தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் | SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) |
- கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
- Policy factors can be divided into three aspects:
- திறமை வாய்ந்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது.
- நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற இடமாகும்.
- இந்தியாவில் அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழகம் உள்ளது.
Education
- Industries require skilled human resources.
- Apart from a lot of attention to primary education to promote literacy and basic arithmetic skills, the state is known for its vast supply of technical human resources.
- It is home to one of the largest number of engineering colleges, polytechnics and Industrial Training Centres in the country.
- மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது.
- மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும்.
- குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது.
- பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது, சிறு உற்பத்தியாளர்களை சந்தைகளோடு இணைத்து அவர்களுக்கு நற்பலனைக் கொடுக்கிறது.
Infrastructure
- The widespread diffusion of electrification has contributed to the spread of industrialisation to smaller towns and villages in the state.
- Along with electrification, Tamil Nadu is known for its excellent transport infrastructure,
- especially minor roads that connect rural parts of the state to nearby towns and cities.
- A combination of public and private transport has also facilitated rural to urban connectivity and therefore connect small producers to markets better.
- கல்வி, போக்குவரத்து மற்றும் ஆற்றல் வாய்ந்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்தபகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- பொருளாதார சீர்திருத்தத்திற்கு பின் குறிப்பிட்ட காரணிகளான தானியங்கி, தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் ஆகியவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
- எனவே பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் மேம்படுத்த உதவும் உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் பல இடங்களில் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அரசு நிறுவியுள்ளது.
Industrial Promotion
- Apart from investments in education and transport and energy infrastructure, active policy efforts were made to promote specific sectors and also industrialisation in specific regions.
- Policies to promote specific sectors like automobile, auto components, bio technology and Information and communication Technology sectors have been formulated in the post reform period.
- In addition, the state has put in place several industrial promotion agencies for both large enterprises and the small and medium segments, as well as to provide supporting infrastructure.
- தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT - State Industries Promotion Corporation of Tamil Nadu) 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.
- தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO - Tamil Nadu Small Industries Development Corporation) 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.
- சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.
- தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டு கழகம் (TIDCO - Tamil Nadu Industrial Development Corporation)
- நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களைநிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.
- தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - வரையறுக்கப்பட்டது (TIC - Tamil Nadu Industrial Investment Corporation Ltd) புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது.
- தமிழ்நாடு சிறுதொழில் கழகம் - வரையறுக்கப்பட்டது (TANSI – Tamil Nadu Small IndustriesCorporationLtd) சிறுநிறுவனங்க ளுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.
The following are some agencies that have played a key role in industrialization in the state
- SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu) - was formed in the year 1971 to promote industrial growth in the state by setting up industrial estates.
- TANSIDCO (Tamil Nadu Small Industries Development Corporation) - is a state-agency
- of the state of Tamil Nadu established in the year 1970 to promote small-scale industries in the state. It gives subsidies and provide technical
- assistance for new firms in the small scale sector.
- TIDCO (Tamil Nadu Industrial Development Corporation), 1965 - is another government agency to promote industries in the state and to establish industrial estates.
- TIIC (Tamil Nadu Industrial Investment Corporation Ltd.), 1949- is intended to provide low-cost financial support for both setting up new units and also for expansion of existing units.
- TANSI (Tamil Nadu Small Industries Corporation Ltd.), 1965 - It is supposed to be the first industrial corporation operating in the domain for small enterprises.
- தமிழகம், நமது நாட்டின் சிறந்த தொழில்மயமான மாநிலமாக இருந்த போதிலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.
- வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது.
- இந்த திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது.
- உலகளாவிய அளவில் போட்டிப் போடுவதற்காக முதன்மையான தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதால் நிலையான வேலை வாய்ப்புக்கான குறை ஏற்படுகிறது.
- பணியாளர்களின் தரமானது, இன்றைய காலகட்டத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப் படுவதால் குறைகிறது.
Issues with Industrialisation
- Though Tamil Nadu has emerged as a relatively highly industrialised state in the country, the state faces a few issues in sustaining the process.
- To begin with, some clusters, especially chemicals, textiles and leather clusters, tend to generate a lot of polluting effluents that affect health.
- The effluents also pollute water bodies into which effluents are let into and also adjoining agricultural lands.
- Second, employment generation potential has declined because of use of frontier technologies because of the need to compete globally.
- Quality of employment also has suffered in recent years as most workers are employed only temporarily.
No comments:
Post a Comment