பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - 9 பேர் மாநிலத்தில் முதலிடம்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 27ம் தேதி தொங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்த்து, மொத்தம் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினர். அவர்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவியர். மொத்தம் 3012 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 
            
500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று  9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.

  1. எஸ்.அனுஷா - கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறை 
  2. தீப்தி - புஸ்கோ மெட்ரிக் பள்ளி, அண்ணாநகர், மதுரை 
  3. எம்.காயத்ரி - மவுன்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி 
  4. டி.மார்ஷியா ஷெரின் - மவுன்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி 
  5. கே.ஆர்.பொன்சிவசங்கரி - இ.எச்.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு 
  6. சி.எஸ்.சாருமதி - சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர் 
  7. பி.சோனியா - எஸ்.ஜே.எஸ்.ஜே.யு.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி 
  8. ஆர்.ஸ்ரீதுர்கா - வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் 
  9. எஸ்.வினுஷா - ஆக்சிலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர் 
500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று  52 பேர் மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.

500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று  137 பேர் மாநிலத்தில் மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு | 100க்கு 100

மே 31ம் தேதி வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், அதிகளவிலான மாணவர்கள் முழு மதிப்பெண்கள்(100/100) பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு;

* அறிவியல் - 38,154 பேர்

* கணிதம் - 29,905 பேர்

* சமூக அறிவியல் - 19,680 பேர்

* ஆங்கிலம் - 17 பேர்

* தமிழ் - இல்லை


கடந்த 2012ம் ஆண்டில் 100/100 பெற்றோர் எண்ணிக்கை

* கணிதம் - 1,141 பேர்

* அறிவியல் - 9,237 பேர்

* சமூக அறிவியல் - 5,305 பேர்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு | மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், தனி ‌தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.
 
பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், ஜூன் மற்றும் ஜூலையில் நடக்கும் உடனடித் தேர்வில் பங்கேற்கலாம். www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும், தேர்வு கட்டணத்தை எஸ்.பி.ஐ., வங்கியின் ஏதாவது ஒரு கிளையில் வரும் 6ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

மார்ச் தேர்வை, தனித்தேர்வாக எழுதி, மீண்டும் தோல்வி அடைந்‌த தேர்வர்கள், விண்ணப்பத்தை, தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் ஜூன்10ம் தேதிக்குள் நேரில் சமர்பிக்க வேண்டும். உடனடித் தேர்வுகள் ஜூன் 24ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை நடக்கும்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - ஒட்டுமொத்த தேர்ச்சி 89%

1. இந்த 2013ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, பள்ளிகள் மூலமாக, மொத்தம் 10 லட்சத்து 51 ஆயிரத்து 62 பேர் எழுதினர். அவர்களில், மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 794. மாணவிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 268 பேர்.

2. இவர்களில், ஒட்டுமொத்த அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 215 பேர். அதன் தேர்ச்சி விகிதம் 89%.

3. மாணவர்களில், 4 லட்சத்து 57 ஆயிரத்து 250 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி விகிதம் 86%.

4. மாணவிகளில், 4 லட்சத்து 77 ஆயிரத்து 965 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி விகிதம் 92%.

5. இவற்றில் 60%க்கும் மேலாக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 522 பேர்.

6. கடந்தாண்டு(2012) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில், 86.20% அளவே தேர்ச்சி விகிதம் இருந்தது.

ஜுன்/ஜுலை 2013-ல் நடைபெறவுள்ள இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நடைபெறவுள்ள ஜுன்/ஜுலை, 2013 இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்திற்குச் சென்று, அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:

1. மார்ச் 2013, இடைநிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.

2. மார்ச் 2013, இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.


அறிவியல் பாட செய்முறைத் தேர்வு :

மார்ச் 2013, இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்விற்கு அறிவியல் பாடம் தவிர இதர பாடங்களில் தேர்வெழுத நீதிமன்ற /மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து கொள்ள உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொண்டு செய்முறைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவர்கள், ஜுன் 2013 உடனடித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

மார்ச் 2013 இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்து பாடத்திற்கும் ரு.125/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
 
ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட State Bank of India Challan மூலமே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் .  பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுக் கட்டணத் தொகையினை செலுத்தலாம்.

முக்கிய குறிப்பு : 

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும், தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ அல்லது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை ஒளிநகல் (Photocopy)  எடுத்து  தனித்தேர்வர்கள் தங்கள்வசம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதிகள்:

தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 03.06.2013 (திங்கட் கிழமை) முதல் 05.06.2013 (புதன்கிழமை) நண்பகல் 12 மணிவரை தங்கள் விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்த விண்ணப்பத்தினையும், தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான ளுக்ஷஐ சலானையும் 05.06.2013 நண்பகல் 12 மணிவரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 

தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் செலுத்த வேண்டிய இறுதி தேதி  06.06.2013 (வியாழக் கிழமை) . செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும்.

ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல் :

அ) பள்ளி மாணாக்கர் உடனடித் தேர்விற்கான Confirmation Copy  எனக் குறிப்பிட்ட ஆன்லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக்கட்டணம் செலுத்திய SBI சலான் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் விவரப்பட்டியல் ஆகியவற்றை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 06.06.2013-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆ) மார்ச் 2013, இடைநிலைத் தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் உடனடித் தேர்விற்கான Confirmation Copy  எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக்கட்டணம் செலுத்திய SBI சலான் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் விவரப்பட்டியல் ஆகியவற்றை இணைத்து அவர்தம் வருவாய் மாவட்டத்திற்குரிய அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக மட்டுமே 10.06.2013-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

ஜுன் / ஜூலை 2013 சிறப்பு துணைத் தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதம் விவரம். முதலிடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் .


PLACEDISTRICTAPPEAREDPASSEDNO OF SCHOOLSPERCENTAGE
1கன்னியாகுமரி277252697438497.29%
3தூத்துக்குடி244502333027395.42%
2ஈரோடு310402960132995.36%
4திருச்சி 389263703639195.14%
5விருதுநகர் 278912651932595.08%
6சென்னை 584915533859194.61%
7கோவை 458594316449694.12%
8மதுரை 447654182843893.44%
9நாமக்கல் 264182462729093.22%
10திருப்பூர் 290232701129593.07%
11திருநெல்வேலி 449184171343892.86%
12சிவகங்கை 208441932725392.72%
13கரூர் 140031270417690.72%
14பெரம்பலூர் 9275838312190.38%
15ராமநாதபுரம் 195781767522590.28%
16தேனி 192181726418189.83%
17உதகை 10749965417389.81%
18சேலம் 496104411646488.93%
19தஞ்சாவூர் 381813389538988.77%
20கிருஷ்ணகிரி 280702487634888.62%
21திண்டுக்கல் 307052719030888.55%
22காஞ்சிபுரம் 550454781356286.86%
23திருவள்ளூர் 512824453957586.85%
24புதுக்கோட்டை 236312026128685.74%
25தர்மபுரி 253332166327985.51%
26திருவாரூர் 192861603519783.14%
27வேலூர் 571714750155983.09%
28அரியலூர் 11841975814982.41%
29விழுப்புரம் 480813942451881.99%
30நாகப்பட்டிணம் 263252093525879.53%
31திருவண்ணாமலை 345072722544178.90%
32கடலூர் 402203026437275.25%

KALVISOLAI | SSLC RESULT 2013

பிளஸ் டூ விடைத்தாள் நகலை http://examsonline.co.in/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியானது. தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கப் பெறாத 75 ஆயிரம் மாணவர்கள் பல்வேறு பாடங்களின் விடைத்தாள் நகல்கள் கோரி விண்ணப்பித்தனர். அவர்களின் விடைத்தாள்கள் ஸ்கேன் எடுக்கப்பட்டு வருகின்றன. விடைத்தாள் நகல் கோரியவர்கள், விடைத்தாளை ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இந்த நகலை பதிவிறக்கம் செய்ய http://examsonline.co.in/ என்ற இணையதள முகவரிக்குச் சென்று கீழ்க்காணும் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

1. விடைத்தாள் நகல் கோரி ஆன்-லைனில் விண்ணப்பித்த பத்து இலக்க விண்ணப்ப எண் அல்லது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க எண்.
2. பதிவெண் 
3. பிறந்த தேதி
4. மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்டுள்ள டிஎம்ஆர் கோட் விவரம்

மறுகூட்டலுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு, அந்தப் பாடத்தில் மறுமதிப்பீட்டுக்கோ அல்லது மறுகூட்டலுக்கோ விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் http://examsonline.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று, அங்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
                     ஆன்-லைனில் விண்ணப்பித்த பிறகு பதிவிறக்கம் செய்யப்படும் ஸ்டேட் ஆஃப் இந்தியா சலானில் குறிப்பிட்டுள்ள தொகையை எஸ்.பி.ஐ. வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் செலுத்த வேண்டும்.                 

SSLC RESULT | பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 31.5.13 காலை, 9.15 மணிக்கு.


Procedure for obtaining SSLC results by SMS reg. Students can get their SSLC results by SMS also. To get results they have to send SMS in the following format to the mobile no. 09282232585 as follows :
TNBOARD<space><Registration No>,<DOB in DD/MM/YYYY>

 For Eg. Send SMS text as  

TNBOARD 1256787,25/10/1995

to the mobile number 09282232585, where 1256787 is the Registraton No, and Date of Birth is 25/10/1995. 


 SMS facility will be available only from 9.15 AM on 31st May 2013. Therefore Students are advised not to send any SMS earlier.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.


முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை வாங்கலாம்.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) பணி இடங்கள் போட்டித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை மாதம் 21–ந் தேதி நடத்த இருக்கிறது.

அதிகபட்சமாக தமிழ் பாடத்தில் 605 பணி இடங்களும், ஆங்கிலத்தில் 347, வணிகவியலில் 300, கணிதத்தில் 288, பொருளாதாரத்தில் 257, வரலாறு பாடத்தில் 179 இடங்களும் இடம்பெற்றுள்ளன. இதற்காக 2½ லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டு 2 வாரங்களுக்கு முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் விற்பனை செய்யப்படுகின்றன. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வு கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.250 மட்டும். உரிய தேர்வு கட்டணத்தை விண்ணப்ப படிவத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் செலான் படிவத்தை பயன்படுத்தி பாரத ஸ்டேட் வங்கியிலோ அல்லது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிலோ செலுத்தலாம்.

விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 14–ந் தேதி வரை வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஜூன் 14–ந் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்களை சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பக்கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எழுத்து தேர்வில் ‘ஆப்ஜெக்டிவ்’ (கொள்குறி வகை) முறையில் 150 கேள்விகள் கேட்கப்படும். இதில், சம்பந்தப்பட்ட பாடத்தில் இருந்து 110 வினாக்களும், கல்வியியல் முறை பகுதியில் இருந்து 30 வினாக்களும், பொது அறிவில் இருந்து 10 வினாக்களும் இடம்பெற்று இருக்கும். எழுத்து தேர்வு நீங்கலாக, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு (சீனியாரிட்டி) அதிகபட்சம் 4 மதிப்பெண்களும், ஆசிரியர் பணி அனுபவத்திற்கு (பிளஸ்–1, பிளஸ்–2–வில் சம்பந்தப்பட்ட பாடத்திற்கு வகுப்பு எடுத்த அனுபவம்) அதிகபட்சம் 3 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான விண்ணப்பங்கள் சென்னை மாவட்டத்தில் நந்தனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூன் 14–ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்குள் இதே பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும். சென்னை மாவட்டத்திற்கு தேவையான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.

10½ லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் எழுதியுள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.15 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மாணவ–மாணவிகளின் பள்ளிக்கல்வி வாழ்க்கையில் எஸ்.எஸ்.எல்.சி. என்று அழைக்கப்படும் 10–ம் வகுப்பு தேர்வும், பிளஸ்–2 பொதுத்தேர்வும் முக்கிய இடம் வகிக்கின்றன. 10–ம் வகுப்பு முடித்த கையோடு பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ. படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைக்கும்.

அதேபோல், பட்டப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்–2 மதிப்பெண் மிக முக்கியமான ஒன்றாகும். ஒரு மாணவர் கலை அறிவியல் படிப்பில் சேருவதையும், மருத்துவம், என்ஜினீயரிங், விவசாயம், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதையும் நிர்ணயிப்பது அவரது பிளஸ்–2 மதிப்பெண்தான். எனவே, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வுகளுக்கு மாணவ–மாணவிகளும் அதிலும் குறிப்பாக, அவர்களின் பெற்றோர்களும் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இந்த ஆண்டு பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1–ந் தேதி தொடங்கி, 27–ந் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள். அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27–ந் தேதி ஆரம்பித்து, ஏப்ரல் 12–ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 3,012 மையங்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 மாணவிகள் உள்பட 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினார்கள்.

மாணவ–மாணவிகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஏப்ரல் 13–ந் தேதி தொடங்கி, 26–ந் தேதி முடிந்தது. தமிழகம் முழுவதும் 66 மையங்களில் ஏறத்தாழ 30 ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, பிளஸ்–2 தேர்வு முடிவு மே மாதம் 9–ந் தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு மே 31–ந் தேதியும் வெளியிடப்படும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 27–ந் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, பிளஸ்–2 தேர்வு முடிவு கடந்த 9–ந் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 12–ம் வகுப்பு தேர்வு முடிவு 27–ந் தேதி வெளியானது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, 10–ம் வகுப்பு தேர்வு முடிவு நாளை (31–ந் தேதி) காலை 9.15 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம், கல்லூரிச்சாலை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வெளியிடப்படுகிறது. அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தேர்வு முடிவுகளையும், ரேங்க் பட்டியலையும் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அடுத்த சில நொடிகளில் ஆன்லைனில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகளை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் மாணவ–மாணவிகள் தெரிந்துகொள்ளலாம்.


பிளஸ்–2 தேர்வு முடிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்திலும் (நிக் சென்டர்), அனைத்து மாவட்ட மைய நூலகங்களிலும், கிளை நூலகங்களிலும் மாணவ–மாணவிகள் இலவசமாக தெரிந்துகொள்ள தேர்வுத்துறை ஏற்பாடு செய்து இருந்தது. எனவே, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவையும் அதேபோல் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆகஸ்டு மாதம் வழங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும், 600–க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2,012 பி.எட். இடங்களும், தனியார் கல்லூரிகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீட்டுகளும் உள்ளன.

அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரையில், 100 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் 50 சதவீத இடங்களும், உதவி பெறும் சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் 90 சதவீத இடங்களும் ஒற்றைச்சாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படுகின்றன. தனியார் கல்லூரிகளில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினரே அனைத்து இடங்களையும் நிரப்புகிறார்கள்.

நடப்பு கல்வி ஆண்டுக்கான பி.எட். மற்றும் எம்.எட். தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கின. பி.எட். தேர்வு ஜூன் மாதம் 11–ந் தேதியும், எம்.எட். தேர்வு ஜூன் 3–ந் தேதியும் முடிவடைகிறது. பொதுவாக பட்டப்படிப்புகள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

வரும் கல்வி ஆண்டில் (2013–2014) பி.எட். மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் எப்போது வழங்கப்படும்? என்று தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குனர் டி.செந்தமிழ்ச்செல்வியிடம் கேட்டபோது, ‘‘2013–2014–ம் கல்வி ஆண்டுக்கான பி.எட். மாணவர் சேர்க்கை வழிமுறைகள் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஆகஸ்டு மாதம் பி.எட். படிப்புக்கான விண்ணப்பங்களை வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

தனியார் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு இரண்டு விதமான கட்டணத்தை அரசு நிர்ணயித்து இருக்கிறது. தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளாக இருந்தால் ரூ.46,500–ம், நாக் அங்கீகாரம் பெறாத கல்லூரிகளாக இருப்பின் ரூ.41,500–ம் கட்டணம் வசூலிக்கலாம்.

சுயநிதி கல்லூரிகளில் அனைத்து பி.எட். இடங்களையும் நிர்வாகத்தினரே நிரப்பலாம் என்றாலும் ஒருசில கல்லூரி நிர்வாகங்கள் கவுன்சிலிங் மூலம் இடங்களை நிரப்பும் வகையில் அரசிடம் குறிப்பிட்ட சதவீத இடங்களை ஒப்படைக்க தயாராக உள்ளன.

கவுன்சிலிங் மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற்றால் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ–மாணவிகள் வருவார்கள் என்பது அவர்களின் எண்ணம். ஆனால், கவுன்சிலிங்கிற்கு தாமாகவே முன்வந்து இடங்களை கொடுக்க தனியார் கல்லூரிகள் முன்வந்தால்கூட அரசு அதற்கு தயாராக இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதுபோன்று தாமாகவே முன்வந்து கவுன்சிலிங்கிற்கு இடங்களை ஒப்படைக்க விரும்பும் தனியார் கல்லூரிகளிடம் கல்லூரி கல்வித்துறை இடங்களை பெற்று கவுன்சிலிங் மூலம் நிரப்ப முன்வர வேண்டும் என்று ஒருசில கல்லூரி நிர்வாகத்தினர் எதிர்பார்க்கிறார்கள்.

அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு பெற விரும்புவோர் விண்ணப்பங்களை 5.6.2013 மாலை 5.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்களிலும் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளில் 25%    இட ஒதுக்கீடு அறிமுக வகுப்புகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இவ்விடங்கள் பல பள்ளிகளில் பூர்த்தி அடையாத நிலையில் உள்ளது. இத்தகைய பள்ளிகளில் விண்ணப்பம் செய்ய விரும்புவோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க விரும்பினால் இதற்கென உரிய விண்ணப்பத்தில் தக்க சான்றுகளுடன் முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இவ்விரு அலுவலகங்களிலும் 31.5.2013 முதல் 5.6.2013 வரை இலவசமாக வழங்கப்படுகின்றன. பெற்றோர்கள் இவ்விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்படுகிறது. இவ்வொக்கீட்டிற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர்கள் எஸ்ஸி / எஸ்.டி / பி.சி. / எம்.பிசி மற்றும் ஆதாரவற்றோர் , எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டோரின் பிள்ளைகள் / சுகாதாரமற்ற பணி செய்வோரின் பிள்ளைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் மற்றும் வருட வருமானம் ரூ.2,00,000-க்கு குறைவானோர் உரிய சான்றுகளுடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தால் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கு ஏற்ப சேர்க்கை பெற்று வழங்கப்படும். இவ்வொதுக்கீடு சிறுபான்மை பள்ளிகளுக்கு பொருந்தாது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து 5.6.2013 மாலை 5.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்களிலும் நேரில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைனில் 30.05.2013 காலை 10.00 மணி முதல் நடத்தப்பட உள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு  முதல் முறையாக ஆன்லைனில்  30.05.2013 காலை 10.00 மணி முதல்  நடத்தப்பட உள்ளது.

மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/இடைநிலை ஆசிரியர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதல் ஆணை பெற்ற முதுகலை/பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/இடைநிலை ஆசிரியர்கள்/உடற்கல்வி ஆசிரியர்கள்/சிறப்பாசிரியர்கள் அனைவரும் 03.06.2013 முதல் 07.06.2013க்குள் விடுவிக்கப்பட்டு மாறுதல் ஆணை பெறப்பட்ட பள்ளியில் 07.06.2013க்குள் பணியில் சேரவேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசாணை (1டி) எண்.129 பள்ளிக் கல்வித் (இ1) துறை நாள் 09.05.2013 அரசாணையின்படி 20.05.2013 முதல் 29.05.2013 வரை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாறுதல் ஆணை பெற்ற உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும் 31.05.2013 பிற்பகல் தாங்கள் பணிபுரியும் பள்ளியிலிருந்து பணி விடுவிப்பு பெற்று மாறுதல் ஆணை பெற்ற பள்ளியில் 31.05.2013 பிற்பகல் அல்லது 01.06.2013 அன்று பணியில் சேர்ந்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

2011-12ம் கல்வியாண்டிற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டு கலந்தாய்வு மூலம் பணிநியமன ஆணை பெற்றவர்கள் 3.6.2013 அன்று பணியில் சேர வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. தற்போது அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து 10.6.2013 அன்று திறக்கப்பட உள்ளதால் மேற்கண்டவாறு புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 10.6.2013 அன்று பணியில் சேர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

2013 - 14 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் தமிழக அரசு புதிய உத்தரவு.

2013 - 14 ஆம் கல்வியாண்டில் அரசு பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களுக்கு பெண் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இதே போல் ஆண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஆணாசிரியர் மற்றும் ஆண் தலைமை ஆசிரியர் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். இருபாலர் பயிலும் பள்ளிக்கு இருபால் ஆசிரியர்களுக்கும் பொது மாறுதல் வழங்கலாம். ஆனால் தற்போது பணிபுரியும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு இவ்விதி பொருந்தாது என அரசு முதன்மை செயலர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகப்பள்ளிகள் ஜூன் 10ம் தேதி திறப்பு | தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப்பின் ஜூன் 3 ம்தேதி துவங்குவதாக இருந்தது. தற்போது அதற்கு பதிலாக வரும் ஜூன் 10ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றம் : ஜூன் 3 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 3 ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப கடைசி தேதி 30.05.2013 | நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் : 7,8,9-06-2013

அண்ணாமலை பல்கலைகழகத்தின் 2013-14ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பொறியியல் சார்ந்த படிப்பிற்கான நுழைவு தேர்வு விண்ணப்பங்களை  பூர்த்தி செய்து, மே  30ம் தேதிக்குள், பல்கலைக்கழக அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.அண்ணாமலை பல்கலைகழகத்தில் இந்த ஆண்டு நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண் களின் அடிப்படையில் சேர்க்கை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.


பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பிற்கான சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள‌ை www.cbse.nic.in என்ற இணையதளத்திலும் 011-24300699என்ற ஐ.வி.ஆர்.எஸ்., எண்ணில் அழைத்தும் முடிவுகளை அறியலாம்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்வில் மாற்றம்: மத்திய அரசு முடிவு

மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை, சீனியாரிட்டி அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்த்தும் நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஐ.ஏ.எஸ்., -ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., பணிகளுக்கு, மாநிலங்களில் பணியாற்றும் அதிகாரிகளை தேர்வு செய்யும் நடைமுறை, தற்போது உள்ளது. இதன்படி, சீனியாரிட்டி மற்றும் ஆண்டு நம்பகத் தன்மை அறிக்கை (ஏ.சி.ஆர்.,) ஆகியவற்றின் அடிப்படையில், அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெறுகின்றனர்.

இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, இனிமேல், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளாகப் பதவி உயர்வு பெற விரும்புவோர், போட்டித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, சர்வீஸ் ரெகார்டு, நேர்முகத் தேர்வு உள்ளிட்ட, நான்கு கட்டங்களாகத் தேர்வு நடக்கும். இதில், தேர்ச்சி பெறும் அதிகாரிகள் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பணிகளுக்கு, மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படுவர்.நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் தெரிவித்துள்ள பரிந்துரைப்படி, இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் வெளியானது.

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு தேர்வின், தென் மண்டலத்திற்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, மகாராஷ்டிரா, அந்தமான் -நிகோபார், கோவா ஆகிய மாநிலங்கள் அடங்கிய சென்னை (தென்) மண்டலத்தில் உள்ள, 2,338, சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலிருந்து, பத்தாம் வகுப்பு தேர்வை, ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 965 மாணவர்கள் எழுதினர். இந்த மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது.இதில், 1,47,052 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில், ஆண்கள், 99.85 சதவீதமும், பெண்கள் 99.91 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர். இருபாலருக்கும் தேர்ச்சி சதவீதத்தில் இடைவெளி குறைவு.

தமிழகத்தில், 275 பள்ளிகளை சேர்ந்த, 13 ஆயிரத்து 738 மாணவர்கள் மற்றும், 10ஆயிரத்து661 மாணவிகள் என, 24 ஆயிரத்து 399 பேர் தேர்வெழுதினர். இதில் 13 ஆயிரத்து 727 மாணவர்கள், 10 ஆயிரத்து 656 மாணவியர் என, 24 ஆயிரத்து 383 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 99.92 சதவீதமும்,மாணவியர் 99.95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது கிரேடு அடிப்படையில், வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. " ஏ 1' முதல் "டி' கிரேடு வரை பெற்றவர்கள், வெற்றி பெற்றவர்களாகின்றனர். "இ1, இ2" கிரேடு பெற்றவர்கள், தோல்வியடைந்தவர்களாக கருதப்படுகின்றனர். இவர்கள், " இ.ஐ.ஓ.பி.,' எனும், சிறப்புதேர்வு எழுதி, தேர்வு பெறலாம்.

மறுகூட்டல் :இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அதிகாரி சுதர்சன் ராவ் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தோல்வியடையும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்களுக்கு சி.பி.எஸ்.இ., பாடங்களை, எளிதாக கற்பிக்கும் முறை குறித்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டை விட, இந்தாண்டு, 23 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதியுள்ளனர். கடந்தாண்டு, 432 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை; இது இந்த ஆண்டு, 213 ஆக குறைந்துள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், 21 நாட்களுக்குள் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண் பட்டியலையும், இணையதளத்தில் இருந்து மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, சுதர்சன் ராவ் கூறினார்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு : 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர், உடற்கல்வி ஆசிரியர், சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 மற்றும் 29.05.2013 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பள்ளிக்கல்வித்துறையில் 2013-14ஆம் ஆண்டிற்கான பட்டதாரி/ஆசிரியர் பயிற்றுநர்/உடற்கல்வி ஆசிரியர்/சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 28.05.2013 அன்று மாவட்டத்திற்குள் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நடைபெறும். 29.05.2013 அன்று மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9.00 மணி முதல் நடைபெறும். மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
வ.எண்நாள்நேரம் விவரம் இடம்
128.05.13காலை பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர்,இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டதிற்குள்)முதன்மை கல்வி அலுவலகம்
129.05.13காலை பட்டதாரி ஆசிரியர்,சிறப்பாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்,ஆசிரியர் பயிற்றுநர்,இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல்(மாவட்டம் விட்டு மாவட்டம்)முதன்மை கல்வி அலுவலகம்

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு ஒற்றை சாளர முறை மாணவர் சேர்க்கை 2013-2014 | விண்ணப்பங்கள் 27.05.2013 முதல் வழங்கப்படுகின்றன.

தொடக்கக்கல்வி பட்டயப்படிப்பு ஒற்றை சாளர முறை மாணவர் சேர்க்கை 2013-2014 | விண்ணப்பங்கள் 27.05.2013 முதல் வழங்கப்படுகின்றன.

நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

நர்சிங், பார்மசி, பிசியோதெரபி உள்ளிட்ட துணைநிலை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும் என்று மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.

தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி முடிவடைந்து விட்ட நிலையிலும், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையிலும் மாணவ–மாணவிகள் குறிப்பாக, மாணவிகள் பெரிதும் விரும்பும் நர்சிங் படிப்புக்கான விண்ணப்பங்கள் மட்டும் இன்னும் வழங்கப்படவில்லை. விண்ணப்பம் எப்போது வழங்கப்படும்? என்பதும் அறிவிக்கப்படவில்லை.இதுகுறித்து மாநில மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனரும், மருத்துவ தேர்வுக்குழுவின் செயலாளருமான டாக்டர் சுகுமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம் ஆகிய 4 இடங்களில் அரசு நர்சிங் கல்லூரிகள் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 50 சதவீதம் மொத்தம் 200 பி.எஸ்சி. (நர்சிங்) இடங்கள் இருக்கின்றன. இவை தவிர, 145 தனியார் நர்சிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 5,087 இடங்கள் கிடைக்கும்.கூடுதல் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைக்க வாய்ப்பு இருப்பதால் இந்த இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிசியோதெரபி பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் வழங்கப்படும்.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள 23 அரசு நர்சிங் கல்வி நிறுவனங்களில் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 2 ஆயிரம் சீட்டுகள் உள்ளன. இவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஜூன் மாதம் 2–வது வாரத்தில் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு டாக்டர் சுகுமார் கூறினார்.

மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்து விட்ட நிலையில் முக்கிய படிப்புகளில் ஒன்றான நர்சிங் படிப்புக்கு மட்டும் விண்ணப்பம் வழங்குவது தாமதமாகி வருவதால் மாணவ–மாணவிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நர்சிங் பட்டப் படிப்புக்கும் சரி, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கும் சரி வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பதால் நர்சிங் படிப்பில் சேர மாணவிகள் அதிக ஆர்வமாக உள்ளனர்.

கடந்த ஆண்டு கட் ஆப் மார்க்

நர்சிங் பட்டப் படிப்புக்கான கட் ஆப் மார்க் பிளஸ்–2 இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய மதிப்பெண்களின் அடிப்படையில் 200–க்கும், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 100–க்கும் கணக்கிடப்படுகிறது.

கடந்த 2012–2013–ம் கல்வி ஆண்டில் நர்சிங் பட்டப் படிப்புக்கும் டிப்ளமோ படிப்புக்கும் இருந்த கட் ஆப் மார்க் பட்டியலை மருத்துவ தேர்வுக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:–

பி.எஸ்சி. நர்சிங் 

மாணவர்கள்

பொதுப்பிரிவு – 182.75

பிற்படுத்தப்பட்டோர் – 171.25

பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 181.75

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 161

ஆதி திராவிடர் – 174.25

ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 174.25

மாணவிகள்

பொதுப்பிரிவு – 182.75

பிற்படுத்தப்பட்டோர் – 175.25

பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 173.25

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 175

ஆதி திராவிடர் – 171.25

ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 175

பழங்குடியினர் – 151.50

டிப்ளமோ நர்சிங் 

உதவித்தொகையுடன் கூடியது

பொதுப்பிரிவு – 87

பிற்படுத்தப்பட்டோர் – 76.63

பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 48.38

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 76.88

ஆதி திராவிடர் – 76.38

ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 73.38

பழங்குடியினர் – 61.75

உதவித்தொகை இல்லாதது

பொதுப்பிரிவு – 81.13

பிற்படுத்தப்பட்டோர் – 74.13

பிற்படுத்தப்பட்டோர்–முஸ்லிம் – 41.25

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் – 76

ஆதி திராவிடர் – 75.63

ஆதி திராவிடர் – அருந்ததியினர் – 72.38

பழங்குடியினர் – 57.63

மே-ஜூன் 2013ல் நடைபெறவிருக்கும் இளநிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் தங்களின் எண்னை பதிவு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சென்னை பல்கலைக்கழகத்தில், வரும் கல்வியாண்டு முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். நேரில் நுழைவுச்சீட்டு விநியோகம் இல்லை என சென்னை பல்கலை அறிவித்துள்ளது.

மே-ஜூன் 2013ல் நடைபெறவிருக்கும் இளநிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் தங்களின் எண்னை பதிவு செய்து நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டு வரை அந்தந்த தேர்வு மையத்தில், தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்னதாகவே நுழைவுச்சீட்டு விநியோகம், செய்யப்படும். ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யும் வசதியும் இருந்தது. ஆனால் மே-ஜூன் 2013ல் நடைபெறவிருக்கும் இளநிலை தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும் நேரில் வழங்கப்பட மாட்டாது என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

www.ideunom.ac.in/hallticket/hall_main_new.asp என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மே 29 முதல் பி எட்., எம் எட்., தேர்வுகள் தொடங்குகிறது.

சிபிஎஸ்இ கல்வி முறையில் தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ கல்வி முறையில் தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ கல்வி முறையில் தேர்வெழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதால், அம்மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்கும் பணியும் முடிவடைந்து விட்ட நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், வரும் 27ம் தேதி அதாவது, திங்கட்கிழமை சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 8,53,355 மாணவ, மாணவியர் கலந்துக் கொண்டு  தேர்வினை எழுதியுள்ளனர். இத்தேர்வில்  பள்ளிகள் வாயிலாக தேர்வு எழுதியவர்களில் 7,04,125 மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ் பெறும் நாளிலேயே அவர்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவுச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  மாணவ, மாணவியர் தங்களுடைய கல்வித் தகுதியை வேலைவாய்ப்பக “இணைய தளம் ” வாயிலாக தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.  இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு மற்றும்  பயிற்சித் துறை இணைந்து மேற்கொண்டுள்ளன.

வேலைவாய்ப்பகத்தில் தங்களது தகுதியினை பயின்ற பள்ளிகளில் பதிவு செய்ய விரும்பும் மாணவ, மாணவியர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெற பள்ளிக்குச் செல்லும் பொழுது தங்களது குடும்ப அட்டை மற்றும் சாதிச் சான்றிதழினை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.  மேலும், தங்களது குடும்ப அட்டையில் பதிவுதாரரின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பத்தாம் வகுப்புக் கல்வித் தகுதியினை ஏற்கனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

தற்பொழுது புதியதாகப் பதிவு செய்ய விரும்புவோருக்கு புதிய பதிவு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை பதிவு செய்யும் நாளிலேயே உடனுக்குடன் வழங்கப்படும்.  மாணவ, மாணவியர் மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வித் தகுதியை பள்ளிகளில் பதிவு செய்த பின்னர், தங்களுடைய முன்னுரிமையை  வேறு ஒரு வேலைநாளில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் 27.05.2013 அன்று பள்ளிக் கல்வித் துறையினரால் வழங்கப்படவுள்ளது. 27.05.2013 முதல் 10.06.2013   (15 நாட்களுக்குள்)  அந்தந்த பள்ளிகளிலேயே மாணவ மாணவியர் பதிவு செய்து வேலைவாய்ப்பு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.  இவ்வாறு பதிவு செய்யப்படும் மாணவ, மாணவியருக்கு +2 கல்வித் தகுதிக்கு 27.05.2013 தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.

கடந்த காலங்களில் தேர்வு முடிவு வெளியிடுவதனையொட்டி ஒரே நாளில் பல்லாயிரம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களை நாடுவதன் மூலம்  ஏற்படும்காலவிரயம் மற்றும் போக்குவரத்து செலவினை முற்றிலும் தவிர்ப்பதற்காக பள்ளிகளின் வாயிலாகவே இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ள இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வசதியை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் +2 கல்வித் தகுதியை தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SSLC தேர்வு முடிவுகள் மே 31 தேதி வெளியாக உள்ளது. ஜூன் மாதம் நடைபெற உள்ள சிறப்பு துணை பொதுத்தேர்விற்க்கான கால அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது .

கால அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்
DATEDAYSUBJECT
24.06.2013MONDAYLANGUAGES PAPER – I
25.06.2013TUESDAYLANGUAGES PAPER – II
26.06.2013WEDNESDAYENGLISH PAPER – I
27.06.2013THURSDAYENGLISH PAPER – II
28.06.2013FRIDAYMATHEMATICS
29.06.2013SATURDAYSCIENCE
01.07.2013MONDAYSOCIAL SCIENCE

2013 – 2014-ஆம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள SSLC பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவுச் செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

2013 – 2014-ஆம்  கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள SSLC பொதுத் தேர்விற்கு விண்ணப்பிக்கும் அனைத்து  தனித் தேர்வர்களும் (முதன் முறையாக  அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) / ஏற்கனவே தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்று, அறிவியல் செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு பெயர் பதிவு செய்திராத தனித்தேர்வர்களும் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் பெயர்களை பதிவுச் செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது. 

அனைத்து  தனித்தேர்வர்களும் 2013 ஜூன் 3 முதல் 30-ஆம் தேதி முடிய சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகளுக்குச் சென்று செய்முறை வகுப்புகளில் கலந்து கொண்டு 80%  பயிற்சி வகுப்பிற்கு வருகை தந்த தனித்தேர்வர்கள் மட்டுமே 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளாத தேர்வர்களின் விண்ணப்பம் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள இடைநிலைப் பள்ளி விடுப்புச்  சான்றிதழ் பொதுத் தேர்விற்கு ஏற்க இயலாமல் நிராகரிக்கப்படும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதற்கான விண்ணப்பப் படிவத்தினை  www.dge.tn.nic.in    என்ற இணையதளத்தில் 03.06.2013 முதல் 30.06.2013 வரை பதிவிறக்கம் செய்து, விபரங்களை இரண்டு நகல்களில் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடம் தனித்தேர்வர்கள் 30.06.2013க்குள் நேரில் ஒப்படைத்தல் வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு மூலம் தேர்வான 196 முதுகலை தாவரவியல் ஆசிரியர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310 பணிநாடுநர்களுக்கும் பணி நியமன கலந்தாய்வு 27.05.2013 அன்று அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை தாவரவியல் ஆசிரியர்  பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 196 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310 பணிநாடுநர்களுக்கும் 27.05.2013 அன்று பணி நியமன கலந்தாய்வு இணையதளத்தில் (Online) அனைத்து முதன்மைக்கல்வி அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. தெரிவு செய்யப்பட்ட பணி நாடுநர்கள் 27.05.2013 (திங்கட்கிழமை) அன்று 9.00 மணியளவில் அவரவர் முகவரிக்குட்பட்ட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களுக்குச் சென்று இணையதள கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி நியமன ஆணை பெறுமாறு  கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.ஆசிரியர் தேர்வு வாரியம்/தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அனுப்பப்பட்ட தெரிவுக்கடிதத்தின் அடிப்படையில் கல்விச்சான்றுகளை சரிபார்த்து பணி நியமன ஆணை வழங்க உள்ளனர்.எனவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை தாவரவியல் ஆசிரியர்  பணியிடங்களுக்காக தேர்வு செய்யப்பட்ட 196 பணிநாடுநர்களுக்கும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 310 பணிநாடுநர்களுக்கும் 27.05.2013 அன்று பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

24ம் தேதி முதல் நடக்க உள்ள, அரசு துறை தேர்வுகளை எழுதுவோருக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டுள்ளன.

வரும், 24ம் தேதி முதல் நடக்க உள்ள, அரசு துறை தேர்வுகளை எழுதுவோருக்கு, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், "ஹால் டிக்கெட்'கள் வெளியிடப்பட்டுள்ளன. இம்மாதம், 24ம் தேதி முதல், 31ம் தேதி வரை, துறை தேர்வுகள் நடக்கின்றன. பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலர்கள், பதவி உயர்வுக்காக, இந்த தேர்வுகளை எழுதுகின்றனர். இந்த தேர்வை எழுத, பதிவு செய்த தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணைய தளத்தில், ஹால் டிக்கெட்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள், இணையதளத்தில் இருந்து, ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.

2014-2015 ம் கல்வி ஆண்டில் பதினோறாம் வகுப்பிற்கும், 2015-2016 ம் கல்வி ஆண்டில் பனிரெண்டாம் வகுப்பிற்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ள மேல்நிலை கல்வி வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

மேல்நிலை கல்வி வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2014-2015ம் கல்வி ஆண்டில் XI வகுப்பிற்கும், 2015-2016ம் கல்வி ஆண்டில் XII வகுப்பிற்கும் நடைமுறைப்படுத்தப்பட உள்ள ன.மேல்நிலைக் கல்விக்கான 24 பாடங்களின் வரைவு பாடத்திட்டம் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழுவால் தயாரிக்கப்பட்டது. தற்போது, இந்த வரைவு பாடத்திட்டம் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனை வருகிற 30ம் தேதி வரை காணலாம். பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மேல்நிலைக்கல்வி வரைவு பாடத்திட்டத்தினை உற்று நோக்கி தங்களது கருத்துக்களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனருக்கு scerttn@gmail.com என்ற இமெயில் முகவரி அல்லது கடிதம் மூலமாக தெரிவிக்கலாம்.

 Draft Syllabus For 2014-15(XI-std) and 2015-16 (XII-std)


syllabus  
This is a draft syllabus for 2014-15 (XI std) and 2015-16 (XII std)
kindly give us your feedback at scerttn@gmail.com 
or dtert@tn.nic.in          
                                           
Accountancy
download                             
Advance Tamil
download
Bio-Botany 
Bio-chemistry
Bio-Zoology
Business Mathematics
XI , XII
Chemistry 
Commerce
XI-1 , XI-2 , XII-1 , XII-2
Communicative English
Computer Sciene 
Economics
English
Ethics & Indian Culture
Geography
History
Home Science 
Mathematics 
Microbiology 
Nursing 
Nutrition & Dietetics 
Physics
Political Science
Statistics 
Tamil 
XI , XII

முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு செய்யப்பட்டனர்.

அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், 490 பேர், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, நேற்று பதவி உயர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், ஜூன், 1 ம் தேதி  பணியில் சேர வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

பள்ளிகல்வித் துறையில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது. நேற்று, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு நடந்தது.மொத்தம், 490 பணிஇடங்கள் காலியாக இருந்தன. பணிமூப்பு அடிப்படையில், 743 பேர், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.

சென்னையில், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில், கலந்தாய்வு நடந்தது. 21 பேர் அழைக்கப்பட்டதில், நான்கு பேர், "ஆப்சென்ட்'; ஐந்து பேர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பணியிடங்களை தேர்வு செய்தனர்.அவர்களுக்கான உத்தரவுகளை, சி.இ.ஓ., ராஜேந்திரன் வழங்கினார். 12 பேர், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வு வேண்டாம் என, தெரிவித்துவிட்டனர்.

மாநில அளவில், 60க்கும் அதிகமான ஆசிரியர்கள், விரும்பிய இடம் கிடைக்காததால், பதவி உயர்வு வேண்டாம் என, தெரிவித்தனர்.பலர், கலந்தாய்வுக்கு வரவில்லை.எனினும், 490 பேர், உரிய இடங்களை தேர்வு செய்ததால், அவர்கள் அனைவரும், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டு, கலந்தாய்வு இடத்திலேயே, உத்தரவுகள் வழங்கப்பட்டன.உத்தரவுபதவி உயர்வு கடிதங்களை வழங்கிய அதிகாரிகள், "அனைவரும், ஜூன், 1 ம் தேதி  புதிய இடங்களில் பணியில் சேர வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

TNTET ANNOUNCED | ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:17.06.2013 கடைசி தேதி :01.07.2013 தேர்வு நாள் : முதல் தாள்- 17.08.2013,இரண்டாம் தாள்-18.08.2013


# ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18–ந் தேதிகளில் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

# ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.

# ஆசிரியர் தகுதித்தேர்வு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்களுக்கு தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

# அரசு பள்ளிகளில் சுமார் 23 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.

# ஏறத்தாழ 6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்வு எழுதியதில் 10397 இடைநிலை ஆசிரியர்களும், 8,849 பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.

# இந்த தகுதித்தேர்வு மூலம், காலியாக இருந்த அனைத்து இடைநிலை ஆசிரியர் பணி இடங்களும் நிரப்பப்பட்ட நிலையில், தகுதியானவர்கள் கிடைக்காததால் சுமார் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படவில்லை.

# காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்கள் அடுத்த தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.

# எனவே, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.

# இந்த நிலையில், தகுதித்தேர்வுக்கான அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

# அதன்படி, இந்த ஆண்டுக்கான தகுதித்தேர்வு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 17– ந்தேதி அன்றும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுநாளும் (ஆகஸ்ட் 18) நடத்தப்பட உள்ளது.

# காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும்.

# தகுதித்தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150 ஆகும். தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 60 சதவீதம் அதாவது 150– க்கு 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.

# ஏற்கனவே இரண்டு தடவை நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் அதிலும் குறிப்பாக ஆதி திராவிட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டு பிரிவினருக்காவது சற்று மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்ச்சி மதிப்பெண்ணில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

# விண்ணப்பம் எப்போது? தகுதித்தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்யப்பட உள்ளன.

# விண்ணப்பத்தின் விலை ரூ.50. தேர்வுக்கட்டணம் ரூ.500. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250 மட்டும்.

# பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ. ஆபீஸ்) அலுவலகத்தில் ஜூலை மாதம் 1–ந் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

# இந்த ஆண்டு ஏறத்தாழ 7 லட்சம் பேர் தகுதித்தேர்வு எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம் எதிர்பார்க்கிறது. எனவே, சுமார் 14 லட்சம் விண்ணப்ப படிவங்களை அச்சிட முடிவு செய்துள்ளது.

# கடந்த ஆண்டு மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால், ஒருசில மாவட்டங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதி நெரிசல் ஏற்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், இந்த அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

# 15 ஆயிரம் காலி இடங்கள் கடந்த ஆண்டுக்கான காலி பணி இடங்கள், இந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட இடங்கள் என மொத்தம் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்கள் தகுதித்தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.

# இதில் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் 13 ஆயிரம், இடைநிலை ஆசிரியர் இடங்கள் 2 ஆயிரம். பணிநியமன முறையில் இந்த ஆண்டு புதிய முறை அமல்படுத்தப்படுகிறது.

# முதலில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்படும். அதன்பிறகு தகுதியான நபர்களுக்கு தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இதைத்தொடர்ந்து, காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் தகுதித்தேர்வு மதிப்பெண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

# பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தமட்டில், தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்– 2, டிகிரி, பி.எட். மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயார்செய்யப்பட்டு ஆசிரியர் தேர்வு செய்யப்படுவார்கள். இடைநிலை ஆசிரியர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு உட்பட்டு, மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்யுங்கள்

ஜூன்/ஜூலை 2013-ல் நடைபெறவுள்ள மேல்நிலை சிறப்பு துணைத் தேர்வெழுத 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை  www.dge.tn.nic.in என்ற ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நடைபெற்ற மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் மாணாக்கர் தாம் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் (பாடங்களின் எண்ணிக்கை வரம்பின்றி), எதிர்வரும் ஜூன்/ஜூலை 2013 பருவத்தில் நடைபெறும் சிறப்பு உடனடித் தேர்வில் தேர்வெழுதலாம்.

பள்ளி மாணாக்கராய்த் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர்/வருகை புரியாதோர், ஜூன் பருவத்தில் நடைபெறும் சிறப்பு உடனடித் தேர்வெழுத ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், S.H வகை விண்ணப்பத்தை எக்காரணம் கொண்டும் வழங்கக்கூடாது எனப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.

ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறை

பள்ளி மாணாக்கர் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் விண்ணப்பித்து, அதில் கோரப்படும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவர் தமது புகைப்படத்தினை ஸ்கேன் செய்ய வேண்டும். State Bank of India சலானை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் (SBI)ன் ஏதேனும் ஒரு கிளையில் 27.05.2013 -ற்குள் செலுத்தவேண்டும். செலுத்தும் நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டது. ஆன்-லைன் விண்ணப்பத்தின் வலதுபக்கத்தில் உரிய இடத்தில் மாணாக்கர் தனது மற்றுமொரு புகைப்படத்தினை ஒட்டி “attestation” (பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அல்லது Gazetted Officer இடம் ) பெற வேண்டும். பின்னர்,(1) ஸ்கேன் செய்த மாணவரின் புகைப்படத்துடன் கூடிய “Confirmation copy” எனக் குறிப்பிடப்பட்ட ஆன்-லைன் விண்ணப்பம்,(2) தேர்வுக்கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் செலுத்திய சலான் (Department Copy) இரண்டையும் இணைத்து மாணாக்கர் தாம் பயின்ற பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.பள்ளித் தலைமை ஆசியர்கள் விண்ணப்பங்களை பத்து இலக்கம் கொண்ட விண்ணப்ப எண்ணின் ஏறுவரிசையில் அடுக்கிப் மாணாக்கரின் பெயருடன் பட்டியலிட்டு, பட்டியலின் இரு நகல்களுடன் ஆன்-லைன் விண்ணப்பங்களை உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் 28.05.2013 –ற்குள் (பகல் 12 மணிக்குள்) தவறாமல் ஒப்படைக்க வேண்டும்.பள்ளிகளால் ஒப்படைக்கப்படும் ஆன்-லைன் விண்ணப்பங்களை கல்வி மாவட்டவாரியாக கட்டி, 29.05.2013 அன்று தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலகங்கள் ஒப்படைக்க வேண்டும்.எனவே. இப்பணியின்பால் சிறப்புக் கவனம் செலுத்திட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:

1. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.

2. மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை:

மார்ச் 2013 மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத / வருகை புரியாத ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50/-வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35/- ம் செலுத்தவேண்டும். Online மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட State Bank of India challan மூலமே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுத் கட்டணத் தொகையினை செலுத்தலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும், தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ அல்லது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை ஒளிநகல் (Photocopy) எடுத்து தனித்தேர்வர்கள் தங்கள் வசம் பத்திரமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

ஆன்/லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதிகள் :

தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 23.05.2013 (வியாழக்கிழமை) முதல் 27.05.2013 (திங்கட்கிழமை) நண்பகல் 12 மணிவரை அனைத்து நாட்களிலும் தங்கள் விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செய்யலாம். பதிவு செய்த விண்ணப்பத்தினையும், தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கான SBI சலானையும் 27.05.2013 நண்பகல் 12 மணிவரை வரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் செலுத்தவேண்டிய இறுதி தேதி 27.05.2013( திங்கட்கிழமை). செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும்.

ஆன்-லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல்:

அ) பள்ளிமாணாக்கர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 27.05.2013-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆ) மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் உடனடித் தேர்விற்கான Confirmation copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய SBI சலானை இணைத்து அவர்தம் வருவாய் மாவட்டத்திற்குரிய அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிரரகரிக்கப்படும்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில் 100 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் முழுத்தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் 1,117 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. அதாவது, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மட்டும் 900-க்கும் அதிகமான பள்ளிகள் முழுத் தேர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வில் மொத்தம் 88.1 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சிப் பெற்றனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை பள்ளிகளின் மூலமாக 7 லட்சத்து 99 ஆயிரத்து 513 மாணவர்கள் எழுதினர். இதில் 7 லட்சத்து 4 ஆயிரத்து 125 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 95,388 ஆகும்.

இந்தத் தேர்வு முடிவுகள் தொடர்பான ஆய்வறிக்கை பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்: பிளஸ் 2 தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 42 சதவீதம் ஆகும். இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை 32 சதவீதமாக உள்ளது. மீதமுள்ள மாணவர்கள் இரண்டுக்கும் அதிகமான பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

2011-ஆம் ஆண்டில் 35 அரசுப் பள்ளிகளில் மட்டுமே 100 சதவீத மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 100 அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி உள்ளது. அதேபோல், அனைத்து வகைப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு 892 பள்ளிகள் மட்டுமே முழுத்தேர்ச்சி விகிதம் இருந்தது. இப்போது இது 1,117 ஆக அதிகரித்துள்ளது. சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, விழுப்புரம், திருச்சி, தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட அதிகரித்துள்ளது.

பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கும் தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள்

அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திவரும் நிலையில், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வுக்கும் வழியில்லாததால், புலம்பி வருகின்றனர்.

பள்ளி கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்கள், கல்வி தகுதிக்கு ஏற்ப, பதவி உயர்வு பெற வழிவகை உள்ளது. குறிப்பாக, பள்ளி கல்வித்துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர், தகுதிக்கு ஏற்ப, பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் என, பல நிலைகளில் பதவி உயர்வு பெறுகின்றனர்.

இதர ஆசிரியர்களும், இதேபோல், ஒவ்வொரு படியாக, பதவி உயர்வு பெறுகின்றனர். ஆனால், தொடக்க கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், எவ்வித பதவி உயர்வும் இன்றி, பல ஆண்டுகளாக பணியாற்றும் நிலை உள்ளது.

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. அதுவும், ஒவ்வொரு ஆண்டும், கணிசமான நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உய ர்த்தப்படுவதால், அந்த பதவி உயர்வு வாய்ப்பும் பறிபோவதாக, பட்டதாரி ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயரும்போது, அந்த பள்ளி, பள்ளி கல்வித்துறையின் கீழ் வந்துவிடுகிறது. அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், தரம் உயர்த்தப்பட்ட, அதே பள்ளியில், பணி புரியலாம்.

ஆனால், சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளி, எந்த தேதியில், தரம் உயர்த்தப்பட்டதோ, அந்த தேதியில் இருந்து தான், அந்த பள்ளி ஆசிரியர்களின் பணிமூப்பு, புதிதாக கணக்கிடப்படும். இதனால், பழைய பணிமூப்பு, கணக்கில் வராது. இதனால், பதவி உயர்வு பெற வழியே இல்லை என, கூறப்படுகிறது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறியதாவது: டி.ஆர்.பி., மூலம் தேர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் தான், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். டி.ஆர்.பி., வழங்கிய, "ரேங்க் எண்" அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இதை, அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது.

அனைத்து ஆசிரியர்களும், சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்கு வசதியாக, தற்போது கலந்தாய்வு நடக்கிறது. இதனை, நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. இவ்வாறு பேட்ரிக் கூறினார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், அனைத்து வகை பள்ளிகளும், சம எண்ணிக்கையில், தரம் உயர்த்தப்படும். ஆனால், சில ஆண்டுகளாக, நடுநிலைப் பள்ளிகள், அதிக எண்ணிக்கையில், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.

அந்த அளவிற்கு, ஆரம்ப பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுவது இல்லை. இதனால், நடுநிலைப் பள்ளிகள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. பட்டதாரி ஆசிரியர்களின் நீண்ட கால பிரச்னையாக உள்ள பதவி உயர்வு விவகாரத்தை, தமிழக அரசு கவனிக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "துறை மாறும்போது, பணிமூப்பு புதிதாக கணக்கில் எடுத்துக்கொள்ளும் முறை, பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. டி.ஆர்.பி., "ரேங்க் எண்" அடிப்படையில், பதவி உயர்வு வழங்க வேண்டும் எனில், அரசு தான் உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தன.

மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் சேர 28,300 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 700 குறைவு ஆகும்.

மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் சேர 28,300 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 700 குறைவு ஆகும்.அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களும், அரசு பல் மருத்துவ கல்லூரியில் 85 சீட்டுகளும் பொது கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படுகின்றன. இவை தவிர, அரசு ஒதுக்கீடாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் 836 எம்.பி.பி.எஸ். இடங்களையும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 909 இடங்களையும் கவுன்சிலிங் மூலமாகத்தான் நிரப்புகிறார்கள்.நடப்பு கல்வி ஆண்டில் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரிக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும், சென்னை மருத்துவ கல்லூரிக்கு 85 இடங்களுக்கும், ஸ்டான்லி மருத்துவ கல்லூரிக்கு 100 இடங்களுக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளிக்கும் பட்சத்தில் அகில இந்திய இடஒதுக்கீடு இடங்கள் நீங்கலாக எஞ்சிய இடங்களும் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்படும்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த 9–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை வழங்கப்பட்டன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 32,050 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க நேற்று கடைசி நாள் ஆகும்.அதன்படி, கடைசி நாளான நேற்று வரை மொத்தம் 28,300 விண்ணப்பங்கள் நேரிலும், தபால் மூலமாகவும் சமர்ப்பிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவ தேர்வுக்குழு செயலாளர் டாக்டர் சுகுமார் நிருபர்களிடம் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு மருத்துவ படிப்புகளில் சேர 39 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. ஆனால், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்தவர்கள் 29 ஆயிரம் பேர் மட்டுமே. எனினும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 700 பேர் குறைவாக விண்ணப்பித்து இருக்கிறார்கள்.ஒருசில மாணவர்கள் என்ஜினீயரிங் மற்றும் மருத்துவம் இரண்டு படிப்புகளுக்கும் விண்ணப்பிப்பது உண்டு. இரண்டிலும் அரசு கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டால் பெரும்பாலான மாணவ–மாணவிகள் மருத்துவ படிப்பை உதறிவிட்டு என்ஜினீயரிங் சேர்ந்துவிடுவது வழக்கம். இந்த ஆண்டும் கணிசமான மாணவ–மாணவிகள் மருத்துவ படிப்புக்கும், என்ஜினீயரிங் படிப்புக்கும் விண்ணப்பித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.