TNPSC TRB TET 8 ஆம் வகுப்பு சமூக அறிவியல் 100 வினா விடை | 8th Social Science Part-9
ஐரோப்பிய வருகை மற்றும் குடியேற்றங்கள்
- கெல்டிரியா கோட்டை: டச்சுக்காரர்கள் 1613ல் பழவேற்காட்டில் கட்டிய கோட்டையின் பெயர்.
- டச்சு தலைநகர் மாற்றம்: ஆரம்பத்தில் பழவேற்காடாக இருந்த டச்சுக்காரர்களின் தலைநகரம், 1690ல் நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது.
- இரண்டாம் சார்லஸ் திருமணம்: இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ், பம்பாய் தீவை சீதனமாகப் பெற போர்ச்சுக்கீசிய இளவரசி காதரினைத் திருமணம் செய்து கொண்டார்.
- டேனிய குடியேற்றங்கள்: டேனியர்கள் 1620ல் தரங்கம்பாடியிலும், 1676ல் செராம்பூரிலும் குடியேற்றங்களை நிறுவினர்.
- சீகன்பால்குவின் இந்திய வருகை: டென்மார்க் அரசர் சீகன்பால்கு என்பவரை இந்தியாவிற்கு அனுப்பினார்.
- பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம்: மன்னர் பதினான்காம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- பிரெஞ்சு குழுவின் பயணம்: பிரான்காய்ஸ் கரோன் தலைமையின் கீழ் பிரெஞ்சு குழு 1667ல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டது.
- கடைசி ஐரோப்பிய நாடு: இந்தியாவுக்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகளுள் கடைசியானது பிரான்சு ஆகும்.
- பிரெஞ்சு வணிக மையங்கள்: முதலாவதாக சூரத்திலும், இரண்டாவதாக மசூலிப்பட்டினத்திலும் நிறுவப்பட்டன.
- செயின்ட் லூயிஸ் கோட்டை: பாண்டிச்சேரியில் 'செயின்ட் லூயிஸ் கோட்டை' எனப்படும் கட்டடத்தை கட்டியவர் பிரான்காய்ஸ்மாட்டின்.
- சுவீடன் கிழக்கிந்திய கம்பெனி: ஜோதன்பர்க் என்பவரால் 1731ல் நிறுவப்பட்டது.
- பிளாசிப் போர் தளபதி: பிளாசிப் போரில் (1757) சிராஜ்-உத்-தௌலாவின் படைகளை தோற்கடித்த ஆங்கிலேயப் படைத்தளபதி இராபர்ட் கிளைவ்.
- பக்சார் போர் தளபதி: பக்சார் போரில் (1764) கூட்டணப் படைகளைத் தோற்கடித்த ஆங்கிலப்படைத் தளபதி ஹெக்டர் மன்றோ.
- பக்சார் போர் உடன்படிக்கை: பக்சார் போர் அலகாபாத் உடன்படிக்கையின் படி (பிப்ரவரி 20, 1765) முடிவுக்கு வந்தது.
- முதல் கர்நாடகப் போர்: அய்-லா-சப்பேல் உடன்படிக்கை மூலம் 1748ல் முடிவுக்கு வந்தது.
- இரண்டாம் கர்நாடகப் போர் (ஆம்பூர் போர்): 1749ல் நடந்த ஆம்பூர் போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டவர் கர்நாடக நவாப் அன்வாருதீன்.
- ஐதராபாத் நிசாம் மாற்றம்: தக்காணத்தில் நாசிர் ஜங் கொல்லப்பட்ட பிறகு ஐதராபாத்தின் நிசாம் ஆனவர் முசாபர் ஜங்.
- பிரெஞ்சு ஆதரவு கர்நாடக நவாப்: இரண்டாம் கர்நாடகப் போரின் போது பிரெஞ்சுக்காரர்கள் சந்தாசாகிப்பை கர்நாடக நவாப் ஆக்கினர்.
- வந்தவாசிப் போர் தளபதி: வந்தவாசிப் போரில் (1760 ஜனவரி 22) பிரெஞ்சு படையை தோற்கடித்த ஆங்கிலப்படைத் தளபதி ஜெனரல் அயர் கூட்.
- முதல் ஆங்கிலேய மைசூர் போர்: ஹைதராபாத் நிசாமிற்கு உதவிய தளபதி ஜோசப் ஸ்மித்.
- இரண்டாம் ஆங்கில மைசூர் போர்: சர் அயர்கூட், ஹைதர் அலியை 1781ல் பரங்கிப்பேட்டையில் தோற்கடித்தார்.
- சூரத் ஒப்பந்தம்: 1775ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும் ரகுநாதராவுக்கும் இடையே கையெழுத்தானது.
- புரந்தர் ஒப்பந்தம்: 1776ஆம் ஆண்டு பூனாவின் பாதுகாப்பரசுடன் புரந்தர் ஒப்பந்தத்தை செய்துகொண்டவர் கர்னல் அப்டன்.
- சால்பை ஒப்பந்தம்: சால்பை ஒப்பந்தம் (1782) வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாதாஜி சிந்தியாவுக்கிடையே கையெழுத்தானது.
- முதல் ஆங்கிலேய மராத்தியப் போரின் முடிவில் பேஷ்வா: இரண்டாம் மாதவராவ்.
- இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர்: ஆர்தர் வெல்லஸ்லி தலைமையில் ஆங்கிலேய இராணுவம் போரிட்டது.
- மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போர்: இந்தூரின் ஆட்சியாளர் மூன்றாம் மல்ஹர் ராவ் ஹோல்கர் இதில் ஈடுபட்டார்.
- போட்டித் தேர்வு அதிகபட்ச வயது: 1860ல் அதிகபட்ச வயது 23லிருந்து 22 ஆகக் குறைக்கப்பட்டது.
- இந்திய அரசுச் சட்டம் (1935): கூட்டாட்சி மற்றும் மாகாண அரசுப் பணியாளர் தேர்வாணையங்களை உருவாக்க வழிவகை செய்தது.
- காவல் துறையின் நிறுவனர்: இந்தியாவில் முதன்முதலில் காவல் துறையை உருவாக்கியவர் காரன்வாலிஸ் பிரபு.
- தரோகா முறை: காவல் பகுதிகளை (தானாக்கள்) நிர்வகித்த தரோகாக்கள் என்ற முறை காரன்வாலிஸ் பிரபுவால் ஏற்படுத்தப்பட்டது.
- கிராம காவலர்கள்: கிராமத்தை பரம்பரையாக நிர்வகித்து வந்த காவலர்கள் சௌகிதார்கள் என அழைக்கப்பட்டனர்.
- இரட்டை ஆட்சி முறை ஒழிப்பு: இந்தியாவில் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு நீதி வழங்கும் அதிகாரத்தை கம்பெனி ஏற்ற ஆண்டு 1772.
- நீதிமன்றங்களின் பெயர்கள்: சிவில் நீதிமன்றம் திவானி அதாலத் என்றும், குற்றவியல் நீதிமன்றம் பௌஜ்தாரி அதாலத் என்றும் அழைக்கப்பட்டன.
- உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி: வங்காளத்தின் வில்லியம் கோட்டையில் அமைக்கப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி சர் எலிஜா இம்பே.
- மதராஸ் உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி: சர் திருவாரூர் முத்துசாமி.
- துணைப்படைத் திட்டம்: சுதேச அரசுகளை ஆங்கிலேய கட்டுப்பாட்டில் கொண்டுவர துணைப்படைத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் வெல்லெஸ்லி பிரபு.
- பேரரசுப் பெயர் மாற்றம்: "இந்தியாவில் ஆங்கிலேய பேரரசு" என்பதை "இந்தியாவின் ஆங்கிலேய பேரரசு" என மாற்றியவர் வெல்லெஸ்லி பிரபு.
- வாரிசு இழப்புக் கொள்கை: வாரிசு இழப்புக் கொள்கையை (1848) கொண்டு வந்து சுதேச அரசுகளை இணைத்தவர் டல்ஹௌசி பிரபு.
- ஓராண்டு திட்டம் மாற்றம்: ஓராண்டு நில வருவாய் திட்டத்தை ஐந்தாண்டு திட்டமாக மாற்றியவர் வாரன் ஹேஸ்டிங்ஸ்.
- நிலையான நிலவருவாய் திட்டம்: நிலையான நிலவருவாய் திட்டத்தை (1793) பத்தாண்டு திட்டமாக கொண்டு வந்தவர் காரன்வாலிஸ் பிரபு.
- இரயத்துவாரி முறை: தாமஸ் மன்றோ மற்றும் கேப்டன் ரீட் 1820ல் அறிமுகப்படுத்தினர்.
- இரயத்துவாரி நிலவருவாய் குறைப்பு: விளைச்சலில் பாதியாக இருந்த இரயத்துவாரி நிலவருவாயை மூன்றில் ஒரு பங்காக குறைத்தவர் தாமஸ் மன்றோ.
- மகல்வாரி முறை: மகல்வாரி முறை ஹோல்ட் மெகன்சி சிந்தனையில் உதித்த திட்டமாகும்.
- மகல்வாரி முறையில் வருவாய் வசூல்: கிராமத் தலைவர் நிலவருவாயை வசூல் செய்து அரசுக்கு செலுத்த நியமிக்கப்பட்டிருந்தார்.
- சந்தால் கலகம் (1855-56): பீகாரில் ராஜ்மகால் குன்றுகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தொடங்கியது.
- சந்தால் கலகத் தலைவர்கள்: சித்து மற்றும் கங்கு (10,000 வீரர்களை ஒன்றுகூட்டி வழிநடத்தினர்).
- இண்டிகோ கலகத் தலைவர்கள்: நாதியா மாவட்டத்தில் புரட்சியை நடத்தியவர்கள் திசம்பர் பிஸ்வாஸ் மற்றும் பிஸ்னு சரண் பிஸ்வாஸ்.
- 'நீல் தர்பன்' நாடகம்: வங்காள அவுரி சாகுபடியாளர்களின் துயரங்களை விளக்கும் நாடகத்தை எழுதியவர் தீனபந்து மித்ரா.
- பாப்னா விவசாய எழுச்சி: யூசுப்சாகி பர்கானாவில் ஆரம்பித்தவர் கேசப் சந்திரா ராய்.
- தக்காண கலகம்: 1875ஆம் ஆண்டு பூனா மாவட்டத்தில் நடைபெற்றது.
- தக்காண விவசாயிகள் குறைகள் சட்டம்: தக்காண விவசாயிகள் மீட்பு சட்டம்.
- நகர்ப்புற வட்டிக்காரர்களுக்கு எதிரான புரட்சி: 1890-1900ல் பஞ்சாப் விவசாயிகள் ஈடுபட்டனர்.
- சம்பரான் விவசாயச் சட்டம்: மே 1918ல் நிறைவேற்றப்பட்டது.
- கேடா வரிகொடா இயக்கம்: குஜராத்தின் கேடா மாவட்டத்தில் 1918ல் விவசாயிகள் தொடங்கினர்.
- பர்தோலி சத்தியாகிரகம் (1928): சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையில் நடைபெற்றது.
- பாளையக்காரர் முறை: விஸ்வநாதர் அமைச்சர் அரியநாதருடன் கலந்தாலோசித்து 1529ல் ஏற்படுத்தினார்.
- பாளையக்காரர்கள் வரிப் பங்கீடு: வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கு மதுரை நாயக்கர்களுக்கும், அடுத்த ஒரு பங்கு இராணுவ செலவிற்கும் ஒதுக்கப்பட்டது.
- கிழக்கு பாளையங்கள்: நாயக்கர்கள் கட்டபொம்மனின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்.
- மேற்கு பாளையங்கள்: மறவர்கள் பூலித்தேவரின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி செய்தனர்.
- ஆங்கிலேயரைத் தோற்கடித்த முதல் இந்திய மன்னர்: பூலித்தேவர்.
- கட்டபொம்மன் பொறுப்பேற்றது: வீரபாண்டிய கட்டபொம்மன் ஜெகவீரபாண்டியனுக்குப் பின் பாஞ்சாலங்குறிச்சியின் பாளையக்காரராகப் பொறுப்பேற்றார்.
- கட்டபொம்மனின் சகோதரர்கள்: ஊமைத்துரை மற்றும் செவத்தையா.
- கட்டபொம்மன் - காலின் ஜாக்சன் சந்திப்பு: 1798ல் இராமநாதபுர கலெக்டர் காலின் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்தார்.
- திருச்சிராப்பள்ளி அறிக்கை: சிவகங்கையின் மருது பாண்டியர் தென்னிந்திய கிளர்ச்சியாளர்களை ஒன்றிணைத்து வெளியிட்ட அறிக்கை.
- சிவசுப்பிரமணியம் கைது: கட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்பிரமணியம் கள்ளர்பட்டியில் நடந்த சண்டையில் கைது செய்யப்பட்டார்.
- கட்டபொம்மனைக் கைது செய்தவர்: களப்பூர் காடுகளில் மறைந்திருந்த கட்டபொம்மனை கைது செய்து ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தவர் புதுக்கோட்டை ராஜா விஜயரகுநாத தொண்டைமான்.
- சிவசுப்பிரமணியம் சிரச்சேதம்: நாகலாபுரத்தில் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
- கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள்: வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறு கோட்டையில் அக்டோபர் 17, 1799 அன்று தூக்கிலிடப்பட்டார்.
- வேலுநாச்சியார் திருமணம்: 16 ஆம் வயதில் சிவகங்கையின் இராஜா முத்து வடுகநாதருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
- முத்துவடுக நாதர் கொலை: 1772ல் காளையார் கோவில் போரில் ஆற்காடு நவாப் மற்றும் பிரிட்டிஷ் படைகளால் கொல்லப்பட்டார்.
- வேலுநாச்சியார் அடைக்கலம்: கோபால நாயக்கர் பாதுகாப்பில் விருப்பாச்சியில் வாழ்ந்து வந்தார்.
- குயிலியின் தற்கொலைத் தாக்குதல்: வேலுநாச்சியாரின் தொண்டரும் படைத்தளபதியுமான குயிலி ஒரு தற்கொலை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தார்.
- வேலுநாச்சியாரின் பட்டங்கள்: 'வீரமங்கை' எனவும் 'தென்னிந்தியாவின் ஜான்சி ராணி' எனவும் அறியப்படுபவர்.
- 'சிவகங்கை சிங்கம்': மருது சகோதரர்களில் சின்ன மருது (மருது பாண்டியன்) 'சிவகங்கை சிங்கம்' என அழைக்கப்பட்டார்.
- மருது சகோதரர்கள் தூக்கு: திருப்பத்தூர் கோட்டையில் 1801 அக்டோபர் 24ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர்.
- ஊமைத்துரை மற்றும் செவத்தையா தூக்கு: பாஞ்சாலங்குறிச்சியில் 1801 நவம்பர் 16ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர்.
- தமிழ்நாட்டில் ஆங்கிலேயர் நேரடிக் கட்டுப்பாடு: கர்நாடக உடன்படிக்கை (1801 ஜூலை 31) மூலம் கிடைத்தது.
- தீரன் சின்னமலையின் இயற்பெயர்: தீர்த்தகிரி.
- தீரன் சின்னமலையைக் காட்டிக் கொடுத்தவர்: நல்லப்பன் (சமையற்காரர்).
- தீரன் சின்னமலை தூக்கு: 1805ல் சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
- சென்னை மாகாண கவர்னர்: 1803ல் பதவியேற்றவர் வில்லியம் காவெண்டிஷ் பெண்டிங்.
- கலகத்திற்கான உடனடி காரணம்: அக்னியூ அறிமுகப்படுத்திய புதிய தலைப்பாகை.
- கலகத்தைத் தொடங்கிய படைப்பிரிவுகள்: ஜூலை 10 விடியற்காலை முதலாவது மற்றும் 23 வது படைப்பிரிவுகள்.
- கிளர்ச்சியாளர்கள் அறிவித்த புதிய ஆட்சியாளர்: திப்புவின் மூத்த மகன் பதே ஹைதர்.
- வேலூர் கலகம் (1857-ன் முன்னோடி): வி.டி. சவார்க்கர் குறிப்பிட்டது.
- புரட்சிக்கு உடனடிக்காரணம்: எல்பீல்டுரக துப்பாக்கி (கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்).
- மங்கள் பண்டே: 1857 மார்ச் 29ல் பாரக்பூரில் தனது உயரதிகாரியைச் சுட்டுக் கொன்ற இளம் சிப்பாய்.
- பேரரசராக அறிவிக்கப்பட்டவர்: மீரட் சிப்பாய்கள் 1857 மே 11 ஆம் நாள் டெல்லியில் இரண்டாம் பகதூர்ஷாவை பேரரசராக அறிவித்தனர்.
- மத்திய இந்தியாவின் புரட்சித் தலைவர்: ஜான்சி இராணி இலட்சுமிபாய்.
- ஜான்சியை ஆக்கிரமித்த தளபதி: சர் ஹக்ரோஸ்.
- குவாலியர் படைத் தலைவர்: தாந்தியா தோபே.
- டெல்லியை மீண்டும் கைப்பற்றியவர்: செப்டம்பர் 20, 1857ல் நிக்கல்சன்.
- இரண்டாம் பகதூர்ஷா மரணம்: நாடு கடத்தப்பட்டு 1862ல் ரங்கூனில் இறந்தார்.
- இந்திய நிர்வாக மாற்றம்: 1858ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் மூலம் ஆங்கில அரசுக்கு மாற்றப்பட்டது.
- வேதம் என்பதன் பொருள்: அறிவு.
- அர்த்தசாஸ்திரம்: சாணக்கியர் தனது அர்த்தசாஸ்திரத்தை தட்சசீல பல்கலைக்கழத்தில் தங்கியிருந்து தொகுத்தார்.
- இடைக்கால முஸ்லீம் தொடக்கப் பள்ளி: மக்தப்.
- டெல்லியில் மதரசாவை நிறுவிய முதல் இஸ்லாமிய ஆட்சியாளர்: இல்துத்மிஷ்.
- தரங்கம்பாடியில் இலவசப் பள்ளிகள்: டாக்டர். C.S. ஜான் 1812 ஆம் ஆண்டு 20 இலவச பள்ளிகளை நிறுவினார்.


0 Comments