8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-3


TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-3

கல்வி தொடர்பான முக்கிய வினா விடைகள்
  1. டாக்டர். C.S. ஜான் 1812 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் 20 இலவசப் பள்ளிகளை நிறுவினார்.
  2. டாக்டர் மிடில்டன் கல்கத்தாவில் மிஷினரி கல்லூரியை (பிஷப் கல்லூரி) தொடங்கினார்.
  3. மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன் வட்டார மொழிக் கல்வியினை தீவிரமாக முன்மொழிந்தார்.
  4. 1813 ஆம் ஆண்டின் பட்டயச் சட்டம் இந்தியாவில் கல்வியை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் 1 இலட்சம் ரூபாய் வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்தது.
  5. ஹண்டர் கல்விக்குழு (1882) தொடக்கக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது.
  6. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் முழுமையான மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தி மாகாண கல்வி அமைச்சர்களின் நிலையை வலுப்படுத்தியது.
  7. இரண்டாம் உலகப் போருக்குப் பின் கல்வி மேம்பாட்டிற்காக தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான திட்டம் சார்ஜண்ட் அறிக்கை (1944) ஆகும்.
  8. டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு (1948) பரிந்துரைகளின்படி பல்கலைக்கழக மானியக் குழு அமைக்கப்பட்டது.
  9. டாக்டர். D.S. கோத்தாரி கல்விக்குழு (1964) நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10+2+3 கல்வி அமைப்பை பரிந்துரை செய்தது.
  10. கல்வித்துறை 1976ஆம் ஆண்டு டிசம்பர் வரை மாநிலப் பட்டியலில் இருந்தது.
  11. அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) 2000-2001ல் அனைத்து குழந்தைகளுக்கும் தொடக்கக் கல்வியை பெறுவதற்காக தொடங்கப்பட்டது.
  12. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (RMSA) பதினோறாம் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் செயல்படுத்தப்பட்டது.
  13. சமக்ர சிக் ஷா (Samagra Siksha) என்பது SSA மற்றும் RMSA திட்டங்களை உள்ளடக்கியது.
தமிழக வரலாற்றில் கல்வி
  1. பல்லவர் காலத்தில் கல்வி நிறுவனங்கள் கடிகை என்று அழைக்கப்பட்டன.
  2. இராஜாராஜ சோழன் காலத்தில் புகழ்பெற்ற வேதக் கல்லூரிக்கு இருப்பிடமாக இருந்தது சதுர்வேதி மங்கலம்.
  3. திருவிடைக்காளை கல்வெட்டு நூலகத்தைப் பற்றியும், வீரராஜேந்திர சோழனின் திருவாடுதுறைக் கல்வெட்டு மருத்துவப்பள்ளி பற்றியும் குறிப்பிடுகிறது.
  4. பாண்டியர் காலத்தில் ஆசிரியர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்ட முறை சாலபோகம் என்று அழைக்கப்பட்டது.
  5. தஞ்சாவூரில் தேவநாகரி எழுத்து முறையிலான அச்சுக்கூடத்தை அமைத்த மராத்திய ஆட்சியாளர் இரண்டாம் சரபோஜி.
  6. மதராஸ் மாகாணத்தில் மேற்கத்திய கல்வியை அறிமுகப்படுத்தியதில் மிகப்பெரிய பங்கு வகித்த ஆளுநர் சர் தாமஸ் மன்றோ (1820-27).
  7. காந்திகிராம கிராமிய கல்லூரி 1975 ல் ஏற்படுத்தப்பட்டது.
  8. 1956ல் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் 1982ல் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது.
பொருளாதாரம் மற்றும் தொழில்
  1. எட்வர்ட் பெயின்ஸ் பருத்தி உற்பத்தியின் பிறப்பிடம் இந்தியா என்று கூறினார்.
  2. தாதாபாய் நௌரோஜி 'செல்வச் சுரண்டல் கோட்பாடு' என்பதை முன்வைத்தார்.
  3. அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் 1839ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  4. இந்தியாவில் 1855ஆம் ஆண்டு முதல் சணல் தொழிற்சாலை கல்கத்தாவிற்கு அருகில் ரிஷ்ரா என்ற இடத்தில் தொடங்கப்பட்டது.
  5. 1870 ஆம் ஆண்டு முதல் காகித ஆலை பாலிகன்ஜ் (கல்கத்தாவுக்கு அருகில்) துவங்கப்பட்டது.
  6. இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான எஃகு உற்பத்தியை மேம்படுத்திய பெருமை ஜாம்ஷெட்ஜி டாடாவைச் சாரும்.
  7. டாட்டா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் 1907ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் அமைக்கப்பட்டது.
  8. 1956 ஆம் ஆண்டு தொழிற்துறை கொள்கை தீர்மானத்தின்படி தொழிற்துறையானது மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  9. இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு (CII) என்ற வணிக சங்கம் 1985ல் நிறுவப்பட்டது.
  10. இந்தியாவில் இருப்புப் பாதைகள் (இரயில்வே) பிரிட்டிஷார் காலத்தில் 1853 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  11. கான்பூர், லாகூர் ஆகிய பகுதிகள் ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப்பட்ட இராணுவக் குடியிருப்பு நகரங்கள்.
  12. இந்தியாவில் மதராஸ் மாநகராட்சி மேயருடன் 1688 இல் ஏற்படுத்தப்பட்டது.
  13. மதராஸ் மாநகராட்சி உருவாவதற்கு காரணமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் இயக்குநர் சர் ஜோசியா சைல்டு.
  14. ரிப்பன் பிரபுவின் தீர்மானம் 'உள்ளாட்சி அரசாங்கத்தின் மகாசாசனம்' என கருதப்படுகிறது.
  15. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் மாகாண சுயாட்சியை அறிமுகப்படுத்தியது.
  16. புனித ஜார்ஜ் கோட்டையின் அருகாமையில் உள்ள கிராமங்களில் மக்கள் வசித்த பகுதி கருப்பு நகரம் என்று அழைக்கப்பட்டது.
  17. மதராசபட்டணத்தை ஆங்கிலேயருக்கு மானியமாக வழங்கிய தமர்லா வெங்கடபதி சந்திரகிரியின் அரசரான வெங்கடபதி ராயலுவின் கட்டுப்பாட்டில் இருந்தார்.
  18. பம்பாய் பகுதியை 1661 இல் சீதனமாகப் பெற்ற இங்கிலாந்து மன்னர் மன்னர் இரண்டாம் சார்லஸ்.
சமூக சீர்திருத்தங்கள்
  1. முகாலய ஆட்சியாளர் அக்பர் சதி முறையினை ஒழிக்க முயன்றார்.
  2. தோற்கடிக்கப்பட்ட ராஜப்புத்திர போர்வீரர்களின் மனைவிகள் மற்றும் மகள்களின் கூட்டு தற்கொலை நடைமுறை ஜவ்கார் என்று அழைக்கப்பட்டது.
  3. முதன் முதலில் பெண் சிறார் சங்கத்தை 1819 ஆம் ஆண்டு கல்கத்தாவில் அமைத்தவர்கள் கிறித்துவ அமைப்புகள்.
  4. 1890 களில் பூனாவில் ஏராளமான பெண் பள்ளிகளை நிறுவியவர் D.K.கார்வே.
  5. இந்திய மகளிர் பல்கலைக்கழகம் 1916 இல் பேராசிரியர் D.K.கார்வேயால் தொடங்கப்பட்டது.
  6. 1872 இல் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு திருமணச் சட்டம் மூலம் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 14 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  7. 1930 இல் கொண்டுவரப்பட்ட சாரதா சட்டம் மூலம் ஆண்களுக்கு திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
  8. வில்லியம் பெண்டிங் பிரபு விதிமுறை XVII (1829) சட்டத்தின் மூலம் சதியை சட்டத்திற்கு புறம்பானது என அறிவித்தார்.
  9. தேவதாசி முறைக்கு எதிரான போராட்டத்தை பாராட்டும் வகையில் 1929 இல் சென்னை சட்டமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார்.
  10. 1889 இல் இந்து விதவைகளுக்காக 'சாரதா சதன்' எனும் அமைப்பினை பம்பாயில் திறந்தவர் பண்டித ரமாபாய்.
  11. டாக்டர் எஸ்.தர்மாம்பாள் பெரியாரின் கருத்துகளால் மிகவும் கவரப்பட்டார்.
  12. பெண்களுக்கான தேசிய ஆணையம் ஜனவரி 1992 இல் அமைக்கப்பட்டது.
புவியியல் - பாறைகள் மற்றும் மண்
  1. 'பாறையியல்' என்ற பொருள் தரும் பெட்ரோலஜி (Petrology) என்பதில் 'லோகோஸ்' என்பது அதைப் பற்றிய படிப்பு ஆகும்.
  2. இக்னியஸ் (Igneous) என்ற இலத்தீன் சொல்லின் பொருள் தீ.
  3. உயிரினப் படிமப் பொருள்கள் தீப்பாறைகளில் இருக்காது.
  4. ஊடுருவிய தீப்பாறைகள் பெரிய அளவிலான படிகங்களைக் கொண்டிருப்பதால் படிகப் பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
  5. செடிமென்டரி (Sedimentary) என்ற சொல் செடிமென்டம் என்ற இலத்தீன் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
  6. 3.9 பில்லியன் ஆண்டுகள் வயதுடைய உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் கிரீன்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
  7. மாக்கல் மற்றும் களிப்பாறை பௌதீக படிவுப் பாறைகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
  8. இரசாயன படிவுப் பாறைகள் 'உப்புபடர் பாறைகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
  9. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உருமாறிய பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் ஆனது.
  10. வெப்ப உருமாற்றத்தினால் மணற்பாறைகள் வெண் கற்பாறையாக மாறுகின்றன.
  11. மண்ணில் உள்ள நீரின் சதவீதம் பொதுவாக 25% இருக்கும்.
  12. இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்ட மண் கரிசல் மண்.
  13. தினைப் பயிர்கள் பயிரிட ஏற்ற, வளம் குறைந்த மண் செம்மண்.
  14. தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்ற மண் சரளை மண்.
  15. அயன மண்டல ஈரக் காலநிலைப் பகுதிகளில் 1 செ.மீ மண் உருவாக சுமார் 200 வருடங்கள் ஆகும்.
புவியியல் - வளிமண்டலம் மற்றும் நீர்
  1. புவியின் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜனின் சதவீதம் 21%.
  2. 'கிளைமோ' (kilmo) என்றால் தமிழில் சாய்வுகோணம் என்று பொருள்.
  3. சூரிய கதிர்வீச்சுகளிலிருந்து பெறப்படும் வெப்ப ஆற்றல் மூன்று வழிமுறைகளில் (வெப்ப கதிர் வீச்சு, வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம்) புவியை அடைகிறது.
  4. வெப்ப குறைவு வீதம் (Lapse rate) என்பது வெப்ப மாறும் மண்டலத்தில் 1000 மீட்டர் உயரத்திற்கு 6.5°C அளவு வெப்பநிலை குறைவது.
  5. நாள்தோறும் அதிக பட்ச வெப்பநிலை பொதுவாக பிற்பகல் 2.00 மணியிலிருந்து 4.00 மணிக்குள் பதிவாகிறது.
  6. சராசரி சமவெப்பநிலைக்கோடு ஐசோக்ரைம் என்று அழைக்கப்படுகிறது.
  7. ஐசெல்லோபார் என்பது சம காற்றழுத்த மாறுபாட்டுக் கோட்டைக் குறிக்கிறது.
  8. -89.2 டிகிரி செல்சியஸ் என்ற உலகின் குறைந்தபட்ச வெப்பநிலை 1983ல் அண்டார்டிக்காவில் உள்ள சோவியத் வோஸ்டக் நிலையத்தில் பதிவானது.
  9. உலகில் இதுவரை பதிவான மிகக் குறைந்த காற்றழுத்தம் 870mb மரியானா தீவிற்கு அருகில் உள்ள குவாம் என்ற கடல் பகுதியில் உருவான டைபூனின் கண் பகுதியில் பதிவானது.
  10. காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும் பொழுது காற்று பூரித நிலையை அடையும்.
  11. கோள் காற்று (Planetary winds) நிலையான காற்றுகள் என்று அழைக்கப்படுகிறது.
  12. ஆப்பிரிக்காவின் காபான், காங்கோ, மற்றும் இந்தோனேசியா ஆகியவை பூமியில் குறைந்த காற்று வீசும் பகுதிக்கு உதாரணமாகும்.
  13. காற்றின் திசையையும் வீசும் காலத்தையும் நிலவரைபடத்தில் குறிக்கும் வரைபடம் விண்ட்ரோஸ்.
  14. புவியில் உள்ள மொத்த நீரில் நன்னீரின் சதவீதம் 2.8%.
  15. தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்லும் செயலாக்கம் நீர் உட்கசிந்து வெளியிடுதல் என்று அழைக்கப்படுகிறது.
  16. கார்திரள் மேகங்களிலிருந்து இடியுடன் கூடிய மழையாக உருவாகும் 5 மி.மீ விட்டத்தை விட பெரிய பனிக்கட்டிகள் ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படுகிறது.
சமூகவியல் மற்றும் பேரிடர்
  1. அறிவார்ந்த மக்கள் வெளியேறுதலால் பூர்வீக பகுதிகள் பின்தங்கிய நிலையை அடைவது அறிவுசார் வெளியேற்ற விளைவு (Back Wash Effect) என்று அழைக்கப்படுகிறது.
  2. 2007 ஆம் ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக உலகளாவிய நகர்ப்புற மக்கள்தொகை ஊரக மக்கள் தொகையை விட அதிகமானது.
  3. ஹசார்டு (Hazard) என்ற சொல் அஸ்-சஹர் என்ற அரபு மொழியிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
  4. சுனாமி (Tsunami) என்பதில் 'நாமி' என்ற வார்த்தையின் பொருள் அலை.
உலக புவியியல்
  1. ஆப்பிரிக்காவின் வட மேற்கு நாடுகள் குழு மேக் ரெப் (Meghreb) என்று அழைக்கப்படுகிறது.
  2. சவானா பகுதியின் "திறந்தவெளி மிருகக்காட்சி சாலை" என்று அழைக்கப்படும் சமவெளி செரன்கேட்டி சமவெளி.
  3. ஆப்பிரிக்காவின் மிக நீளமான நதியான நைல் நதி வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இரு முக்கிய துணை ஆறுகளைக் கொண்டுள்ளது.
  4. அண்டார்டிகாவில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிலையங்கள் தட்சின் கங்கோத்ரி, மைத்ரேயி மற்றும் பாரதி.
  5. சம அளவுக்கோட்டுப் படங்களைக் குறிக்கும் "Isoline" என்பதில் 'ஐசோ' என்பது கிரேக்க மொழி சொல்.
அரசியலமைப்பு மற்றும் சட்டம்
  1. இந்தியாவின் ரூபாய் என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான ரூபியாவிலிருந்து பெறப்பட்டது.
  2. இந்தியாவில் கி.மு.6 நூற்றாண்டில் மஹாஜனபதங்கள் ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட நாணயங்கள் பூரணாஸ், கர்ஷபணம், பனாஸ்.
  3. பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம் 2002ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
  4. கலப்பு பொருளாதாரம் என்பது முதலாளித்துவம் மற்றும் பொதுவுடமையின் கலவை.
  5. திட்டக் குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட புதிய "மதியுரையகக் குழு" (Think Tank) நிதி ஆயோக்.
  6. மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
  7. இந்திய குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் 42 வது சட்டத்திருத்தத்தின் படி வரையறுக்கப்பட்டுள்ளன.
  8. 1948ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக மனித உரிமைகள் அறிவிப்பு மனித உரிமைகளின் நவீன சர்வதேச மகாசாகனம் என்றும் அழைக்கப்படுகிறது.
  9. சட்டப்பிரிவு 21(A) 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement