TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-8
கற்பித்தல் மற்றும் தகவல்கள் (வினாவிடை வடிவில்)
வரலாறு, நிர்வாகம் மற்றும் அரசியல் அமைப்பு:
- பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம், மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- டேனியர்கள் தரங்கம்பாடியில் தங்கள் குடியேற்றங்களை 1620ல் நிறுவினர்.
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் முதல் கோட்டையாகவும், கிழக்குப்பகுதி முழுமைக்குமான தலைமையிடமாகவும் புனித ஜார்ஜ் கோட்டை விளங்கியது.
- பிளாசிப் போர் மற்றும் பக்சார் போருக்குப் பிறகு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஓர் அரசியல் சக்தியாக மாறியது.
- வில்லியம் பெண்டிங் பிரபு, இராபர்ட் மெர்தின்ஸ் பர்ட் என்பவரின் வழிகாட்டுதலின்படி, 1833ல் மகல்வாரி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
- சிவில் சர்வீஸ் தேர்வெழுத அதிகபட்ச வயது 1866ல் 21 ஆகக் குறைக்கப்பட்டது.
- மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு ஆகியோர் 1918ல் இந்திய ஆட்சிப் பணியில் 33% இந்தியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தனர்.
- ஆங்கிலேயர்களின் தங்க நாணயங்கள் கரோலினா என்றும், செம்பு நாணயங்கள் கப்ரூன் என்றும், வெண்கல நாணயங்கள் டின்னி என்றும் அழைக்கப்பட்டன.
- ஆந்திரா, கேரளா மற்றும் மைசூர் மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டன.
- பம்பாய் ஏழு தீவுகளைக் கொண்டதாகும்.
- ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திரர்களிடையே வழக்கத்தில் இருந்த கூட்டுத் தற்கொலை நடைமுறை ஜவ்கார் ஆகும்.
- குடியுரிமை (Citizenship) என்ற சொல் பண்டைய ரோமாபுரியில் நகர நாடுகளில் குடியிருப்பாளர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது.
- இந்திய அரசியல் அமைப்பு முகவுரையில் 1976ஆம் ஆண்டில் (42 வது சட்டத் திருத்தம்) 'சமயச்சார்பற்ற' என்ற சொல் சேர்க்கப்பட்டது.
- ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக ஓர் ஆணையத்தை அமைக்க அதிகாரம் பெற்றது.
- சிறார் நீதிச்சட்டம் (குழந்தைகளை பராமரித்தல் மற்றும் பாதுகாத்தல்) 2000 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- சைரஸ் சிலிண்டர் (கி.மு. 539) அக்காடியன் மொழியில் கியூனிபார்ஃம் எழுத்துக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு வாரத்தை ஒருங்கிணைக்கிறது.
- தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக பயணம் செய்ய பாலங்களைக் கட்டும் 'சேது பாரதம்' திட்டம் 2016ல் தொடங்கப்பட்டது.
- 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட துணை இராணுவப் படைப் பிரிவு சிறப்பு எல்லைப்புற படை (SFF) ஆகும்.
- இத்தாலியில் உள்ள மவுண்ட் வெசூலியஸ் மற்றும் மவுண்ட் எட்னா ஆகியவை செயல்படும் எரிமலைகளுக்கு உதாரணம்.
- சாக், பட்டுக்கல் மற்றும் டோலமைட் ஆகியவை உயிரினப் படிவுப் பாறைகள் வகையைச் சார்ந்தவை.
- இயக்க உருமாற்றத்தினால் கிரானைட் பாறை நைஸ் பாறையாக உருமாறுகிறது.
- உலக மண் நாளாகக் கொண்டாடப்படும் நாள் டிசம்பர் 5 ஆம் நாள்.
- செம்மண்ணில் இரும்பு ஆக்சைடு அளவைப் பொருத்து அதன் நிறம் பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது.
- அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருவுதலின் செயலாக்கத்தினால் உருவாகும் மண் சரளை மண்.
- மித வெப்பமண்டல காலநிலைப் பிரதேசங்களில் 1 செ.மீ மண் உருவாக 200 முதல் 400 வருடங்கள் ஆகும்.
- Climate என்ற சொல் பண்டைய கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்ட கிளைமா என்ற சொல்லாகும்.
- புவியின் வளிமண்டலம் சூரிய கதிர்வீசலை விட புவி கதிர்வீசலால் அதிக வெப்பம் அடைகிறது.
- சமவெப்பக் கோடு வரைபடத்தில் ஐசோதெர்ம் (Isotherm) எனக் குறிக்கப்படுகிறது.
- பூமியில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் காற்றழுத்தத்தின் அளவு 1.03 கிலோ/ச.செ.மீ.
- காற்றில் ஒப்பு ஈரப்பதம் 100% அடையும் பொழுது காற்று பூரித நிலையை அடையும்.
- வியாபாரக் காற்று, மேலைக்காற்று, துருவக்காற்று ஆகியவை பருவக் காலக் காற்றுகள் ஆகும்.
- பிரேசிலின் பெரும்பகுதியில் காற்றின் வேகம் குறைவாக உள்ளது.
- காற்றின் வேகத்தை அளவிட பயன்படும் 'பியோபோர்டு அளவை' என்ற கருவி 1805ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- புவியில் உள்ள மொத்த நன்னீரில் நிலத்தடி நீராக கிடைக்கப்பெறும் நன்னீரின் சதவீதம் 0.6%.
- நீர் திரவநிலையிலிருந்து வாயுநிலைக்கு மாறுவது ஆவியாதல் எனப்படும்.
- 2017 ஆம் ஆண்டில் சர்வதேச புலம்பெயர்வில் உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது இந்தியா (17 மில்லியன்).
- மக்கள் கால்நடையுடன் இடம் பெயர்தல் மந்தை இடமாற்றம் (Transhumance) என அழைக்கப்படுகிறது.
- நவீன நகரமயமாக்கலின் மூன்றாம் கட்ட வளர்ச்சி பதினேழாம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது.
- இடர் (Hazard) என்ற சொல் பழமையான பிரெஞ்சு சொல்லான ஹார்ட் என்பதில் இருந்து வந்தது.
- ஹார்ட் என்ற சொல்லின் பொருள் ஒரு பகடை விளையாட்டு.
- தேசிய நீரியியல் நிறுவனம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
- 1945ல் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டை விட 400 மடங்கு அதிகமான கதிர்வீச்சு செர்னோபில் அணு உலை விபத்திலிருந்து வெளிப்பட்டது.
- கண்டங்கள் அல்லது நாடுகள் போன்ற பெரிய நிலப்பகுதிகளைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் புவிப்படங்கள் சிறிய அளவை புவிப்படங்கள் ஆகும்.
- வரைபடங்களில் நிலப்பகுதியில் 1 கி.மீ. தூரத்தை குறிக்க பொதுவாக 1 செ.மீ அளவு பயன்படுத்தப்படுகிறது.
- பொதுவான மதிப்புள்ள வெவ்வேறு இடங்களை இணைத்து வரையப்படும் படங்கள் சம அளவுக்கோட்டுப் படங்கள் ஆகும்.
- ஆப்பிரிக்காவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இளம் மடிப்பு மலை அட்லஸ் மலை.
- அட்லஸ் மலையின் மிக உயர்ந்த சிகரம் டோப்கல்.
- ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்திற்கும் சவானா புல்வெளிக்கும் இடையில் அமைந்துள்ள பகுதி சாஹேல்.
- ஆப்பிரிக்காவின் நைல் நதி எகிப்தின் வாழ்வாதாரமாக விளங்குவதால் எகிப்தின் நன்கொடை என்று அழைக்கப்படுகிறது.
- ஆப்பிரிக்காவின் முக்கிய பணப்பயிர் பருத்தி.
- உலகின் மிகப்பெரிய ஒற்றை சிற்ப பாறையான உலுரு பாறை (Uluru Rock) ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது.
- ஆஸ்திரேலியாவின் மிக உயரமான மலைத்தொடர் ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலைத் தொடர்.
- ஆஸ்திரேலியாவில் உள்ள செம்மறி ஆட்டு பண்ணைகளில் பணிபுரியும் மக்கள் ஜாகருஸ் என அழைக்கப்படுகிறார்கள்.
- ஆஸ்திரேலியாவின் பணப்பயிர் என அழைக்கப்படுவது ஆட்டு உரோமம்.
- அண்டார்டிகாவில் உள்ள மிக உயர்ந்த சிகரம் வின்சன் மாஸிப் (5140 மீட்டர்).
- பென்குயின் பறவைகள் நீந்துவதற்குப் பயன்படும் உறுப்பு பிலிப்பர் (Flipper).
- அண்டார்டிகாவில் அமெரிக்க ஐக்கிய நாடுகளால் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஆராய்ச்சி நிலையம் மெக்முர்டோ.
- பொருளாதார நடவடிக்கைகளில் நான்காம் நிலை செயல்பாட்டிற்கு உதாரணம் தகவல் நுட்பத் தொழிலகங்கள் (ஆராய்ச்சி மற்றும் பயிற்சி).
- மின்னணு வங்கியை வேறு எவ்வாறு அழைக்கலாம்? தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT).
- பணத்தின் அக மதிப்பு என்பது உள் நாட்டிலுள்ள பண்ட மற்றும் பணிகளின் வாங்கும் சக்தியைக் குறிக்கும்.
- பணம் என்பது வேறுபட்ட துறைகளில் ஒன்றல்ல, மூன்று பணிகளை குறிப்பிடுகிறது என கூறியவர் ஸ்டோவ்ஸ்கி.
- இந்தியாவின் செல்வங்களை பிரிட்டனுக்கு கொண்டு செல்வதுமே மக்களின் வறுமைக்குக் காரணம் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டவர் தாதாபாய் நௌரோஜி.
- கி.மு. 2000ஆம் ஆண்டுகள் பழமையான எகிப்திய கல்லறைகளில் உள்ள மம்மிகள் மஸ்லின் ஆடைகளைக் கொண்டு சுற்றப்பட்டிருந்தன.
- புனித ஜார்ஜ் கோட்டை வெள்ளை நகரம் என்ற குடியிருப்பின் பெயர்.
- 'வேதம்' என்ற சமஸ்கிருத சொல் வித் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.
- வித் என்ற சொல்லின் பொருள் அறிதல்.
- இடைக்காலத்தில் ஸ்ரீரங்கத்தில் கல்விக்காக நிறுவப்பட்ட மடம் அஹோபில மடம்.
- வட்டார மொழிக் கல்வியினை தீவிரமாக முன்மொழிந்தவர் மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டன்.
- கல்வியின் மூன்றாம் கட்டம் அகில இந்தியக் கல்விக் கொள்கையின் காலம் என அழைக்கப்படுகிறது.
- பாண்டியர்களின் காலத்தில் கல்வி நிலையங்கள் வித்யாசாதனம் என அழைக்கப்பட்டன.
- இராஜாராஜ சோழன் காலத்தில் புகழ்பெற்ற வேதக் கல்லூரிக்கு இருப்பிடமாக இருந்தது சதுர்வேதி மங்கலம்.
- சார்லஸ் வுட் கல்வி அறிக்கை 1854 ஆம் ஆண்டில் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது.
- 1916 இல் டெல்லியில் தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரி லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி.
- பெண்சிசுக்கொலை நடைமுறையை தடை செய்த வங்காள ஒழுங்காற்றுச் சட்டம் 1795 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- 1846 ஆம் ஆண்டில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 10 வயது.
- தென்னிந்தியாவில் மகளிர் விடுதலைக்காகப் போராடிய ஆரம்பகால போராளி கந்துகூரி வீரேசலிங்கம்.
- புதிதாக தொடங்கப்பட்ட 'மஹிளா சமக்யா' எனும் திட்டம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
- ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் தான் "கற்றல் படைப்பாற்றலை ஏற்படுத்தும், படைப்பாற்றல் சிந்தனையைத் தூண்டும்..." என்று கூறினார்.
- சந்தால் மக்கள் பீகாரில் ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகில் உள்ள பகுதிகளில் வேளாண்மை செய்து வந்தனர்.
- சந்தால் கலகத்தில் 10,000 வீரர்களை ஒன்றுகூட்டிய தலைவர்கள் சித்து மற்றும் கங்கு.
- வங்காள அவுரி சாகுபடியாளர்களின் வேலை நிறுத்தம் தீவிர விவசாய புரட்சியாக மாறியது.
- 1890-1900 காலகட்டத்தில் நகர்ப்புற வட்டிக்காரர்களின் ஒடுக்குமுறைகளைத் தடுக்கப் புரட்சியில் ஈடுபட்டவர்கள் பஞ்சாப் விவசாயிகள்.
- சம்பரான் சத்தியாகிரகத்தில் விவசாயிகளின் பிரச்சினையை அறிய அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவில் இடம்பெற்றவர் மகாத்மா காந்தி.
- வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தையின் பெயர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன்.
- மருது சகோதரர்களின் பெற்றோர் பொன்னாத்தாள் மற்றும் மூக்கைய்யா பழனியப்பன்.
- தீரன் சின்னமலை பிறந்த இடம் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையம்.
- வேலூர் கலகத்தின் போது சென்னை மாகாண படைத்தளபதியாக இருந்தவர் சர் ஜான் கிரடாக்.
- வேலூர் கலகத்தில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு முதல் பலியான படைத்தளபதி கர்னல் பான்கோர்ட்.
- ஊழல் தடுப்புச் சட்டம் 1988 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
- தனியார் துறை தொழில்கள் மற்றும் மாநிலம் தன் முழுப் பொறுப்பில் தொடங்கும் புதிய அலகுகள் அட்டவணை - B இன் கீழ் வருகின்றன.
- நமது இந்தியாவில் 29 மாநில அரசாங்கங்கள் செயல்படுகின்றன.
- ஒரு மாநிலத்தின் ஆளுநரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் மாநில அரசாங்கத்திற்கு இல்லை.
- சட்டமன்ற கூட்டத்திற்குத் தலைமை ஏற்பவர் சபாநாயகர்.
- ஒரு மாநிலத்தின் சட்டமன்ற மற்றும் அமைச்சரவை எங்கு செயல்படுகிறதோ அதுவே அம்மாநிலத்தின் தலைநகரமாக கருதப்படும்.
- அரசியலமைப்பின்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு உயர் நீதிமன்றம் இருக்கும்.


0 Comments