1857 ஆம் ஆண்டு கலகத்தை இராணுவ புரட்சி என்று கூறியவர் - சர் ஜான் லாரன்ஸ்.
1857 ஆம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப் போர் என்று கூறியவர் - வீர சவார்க்கர்
1857 ஆம் ஆண்டு கலகம் இந்திய விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதி - S.N.சென்.
1857 ஆம் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சிவில் அல்லது ராணுவ கிளர்ச்சிகள் அனைத்தும் ஆங்காங்கே நடைபெற்றவை என்றும் பின்னர் அவை 1857 ஆம் ஆண்டு பெரும் கலகமாக உச்சவடிவம் பெற்றது என்று A.C மஜூம்தார் வர்ணித்தார்.
ஆங்கில வரலாற்று அறிஞர்கள் 1857 ஆம் ஆண்டு பெருங்கலத்தை சிப்பாய் கலகம் (படைவீரர் கிளர்ச்சி) என்று அழைத்தனர்.
இந்திய வரலாற்று அறிஞர்கள் 1857 பெருங்கலத்தை எவ்வாறு அழைத்தனர் - முதல் இந்திய சுதந்திரப்போர்.
1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது இந்தியாவின் தலைமை ஆளுநர் - கானிங் பிரபு.
1856 ஆம் ஆண்டு பொதுப்பணி படைச் சட்டம் யார் கொண்டு வந்தார் - கானிங் பிரபு.
1857 பெருங்கலத்தின் முன்னோடியாக இருந்தது - வேலூர் கலகம் 1806.
1857 கலகத்திற்கு உடனடி காரணம் - என்பீல்டு ரக துப்பாக்கிகளில் பயன்படுத்த கொழுப்பு தடவிய தோட்டாக்கள் அறிமுகப்படுத்துதல்.
என்பீல்டு ரக துப்பாக்கியில் என்ன கொழுப்பு இருந்தது - பசுவின் கொழுப்பு மற்றும் பன்றியின் கொழுப்பு.
பாரக்பூரில் எப்போது யார் கலகத்தை வெடித்தவர் - 1857 மார்ச் 29 - மங்கள் பாண்டே.
பாரக்பூரில் கொழுப்பு தடவிய தோட்டாவை பயன்படுத்த மறுத்தவர் யார் - 34 வது காலாட்படை பிரிவை சார்ந்த மங்கள் பாண்டே.
1857 பெருங்கலகம் மீரட்டில் எப்போது வெடித்தது - 1857 மே 10.
படைவீரர்கள் மீரட்டிலிருந்து எங்கு சென்றனர் - டெல்லி.
பெருங்கலக கிளர்ச்சியாளர்கள் டெல்லியை எப்போது கைப்பற்றினர் - 1857 மே 12.
சிப்பாய்கள் 1857 ஆம் பெருங்கலகத்திற்கு யாரை தலைவராக்கினார்கள் - கடைசி முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா.
1857 ஆம் ஆண்டு டெல்லியில் யார் தலைமை தாங்கி நடத்தினார் - பகத்கான்.
முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா 1857 ஆம் ஆண்டு கலகத்தின் போது எங்கு நாடு கடத்தப்பட்டார் - ரங்கூன் .
முகலாய மன்னன் 2ம் பகதூர்ஷா எங்கு எப்போது இறந்தார் - ரங்கூன் 1862.
ஆங்கிலேயர் யார் தலைமையில் டெல்லியை மீண்டும் கைப்பற்றினார் - சர் ஜான் நீக்கல் சன்.
கான்பூரில் 1857 ஆம் ஆண்டு கலகம் யார் தலைமையில் நடைபெற்றது -நானாசாகிப்.
0 Comments