TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-4
வரலாறு மற்றும் புவியியல்
- தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாறு: டாட்வெல் அவர்கள் தமிழ்நாடு ஆவணக்காப்பக வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
- வாஸ்கோடகாமா: வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்தபோது (1524ல்) நோய்வாய்ப்பட்டு காலமானார்.
- டச்சுக்காரர்களின் பகுதிகள்: டச்சுக்காரர்கள் கைப்பற்றிய கோட்டைகள் மற்றும் பகுதிகள்: நாகப்பட்டினம், புன்னக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் தேவனாம்பட்டினம்.
- சுதாநுதி கோட்டை: சுதாநுதியில் வலுவான ஒரு கோட்டை 1696ல் கட்டப்பட்டது.
- டேனியர்கள்: டேனியர்கள் 1676ல் செராம்பூரில் குடியேற்றங்களை நிறுவினர்.
- சந்திரநாகூர்: முகலாய ஆளுநரான செயிஸ்டகானின் அனுமதி பெற்று, பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி சந்திரநாகூர் நகரை நிர்மாணித்தது.
- பிளாசிப்போர்: பிளாசிப்போர், சிராஜ்-உத்-தொளலா மற்றும் பிரெஞ்சுக் கூட்டணிக்கும், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும் இடையே நடைபெற்றது.
- பக்சார் போர் - மீர்காசிம்: பக்சார் போரில் 'தஸ்தக்' என்ற சுங்க வரிவிலக்கு ஆணையை தவறாக பயன்படுத்தியதால் கலகத்தில் ஈடுபட்டவர் மீர்காசிம்.
- இரண்டாம் கர்நாடகப் போர்: இரண்டாம் கர்நாடகப் போரில் கர்நாடக நவாப் ஆக்கப்பட்டவர் சந்தாசாகிப்.
- ஐதராபாத்தின் நிசாம்: தக்காணத்தில் நாசிர் ஜங் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு ஐதராபாத்தின் நிசாம் ஆனவர் முசாபர் ஜங்.
- ஆற்காட்டு நவாப்: அன்வாருதீனின் மகன் முகமது அலி ஆங்கிலேயரின் உதவியுடன் ஆற்காட்டு நவாப் ஆனார்.
- பிரெஞ்சு ஆளுநர்: டியூப்ளேவைத் தொடர்ந்து கோதேயூ பிரெஞ்சு ஆளுநராக பதவியேற்றார்.
- வந்தவாசிப் போர்: ஜெனரல் அயர் கூட் தலைமையிலான ஆங்கிலேயப்படை, லாலி தலைமையிலான பிரெஞ்சு படையை வந்தவாசிப் போரில் தோற்கடித்தது.
- முதல் ஆங்கிலேய மைசூர் போர்: முதல் ஆங்கிலேய மைசூர் போரில் மைசூர் மீது படையெடுத்த ஹைதராபாத் நிசாமிற்கு உதவிய தளபதி ஜோசப் ஸ்மித்.
- மங்களூரை கைப்பற்றியவர்: ஆங்கிலப் படையை தோற்கடித்து மங்களூரை கைப்பற்றிய மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலி.
- மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர்: இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போரில் திப்பு சுல்தான் தனியாக எதிர்த்துப் போராடினார்.
- சூரத் ஒப்பந்தம் (1775): 1775ஆம் ஆண்டு சூரத் ஒப்பந்தம் ஆங்கிலேயருக்கும் ரகுநாதராவுக்கும் இடையே கையெழுத்தானது.
- புரந்தர் ஒப்பந்தம் (1776): 1776ஆம் ஆண்டு பூனாவின் பாதுகாப்பரசுடன் புரந்தர் ஒப்பந்தத்தை செய்துகொண்டவர் கர்னல் அப்டன்.
- பஸ்ஸீன் உடன்படிக்கை (1802): பஸ்ஸீன் உடன்படிக்கை (1802) வெல்லெஸ்லி பிரபு மற்றும் இரண்டாம் பாஜிராவ் பேஷ்வாவுக்கு இடையே செய்து கொள்ளப்பட்டது.
- மராத்திய சுதந்திரத்தை காப்பாற்ற முயற்சித்தவர்கள்: தெளலத் ராவ் சிந்தியா மற்றும் ரகோஜி போன்ஸ்லே மராத்திய சுதந்திரத்தை காப்பாற்ற முயற்சித்தவர்கள்.
- மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர்: மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போரில் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஈடுபட்ட இந்தூரின் ஆட்சியாளர் மூன்றாம் மல்ஹர் ராவ் ஹோல்கர்.
- வெல்லெஸ்லி பிரபுவின் மாற்றம்: வெல்லெஸ்லி பிரபு "இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு" என்பதை 'இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு' என மாற்றினார்.
- கார்ன்வாலிஸ் பிரபு: காரன்வாலிஸ் பிரபு நில வருவாய் திட்டத்தை 1793ல் பத்தாண்டு நில வருவாய் திட்டமாக மாற்றினார்.
- இரயத்துவாரி முறை: இரயத்துவாரி முறை பம்பாய், மதராஸ் தவிர அசாம் பகுதிகள் மற்றும் கூர்க் பகுதிகளிலும் கொண்டு வரப்பட்டது.
- தாமஸ் மன்றோ: விளைச்சலில் பாதியாக இருந்த நிலவருவாயை மூன்றில் ஒரு பங்காக குறைத்தவர் தாமஸ் மன்றோ.
- மகல்வாரி முறை: வில்லியம் பெண்டிங் பிரபு மகல்வாரி முறையில் சில அடிப்படை மாற்றங்களை 1833ல் கொண்டு வந்தார்.
- சிவில் சர்வீஸ் வயது குறைப்பு: சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதிகபட்ச வயது 1866ல் 21 ஆகவும், 1876ல் 19 ஆகவும் குறைக்கப்பட்டது.
- கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம்: மத்தியில் கூட்டாட்சி அரசுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் வழிவகை செய்தது.
- சௌகிதார்கள்: கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காலவர்கள் சௌகிதார்கள் என அழைக்கப்பட்டனர்.
- இரட்டை ஆட்சி முறை ஒழிப்பு: 1772ல் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வரிவசூல் செய்வதையும், நீதி வழங்கும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொண்டது.
- கர்நாடக உடன்படிக்கை: கர்நாடக உடன்படிக்கைப்படி பாளைக்காரர் முறை நீக்கப்பட்ட ஆண்டு 1801 ஜூலை 31.
- சென்னை மாகாண கவர்னர் (1803): 1803ல் சென்னை மாகாண கவர்னராக பதவியேற்றவர் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
- புதிய தலைப்பாகை அறிமுகம்: ஜூன் 1806ல் ஐரோப்பிய தொப்பியை ஒத்திருந்த சிலுவை சின்னத்துடன் கூடிய ஒரு புதிய தலைப்பாகையை அறிமுகப்படுத்தியவர் இராணுவத் தளபதி அக்னியூ.
- வேலூர் கலகக் கொடி: வேலூர் கலகத்தின் போது வேலூர் கோட்டையில் ஏற்றப்பட்ட கொடியில் புலி உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.
- எல்பீல்டுரக துப்பாக்கி: 1857 பெரும்புரட்சியில் எல்பீல்டுரக துப்பாக்கியின் மேலுறையில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது.
- டெல்லியை மீட்டவர்: டெல்லியை மீண்டும் 1857 செப்டம்பர் 20ல் கைப்பற்றிய ஆங்கில படைத்தளபதி நிக்கல்சன்.
- இரண்டாம் பகதூர்ஷா: டெல்லியை மீண்டும் ஆங்கிலேயர் கைப்பற்றியதால் இரண்டாம் பகதூர்ஷா ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
- துணிச்சலான தலைவர்: 1857 புரட்சியில் கலந்து கொண்ட தலைவர்களில் மிகவும் துணிச்சலானவர் என ஆங்கில வரலாற்றசிரியர்கள் இராணி லட்சுமிபாயைக் குறிப்பிடுகிறார்கள்.
- மதராஸ் மாநகராட்சி: மதராஸ் மாநகராட்சி 1688 இல் ஒரு மேயருடன் ஏற்படுத்தப்பட்டது.
- மதராஸ் மாகாணம் மாற்றம்: 1947 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு மதராஸ் மாகாணமானது மதராஸ் மாநிலமாக மாறியது.
- சந்தால் கலகம்: சந்தால் கலகத்தில் நிலவுடைமையாளர்களால் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது ஆயுதம் ஏந்திய புரட்சிக்கு இட்டுச் சென்றது.
- இண்டிகோ கலகம்: 1859-60ல் நடைபெற்ற இண்டிகோ கலகம் அவுரிப் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது.
- 'நீல் தர்பன்' நாடகம்: தீனபந்து மித்ரா எழுதிய 'நீல் தர்பன்' நாடகம் வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களைப் பற்றியது.
- தக்காண கலகம்: தக்காண கலகம் பூனா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளால் ஆரம்பிக்கப்பட்டது.
- பஞ்சாப் விவசாயிகள் புரட்சி: பஞ்சாப் விவசாயிகள் வட்டிக்கடைக்காரர்கள் மேற்கொண்ட ஒடுக்கு முறைகளை தடுக்கும் பொருட்டு புரட்சியில் ஈடுபட்டனர்.
- பர்தோலி விவசாயிகள் எதிர்ப்பு (1928): அரசு நிலவருவாயை 30 சதவீதம் அளவிற்கு உயர்த்தியதால் 1928ல் பர்தோலி (குஜராத்) விவசாயிகள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
- பாளையம் பிரிவுகள்: மதுரை நாயக்கரான விஸ்வநாதர் நாட்டை 72 பாளையங்களாகப் பிரித்தார்.
- பூலித்தேவர் மீதான தாக்குதல்: ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயரின் கூட்டுப்படைகள் பூலித்தேவரைத் தாக்கின.
- வீரபாண்டிய கட்டபொம்மன்: வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார்.
- திருச்சிராப்பள்ளி அறிக்கை: சிவகங்கையின் மருது பாண்டியர் தென்னியந்திய கிளர்ச்சியாளர்களின் கூட்டமைப்பை உருவாக்கி திருச்சிராப்பள்ளி அறிக்கையை வெளியிட்டார்.
- பாஞ்சாலங்குறிச்சி தாக்குதல்: 1799 செப்டம்பர் 5ஆம் நாள் மேஜர் பானர்மேன் தன்னுடைய படையை பாஞ்சாலங்குறிச்சியை நோக்கி நகர்த்தினார்.
- கட்டபொம்மன் மறைவு: கள்ளர்பட்டியில் நடந்த சண்டைக்குப் பின் கட்டபொம்மன் தப்பித்து களப்பூர் காடுகளில் மறைந்திருந்தார்.
- குயிலியின் தற்கொலை தாக்குதல்: வேலுநாச்சியாரின் படைத்தளபதி குயிலி என்பவரால் ஒரு தற்கொலை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
- மருது சகோதரர்கள்: கட்டபொம்மனின் இறப்பிற்கு பிறகு அவருடைய சகோதரர்களுக்கு பாதுகாப்பளித்தவர்கள் மருது சகோதரர்கள்.
- சின்ன மருது: சிவகங்கை மன்னர் முத்துவடுக நாத பெரிய உடையதேவரிடம் பணிபுரிந்தவர் சின்ன மருது.
- கொங்கு நாடு: கொங்கு நாடு சேலம், கோயம்புத்தூர், கரூர் மற்றும் திண்டுக்கல் பகுதிகளை உள்ளடக்கியது.
- தீரன் சின்னமலை: தீரன் சின்னமலை சங்ககிரி கோட்டையில் 1805 ல் தூக்கிலிடப்பட்டார்.
- பண்டைய கல்வி நிலையங்கள்: பண்டைய இந்தியாவில் இல்லங்கள், கோயில்கள், பாடசாலைகள், குருகுலங்கள் ஆகிய இடங்களில் கல்வி கற்பிக்கப்பட்டது.
- 'வேதம்' பொருள்: 'வேதம்' என்ற சொல்லின் பொருள் அறிவு.
- தட்சசீல பல்கலைக்கழகம்: தட்சசீல பல்கலைக்கழகம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது.
- நாளந்தா பல்கழைக்கழகம்: நாளந்தா பல்கழைக்கழகம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்தது.
- நாளந்தா மகா விகாரா: நாளந்தா மகா விகாராவின் இடிபாடுகளை ஐ. நா. சபையின் யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.
- மதரசா: முஸ்லீம்கள் நிறுவிய இடைநிலைப்பள்ளிகள் மதரசா என அழைக்கப்பட்டன.
- எல்பின்ஸ்டன் கல்லூரி: பம்பாயில் எல்பின்ஸ்டன் பெயரால் நிறுவப்பட்ட கல்லூரி ஆங்கில கல்வியை வழங்கியது.
- கல்வியின் மூன்றாம் கட்டம்: கல்வியின் மூன்றாம் கட்டம் (1854ஆம் ஆண்டு உட்ஸ் கல்வி அறிக்கை காலம்) அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம் என்று அழைக்கப்படுகிறது.
- புதிய கல்விக் கொள்கை திருத்தம்: புதிய கல்விக் கொள்கையானது 1992ஆம் ஆண்டு மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது.
- கல்வி உரிமைச் சட்டம்: கல்வி உரிமைச் சட்டமானது 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வியை வழங்குகிறது.
- அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA): அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) 15 முதல் 16 வயதுக்குட்பட்ட இளம் மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வியை அளிக்கிறது.
- தேசிய கல்விக் கொள்கை வரைவு: 2017 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை வரைவதற்கான குழு மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டது.
- திருபுவனை வேதக் கல்லூரி: திருபுவனையில் செழித்தோங்கிய வேதக் கல்லூரி தற்போது பாண்டிச்சேரியில் உள்ளது.
- பாண்டியர் கால கல்வி நிலையங்கள்: பாண்டியர்களின் காலத்தில் கல்வி நிலையங்கள் கடிகை, சாலை மற்றும் வித்யாசாதனம் என அழைக்கப் பட்டன.
- தஞ்சை சரஸ்வதி மகால்: இரண்டாம் சரபோஜி பண்டைய ஆவணங்களை சேகரித்து தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாத்தார்.
- இலவச கல்வி: 1964-65 ல் இடைநிலைக் கல்வி அளவில் இலவச கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது.
- தாதாபாய் நௌரோஜி: இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே இந்திய மக்களின் வறுமைக்கு காரணம் என்பதை முதலில் தாதாபாய் நௌரோஜி ஏற்றுக் கொண்டார்.
- பருத்தி நூற்பு ஆலை: 1854 ஆம் ஆண்டு இந்தியாவில் பருத்தி நூற்பு ஆலை பம்பாயில் நிறுவப்பட்டது.
- தொழிற்துறை கொள்கை (1948): 1948ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தினால் அரசாங்கம் தொழிற்துறையில் நேரடியாக பங்களிப்பினை வெளிப்படுத்தியது.
- உயர் வளர்ச்சி விகிதம்: பத்தாவது மற்றும் பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தொழிற்துறை உற்பத்தியில் உயர் வளர்ச்சி விகிதத்தைக் கண்டன.
- மஸ்லின் துணி: 50 மீட்டர் அளவு கொண்ட மெல்லிய மஸ்லின் துணியை ஒரு தீப்பெட்டிக்குள் அடக்கிவிடலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- புனித வில்லியம் கோட்டை: ஆங்கிலேயர்கள் வர்த்தகத்திற்காக கல்கத்தாவில் ஏற்படுத்திய கோட்டை புனித வில்லியம் கோட்டை.
- இருப்புப் பாதைகள் (இரயில்வே): இந்தியாவில் 1853 இல் இருப்புப் பாதைகள் (இரயில்வே) அறிமுகப்படுத்தப்பட்டதால் இரயில் நகரங்கள் தோன்றின.
- இந்திய கல்விக் குழு பரிந்துரை (1882): 1882 ஆம் ஆண்டில் இந்திய கல்விக் குழு சிறுமிகளுக்காக தொடக்கப் பள்ளியையும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களையும் தொடங்க பரிந்துரைத்தது.
- பெண்சிசுக்கொலை தடை: 1795 ஆம் ஆண்டின் வங்காள ஒழுங்காற்றுச் சட்டம் XXI பெண்சிசுக்கொலை நடைமுறையை தடைசெய்தது.
- தேவதாசி ஒழிப்பு மசோதா: டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் தேவதாசி ஒழிப்பு மசோதாவை சென்னை சட்டமன்றத்தில் 1930 இல் முன்மொழிந்தார்.
- சாரதா சதன்: விதவைகளுக்கு முதன்முதலில் கல்வி புகட்ட பண்டித ரமாபாய் மேற்கொண்ட முயற்சி சாரதா சதன் எனும் கற்றல் இல்லம் திறந்தது.
- திருமண உதவி திட்டம்: 'மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம்' தமிழக அரசால் தொடங்கப்பட்டது.
- மகாரத்னா தொழில்கள் (2017): இந்தியாவில் 2017 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 8 மகாரத்னா தொழில்கள் இருந்தன.
- மகாரத்னா லாபம்: மகாரத்னா தொழில்கள் என்று அழைக்கப்பட சராசரியாக ஆண்டுக்கு நிகர லாபம் ரூ.2500 கோடி இருக்க வேண்டும்.
- சுகாதாரத் திட்டம்: 2018-19 மத்திய வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் அறிவித்த சுகாதாரத் திட்டம் தேசிய சுகாதார உற்பத்தி திட்டம் (NHPS).
- ஆளுநரின் அதிகாரம்: சட்ட மன்ற கூட்டம் நடைபெறாத போது ஆளுநர் அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கலாம்.
- சட்டமன்ற உறுப்பினர்கள்: ஒரு மாநில சட்டமன்றத்தில் 500 உறுப்பினர்களுக்கு மேலாகவும், 60 உறுப்பினர்களுக்கு குறைவாகவும் இருத்தல் கூடாது.
- ஈரவை சட்டமன்ற மாநிலங்கள்: ஈரவை சட்டமன்றம் கொண்ட மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டு: ஆந்திரப்பிரதேசம், பீகார், கர்நாடகம், தெலுங்கானா, உத்திரபிரதேசம், ஜம்மு&காஷ்மீர், மகாராஷ்டிரா.
- உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும் மாநில ஆளுநரையும் கலந்தாலோசித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமனம் செய்பவர் குடியரசுத் தலைவர்.
- உயர்நீதிமன்ற நீதிபதி தகுதி: உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட உயர் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- 'குடிமகன்' சொல்: 'குடிமகன்' (Citizen) என்ற சொல் சிவிஸ் (Civis) என்ற இலத்தீன் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
- OCI உரிமை: வெளிநாட்டுக் குடியுரிமையை கொண்ட இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவர் (OCI) இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
- Secularism உருவாக்கியவர்: Secularism என்ற பதத்தை உருவாக்கிய ஆங்கிலேய பத்திரிக்கை எழுத்தாளர் ஜார்ஜ் ஜேக்கப் ஹோல்யோக்.
- அக்பரின் கொள்கைகள்: அக்பருடைய சமய சகிப்புத் தன்மையை எடுத்தியம்பும் கொள்கைகள் தீன் - இலாஹி மற்றும் சுல்-இ-குல்.
- மனித உரிமைகள் பிரகடனம்: மனித உரிமைகள் பிரகடனத்தில் 30 சட்டப்பிரிவுள் உள்ளடங்கியுள்ளன.
- தேசிய மனித உரிமைகள் ஆணையம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது.
- பீல்டு மார்ஷல் அந்தஸ்து: இந்திய இராணுவத்தின் உயர்ந்த பதவியான 'பீல்டு மார்ஷல்' (Field Marshal) ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொண்டது.


0 Comments