானின் அனுமதி பெற்று
ஸ்வீடன்:
  1. தூரக்கிழக்கு நாடுகளுடன் வணிகம் செய்யும் நோக்கில் சுவீடன் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவியவர்: ஜோதன்பர்க்
பிளாசிப் போர் (1757):
  1. இருட்டறை துயரச் சம்பவத்தின் போது 146 ஆங்கிலேயர்களைச் சிறைப்பிடித்த படை: சிராஜ்-உத்-தெளலாவின் படை
  2. 1756 இருட்டறை துயரச் சம்பவத்தில் மூச்சுத் திணறி இறந்த ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை: 123 பேர்
  3. பிளாசிப் போரில் சிராஜ்-உத்-தொளலாவுடன் கூட்டணியில் இருந்தவர்கள்: பிரெஞ்சுக் கூட்டணி
  4. பிளாசிப் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: அலிநகர் உடன்படிக்கை
  5. ஆங்கிலேயர்களது அதிகாரத்தை இந்தியாவில் தொடங்கி வைத்த போர் வெற்றி: பிளாசிப் போர் வெற்றி
பக்சார் போர் (1764):
  1. 'தஸ்தக்' (சுங்க வரிவிலக்கு ஆணை) என்ற ஆணையை ஆங்கிலேயர் தவறாகப் பயன்படுத்தியதால் கலகத்தில் ஈடுபட்டவர்: மீர்காசிம்
  2. பக்சார் போரில் சுஜா-உத்-தௌலா உள்ளிட்டோரின் கூட்டுப் படையைத் தோற்கடித்த ஆங்கிலப்படைத் தளபதி: ஹெக்டர் மன்றோ
  3. பக்சார் போருக்குப் பிறகு வங்காளத்தில் இரட்டையாட்சி முறையைக் கொண்டு வந்தவர்: இராபர்ட் கிளைவ்
கர்நாடகப் போர்கள்:
  1. முதல் கர்நாடகப் போர் (1746 - 1748):
    • கர்நாடக நவாப் அன்வாருதீனுக்கும் பிரெஞ்சுப் படைக்கும் இடையே சாந்தோம் என்ற இடத்தில் நடைபெற்ற போர்: அடையாறு போர் (1746)
    • போர் முடிவில் ஆங்கிலேயரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்ட பகுதி: மதராஸ்
  2. இரண்டாம் கர்நாடகப் போர் (1749 - 1754):
    • ஆம்பூர் போரில் அன்வாருதீனைத் தோற்கடித்த கூட்டுப் படைகளில் இடம்பெற்றிருந்த பிரெஞ்சு கவர்னர்: டியூப்ளே
    • அன்வாருதீன் கொல்லப்பட்ட பிறகு திருச்சிராப்பள்ளிக்குத் தப்பி ஓடிய அவரது மகன்: முகமது அலி
    • பிரெஞ்சுக்காரர்கள் கர்நாடக நவாப் ஆக்கியவர்: சந்தாசாகிப்
    • தக்காணத்தில் நாசிர் ஜங் கொல்லப்பட்ட பிறகு ஐதராபாத்தின் நிசாம் ஆனவர்: முசாபர் ஜங்
    • கி.பி. 1751-ல் ஆங்கிலேய மற்றும் இந்தியப் படைகளுடன் ஆற்காட்டைத் தாக்கியவர்: ராபர்ட் கிளைவ்
    • ஆற்காட்டு நவாப் ஆன முகமது அலிக்கு உதவியவர்கள்: ஆங்கிலேயர்
    • இரண்டாம் கர்நாடகப்போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: பாண்டிச்சேரி உடன்படிக்கை
    • டியூப்ளேவைத் தொடர்ந்து பிரெஞ்சு ஆளுநராகப் பதவியேற்று பாண்டிச்சேரி உடன்படிக்கையைச் செய்துகொண்டவர்: கோதேயூ
  3. மூன்றாம் கர்நாடகப் போர் (1756 - 1763):
    • வந்தவாசிப் போரில் ஜெனரல் அயர் கூட் தலைமையிலான படை முற்றிலும் தோற்கடித்தது: லாலி தலைமையிலான பிரெஞ்சு படையை
    • மூன்றாம் கர்நாடகப் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: பாரிசு உடன்படிக்கை
ஆங்கிலேய மைசூர் போர்கள்:
  1. முதல் ஆங்கிலேய மைசூர் போர் (1767 - 1769):
    • 1767-ல் ஹைதராபாத் நிசாம் யாருடைய உதவியுடன் மைசூர் மீது படையெடுத்தார்: தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையிலான ஆங்கிலப் படை உதவியுடன்
    • ஆங்கிலப் படையைத் தோற்கடித்து ஹைதர் அலி கைப்பற்றிய பகுதி: மங்களூர்
    • முதல் ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: மதராஸ் உடன்படிக்கை
  2. இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போர் (1780 - 1784):
    • சர் அயர்கூட் ஹைதர் அலியை 1781-ல் தோற்கடித்த இடம்: பரங்கிப்பேட்டை
    • ஹைதர் அலியின் இறப்புக்குப் பின் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரைத் தொடர்ந்தவர்: அவர் மகன் திப்பு சுல்தான்
    • இரண்டாம் ஆங்கில மைசூர் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: மங்களூர் உடன்படிக்கை
  3. மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் (1790 - 1792):
    • இரண்டு ஆண்டுகள் திப்பு சுல்தான் தனியாக எதிர்த்துப் போராடிய போர்: மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்
    • மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு வந்த உடன்படிக்கை: ஸ்ரீரங்கப்பட்டிண உடன்படிக்கை
  4. நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் (1799):
    • நான்காம் ஆங்கிலேய மைசூர் போரில் திப்புவின் மீது போர் தொடுத்த ஆங்கிலேயர்: வெல்லெஸ்லி பிரபு
ஆங்கிலேய மராத்தியப் போர்கள்:
  1. முதல் ஆங்கிலேய மராத்தியப் போர் (1775 - 1782):
    • 1775-ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் யாருக்கும் இடையே சூரத் ஒப்பந்தம் கையெழுத்தானது: ரகுநாதராவுக்கு இடையே
    • 1776-ஆம் ஆண்டு பூனாவின் பாதுகாப்பரசுடன் புரந்தர் ஒப்பந்தத்தைச் செய்துகொண்டவர்: கர்னல் அப்டன்
    • வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியா இடையே சால்பை ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு: 1782 ஆம் ஆண்டு
    • முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் முடிவில் பேஷ்வாவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்: இரண்டாம் மாதவராவ்
  2. இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1803 - 1805):
    • வெல்லெஸ்லி பிரபு 1802-ல் யாருடன் பஸ்ஸீன் உடன்படிக்கையைச் செய்துகொண்டார்: இரண்டாம் பாஜிராவ் பேஷ்வாவுடன்
    • இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் மராத்திய சுதந்திரத்தைக் காப்பாற்ற முயற்சித்தவர்கள்: தெளலத் ராவ் சிந்தியா மற்றும் ரகோஜி போன்ஸ்லே
    • இந்திய ஆட்சியாளர்களை இணைத்து ஆங்கிலேயர்களை எதிர்க்க முயற்சி செய்த ஹோல்கர் ஆட்சியாளர்: யஷ்வந்த ராவ் ஹோல்கர்
  3. மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர் (1817 - 1818):
    • மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஈடுபட்ட நாக்பூரின் ஆட்சியாளர்: இரண்டாம் மூதோஜி போன்ஸ்லே
துணைப்படைத் திட்டம் மற்றும் வாரிசு இழப்புக் கொள்கை:
  1. சுதேச அரசுகளை ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் கொண்டுவர வெல்லெஸ்லி பிரபு அறிமுகப்படுத்திய திட்டம்: துணைப்படைத்திட்டம்
  2. "இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு" என்பதை "இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு" என மாற்றியவர்: வெல்லெஸ்லி பிரபு
  3. துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் சுதேச அரசு: ஹைதராபாத்
  4. இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை உயர்த்துவதில் முதன்மை சிற்பியாக இருந்து, வாரிசு இழப்புக் கொள்கையைக் கொண்டு வந்தவர்: டல்ஹௌசி பிரபு

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement