ராஜேந்திர பிரசாத் காந்தியை எப்போது சந்தித்தார் - 1917 சம்பரான் சத்தியாகிரகம்.
செவரஸ் உடன்படிக்கை எந்த ஆண்டு - 1920.
கிலாபத் தினமாக அனுசரிக்கப்பட்டது எப்போது - 1919 அக்டோபர் 19.
கிலாபத் இயக்கம் யார் தலைமையில் நடத்தப்பட்டது - மௌலானா அபுல் கலாம் ஆசாத், எம்.ஏ.அன்சார், சைபுதீன் கிச்லு, அலி சகோதரர்.
கிலாபத் இயக்கம் எப்போது ஒத்துழையாமை இயக்கத்துடன் இணைந்தது - 1920.
ஒத்துழையாமை இயக்கம் எங்கு எப்போது நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஏற்றுக் கொண்டது - 1920, டிசம்பர், நாக்பூர்.
வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு எப்போது வருகை புரிந்தார் - 1921.
ஒத்துழையாமை இயக்கம் ஏன் காந்தி கைவிட்டார் - சௌரி சௌரா சம்பவம் - 1922.
காங்கிரஸ் எங்கு நடைபெற்ற கூட்டத்தில் வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்டது - 1921, அகமதாபாத்.
சௌரி சௌரா இடம் எங்கு அமைந்துள்ளது - உத்தரபிரதேசம் (கோரக்பூர்)
அனைத்து பிரிவினரும் கலந்து கொண்ட மக்கள் இயக்கம் - ஒத்துழையாமை இயக்கம்.
இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உச்சக் கட்டமாக திகழ்ந்தது எந்த போராட்டம் - ஒத்துழையாமை இயக்கம்.
1922 ல் நடைபெற்ற எந்த காங்கிரஸ் மாநாட்டில் பிளவு ஏற்பட்டது - கயா காங்கிரஸ் மாநாடு.
சுயராஜ்ஜிய கட்சி எப்போது தோற்றுவிக்கப்பட்டது - 1923, ஜனவரி 1.
சுயராஜ்ய கட்சியின் நோக்கம் - ஆங்கிலேயரை சட்டமன்றத்திலே எதிர்ப்பது.
சுயராஜ்ஜிய கட்சியை தோற்றுவித்தவர்கள் - சி.ஆர்.தாஸ், மோதிலால் நேரு.
சுயராஜ்ய கட்சியின் மத்திய சட்டமன்ற தலைவர் - மோதிலால் நேரு.
சுயராஜ்ய கட்சியின் வங்காள சட்டமன்றத் தலைவர் - சி.ஆர்.தாஸ்.
C.R. தாஸ் எப்போது மறைந்தார் - 1925.
1919 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு சட்டத்தின் பயன்பாட்டையும், இந்திய நிர்வாகத்தை மேம்படுத்த வந்த குழு - சைமன் குழு (1927-1928).
பிரிட்டிஷ் அரசாங்கம் சைமன் குழு எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது - 1927.
சைமன் குழுவில் எத்தனை உறுப்பினர் இருந்தனர் - சர் ஜான் சைமன் தலைமையில் 7 பேர்.
சைமன் குழுவை இந்தியர்கள் எதிர்க்க காரணம் - குழுவில் இந்தியர்கள் இல்லை.
சைமன் குழு எங்கு எப்போது இந்தியா வந்து இறங்கியது - 1928, மும்பை.
சைமன் குழு எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்தவர் - லாலா லஜபதிராய்.
எப்போது லாகூரில் லாலா லஜபதி ராய் தலைமையில் சைமன் குழுவிற்கு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது - 1928, அக்டோபர் 30.
சைமன் குழு தனது அறிக்கையை எப்போது வெளியிட்டது - 1930 மே.
சைமன் குழு பரிந்துரை செய்தது - மாநில சுயாட்சி மாகாணத்தில் இரட்டை ஆட்சி ஒழிப்பு.
நேரு அறிக்கை எப்போது வெளியிடப்பட்டது - 1928.
நேரு அறிக்கை வெளியிட காரணம் - இங்கிலாந்தின் அயலுறவு செயலாளர் பிர்கன் ஹெட் பிரபு அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியலமைப்பை உருவாக்க முடியுமா? என்று கூறியதற்கு.
முகமது அலி ஜின்னா நேரு அறிக்கைக்கு பதிலாக வெளியிட்டது - ஜின்னா 14 அம்ச கோரிக்கை.
1924 ம் ஆண்டு எங்கு யார் தலைமையில் காங்கிரஸ் மாநாடு கூடியது - பெல்காம், காந்திஜி.
1925 ம் ஆண்டு யார் தலைமையில் காங்கிரஸ் மாநாடு கூடியது - சரோஜினி நாயுடு முதல் இந்திய பெண் தலைவர்.
1929ல் லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் தலைமை தாங்கியவர் - ஜவஹர்லால் நேரு.
பூரண சுதந்திரம் பெறுவதே இந்திய தேசிய காங்கிரஸ் நோக்கம் என எந்த காங்கிரஸ் மாநாட்டில் கூறப்பட்டன - லாகூர் காங்கிரஸ் (1929).
முதன் முதலாக மூவர்ணக் கொடி பறக்க விடப்பட்டது எப்போது - டிசம்பர் 31, 1929 ராவி நதிக்கரையில்).
சுதந்திர போராட்டத்தின் போது எந்த நாள் நாடு முழுவதும் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டது - ஜனவரி 26, 1930.
காந்திஜி சட்டமறுப்பு இயக்கம் தொடங்கிய வருடம் - 1930.
தண்டி யாத்திரை காலம் - மார்ச் 12 1930 - ஏப்ரல் 6 1930.
உப்பு சத்திய பாதயாத்திரை எங்கிருந்து தொடங்கியது - சபர்மதி ஆசிரமம் (அகமதாபாத்).
சரோஜினி நாயுடு உட்பட தண்டி யாத்திரையில் கலந்து கொண்டவர் எத்தனை பேர் - 78 பேர்.
தண்டி யாத்திரையின் பயண தூரம் - 400கி.மீ (200 மைல்).
தமிழ்நாட்டில் (வேதாரண்யத்தில் யாரின் தலைமையில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது - சி. ராஜகோபாலாச்சாரி.
முதல் வட்டமேசை எங்கு எந்தாண்டு நடைபெற்றது - லண்டன், 1930.
லண்டனில் நடைபெற்ற முதல் வட்டமேசை மாநாடு எதற்காக கூடியது - சைமன் குழுவின் பரிந்துரைப்படி.
காந்தி இர்வின் ஒப்பந்தம் எந்த ஆண்டு - 1931.
காந்தி இர்வின் ஒப்பந்தத்தில் என்ன கையெழுத்தானது - சட்ட மறுப்பு இயக்கத்தை கைவிடல், 2வது வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளுதல்.
லண்டனில் 2வது வட்டமேசை மாநாடு எப்போது நடைபெற்றது - 1931.
எந்த ஒப்பந்தத்தின் காந்திஜி 2ம் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டார் - காந்தி இர்வின் ஒப்பந்தம்.
இரண்டாம் வட்டமேசை மாநாடு (1931) தோல்விக்கான காரணம் - முழு சுதந்திரம், வகுப்பு பிரச்சனை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் எட்டப்படாதது.
வகுப்பு வாத அறிக்கையை வெளியிட்டவர் பிரிட்டிஷ் பிரதமர் - இராம் சேமெக்டோனால்டு.
வகுப்பு வாத அறிக்கையை வெளியிட்டது - 1932, ஆகஸ்ட் 16.
வகுப்பு வாத அறிக்கையில் வெளியிடப் பட்டது - சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
வகுப்பு வாத அறிக்கையை வரவேற்ற தலைவர் - டாக்டர் பி.ஆர் அம்பேத்கர்.
வகுப்பு வாத கொள்கையை எதிர்த்து காந்திஜி எந்த சிறையில் சாகும் வரை உண்ணாவிரம் இருந்தார் - எரவாடா சிறை (1931 செப்டம்பர் 20).
காந்தி கலந்துக் கொண்ட வட்ட மேஜை மாநாடு எது - 2 வது வட்ட மேஜை மாநாடு.
மூன்று வட்ட மேஜை மாநாட்டிலும் கலந்துக் கொண்டவர் - டாக்டர் பி ஆர் அம்பேத்கர், இரட்டை மலை சீனிவாசன்.
1930 ல் தாழ்த்தப்பட்ட மக்களின் தேசிய அளவிலான தலைவராக உருவாக்கப்பட்டவர் யார் - டாக்டர் பி ஆர் அம்பேத்கர்.
பூனா ஒப்பந்தம் (1932) யாருக்கு இடையே நடைப்பெற்றது - காந்தி மற்றும் அம்பேத்கர் இடையே.
3ம் வட்ட மேஜை மாநாடு நடைபெற்றது - 1932.
பிரிட்டிஷ் அரசாங்கம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது - 1933.
மூன்று வட்ட மேசை மாநாட்டின் விளைவாக எந்த சட்டம் நிறைவேற்றியது - இந்திய அரசுச் சட்டம் 1935.
மாகாணங்களில் தன்னாட்சி எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது - 1935 - இந்திய அரசுச் சட்டம்.
மாகாணங்களில் எந்த சட்டம் மூலம் இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது -1935 - இந்திய அரசுச் சட்டம்.
மத்தியில் கூட்டாட்சி அரசாங்கம் எப்போது ஏற்படுத்தப்பட்டது - 1935 இந்திய அரசுச் சட்டம்.
கூட்டாட்சி நீதிமன்றம் (1937) ஏற்படுத்த இயற்றப்பட்ட சட்டம் - இந்திய அரசுச் சட்டம் 1935.
கூட்டாட்சி ரிசர்வ் வங்கி எப்போது ஏற்படுத்தப்பட்டது - இந்திய அரசுச் சட்டம் 1935.
1935ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் படி எப்போது மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது - 1937.
எந்தாண்டு 2ம் உலகப் போர் தொடங்கியது - 1939
2ம் உலகப்போரில் இந்தியாவை போரில் ஈடுபடுவதை கண்டித்து எப்போது 9 மாகாணங்களில் காங்கிரஸ் அமைச்சரவைகளை ராஜினாமா செய்தன - 1939.
காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்ததை முஸ்லிம் லீக் எவ்வாறு கொண்டாடியது - விடுதலை நாளாக.
முஸ்லிம் லீக் விடுதலை நாளாக கொண்டாடிய நாள் - 1939 டிசம்பர் 22.
பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கை எங்கு எப்போது வெளியிட்டது - லாகூர் முஸ்லிம் லீக் மாநாட்டில் - 1940.
ஆகஸ்ட் நன்கொடை எந்தாண்டு - 1940.
ஆகஸ்ட் நன்கொடையை அறிவித்த ஆங்கில அரசப் பிரதிநிதி யார் - லின்லித்கோ.
ஆகஸ்ட் நன்கொடையில் என்ன கூறப்பட்டுள்ளது - 2ம் உலகப் போர் முடிந்ததும் இந்தியாவுக்கு அரசியல் நிர்ணய சபை அமைக்க ஒரு குழு நியமிக்கப்படும், அரசுப் பிரதிநிதிகள் இந்தியருக்கு இடம் அளிக்கப்படும்.
தனி நபர் சத்தியாகிரகத்தில் (1940) முதலில் ஈடுபட்டவர் - ஆச்சார்ய வினோபா பாவே.
தனி நபர் சத்தியாகிரகத்தில் (1940) 2வது ஈடுபட்டவர் - ஜவஹர்லால் நேரு.
கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவுக்கு எப்போது வந்தார்கள் - 1942 மார்ச் 23.
கிரிப்ஸ் தூதுக் குழுவின் முக்கிய நோக்கம் என்ன - 2ம் உலகப்போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பை பெற.
காந்தியடிகள் கிரிப்ஸ் தூதுக்குழு உறுதி மொழிகளை எவ்வாறு வர்ணித்தார் - திவாலாகி கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை.
கிரிப்ஸ் முக்கிய பரிந்துரைகள் - டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் சிறுபான்மையினர் பாதுகாப்பு, சுதேச அரசுகள் மற்றும் பிரிட்டிஷ் இந்திய மாகாணங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு அரசியலமைப்புக் குழு ஏற்படுத்தல்.
கிரிப்ஸ் தூதுக்குழுவின் பரிந்துரையை முஸ்லிம் லீக் ஏன் நிராகரித்தது - பாகிஸ்தான் கோரிக்கை ஏற்கப்படாததால்.
கிரிப்ஸ் தூதுக்குழு தோல்விக்கான காரணம் - முழு சுதந்திரம் பற்றி கூறாதது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் எங்கு எப்போது தொடங்கப்பட்டது - 1942ம் ஆகஸ்ட் 8, பம்பாய்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்திஜி என்ன அறைகூவலை விடுத்தார் - செய் அல்லது செத்து மடி.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்தி எந்த சிறையில் அடைக்கப்பட்டார் - பூனா சிறையில்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது காந்திஜி எப்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் - 1944.
நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் உச்ச கட்ட போராட்டம் - வெள்ளையனே வெளியேறு.
2ம் உலகப் போர் எப்போது முடிவுக்கு வந்தது - 1945.
2ம் உலகப் போருக்குப் பின் இங்கிலாந்தில் பிரதமர் (1945) யார் - கிளமண்ட் அட்லி தொழிற்கட்சி.
1946 ல் இந்திய வந்த கேபினட் தூதுக்குழுவில் அடங்கியவர்கள் - பெதிக் லாரன்ஸ், சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ், ஏ வி அலெக்சாந்தர்.
அரசியலமைப்பு குழுவிற்கான தேர்தல் எப்போது நடைபெற்றன - 1946 ஜூலை.
இடைக்கால அரசாங்கம் எப்போது அமைக்கப்பட்டது - 1946, செப்டம்பர் 2.
இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் யார் - ஜவஹர்லால் நேரு.
1947 பிப்ரவரி 20 ஆம் நாள் பிரதமர் அட்லி காமன்ஸ் அவையில் எப்போது இந்தியருக்கு ஆட்சி அதிகாரம் மாற்றப்படும் என்றார் -1948 ஜூன்.
மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக எப்போது பதவியேற்றார் - 1947, மார்ச் 24.
ஆங்கில அரசின் கடைசி அரச பிரதிநிதி யார் - மவுண்ட்பேட்டன்.
மவுண்ட்பேட்டன் திட்டம் மற்றொரு பெயர் என்ன - ஜூன் 3 திட்டம்
ஜூன் 3 திட்டம் இந்தியப் பிரிவினைக்கான தனது திட்டத்தை யார் ஒப்புக் கொண்டன - காங்கிரசும், முஸ்லிம் லீக்.
இந்திய விடுதலைச் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது - 1947 ஜூலை 18.
யார் தலைமையிலான எல்லை வரையறுக்கும் ஆணையம் இந்திய பாகிஸ்தான் எல்லைகளை வரையறுத்தன - ரெட்கிளிப்.
சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார் - மவுண்ட்பேட்டன்.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது எத்தனை சுதேச அரசுகளாக இருந்தது - 565.
எத்தனை சுதேச அரசுகள் இந்தியாவுடன் இருந்தது - 562.
எந்தெந்த அரசுகள் இந்தியாவுடன் இணைய வில்லை - ஹைதராபாத், ஜூனாகத், காஷ்மீர்.
சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை ஆளுநர் யார் - சி.இராசகோபாலச்சாரி
இந்தியாவின் முதல் மற்றும் கடைசி இந்திய தலைமை ஆளுநராக இருந்தவர் யார் - சி. இராசகோபாலச்சாரி.
பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் யார் - முகமது அலி ஜின்னா.
தேசத்தந்தை மகாத்மா காந்தியை யார் எப்போது சுட்டுக் கொன்றார் - நாதுராம் கோட்சே - 1948 ஜனவரி 30.
காந்தியின் இறப்பை பற்றி நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்துவிட்டது என்றவர் யார் - ஜவஹர்லால் நேரு.
இந்திய யூனியன்களை இணைத்தது யாருடைய சாதனை - சர்தார் வல்லபாய் பட்டேல்.
இந்தியாவின் பிஸ்மார்க் யார் - சர்தார் வல்லபாய் பட்டேல்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்பட்டவர் யார் - சர்தார் வல்லபாய் பட்டேல்.
பிரெஞ்சு அரசு பகுதியான பாண்டிச்சேரி காரைக்கால், மாஹி, ஏனாம் மற்றும் சந்திரநாகூர் பகுதிகளை எப்போது இந்தியாவுடன் இணைக்கப்பட்டது - 1954.
போர்ச்சுக்கீசியர் பகுதியான கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் எப்போது இந்தியாவுடன் இணைக்கப்பட்டது - 1961.
இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தலைமை தாங்கியவர் யார் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்.
சுபாஷ் சந்திர போஸ் எங்கு எப்போது பிறந்தார் - கட்டாக், 23 ஜனவரி 1897.
சுபாஷ் சந்திர போஸ் ICS (Imperial Civil Services Examination) தேர்வில் எத்தனையாவது இடம் - 4.
ஏன் ICS வேலையை சுபாஷ் சந்திர போஸ் ராஜினாமா செய்தார் - ஆங்கிலேயர் கீழ் வேலை செய்ய விரும்பவில்லை.
சுபாஷ் சந்திர போஸின் வழிகாட்டி - சித்தரஞ்சன் தாஸ் (C.R. தாஸ்).
சுபாஷ் சந்திர போஸ் என்ன செய்தித்தாளை தொடங்கினார் - சுவராஜ் போஸ்.
சுபாஷ் சந்திரபோஸ் எப்போது அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவரானார் - 1923.
சுபாஷ் சந்திர போஸ் எப்போது காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தார் - 1938-1939.
பார்வர்ட் பிளாக் கட்சியை (முற்போக்கு கட்சி) யார் எப்போது தொடங்கினார் - 1939, சுபாஷ் சந்திர போஸ்.
வீட்டு சிறையிலிருந்த நேதாஜி எப்போது பர்மாவிற்கு சென்றார் - 1942.
இந்திய தேசிய இராணுவத்தை யார் எங்கு தொடங்கினார் - செப்டம்பர் 1942.
சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தின் பொறுப்பை எப்போது ஏற்றார் - 1943.
இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவு பெயர் மற்றும் படை பிரிவின் கேப்டன் யார் - ஜான்சிராணி ரெஜிமெண்ட், கேப்டன் லட்சுமி சுவாமிநாதன் (தமிழ்நாடு).
இந்திய விடுதலைப் படையின் தலைமை பொறுப்பை யார் சுபாஷ் சந்திர போஸின் ஒப்படைத்தார் - ராஷ்பிகாரி போஸ்.
ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் என்று அழைக்கப்படுவது - இந்திய தேசிய இராணுவம்.
இந்திய தேசிய இராணுவத்தின் தளபதியாக பொறுப்பேற்ற பின் சுபாஷ் சந்திர போஸ் எவ்வாறு அழைக்கப்பட்டார் - நேதாஜி.
0 Comments