Friday, October 30, 2020

GS-12-ECONOMICS - தமிழ்நாட்டில் செயல்படும் முக்கியமான திட்டங்கள் | Important ongoing Schemes in Tamil Nadu

1. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்டத்தின் (Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme) கீழ், ஏழை கர்பிணிப் பெண்க ளுக்கு ₹12,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது. 

2. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்டம் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) 2011-12 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைவருக்கும் உடல் நலம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் இலவச மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை வழங்குவதாகும் 

3. தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்டங்கள் (Tamil Nadu Health Systems Projects) இலவசமாக ஆம்புலன்ஸ் - சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. (108 அவசர ஆம்புலன்ஸ் சேவை). 

4. 'பள்ளி சுகாதார திட்டம்' (School Health Programme) விரிவான சுகாதார சேவையை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவதை வலியுறுத்துகிறது. 

5. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் (National Leprosy Eradication Programme) மூலம் அனைத்து தொழுநோயாளிகளையும் கண்டறிந்து தொடர்ச்சியான சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக கொண்டு மாநிலத்தில் செயல்படுத்தப்படுகிறது. 

6. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஊட்டச்சத்து உணவுத்திட்டம். 

7. ஆரம்பக் கல்விக்கு தேசிய ஊட்டச்சத்து ஆதரவு திட்டம். 

8. பொது ICDS திட்டங்கள் மற்றும் உலக வங்கி உதவியுடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (General ICDS Projects and World Bank Assisted Integrated Child Development Services). 

9. பிரதம மந்திரி கிராமோதயா யோஜனா திட்டம். 

10. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம். 

11. மதிய உணவுத் திட்டம். 

==================================

1.Under Dr. Muthulakshmi Reddy Maternity Benefit Scheme, financial assistance to the tune of ` 12,000 is being disbursed to poor pregnant women.

2.The Chief Minister’s Comprehensive Health Insurance Scheme was launched in the state in 2011-12 with the aim to provide Universal Healthcare to all by providing free medical and surgical treatment.

3.Tamil Nadu Health Systems Projects (TNHSP) has launched ambulance services free of cost (The 108 Emergency Ambulance Service).

4.The School Health Programme emphasises on providing comprehensive healthcare services to all students studying in Government and Government-aided schools.

5.The National Leprosy Eradication programme is being implemented in the state with the aim to detect and to provide sustained regular treatment to all leprosy patients. 

6.Puratchi Thalaivar M.G.R. Nutrition Meal Programme:

7.National Programme of Nutritional Support to Primary Education

8.General ICDS Projects and World Bank Assisted Integrated Child Development Services:

9.Pradhan Manthri Gramodaya Yojana Scheme (PMGYS):

10.Tamil Nadu Integrated Nutrition Programme:

11.Mid-Day Meal Programme:

| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Monday, October 26, 2020

GS-11- ECONOMICS - அரசாங்கமும் வரிகளும் அறிமுகம் | Government and Taxes

  • இந்தியாவில் வரி விதிப்பின் வேர்கள் மனு ஸ்மிருதி மற்றும் அர்த்தசாஸ்திர காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டது.
  • தற்கால இந்திய வரி முறையானது பண்டைய கால வரி முறையை அடிப்படையாகக் கொண்டது.
  • Taxation in India has its roots from the period of Manu Smriti and Arthasastra. 
  • The present Indian tax system is based on this ancient tax system. 
  • இந்தியாவில் முதன்முதலாக வருமானவரி 1860ஆம் ஆண்டு சர் ஜேம்ஸ் வில்சன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1857ஆம் ஆண்டு கலகத்தின் மூலம் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட அரசாங்கத்தின் மூலம் போடப்பட்ட ஆணையே வரி விதிப்பாகும்.
  • In India, Income Tax was introduced for the first time in 1860 by Sir James Wilson 
  • In order to meet the losses sustained by the Government on account of the Mutiny of 1857. 
  • நேர்முக வரி என்பது மத்திய அரசுக்கு அல்லது மாநில அரசுக்கு அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகச் செலுத்தும் வரியாகும். இதில் வருமான வரி, சொத்துவரி ஆகியன அடங்கும்.
  • வருமான வரி தனி நபர்கள் மற்றும் தொழில் செய்பவர்களால் ஈட்டப்பட்ட மற்றும் ஈட்டப்படாத வருமானங்களின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
  • உள்ளூர் வரி என்பது உள்ளாட்சி அமைப்பு அல்லது அரசின் மூலம் ஒரு நகரம் அல்லது ஒரு நாட்டின் எல்லைக்குள் விதிக்கப்படுகின்ற வரியாகும்.
  • ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு அரசாங்கத்தால் வரி விதிக்கப்படுகிறது.
  • அரசின் வருமானம் நேர்முக மற்றும் மறைமுக வரிகளைச் சார்ந்து உள்ளது. நேர்முக வரியானது தனி நபரின் வருமானத்திலும், மறைமுக வரியானது பண்டங்கள் மற்றும் பணிகள் மீதும் விதிக்கப்படுகின்றன.
  • இதன் மூலம் அரசாங்கம் அதன் "நிதி ஆதாரங்களை திரட்டுகிறது.
  • Tax is levied by government for the development of the state’s economy. 
  • The revenue of the government depends upon direct and indirect taxes. 
  • Direct taxes are levied on income of the persons and the indirect taxes are levied on goods and services by which the government mobilises its “financial resources”.

4.1 வளர்ச்சிக் கொள்கைகளில் அரசாங்கத்தின் பங்கு

1. பாதுகாப்பு (அ) இராணுவம்

  • எதிரிகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பது இராணுவத்தின் அத்தியாவசியப் பணியாகக் கருதப்படுகிறது. 
  • பாதுகாப்புப் படைகளை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் மத்திய அரசாங்கமே பொறுப்பாகும்.

Defence: 

  • This is an essential security function to protect our nation from our enemies. 
  • The Union government is responsible for creating and maintaining defence forces.

2 அயல்நாட்டுக் கொள்கை

  • இன்றைய உலகில் நாம் அனைத்து உலக நாடுகளுடனும் நட்பான உறவைப் பராமரித்தல் அவசியமானதாகும்.
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதன் மூலமும், மூலதனம் மற்றும் உழைப்பைப் பரிமாற்றம் செய்வதன் மூலமும் நாம் நல்ல பொருளாதார உறவினை பராமரிக்க முடியும். 
  • இந்த சேவையை மத்திய அரசாங்கம் வழங்குகிறது.

Foreign policy: 

  • In today’s world, we need to maintain friendly relationships with all the other countries in the world. 
  • We should also maintain cordial economic relationships through exports and imports, sending and receiving investments and labour. 
  • This service is also provided by the Union government.

3. அவ்வப்போது தேர்தல்களை நடத்துதல்

  • இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நாம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்குப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றோம்.
  • இதேபோல், மாநில அரசுகள் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தலை மாநிலத்திற்குள் நடத்துகிறது.

Conduct of periodic elections: 

  • India is a democratic country. We elect our representatives to Parliament and state assemblies. 
  • Similarly the state governments conduct elections to local bodies within the state.

4. சட்டம் மற்றும் ஒழுங்கு

  • நடுவண் மற்றும் மாநில அரசுகள் நமது உரிமைகள், சொத்துக்களைப் பாதுகாப்பதற்கும், நமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் ஏராளமான சட்டங்களை இயற்றுகின்றன. 
  • பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நீதிமன்றங்களை அமைத்துள்ளன.
  • மேலும், அந்தந்த மாநிலங்களில் காவல் துறையை நிர்வகிக்கும் பொறுப்பை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்கின்றன.

Law and order: 

  • Both the Union and state governments enact numerous laws to protect our rights, properties and to regulate our economy and society. 
  • To settle disputes, the Union government has a vibrant judicial system. 
  • State governments take the responsibility for administering the police force in respective states.

5. பொது நிர்வாகம் மற்றும் பொதுப்பண்டங்களை வழங்குதல்

  • அரசாங்கம் பொதுவாக பல்வேறு துறைகள் மூலம் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் நிர்வகிக்கிறது.
  • வருவாய் துறை, பள்ளிகள், மருத்துவமனைகள், கிராம வளர்ச்சிமற்றும் நகர்ப்புற வளர்ச்சி போன்றவைகள் எடுத்துக்காட்டுகளாகும் 
  • உள்ளூர் அரசாங்கங்கள், உள்ளூர் சாலைகள், வடிகால், குடிநீர், குப்பை சேகரிப்பு மற்றும் அகற்றல் போன்ற பொதுப்பணிகளை வழங்குகின்றன.

Public administration and provision of public goods: 

  • The government generally administers the economy and society through various departments, 
  • for example, revenue department, schools, hospitals, rural development and urban development. 
  • The local governments provide public goods like local roads, drainage, drinking water and waste collection and disposal.

6. வருமான மறுபகிர்வு மற்றும் வறுமை ஒழிப்பு

  • முன்னதாக குறிப்பிடப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்க அரசாங்கங்கள் பல்வேறான வரிகளை வசூலிக்கின்றன.
  • அதிக வருமானம் உடையவர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிகவரி செலுத்தக்கூடிய வகையில் வரி வசூலிக்கப்படுகிறது.
  • சில அடிப்படைத் தேவைகளான உணவு, தங்குமிடம், உடை, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் மாத வருமானம் போன்றவற்றினை ஏழைகளுக்கு வழங்குவதற்காக அரசாங்கம் பணத்தைச் செலவிடுகின்றது.
  • மேலும், வறுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையும் செயல்படுத்துகிறது.

Redistribution of income and poverty alleviation: 

  • Governments collect various taxes to finance the various activities mentioned earlier. 
  • The taxes are collected in a way that the high-income people can bring in more tax revenue to the government than the poor. 
  • The governments also spend money such that the poor are given some basic necessities of life like food, shelter, clothing education, health care and monthly income to the very poor persons. 
  • Thus collecting taxes and spending for the poor to reduce poverty.

7. பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துதல்

  • நடுவண் அரசு, பணத்தின் அளிப்பு, வட்டி வீதம், பணவீக்கம் மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றை இந்திய மைய வங்கி மூலம் கட்டுப்படுத்துகிறது.
  • இதன் விகிதங்களில் அதிக ஏற்ற இறக்கங்களை களைவதே மையவங்கியின் முக்கிய நோக்கமாகும்.
  • இந்திய பங்குமற்றும் பரிவர்த்தனைவாரியம் (SEBI) மற்றும் இந்திய போட்டி ஆணையம் (CCI) போன்ற பல்வேறு முகவர்கள் மூலமாகவும் மத்திய அரசு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகிறது.
  • இந்தியாவில் உள்ள அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மலிவுவிலையில் அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றன.

Regulate the economy: 

  • The Union government, through the Reserve Bank of India, controls money supply and controls the interest rate, inflation and foreign exchange rate. 
  • The main objective is to remove too much of fluctuation in these rates. 
  • The Union Government also controls the economy through various other agencies such as Securities Exchange Board of India and Competition Commission of India. 
  • All the governments in India run public sector enterprises to provide important goods and services at affordable rates to the people.

4.2 வரி

  • "வரி" என்ற சொல் "வரிவிதிப்பு" என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் மதிப்பீடு என்பதாகும்.
  • வரி விதிப்பு என்பது அரசாங்கம் தனது செலவினங்களுக்காகப் பொது மக்களிடமும், பெரு நிறுவனங்களிடமும் வரிகளை விதித்து வருவாயை உருவாக்கும் ஒரு வழிமுறையாகும்.
  • அரசு இயந்திரங்களின் செயல்பாட்டிற்காக வரியின் மூலம் நிதி திரட்டுவது வரிவிதிப்பின் முக்கிய நோக்கமாகும்.
  • வரிவிதிப்பு முறை "நல அரசு" என்ற கருத்தை மையமாகக் கொண்டு செயல்படுகிறது.
  • வரிகள் என்பது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி நேரடியாக அரசாங்கத்திற்கு செலுத்துகின்ற கட்டாய கட்டணமேயாகும்.
  • பேராசிரியர் செலிக்மேன் கருத்துப்படி, "வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும். அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி" என வரையறை கூறுகிறார்.
4.2 Tax
  •  The origin of the word "tax" is from "taxation," which means an estimate.
  • Taxation is a means by which governments finance their expenditure by imposing charges on citizens and corporate entities. 
  • The main purpose of taxation is to accumulate funds for the functioning of the government machinery. 
  • Tax has come into forefront on account of the new concept of “welfare state”.
  • Taxes are compulsory payments to government without expectation of direct return (or) benefit to the tax payer. 
  • Prof. Seligman also defined a tax as “a compulsory contribution from a person to the government to defray the expenses incurred in the common interest of all, without reference to special benefits conferred.”

வரி அமைப்பு

  • ஒவ்வொரு வகையானவரியும் சில நன்மைகள் மற்றும் தீமைகளைப் பெற்றுள்ளன. நாம் கொண்டுள்ள வரி அமைப்பு, பல்வேறு வகையான வரிகளின் தொகுப்பாகும். ஆடம் ஸ்மித் முதல் பல பொருளாதார வல்லுநர்கள் வரி விதிப்புக் கொள்கைகளைக் கொடுத்துள்ளனர். அவைகளில் பொதுவான வகைகளை இங்கு நினைவு கூறுவது முக்கியமானதாகும்.

1. சமத்துவ விதி

  • வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். பணக்காரர்கள் ஏழைகளை விட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்தவேண்டும், ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.

2 உறுதி விதி

  • ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரிமுறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.

3. சிக்கன மற்றும் வசதி விதிவரி

  • எளிமையானதாக இருந்தால், வரி வசூலிப்பதற்கான செலவு (வரி செலுத்துவோர் செலவு + வரி வசூலிப்போர் செலவு) மிகக் குறைவாக இருக்கும். மேலும், ஒரு நபருக்கு வரி செலுத்தப் போதுமான பணம் கிடைக்கும் நேரத்தில் வரி வசூலிக்கப்பட வேண்டும். இது வசதிக்கான வரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு வசதியான வரி, வரி வசூலிக்கும் செலவை குறைக்கிறது.

4. உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி

  • அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும். நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும். இது உற்பத்தித் திறன் வரியாகும். மக்கள் தங்கள் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்கள். எனவே, மக்கள் வருமானம் அதிகரித்தால் தானாகவே அதிக வரி வருவாயை செலுத்தும் வகையில் வரி அமைப்பு வடிவமைக்கப்பட வேண்டும். இது நெகிழ்ச்சி வரி எனப்படுகிறது.

Tax system

  • Every type of tax has some advantages and some disadvantages. So we have a tax system, that is, a collection of variety of taxes. From Adam Smith, many economists have given lists of canons of taxation. It is important to recall those common among them for discussion here.

1. Canon of equity

  • Since tax is a compulsory payment, all economists agree that equity is the cardinal principle in designing the tax system. The rich should pay more tax revenue to government than the poor, because rich has more ability than the poor to pay the tax.

2. Canon of Certainty

  • Government should announce in advance the tax system so that every tax payer will be able to calculate how much tax amount one may have to pay during a year to the government.

3. Canons of Economy and Convenience

  • If the tax is simple, then the cost of collecting taxes (tax payer cost + tax collector cost) will be very low. Further, tax should be collected from a person at the time he gets enough money to pay the tax. This is called canon of convenience. A convenient tax reduces the cost of collecting tax.

4. Canons of Productivity and Elasticity

  • Government should choose the taxes that can get enough tax revenue to it. It should choose a few taxes that can fetch more tax revenue, instead of lots of taxes. This is canon of productivity. Tax is paid by the people out their incomes. Therefore the tax system should be designed in such a way that the people automatically pay more tax revenue if their incomes grow. This is called canon of elasticity.

வரிகள் ஏன் விதிக்கப்படுகிறது?

  • வரலாற்று காலத்திலிருந்தே நாடுகளும் அதற்கு இணையாக செயல்படும் அரசுகளும் வரிவிதிப்பின் மூலம் பெற்ற நிதியிலிருந்தே பல செயல்களை நிறைவேற்றியிருக்கின்றது.
  • அவைகளில் சில பொருளாதார உள்கட்டமைப்புச் செலவுகள், (போக்குவரத்து, துப்புரவு, பொது பாதுகாப்பு, கல்வி, உடல்நலம்) இராணுவம், அறிவியல் ஆராய்ச்சி, கலாச்சாரம், கலைகள், பொதுப்பணிகள், பொதுக் காப்பீடுகள் மற்றும் அரசாங்க செயல்பாடுகள் போன்றவைகளாகும்.
  • வரிகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திறன் நிதித் திறன் என்று கூறப்படுகிறது.
  • செலவானது, வரி வருவாயைவிட அதிகமாக இருக்கும்போது ஒரு அரசாங்கம் கடனை திரட்டுகிறது.
  • வரிகளின் ஒரு பகுதி கடந்த காலப் பணிகளுக்கான கடன்களுக்குப் பயன்படுத்தப்படலாம்.
  • அரசாங்கம் மக்களின் நலனிற்கும் பொது சேவைகளுக்கும் வரிகளைப் பயன்படுத்தலாம்.
  • இந்த சேவைகளில் கல்வி முறைகள், முதியோருக்கான ஓய்வூதியம், வேலையின்மை சலுகைகள் மற்றும் பொது போக்குவரத்து ஆகியவை அடங்கும்.
  • ஆற்றல், நீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை மக்களுக்கான பயன்பாடுகளாகும்.

Why Taxes?

  • States and their functional equivalents throughout history have used money provided by taxation to carry out many functions. 
  • Some of these include expenditures on economic infrastructure (transportation, sanitation, public safety, education, healthcare systems, to name a few), military, scientific research, culture and the arts, public works and public insurance and the operation of government itself. 
  • A government's ability to raise taxes is called its fiscal capacity.When expenditures exceed tax revenue, a government accumulates debt. 
  • A portion of taxes may be used to service past debts. Governments also use taxes to fund welfare and public services. 
  • These services can include education systems, pensions for the elderly, unemployment benefits and public transportation. 
  • Energy, water and waste management systems are also common public utilities.

4.3 வரிகளின் வகைகள்

  • நேர்முக வரிகள் நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். இவ்வரியை மற்றவர் மீது மாற்ற முடியாது.
  • பேராசிரியர் ஜே.எஸ். மில்லின் கருத்துப்படி, நேர்முக வரி என்பது யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க வேண்டும்.
  • சில நேர்முக வரிகள்: வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

Direct Taxes

  • A tax imposed on an individual or organisation, which is paid directly, is a direct tax. The burden of a direct tax cannot be shifted to others. 
  • J.S. Mill defines a direct tax as “one which is demanded from the very persons who it is intended or desired should pay it.” 
  • Some direct taxes are income tax, wealth tax and corporation tax.

வருமான வரி

  • வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
  • இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.
  • இவ்வரி வசூலிக்கப்படும் விகிதம் வருமான அளவைப் பொறுத்து மாறுபடக்கூடியதாகும்.

Income tax

  • Income tax is the most common and most important tax levied on an individual in India. 
  • It is charged directly based on the income of a person. 
  • The rate at which it is charged varies, depending on the level of income.

நிறுவனவரி

  • இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது. இது இந்தியாவில் அமைந்துள்ள சிறப்பு உரிமைகளில், மூலதன சொத்துக்களின் விற்பனையிலிருந்து வரும் வட்டி இலாபங்கள், தொழில் நுட்ப சேவைகள் மற்றும் ஈவுத் தொகைகளுக்கான கட்டணம் போன்றவற்றிலிருந்து வசூலிக்கப்படுகிறது.
  • இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

Corporate tax

  • This tax is levied on companies that exist as separate entities from their shareholders. It is charged on royalties, interest gains from sale of capital assets located in India and fees for a technical services and dividends.
  • Foreign companies are taxed on income that it arises in India.



சொத்து வரி (அ) செல்வ வரி

  • சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
  • ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் நடப்பு சந்தை மதிப்பின் அடிப்படையில் விதிக்கப்படுகிறது.
  • இவ்வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

Wealth tax

  • Wealth tax is charged on the benefits derived from property ownership. 
  • The same property will be taxed every year on its current market value. 
  • The tax is levied on the individuals and companies alike.
  • இந்தியாவில் அரசாங்கத்தினால் மூன்று அடுக்குகள் வரி வசூலிக்கப்படுகிறது.
  • நடுவண் அரசால் எளிதில்வசூலிக்கக்கூடியவரிகள் உள்ளன.
  • இந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து நேரடி வரிகளும் நடுவண் அரசால்வசூலிக்கப்படுகின்றன.
  • பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரி நடுவண் மற்றும் மாநில அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது.
  • சொத்துக்களுக்கான வரி உள்ளூர் அரசாங்கங்களால் வசூலிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் நேரடி வரிகளை விட மறைமுக வரி மூலம் அதிக வரி வருவாய் வசூலிக் கப்படுகின்றது.
  • இந்தியாவின் முக்கிய மறைமுக வரி சுங்கவரிமற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST) ஆகும்.
  • In India taxes are collected by all the three tiers of government. 
  • There are taxes that can be easily collected by the Union government. 
  • In India almost all the direct taxes are collected by the Union governments. 
  • Taxes on goods and services are collected by both Union and State governments. 
  • The taxes on properties are collected by local governments.
  • In India we collect more tax revenue through indirect taxes than through direct taxes. 
  • The major indirect taxes in India are customs duty and GST.

மறைமுக வரிகள்

  • ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது "மறைமுகவரி" எனப்படும்.
  • வரி விதிக்கப்பட்டவர் ஒருவர், வரி சுமையை சுமப்பவர் வேறு ஒருவராவார்.
  • ஆகையால், மறைமுகவரியில் வரியைச் செலுத்துபவர் வரி சுமையை சுமப்பவர் அல்லர்.
  • சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.

Indirect Taxes

  • If the burden of the tax can be shifted to others, it is an indirect tax. 
  • The impact is on one person while the incidence is on the another person. 
  • Therefore, in the case of indirect taxes, the tax payer is not the tax bearer.
  • Some indirect taxes are stamp duty, entertainment tax, excise duty and goods and service tax (GST).
முத்திரைத்தாள் வரி 
  • முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

Stamp duty

  • Stamp duty is a tax that is paid on official documents like marriage registration or documents related to a property and in some contractual agreements.
பொழுதுபோக்கு வரி 
  • எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
  • உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

Entertainment tax

  • Entertainment tax is a duty that is charged by the government on any source of entertainment provided. 
  • This tax can be charged on movie tickets, tickets to amusement parks, exhibitions and even sports events.

சுங்கத் தீர்வை (அல்லது) கலால் வரி

  • சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட, உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.
  • இவ்வரி பொதுவாக விற்பனை வரி போன்ற மறைமுக வரிகளுக்கு கூடுதலாக விதிக்கப்படுகிறது.

Excise duty

  • An excise tax is any duty on manufactured goods levied at the movement of manufacture, rather than at sale. 
  • Excise is typically imposed in addition to an indirect tax such as a sales tax.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (GST - Goods and Service Tax)

  • பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
  • இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
  • மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
  • இதன் குறிக்கோள் "ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி" என்பதாகும். இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று பல முனை வரி' இல்லாமல் இது 'ஒரு முனை வரி' ஆகும்.
  • 1954ஆம் ஆண்டு முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு பிரான்ஸ் ஆகும்.

Goods and service tax (GST)

  • The goods and service tax (GST) is one of the indirect taxes. 
  • The GST was passed in Parliament on 29 March 2017. 
  • The act came into effect on 1 July 2017. 
  • The motto is one nation, one market, one tax.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)

மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்)

  • மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி, பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்)

  • மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை , கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம் (இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி வரி).

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST): (மாநிலங்களுக்கு இடையே)

  • நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%) காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து பண்டங்களுக்கும் இந்தவரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

Structure of Goods and Service Tax (GST)
State Goods and Service Tax (SGST): Intra state (within the state)

  • VAT/sales tax, purchase tax, entertainment tax, luxury tax, lottery tax and state surcharge and cesses

Central Goods and Service Tax (CGST): Intra state (within the state)

  • Central Excise Duty , service tax, countervailing duty, additional duty of customs, surcharge, education and secondary/higher secondary cess

Integrated Goods and Service Tax (IGST): Inter state (integrated GST)

  • There are four major GST rates: (5%, 12%, 18% and 28%) Almost all the necessities of life like vegetables and food grains are excempted from this tax.

4.4 வரி எவ்வாறு விதிக்கப்படுகிறது?

  • வளர்வீத வரி விதிப்பு முறை, விகித வரி விதிப்பு முறை மற்றும் தேய்வுவீத வரி விதிப்பு முறை என அரசாங்கம் வரிகளை விதிக்கின்றன.

4.4 How Are Taxes Levied?

  • Tax is levied by the government progressively, proportionately as well as regressively.

வளர்வீத வரி விதிப்பு முறை

  • வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத்தளம் அதிகரிக்கும்போது(பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருகி) அதிகரிக்கிறது.
  • ஒரு வளர்வீத வரியைப் பொறுத்த வரையில் வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கிறது.
Progressive tax
  • Progressive tax rate is one in which the rate of taxation increases (multiplier) as the tax base increases (multiplicand). 
  • In the case of a progressive tax, When income increases, the tax rate also increases.


விகித வரி விதிப்பு முறை அல்லது விகிதாச்சார வரி விதிப்பு முறை

  • ஒரு நிலையான அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளுக்கு விதிக்கப்படும் வரி, விகித வரி விதிப்பு முறை எனப்படுகிறது.
  • அனைத்து வரி செலுத்துவோரும், தங்கள் வருமானத்தில் அதே விகிதத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.
 Proportionate taxes 
  • Tax levied on goods and service in a fixed portion is known as proportionate taxes. 
  • All tax payers contribute the same proportion of their incomes.

தேய்வுவீத வரி விதிப்பு முறை

  • இது அதிக வருமானம் ஈட்டுபவர்களை விட, குறைந்த வருமானம் ஈட்டுபவர்களிடம் அதிகவரி விகிதம் விதிப்பதைக் குறிக்கிறது.
  • இது வளர்வீத வரி விதிப்பு முறைக்கு நேர் எதிர் மாறானதாகும்.
Regressive Taxes 
  • It implies that higher the rate of tax lower the income groups than in the case of higher income groups.
  •  It is a very opposite of progressive taxation.

4.5 கருப்பு பணம் (Black Money)

  • கருப்பு பணம் என்பது கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
  • வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் "கருப்பு பணம்" என்று அழைக்கப்படுகிறது.

Black Money

  • Black money is funds earned on the black market on which income and other taxes have not been paid. 
  • The unaccounted money that is concealed from the tax administrator is called black money.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்

  • கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன. அவை

1. பண்டங்கள் பற்றாக்குறை

2. உரிமம் பெறும் முறை

3. தொழில் துறையின் பங்கு

4. கடத்தல்

5. வரியின் அமைப்பு

Causes of Black Money

  • Several sources of black money are identified as causes.

1. Shortage of goods
2. Licensing proceeding
3. Contribution of the industrial sector
4. Smuggling
5. Tax structure

4.6 வரி ஏய்ப்பு (Tax Evasion)

  • தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும். வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை 
  1. வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல் 
  2. விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
  3. மறைக்கப்பட்ட பணம். 
  4. கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.

4.6 Tax Evasion

  • Tax evasion is the illegal evasion of taxes by individuals, corporations and trusts. Tax evasion activities included 
  1. Underreporting income  
  2. Inflating deductions or expenses 
  3. Hiding money 
  4. Hiding interest in offshore accounts

வரி ஏய்ப்பும், அபராதமும்

  1. ஒரு நபர் வரி ஏய்ப்பு செயலை முழுமையாகச் செய்தால், அவர் மோசமான குற்றச்சாட்டுகளை சந்திக்க நேரிடும். வரி ஏய்ப்பு அபாரதங்களில் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், அதிக அளவு அபராதமும் அடங்கும்.
  2. பிரதிவாதிகள், வழக்கு விசாரணைக்கான செலவுகளைச் செலுத்த உத்தரவிடப்படலாம்.
  3. வரிஏய்ப்பிற்கான அபராதம், குற்றத்தின் தன்மை , மற்றும் அதன் தீவிரத்தினைப் பொறுத்து கடுமையானதாக இருக்கும்.

Tax evasion penalties 

  1. If a person wilfully commits the act of tax evasion, he may face felony charges. Tax evasion penalties include imprisonment of up to five years and high amount as fines. 
  2. The defendant may also be ordered to pay for the costs of prosecution. 
  3. Tax evasion penalties can be harsh, depending on the severity of the crime.

4.7 வரிகளும் முன்னேற்றமும்

  • பொருளாதாரத்தை முன்னேற்றுவதில் வரி விதிப்பின் பங்கு பின்வருமாறு.

4.7 Taxes and Development

  • The role of taxation in developing economies is as follows.

1. வளங்களைத் திரட்டுதல்

  • வரிவிதிப்பு அரசாங்கத்திற்கு கணிசமான அளவிற்கு வருவாய் திரட்டுவதற்கு உதவுகிறது. 
  • குறிப்பாக நேர்முக வரிகளான தனிநபர் வருமானவரி, நிறுவனவரி மற்றும் மறைமுக வரிகளான ஆயத்தீர்வை, சுங்கவரி ஆகியவற்றின் மூலமாக வரி வருவாய் திரட்டப்படுகிறது.

Resource mobilisation: 

  • Taxation enables the government to mobilise a substantial amount of revenue. 
  • The tax revenue is generated by imposing direct taxes such as personal income tax and corporate tax and indirect taxes such as customs duty, excise duty, etc.

2. வருமான ஏற்றதாழ்வுகளை குறைத்தல்

  • வரியின் மூலம் சமத்துவமுறையை உருவாக்கலாம். 
  • குறிப்பாக, நேர்முக வரியில் வளர்வீத வரிமுறை பின்பற்றப்படுகிறது. 
  • அதேபோல சில மறைமுக வரியான ஆடம்பரப் பண்டங்களின் மீது விதிக்கப்படும் வரி வளர்வீத வரியின் தன்மையுடையதாகும்.

Reduction inequalities of income: 

  • Taxation follows the principle of equity. 
  • The direct taxes are progressive in nature. 
  • Also certain indirect taxes, such as taxes on luxury goods, is also progressive in nature.

3. சமூக நலன் வரி விதிப்பு

  • சமூக நலனை உருவாக்குகிறது. சில விரும்பத்தகாத பொருட்களான மதுபானங்கள் போன்ற பொருட்களின் மீது அதிகமாக வரி விதிப்பதன் மூலம் சமூக நலன் பாதுகாக்கப்படுகிறது.

Social welfare: 

  • Taxation generates social welfare. Social welfare is generated due to higher taxes on certain undesirable products like alcoholic products.

4. அந்நியச் செலாவணி

  • வரிவிதிப்பு ஏற்றுமதியை ஊக்குவிப்பதுடன் இறக்குமதியைத் தடுக்கிறது. பொதுவாக, வளரும் நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளும் ஏற்றுமதி பொருட்களுக்கு வரிகளை விதிப்பதில்லை.

Foreign exchange: 

  • Taxation encourages exports and restricts imports, Generally developing countries and even the developed countries do not impose taxes on export items.

5. வட்டார முன்னேற்றம்

  • வட்டார வளர்ச்சியில் வரி விதிப்பு முக்கிய பங்கினை வகிக்கிறது. பின் தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்காக வரி சலுகையையும், வரி விலக்குகளையும் அளிப்பதன் மூலம், அப்பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு வணிக நிறுவனங்களை தூண்டுகிறது.

Regional development: 

  • Taxation plays an important role in regional development, Tax incentives such as tax holidays for setting up industries in backward regions, which induces business firms to set up industries in such regions.

6. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தல்

  • வரி என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துப் கருவிகளுள் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது அரசாங்கம் பண்டங்கள் மீதான வரி விகிதத்தை குறைப்பதன் மூலம் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

Control of inflation: 

  • Taxation can be used as an instrument for controlling inflation. Through taxation the government can control inflation by reducing the tax on the commodities.

வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் 

Difference between Tax and other Payments

வரி (Tax)

  • வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாக செலுத்துகின்ற செலுத்துகையாகும்.
  • Tax is compulsory to the government without getting any direct benefits
  • பொதுவாக அரசாங்கத்தின் வருமான இனங்களில் ஒன்றாக வரி மேலோங்கியுள்ளது. 
  • If the element of revenue for general purpose of the state predominates, the levy becomes a tax 
  • வரி என்பது கட்டாய செலுத்துகை ஆகும்.
  • Tax is a compulsory payment
  • ஒரு தனிப்பட்ட நபரின் மீது வரி விதிக்கப்பட்டால், அதனை அவர் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர் தண்டிக்கப்படுவார்.
  •  If tax is imposed on a person, he has to pay it; otherwise he has to be penalised
  • வரி செலுத்துபவர்கள் நேரடியாக எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது. 
  • In this case, tax payer does not expect any direct benefit.
  • உதாரணம்: வருமான வரி, அன்பளிப்பு வரி, சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி (VAT)
  • Example: Income tax, gift box, wealth tax, VAT etc.

கட்டணம் (Payment)

  • கட்டணம் என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்.
  • Fee is the payment for getting any service
  • கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட நன்மைகளுக்கான தனிச் சலுகைகளைப் பெற்றிருந்தாலும், பொது நல ஒழுங்கு முறையின் சிறப்பான முதன்மை நோக்கமாகும்.
  • While a fee is a payment for a specific benefit privilege although the special to the primary purpose of regulation in public interest.
  • கட்டணம் (Fee) என்பது தன்னார்வமாக செலுத்துவதாகும்.
  • Fee is a voluntary payment.
  • மாறாக, பணிகளை பெற விருப்பமில்லை எனில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
  • On the other hand fee is not paid if the person do not want to get the service
  • கட்டணம் செலுத்துவதன் மூலம் நுகர்வோர்கள், நேரடியாக சலுகைகளைப் பெறுகின்றனர். 
  • Fee payer can get direct benefit for paying fee.
  • உதாரணம்: முத்திரை வரி, ஓட்டுநர் உரிமக் கட்டணம், அரசாங்க பதிவுக் கட்டணம்.
  • Examples: stamp fee, driving license fee, government registration fee
| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Sunday, October 25, 2020

GS-10- ECONOMICS - தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | Industrial Clusters in Tamil Nadu

தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்
  • பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் "தொழிற்சாலை" என்று அழைக்கப்படுகிறது.
  • நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்திச் செய்வது தொழில்மயமாதல் எனப்படும்.
  • தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் தன்மை, தொழில் தொகுப்புகளின் முக்கியத்துவம் மற்றும் தமிழ்நாட்டில் தொழில் தொகுப்புகள் எவ்வாறு முன்னேறின என்பதையும் தொழில்களை மேம்படுத்துவதில் அரசு எடுக்கும் முயற்சிகளையும் அதன்பங்கினைப்பற்றியும் இப்பாடப்பகுதியில் நாம் அறிந்து கொள்வோம்.
  • Generally, “any human activity which is engaged in the conversion of raw materials into readily usable materials is called an industry”. 
  • Industrialisation refers to the process of using modern techniques of production to produce goods that are required by both consumers and other producers on a large scale. 
  • In this chapter we will learn the nature of industrialisation of Tamil Nadu, importance of industrial clusters, how industrial clusters have developed in Tamil Nadu and the role of government initiatives in promoting industries.

தொழில்மயமாதலின் முக்கியத்துவம்

  • தொழிற்சாலைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் முன் நாம் ஏன் வேளாண்மையின் வளர்ச்சியுடன் அதன் பொருளாதார வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு குறைகிறது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • முதலாவதாக உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக உள்ளது.
  • எனவே, ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து, வருமானம் அதிகரிக்கும் பொழுது நுகர்வோர் வேளாண்மை உற்பத்திப் பொருள்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் செலவிடுகிறார்கள்.
  • இரண்டாவதாக, நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவால் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது.
  • உணவுப் பொருள்கள் நீண்ட தூரத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுப் பதப்படுத்தி முத்திரையிடப்படுகிறது.
  • இதன் விளைவாக நுகர்வோர்கள் வாங்கும் விலையைவிட விவசாயிகள் பெறும் விலை குறைவாக உள்ளது. 
  • மூன்றாவதாக, நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்களை ஈர்த்துக்கொள்வதில் சில வரையறைகளை பின்பற்ற நேரிடுகிறது.
  • பெருமளவிலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பியிருப்பதாலும், கூலியை அதிகரிக்க வாய்ப்பில்லாததாலும் வறுமையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கிறது.
  • இந்த அனைத்து காரணிகளின் விளைவாக வேளாண்துறையில் இருந்து விலகி, பொருளாதாரமானது உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பின் அடிப்படையில் ஒரு தேவையை ஏற்படுத்துகிறது.

Importance of Industrialisation

  • To understand importance of industries, we need to understand why the share of agriculture in an economy's income and employment decreases with development. 
  • First, demand for food remains constant with regard to income. 
  • Therefore, as an economy grows and incomes increase, consumers tend to spend a lesser share of their income on products from the agricultural sector.
  • Second, even the food that is consumed is subject to more transformation. 
  • Food products are taken over longer distances, processed and branded. This also requires that food products have to be preserved. 
  • As a result, the prices that farmers get tend to be much less compared to the prices at which consumers buy.
  • Third, there are limits to the ability of agriculture to absorb labour due to the declining marginal productivity of land. 
  • Wages too cannot therefore increase and as a result poverty levels may remain high, especially when more and more people continue to rely on agriculture for their livelihood.
  • Due to all these factors, there is a need for an economy’s production and employment base to diversify away from agriculture.
தொழில்மயமாதல் ஒரு பொருளாதார வளர்ச்சிக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது?
  • முன்னர் கூறியது போல் ஒருபொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையான உள்ளீடுகளை உருவாக்குவது அவசியம்.
  • வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் டிராக்டர்கள் போன்ற தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகிறது.
  • இரண்டாவதாக, உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது.அதே போல் வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பணிகள் தொழிற்சாலைகளின் உற்பத்தியைச் சார்ந்தே உள்ளது.
  • மூன்றாவதாக, நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தித்திறனை அளிக்கின்றன.இதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பண்டங்களின் உற்பத்தி செலவும் குறைகிறது.இதன் காரணமாக மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவவும் மற்றும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது. 
  • நான்காவதாக, அத்தகையப் பண்டங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தொழில்மயமாதல் வேளாண்மையில் ஈடுபடும் அதிக உழைப்பாளர் சக்தியை ஈர்க்க உதவுகிறது.எனவே வேலைவாய்ப்பை உருவாக்குவது "தொழில் மயமாதலின்" ஒரு முக்கிய நோக்கமாகும். 
  • ஐந்தாவதாக, தொழில்மயமாதலுக்கு நன்மை தருவது "தொழில்நுட்ப மாற்றமே" ஆகும்.நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்மயமாதலின் முறைகளையும் அதன் வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முடிகிறது.அவற்றின் விளைவாக உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் அதாவது, உழைப்பாளரின் உள்ளீடு அதிகரித்தது. இதனால் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது.
  • ஆறாவதாக, வருமானம் அதிகரிப்பு பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவைக்கு வழி வகுக்கிறது. 

What benefits does industrialisation bring to an economy?

  • As stated earlier, it is essential to produce inputs to other producers in an economy. Even agriculture requires inputs from industry such as fertilisers and tractors to increase productivity. 
  • Second, a market exists for both producers and consumer goods. Even services like banking, transport and trade are dependent on production of industrial goods.
  • Third, by using modern methods of production, industries contribute to better productivity and hence lower cost of production of all goods produced. It therefore helps people to buy goods at a cheaper rate and help create demand for more products.
  • Fourth, through such expansion of production, industrialisation helps to absorb the labour force coming out of agriculture. Employment generation is therefore an important objective of industrialisation.
  • Fifth, a related advantage of industrialisation is therefore technological change. Through use of modern techniques, industrialisation contributes to learning of such methods and their improvement. As a result labour productivity, ie, output per unit of labour input increases, which can help workers earn higher wages.
  • Sixth, expanding incomes lead to more demand for goods and services.
தொழிற்சாலைகளின் வகைகள் 
  • தொழிற்சாலைகளை கீழ்க்கண்ட வகைகளில் வகைப்படுத்தலாம்.
அ) பயனர்கள் : 
  • வெளியீடுகளை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது "நுகர்வோர் பண்டங்கள் துறை" என்றும் வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது "மூலதன பண்டங்கள் துறை" என்றும் அழைக்கப்படுகிறது. சிமெண்ட் மற்றும் எஃகு போன்ற பிற தொழில்களுக்கு மூலப்பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இத்தகைய தொழில்கள் அடிப்படை பண்டங்கள் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஆ) பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை : 
  • வேளாண் பதப்படுத்துதல், நெசவுத்துறை, ரப்பர் உற்பத்தி, தோல் பொருள்கள் போன்ற மூலப் பொருள்களை பயன்படுத்தும் அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துகின்றனர்.
இ) நிறுவன உரிமையாளர்கள் : 
  • தொழிற்சாலைகளானது தனியாருக்கு சொந்தமானதாகவும், பொது உரிமையாளர் (மத்திய அல்லது மாநில அரசாங்கத்தால்) தனியார் மற்றும் பொதுத்துறை (கூட்டுறவாக) இரண்டிற்கும் சொந்தமானதாகவும் அல்லது கூட்டுறவுக்கு சொந்தமானதாகவும் உள்ளன.
ஈ) அளவு : 
  • நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி, விற்பனை, முதலீடு அல்லது வேலைவாய்ப்பு அவற்றின் அளவின் அடிப்படையில் பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது நடுத்தரமாகவோ இருக்கலாம். சிறிய நிறுவனங்களை விட அளவில் சிறியதாக இருக்கும் மிகச்சிறிய நிறுவனங்களும் உள்ளன.
  • சிறிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
  • முதலாவதாக, இது பெரிய அளவிலான துறையை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது. பெரிய நிறுவனங்களானது மிகவும் மேம்படுத்தப்பட்ட மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் அது போதுமான அளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை .
  • இரண்டாவதாக, சிறிய அளவிலான துறை குறைந்த எண்ணிக்கையிலான சலுகைப் பெற்றப்பின்னணியில் இருந்து ஏராளமான தொழில் முனைவோரை வெளிப்படுத்துகிறது.
  • உலகின் பல்வேறு பகுதிகளில் தொழில்மயமாதல் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சிறிய நிறுவனங்கள் புவியியல் ரீதியாக குறிப்பிட்ட இடங்களில் குவிந்து உற்பத்தி மற்றும் கற்றலின் மூலம் பெரிய நிறுவனங்களின் திறன் இல்லாவிட்டாலும் அதற்கு ஈடு கொடுக்கும் அளவில் உள்ளதென நம்பப்படுகிறது. 
  • இத்தகைய சிறிய நிறுவனங்களின் தொகுப்புகளே "தொழில்துறை தொகுப்புகள்" என்று அழைக்கப்படுகின்றன.

Types of Industries 

  • Industries can be classified on the basis of 
(a) Users: 
  • If the output is consumed by the final consumer, it is called a consumer goods sector. If the output is consumed by another producer, it is called a capital goods sector. There are industries that produce raw materials for other industries such as cement and steel. Such industries are called basic goods industries.
(b) Type of Inputs Used: 
  • Industries are also classified based on the kind of raw material used such as agro-processing, textiles sector, rubber products, leather goods, etc. 
(c) Ownership: 
  • Firms may be privately owned, publicly owned (by the government, central or state), jointly owned by the private and public sector, joint sector or cooperatively owned (cooperatives).
(d) Size: 
  • Firms may be large, small or medium based on their volume of output, sales or employment or on the basis of the amount of investments made. 
  • There are also micro or tiny enterprises that are smaller than even small firms. 
  • The small sector is seen as important for two reasons. 
  • One, it is believed to generate more employment than the large-scale sector, which is likely to use more advanced and automated technologies and therefore may not generate enough employment. 
  • Second, the small scale sector allows for a larger number of entrepreneurs to emerge from less privileged backgrounds. 
  • Based on experiences of industrialisation in different parts of the world, it is believed that when small firms specialising in one sector are geographically concentrated in specific locations, and linked to one another through production and learning, they tend to be equally if not more efficient than large scale enterprises. 
  • Such agglomerations of small firms are called industrial clusters.

தொழில் தொகுப்புகள் (Industrial Clusters)

  • தொழில் தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளை பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும்.
  • இங்கிலாந்தில் உலோகம் மற்றும் நெசவு தொழிலில் ஈடுபட்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாடுகளின் தொகுப்பினை புரிந்துகொள்ள 1920களில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞரான ஆல்ஃபிரட் மார்ஷல் அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்த பொழுது தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தார்.
  • 1980களில் இத்தாலியில் சிறிய நிறுவனங்கள் வெற்றி பெற்ற பின்னர் தான் மார்ஷலின் தொழில்துறை மாவட்டம் (Industrial District) என்ற கருத்து பிரபலமாக்கப்பட்டது.
  • இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் கொள்கை வகுப்பாளர்கள் தங்களுடைய நாட்டில் இது போன்ற பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்பினை உணர்ந்ததால் அவற்றினை ஊக்குவிக்கத் தொடங்கினர்.
  • Industrial clusters are groups of firms in a defined geographic area that share common markets, technologies and skill requirements. 
  • The advantages of industrial clusters or districts was first observed by the famous economist Alfred Marshall in the 1920s when he tried to understand the working of clusters of small firms in the metal-working and textile regions in England. 
  • While the notion of an ‘industrial district’ was developed by Marshall, it was only after the success of small firms in Italy in the 1980s that it became popular. 
  • Policy-makers in developing countries like India began to promote them actively as they realized that there several such small firm clusters in the country.

வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கிய பண்புகள் பின்வருமாறு:

  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல். 
  • துறை சார்ந்த சிறப்பு கவனம். 
  • நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமான அல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல், 
  • புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி.
  • நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம் 
  • பல்வேறு திறமையான தொழிலாளர்கள் சுய உதவி குழுக்கள் செயல்படுதல் 
  • வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு. 
போன்றவற்றால் நிறுவனங்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக ஒத்துழைத்து போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அவர்கள் தங்கள் திறனை விரிவுபடுத்த முடியும்.போட்டியின் மூலம் அவர்கள் மிகவும் திறமையானவர்களாக மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். 

The following are the chief characteristics of a successful cluster.

  • geographical proximity of small and medium enterprises (SMEs) 
  • sectoral specialisation
  • close inter-firm collaboration inter-firm competition based on innovation
  • a socio-cultural identity, which facilitates trust 
  • multi-skilled workforce 
  • active self-help organisations, and
  • supportive regional and municipal governments. 
Firms are therefore expected to collaborate and compete with one another at the same time. By collaborating, they can expand their capacity and also learn from one another. Through competition, they are forced to become more efficient.
 
தொழில்தொகுப்பு எவ்வாறு தோன்றுகிறது? 
  • தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
  • ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
  • சில துறைகளில், ஒரு பெரிய நிறுவனம் நிறுவப்படும்போது, அதன் உள்ளீடு மற்றும் பணிகளின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக தொழில் தொகுப்பு நிறுவனங்கள் தோன்றகூடும்.
  • சில நேரங்களில், ஒரு வட்டாரத்திலிருந்து மூலப்பொருள்களைப் பயன்படுத்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கங்கள் முடிவு செய்யலாம், இது தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு வழிவகுக்கும்.

How Do Clusters Originate?

  • Clusters may arise due to many factors. 
  • Certain clusters evolve over a long time in history when artisans settle in one locality and evolve over centuries. 
  • Handloom weaving clusters are one examples of this development. Or else, in some sectors, when a large firm is established, a cluster of firms may emerge to take care of its input and service requirements. 
  • At times, governments may decide to encourage manufacturing using raw materials from a region, which may also lead to emergence of clusters.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Saturday, October 24, 2020

GS-9- ECONOMICS - தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின் முன்னேற்றம் பற்றிய வரலாறு | Historical Development of Industrialisation in Tamil Nadu

BHEL
  • தமிழ்நாட்டில் காலனித்துவ முன்காலத்தில் நெசவு, கப்பல் கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு தயாரித்தல், மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமான சான்றுகள் உள்ளன. 
  • தமிழ்நாடு பரந்துவிரிந்த கடற்கரையைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது. 
  • தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியின் காரணமாகப் போட்டி நிலவி கைத்தறி நெசவுத்தொழில் வீழ்ச்சிக்கு காலனித்துவ கொள்கைகளும் பங்களித்தன. 
  • இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன. 
  • There is lot of evidence for presence of industrial activities such as textiles, ship-building, iron and steel making and pottery in precolonial Tamil Nadu. 
  • Given the vast coastline, the region has been involved in trade with both South-East and West Asia for several centuries. 
  • Colonial policies also contributed to the decline of the handloom weaving industry due to competition from machine-made imports from England. 
  • But some industries also developed during the colonial period.
காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதல் 
  • காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதலில் இரண்டு காரணிகள் பெரும்பங்கு வகித்தது. 
  • முதலாவதாக, மேற்கு மற்றும் தெற்கு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடி அதிகளவு நெசவுத்தொழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. 
  • இரண்டாவதாக, இந்த காலகட்டத்தில் வாணிபத்தின் வளர்ச்சியானது சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களின் அருகாமையில் தொழிற்சாலைகள் உருவாக காரணமாகவும் இருந்தது. 
  • மேலும், காலனித்துவ காலத்தில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறியது. 
  • துறைமுகம் சார்ந்த தொழில்களும் இதே காலகட்டத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருந்தது. 
  • தோல் உற்பத்தித் தொழிலானது திண்டுக்கல், வேலூர், ஆம்பூர் ஆகிய பகுதியில் நடைபெற்றது. 
  • தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் நெசவுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது, இயந்திரங்களின் தேவையையும் அதற்கான தொழிற்சாலைகளையும் நிறுவ காரணமாகவும் இருந்தது. 
  • இந்த நெசவு இயந்திரத் தொழிற்சாலைகளுக்கான இயந்திர உதிரிபாகங்கள், பழுது பார்த்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான சிறிய அளவிலான தொழிற்சாலைகள் அதிக அளவில் வளர்ச்சி அடைந்தன. 
  • 1930களில் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நீர் மின் சக்தியில் இருந்து மின்சார உற்பத்தி மற்றொருமுக்கிய தொழில் வளர்ச்சி ஆகும். 
  • நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இயந்திரங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின்சாரம் கிடைத்தமையால், வேளாண்மைத் தொழில் விரிவடைந்ததுடன் எண்ணெய் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்தது. 
  • இதன் காரணமாக, இதனை சார்ந்த எண்ணெய் இயந்திர உதிரிபாகங்கள் பழுதுபார்க்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உருவாயின. 
  • இதனால் உலோகத் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேளாண்மை சார்ந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன. 

Industrialisation in the Colonial Period

  • There are two sets of factors that have contributed to the process. 
  • The introduction of cotton cultivation in western and southern Tamil Nadu by the colonial government led to the emergence of a large-scale textile sector in these parts.
  • Second, increase in trade during this period led to industrial development around two of the most active ports in the region, Chennai and Tuticorin. 
  • Match factories too emerged during the colonial period in the Sivakasi region, which later on became a major centre for fireworks production and printing. 
  • Port-related activity too contributed to the growth of the region. 
  • Leather production was also taking place in Dindigul, Vellore and Ambur areas.
  • In Western Tamil Nadu, the emergence of textiles industries also led to demand and starting of textile machinery industry in the region. 
  • This textile machinery industry in turn led to the rise of a number of small workshops for repair and producers of machinery components. 
  • Another major development in the western region is the introduction of electricity from hydro-electric power in 1930s. 
  • Availability of electricity allowed for use of oil engines for drawing ground water. 
  • This led to both expansion of agriculture as well as increase in demand for oil engines. 
  • In turn, it led to emergence of workshops for servicing engines and also for addressing the demand for spare parts. 
  • Foundries began to be set up and agricultural machinery began to be produced.
 
சுதந்திரத்திற்குப் பின் 1990களின் முற்பகுதியில் தொழில்வளர்ச்சியானது 
  • சுதந்திரத்திற்குப் பிறகு நடுவண் மற்றும் மாநில அரசுகளால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல பெரிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. 
  • சென்னையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையும் திருச்சிராப்பள்ளியில் கொதிகலன் மற்றும் விசையாழிகள்தயாரிப்பதற்காகபாரதகனரக மின்சாதன நிறுவனத்தை (Bharat Heavy Electricals Limited (BHEL) மத்திய அரசு நிறுவியது. 
  • BHEL நிறுவனம் அதனுடைய உள்ளீட்டுப் பொருள்கள், தேவைகள் தொடர்பாக பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்புகளின் தோற்றத்திற்கு வழிவகை செய்தது. 
  • சென்னை புறநகரில் உள்ள ஆவடியில் போர் தளவாடங்கள் தயாரிக்க கனரக வாகனத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. 
  • ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனமும் சென்னையில் மகிழுந்துகளை உற்பத்திச் செய்யத் தொடங்கியது. 
  • அசோக் மோட்டார்ஸ் (பின்னர் அசோக் லேலண்ட்) ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் இணைந்து சென்னை வட்டாரத்தில் வாகனத்தொழில்துறை தொகுப்புகள் வளர்ச்சிக்கு உதவியது. 
  • மேலும் இது வாகன உதிரி பாகங்களின் நகரமாக மாறியது. 
  • 1950களில் இப்பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வாகன கூறுகளை வழங்குவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவியாக ஆவடியில் தொழில் தோட்டங்கள் நிறுவப்பட்டது. 
  • மாநிலத்தில் அதிக நீர் மின்சக்தி திட்டங்கள் மூலம் மின்மயமாதலை பரவலாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு பெரும் பங்கு வகித்தது. 
  • 1973ஆம் ஆண்டில் எஃகு உற்பத்தி செய்வதற்காக சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது. 
  • 1970 மற்றும் 1980களில் கோயம்புத்தூர் பகுதியில் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் அதேபோல் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் தொகுப்புகள் விரிவாக்கம் மற்றும் கரூரில் வீட்டு அலங்காரப் பொருள்கள் தொழில் தொகுப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகியது. 
  • மாநில அரசின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொழில்துறை தோட்டங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டது. 
  • மாநிலத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில்துறைகளை மேம்படுத்துவதற்கு இத்தகைய கொள்கை முயற்சிகளை பயன்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு ஒரு உதாரணமாக தமிழகத்தில் ஓசூரில் விரிவாக்கப்பட்ட தொழில் தோட்டங்களை சான்றாகக் கூறலாம். 
Post-Independence to early 1990s 
  • Soon after independence, several large enterprises were set up by both the central and state governments in different segments such as the Integral Coach Factory in Chennai to make railway coaches and the Bharat Heavy Electricals Limited (BHEL) in Tiruchirapalli manufacture to boilers and turbines. 
  • BHEL in turn led to the emergence of an industrial cluster of several small firms catering to its input requirements. 
  • Heavy Vehicles Factory was set up to manufacture tanks in Avadi on the outskirts of Chennai. 
  • Standard Motors too started manufacturing cars in Chennai. 
  • Ashok Motors (later Ashok Leyland) and Standard Motors together helped form an automobile cluster in the Chennai region. 
  • The Avadi industrial estate was established in the 1950s to support the small and medium companies supplying to the large firms in the region. 
  • More hydro-electric power projects in the state were also initiated to increase the spread of electrification. The government played a major role in all these processes. 
  • The Salem Steel Plant was set up in 1973 to produce stainless steel.
  • The 1970s and 1980s saw the setting up of emergence of powerloom weaving clusters in the Coimbatore region as well as expansion of cotton knitwear cluster in Tiruppur and home furnishings cluster in Karur. 
  • This period also saw more encouragement of the small and medium sector with setting up of industrial estates by the state government in different parts. 
  • The Hosur industrial cluster is a successful case of how such policy efforts to promote industrial estates helped to develop industries in a backward region.

தமிழ்நாட்டில் தொழில்மயமாதல் - தாராளமயமாதல் கட்டம் 
  • 1990களில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிந்தைய காலகட்டம் தொழில்மயமாதலின் இறுதி கட்டம் ஆகும். 
  • இந்த சீர்திருத்தங்கள் மாநில அரசாங்கங்கள் வளங்களை திரட்டுவதற்கு பொறுப்பேற்கச் செய்தன. 
  • மேலும் அவை தொழில்மயமாதலுக்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மலிவான நிலம், வரிச்சலுகைகள் மற்றும் மானியங்கள் போன்ற சலுகைகள், முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்தன. 
  • வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை ஏற்றுமதி சந்தைகளைத் திறக்க உதவியன. 
  • இது இரண்டு பெரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது. தமிழகத்தில் மிக நீண்ட காலமாக இருந்த முக்கிய தொழில்கள் சர்க்கரை, உரங்கள், சிமெண்ட், விவசாயக் கருவிகள், இரும்பு மற்றும் எஃகு ரசாயனங்கள், மின்மாற்றிகள் மற்றும் காகிதங்கள் போன்றவைகளாகும். 
  • இந்தக் காரணிகளின் விளைவாக தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும்விட தமிழ்நாடு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. 
  • மேலும் உற்பத்தித் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் மிகப் பெரிய பங்கினையும் பெற்றுள்ளது. 
  • முக்கியமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது அதிக உழைப்பு மிகுந்ததாகும். 
  • வாகன தொழில்கள், தானியங்கி கூறுகள், இலகுரக மற்றும் கனரக பொறியியல், இயந்திரங்கள், பருத்தி, ஜவுளி, ரப்பர், உணவுப் பொருள்கள், போக்குவரத்து உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் தோல் பொருள்கள் போன்றவைகள் முக்கியத் தொழில்களாகும். 
  • மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் (13 மாவட்டங்களில் 27 தொழில் தொகுப்புகள்) தொழில்துறைகள் பரவியிருக்கின்றன.
  •  மேலும் அவற்றுள் பல தொழில்கள் ஏற்றுமதி சார்ந்தவையாகும். 
  • மாநிலத்தின் சாலைகள், ரயில் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் முக்கிய துறைமுகங்கள் அனைத்தும் போக்குவரத்து இணைப்பினால் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படுகிறது.

Industrialisation in Tamil Nadu – Liberalization Phase

  • The final phase of industrialisation is the post-reforms period since the early 1990s. 
  • The reforms made the state governments more responsible for resource mobilisation and they were forced to compete with each other to attract private investments for industrialisation. 
  • Incentives such as cheap land, tax concessions and subsidised but quality power were all offered to woo investors. 
  • Trade liberalisation and currency devaluation also helped open up export markets. This led to two major developments. 
  • The important industries in the state that evolved over a much longer period include sugar, fertilizers, cement, agricultural implements, iron and steel, chemicals, transformers and paper. 
  • Because of all these factors, Tamil Nadu at present has the largest number of factories among all states in India and also has the largest share of workforce employed in manufacturing. 
  • Importantly, it is more labour intensive compared to other industrially advanced states like Maharashtra and Gujarat. 
  • The major industries are automobiles, auto-components, light and heavy engineering, machinery, cotton, textiles, rubber, food products, transport equipment, chemicals, and leather and leather goods. 
  • Unlike other states, the industries are spread across all regions of the state (there are 27 clusters in 13 districts) with many of them being export oriented as well. 
  • The state has a well-developed network of roads, rail, air and major ports.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Friday, October 23, 2020

GS-8- ECONOMICS - தமிழ் நாட்டில் தொழில்துறை தொகுப்புகள் | Major Industrial Clusters and Their Specialisation in Tamil Nadu

தானியங்கி தொகுப்புகள்
  • சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் "ஆசியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படுகிறது. 
  • சென்னையானது மிக அதிகமான தானியங்கி தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது. 
  • சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிளஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன. பொருளாதார சீர்த்திருத்தத்திற்கு பின்னர் ஹூன்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies - MNC) இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன. 
  • எனவே வெளிநாடுகளிலிருந்து பல உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது. 
  • பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரி பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. 
  • ஓசூர் மற்றொரு தானியங்கி தொகுப்பாகும். இங்கு TVS மற்றும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன.
  • கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது. 

Automotive Clusters

  • Chennai is nicknamed as "The Detroit of Asia" because of its large auto industry base. 
  • Chennai is home to large number of auto assembly and component making firms. 
  • While there were a few domestic firms like TVS, TI Cycles, 
  • Ashok Leyland and Standard Motors earlier, in the post-reform period, several MNC firms like Hyundai, Ford, Daimler-Benz and Renault-Nissan have opened factories in the region. 
  • This in turn has attracted a number of component suppliers from foreign countries. Many local firms too cater to component production for all these firms.
  • Hosur is another auto cluster with firms like TVS and Ashok Leyland having their factories there. 
  • Coimbatore region is also developing into an auto component cluster.
 வாகன மற்றும் பேருந்து கட்டுமானத் தொழில் தொகுப்புகள் 
  • தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகள் சுமை தூக்கும் வாகன முழு பாக கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப் பெயர் பெற்ற இடங்களாகும். 
  • 50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு கரூர் மற்றொரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. 
  • பல தொழில் முனைவோர்கள் பெரிய அளவிலான வாகனக் கட்டுமானத்துறையில் பணிபுரிந்து தற்போது தங்கள் சொந்த அலகுகளை அமைக்க முன்வந்துள்ளனர். 

Truck and Bus Body Building Industry Clusters

  • The Namakkal-Tiruchengode belt in western Tamil Nadu is known for its truck body building industry. 
  • Karur is another major hub with more than 50 units. 
  • Many entrepreuners were previous employees in a big firm involved in body building who came out to set up their own units.
நெசவுத் தொழில் தொகுப்புகள் 
  • இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது. 
  • காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது. 
  • தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவை கோயம்புத்தூரைச் சுற்றியுள்ளன. 
  • நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழகம் பெரும்பங்கு வகிக்கிறது. 
  • ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலான மின்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில்மிகவும் பரவலாக உள்ளது. 
  • திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமான நிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும். 
  • இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது. 
  • 1980களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. 
  • இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது. 
  • இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது. 
  • ஆரம்பத்தில் உள்ளூர் தொழில்முனைவோரால் பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. 
  • தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர். 
  • தெற்கு அரைக்கோளத்தில் உள்ள நாடுகள் உலகளாவிய தெற்கு நாடுகள் (Global South) என்று அழைக்கப்படுகின்றன. 
  • வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்கார பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது. 
  • மேலும் பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்திச் செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன. 
  • இத்தகைய நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமான மதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன. 

Textile Clusters

  • Tamil Nadu is home to the largest textiles sector in the country. 
  • Because of the development of cotton textile industry since the colonial period, Coimbatore often referred as the "Manchester of South India". 
  • At present, most of the spinning mills have moved around the Coimbatore city. 
  • Tamil Nadu is the biggest producer of cotton yarn in the country.
  • Powerloom is however more widespread with Erode and Salem region too having a large number of power loom units.
  • Tiruppur is famous for clustering of a large number of firms producing cotton knitwear. 
  • It accounts for nearly 80% of the country's cotton knitwear exports and generates employment in the range of over three lakh people since the late 1980s. 
  • It is also a major producer for the domestic market. 
  • Because of its success in the global market, it is seen as one of the most dynamic clusters in the Global South. 
  • While initially most firms were run by local entrepreneurs, at present, some of the leading garment exporters in India have set up factories here.1.
  • Countries in the southern hemisphere are called Global South countries.
  • Apart from body building, Karur is a major centre of exports of home furnishings like table cloth, curtains, bed covers and towels. 
  • Bhavani and Kumarapalayam are again major centres of production of carpets, both for the domestic and the global markets.
  • Apart from such modern clusters, there are also traditional artisanal clusters such as Madurai and Kanchipuram that are famous for silk and cotton handloom sarees.
தோல் மற்றும் தோல் பொருள்களின் தொகுப்பு 
  • இந்தியாவின் 60% தோல் பதனிடும் உற்பத்தித்திறனையும் 38% தோல் காலணிகள் மற்றும் தோல் உதிரி பாகங்கள் அதனைச் சார்ந்த பொருள்களின் உற்பத்தியையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. 
  • வேலூர் அதனைச் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகரங்கள் நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் வசதியைக் கொண்டுள்ளது. 
  • தோல் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது. 
  • சென்னையிலும் பல தோல் சார்ந்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. 
  • திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தோல் பதனிடுதல் மற்றும் உற்பத்தித் தொழிற்சாலைகளின் தொகுப்பு காணப்படுகிறது. 
  • தோல் உற்பத்தித் தொழிற்சாலையும் வேலைவாய்ப்பை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

Leather and Leather Goods Clusters

  • Tamil Nadu accounts for 60 per cent of leather tanning capacity in India and 38 per cent of all leather footwear, garments and components. 
  • Hundreds of leather and tannery facilities are located around Vellore and its nearby towns, such as Ranipet, Ambur and Vaniyambadi. 
  • The Vellore district is the top exporter of finished leather goods in the country. 
  • Chennai also has a large number of leather product making units involved in exports. 
  • There is another clustering of leather processing in Dindigul and Erode. 
  • The leather products sector too is a major employment generator.
 பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடுதல் தொகுப்பு 
  • தீப்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில் புகழ்பெற்று விளங்கும் சிவகாசி பகுதியானது தற்பொழுது பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் நாட்டின் சிறந்த நகரமாகத் திகழ்கிறது. 
  • இந்தியா 90% பட்டாசு உற்பத்தி 80% பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தி மற்றும் 60% அச்சுப்பணி தேர்வுகளுக்கு முக்கிய பங்காக இதனையே சார்ந்துள்ளது. 
  • அச்சிடும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் அவற்றின் பணிகளில் தனித்துவம் பெற்று மேலோங்கி விளங்குகிறது. 
  • காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிலானது தற்பொழுது அதிகளவில் வேலை வாய்ப்பை அளிக்கிறது.

Fireworks, Matches and Printing Cluster

  • Sivakasi region, once famous for its match industry has now become a major centre for printing and fireworks in the country. 
  • It is believed to contribute to 90% of India’s fireworks production, 80% of safety matches and 60% of offset printing solutions. 
  • The offset printing industry has a high degree of specialisation among firms with several of them undertaking just one operation required for printing. 
  • All these industries have their origin in the colonial period and at present offer employment to a large number of workers. 
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப தொகுப்புகள் 
  • 1990களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்தத்திற்குப் பின் வந்த நோக்கியா, ஃபாக்ஸ்கான், மோட்டோரோலா, சோனி எரிக்ஸன், சாம்சங் மற்றும் டெல் போன்ற வன்பொருள் மற்றும் மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கைபேசி கருவிகள், சுழல் பலகைகள், நுகர்வோர் மின் சாதனப் பொருள் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தன. 
  • இந்நிறுவனங்கள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுவனங்களை நிறுவின.
Electronics and Information Technology (IT) Clusters
  • After the economic reforms started in the early 1990s, the state has seen the entry of hardware and electronics manufacturers like Nokia, Foxconn, Motorola, Sony-Ericsson, Samsung and Dell making cellular handset devices, circuit boards and consumer electronics. 
  • They have all been set up in the Chennai region.

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Wednesday, October 21, 2020

GS-6- ECONOMICS - தகவல்தொழில்நுட்ப பொருளாதார மண்டலங்கள் | Information Technology Specific Special Economic Zones :

ELCOSEZs
  • வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகியவை தகவல் தொழிற்நுட்ப முதலீட்டிற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 
  • இதனை எளிதாக்குவதற்காக ELCOT நிறுவனம் பின்வரும், எட்டு இடங்களில் ELCOSEZs (IT குறிப்பிட்ட பொருளாதார சிறப்பு மண்டலங்கள்) நிறுவியுள்ளது. • 
  1. சென்னை - சோழிங்கநல்லூர் 
  2. கோயம்புத்தூர் - விளாங்குறிச்சி 
  3. மதுரை - இலந்தை குளம் 
  4. மதுரை - வடபாலஞ்சி, கிண்ணிமங்கலம் 
  5. திருச்சிராப்பள்ளி - நாவல்பட்டு 
  • மாநிலத்தின் அலகுகளை அமைக்க விரும்பும் நிறுவனங்கலுக்கு ELCOSEZs மூலம் வசதிகள் வழங்கப்படுகிறது. 
  • புதிய இடங்களில் ELCOSEZs அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள், தேவை மற்றும் நம்பகத் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. (வரைபட தகவல் தொழில்நுட்பக் கொள்கை - 2018-19) 
  1. திருநெல்வேலி - கங்கைகொண்டான் 
  2. சேலம் - ஜாகீர் அம்மாபாளையம் 
  3. ஓசூர் - விஸ்வ நாதபுரம்

====================================================

  • In order to make development more inclusive, Tier II cities such as Coimbatore, Madurai, Trichy, Tirunelveli, Hosur and Salem have been promoted as IT investment destinations apart from the Chennai region. 
  • To facilitate this, ELCOT has established ELCOSEZs (IT Specific Special Economic Zones) in the following eight locations:
  1. Chennai – Sholinganallur
  2. Coimbatore – Vilankurichi
  3. Madurai – Ilandhaikulam
  4. Madurai – Vadapalanji-Kinnimangalam
  5. Trichy – Navalpattu
  • Companies desiring to set up units in the state can avail themselves of the facilities provided in ELCOSEZs. 
  • The possibility of setting up ELCOSEZs in new locations will be explored based on demand and viability. (Map Information Communication Technology Policy - 2018–19)
  1. Tirunelveli – Gangaikondan
  2. Salem – Jagirammapalayam
  3. Hosur – Viswanathapuram
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

GS-7- ECONOMICS - தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள் | The Policy Factors that Helped the Industrialisation Process in Tamil Nadu

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் | SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu)
  • கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். 
  • Policy factors can be divided into three aspects:
கல்வி 
  • திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது. 
  • நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும். 
  • இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது. 

Education

  • Industries require skilled human resources. 
  • Apart from a lot of attention to primary education to promote literacy and basic arithmetic skills, the state is known for its vast supply of technical human resources. 
  • It is home to one of the largest number of engineering colleges, polytechnics and Industrial Training Centres in the country.
உள்கட்டமைப்பு 
  • மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது. 
  • மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும். 
  • குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. 
  • பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது, சிறு உற்பத்தியாளர்களை சந்தைகளோடு இணைத்து அவர்களுக்கு நற்பலனைக் கொடுக்கிறது. 

Infrastructure

  • The widespread diffusion of electrification has contributed to the spread of industrialisation to smaller towns and villages in the state. 
  • Along with electrification, Tamil Nadu is known for its excellent transport infrastructure, 
  • especially minor roads that connect rural parts of the state to nearby towns and cities. 
  • A combination of public and private transport has also facilitated rural to urban connectivity and therefore connect small producers to markets better.
தொழில்துறை ஊக்குவிப்பு 
  • கல்வி, போக்குவரத்து மற்றும் ஆற்றல் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்தபகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
  • பொருளாதார சீர்திருத்தத்திற்கு பின் குறிப்பிட்ட காரணிகளான தானியங்கி, தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் ஆகியவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
  • எனவே பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் மேம்படுத்த உதவும் உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் பல இடங்களில் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அரசு நிறுவியுள்ளது. 

Industrial Promotion

  • Apart from investments in education and transport and energy infrastructure, active policy efforts were made to promote specific sectors and also industrialisation in specific regions. 
  • Policies to promote specific sectors like automobile, auto components, bio technology and Information and communication Technology sectors have been formulated in the post reform period. 
  • In addition, the state has put in place several industrial promotion agencies for both large enterprises and the small and medium segments, as well as to provide supporting infrastructure.
தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகள் 
  • தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT - State Industries Promotion Corporation of Tamil Nadu) 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது. 
  • தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO - Tamil Nadu Small Industries Development Corporation) 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும். 
  • சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது. 
  • தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO - Tamil Nadu Industrial Development Corporation) 
  • நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களைநிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும். 
  • தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - வரையறுக்கப்பட்டது (TIC - Tamil Nadu Industrial Investment Corporation Ltd) புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது. 
  • தமிழ்நாடு சிறுதொழில் கழகம் - வரையறுக்கப்பட்டது (TANSI – Tamil Nadu Small IndustriesCorporationLtd) சிறுநிறுவனங்க ளுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும். 

The following are some agencies that have played a key role in industrialization in the state

  • SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) - was formed in the year 1971 to promote industrial growth in the state by setting up industrial estates. 
  • TANSIDCO (Tamil Nadu Small Industries Development Corporation) - is a state-agency
  • of the state of Tamil Nadu established in the year 1970 to promote small-scale industries in the state. It gives subsidies and provide technical
  • assistance for new firms in the small scale sector.
  • TIDCO (Tamil Nadu Industrial Development Corporation), 1965 - is another government agency to promote industries in the state and to establish industrial estates.
  • TIIC (Tamil Nadu Industrial Investment Corporation Ltd.), 1949- is intended to provide low-cost financial support for both setting up new units and also for expansion of existing units.
  • TANSI (Tamil Nadu Small Industries Corporation Ltd.), 1965 - It is supposed to be the first industrial corporation operating in the domain for small enterprises.
தொழில்மயமாதலின் பிரச்சனைகள் 
  • தமிழகம், நமது நாட்டின் சிறந்த தொழில்மயமான மாநிலமாக இருந்த போதிலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. 
  • வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது. 
  • இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது. 
  • உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது. 
  • பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப் படுவதால் குறைகிறது.

Issues with Industrialisation

  • Though Tamil Nadu has emerged as a relatively highly industrialised state in the country, the state faces a few issues in sustaining the process. 
  • To begin with, some clusters, especially chemicals, textiles and leather clusters, tend to generate a lot of polluting effluents that affect health. 
  • The effluents also pollute water bodies into which effluents are let into and also adjoining agricultural lands. 
  • Second, employment generation potential has declined because of use of frontier technologies because of the need to compete globally. 
  • Quality of employment also has suffered in recent years as most workers are employed only temporarily.
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts