Default Image

Months format

Show More Text

Load More

Article Navigation

Contact Us Form

Close
  • Home
  • NEW
  • GENERAL SCIENCE
  • HISTORY-INDIA
  • HISTORY-TAMIL NADU
  • ADMINISTRATION TN
  • NATIONAL MOVEMENT
  • INDIAN ECONOMY
  • INDIAN POLITY
  • INDIAN GEOGRAPHY
  • CURRENT AFFAIRS
  • MENTAL ABILITY
  • GENERAL TAMIL
  • Sitemap
  • Contact us

Kalvisolai.in - A Powerful Portal for Education

  • Home
  • TNPSC
  • _GENERAL SCIENCE
  • _HISTORY-INDIA
  • _HISTORY-TAMIL NADU
  • _ADMINISTRATION TN
  • _NATIONAL MOVEMENT
  • _INDIAN ECONOMY
  • _INDIAN POLITY
  • _INDIAN GEOGRAPHY
  • _MENTAL ABILITY
  • CURRENT AFFAIRS
  • GENERAL TAMIL

GS-24-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | ஒரு வரி வினா விடை.

TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT   
கல்விச்சோலை
Saturday, June 12, 2021

பிரம்மஞான சபை.

  • பிரம்மஞான சபை எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது, 1875, ரஷ்ய நாட்டை சார்ந்த மேடம் பிளவாட்ஸகி, அமெரிக்கா நாட்டை சார்ந்த ஹென்றி எஸ் ஆல்காட்.
  • அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவை பெறுவதற்காக நிறுவப்பட்டது - பிரம்மஞான சபை.
  • தியோசோபி என்றால் - கடவுளைப் பற்றிய அறிவு என்பது பொருள்.
  • பிரம்மஞான சபை இந்தியாவில் எங்கு எப்போது நிறுவப்பட்டது - 1882ல் சென்னை, அடையாறு.
  • பிரம்மஞான சபைக்கு அன்னி பெசன்ட் எப்போது தலைமை ஏற்றார் - 1893.
  • யாரால் காசி பனாரசில், மத்திய இந்துக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது - அன்னிபெசன்ட்.
  • அன்னி பெசன்ட் யாருடன் இணைந்து பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தை தோற்றுவித்தார் - மதன் மோகன் மாளவியா.
  • பிரம்மஞான சபையின் நோக்கங்களை பரப்புவதற்காக அன்னி பெசன்ட் அவர்கள் தொடங்கிய செய்திதாள் - நியூ இந்தியா.
  • 1856ம் ஆண்டு விதவைகள் மறுமணச் சட்டம் யாரால் நிறைவேற்றப்பட்டது - பண்டிட் வித்யாசாகர்.

ஜோதிபா கோவிந்தா பூலே.

  • சத்ய சோதக் சமாஜம் என்ற அமைப்பை எப்போது யார் தோற்றுவித்தார் - 1873, ஜோதிபா கோவிந்தா பூலே.
  • சத்திய சோதக் சமாஜ் இன் பொருள் - உண்மை தேடுவோர் சங்கம்.
  • விதவைகள் மறுமண இயக்கத்தின் முன்னோடியாக செயல்பட்டவர் யார் - ஜோதிபா பூலே.
  • ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆதரவற்றோர் இல்லத்தை நிறுவிய முதல் இந்து யார் - ஜோதிபா பூலே.

அலிகார் இயக்கம்.

  • அலிகார் இயக்கத்தை தோற்றுவித்தவர் - சர் சையது அகமது கான்.
  • எந்தாண்டு காசிப்பூர் என்னும் இடத்தில் சையது அகமது கான் ஒரு பள்ளியை நிறுவினார் - 1864.
  • 1864ல் காசிப்பூரில் உருவாக்கப்பட்ட பள்ளி பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டது - அறிவியல் கழகம் (Scientific Society).
  • சையது அகமது கான் முகமதிய கல்விக் கழகத்தை எப்போது தோற்றுவித்தார் - 1866.
  • சையது அகமது கான் முகமதியன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை எங்கு எப்போது நிறுவினார் - 1875, அலிகார்.
  • முஸ்லீம் பெண்கள் முகத்திரை (பர்தா) அணிவதை நீக்கவும், பெண் கல்வி வளரவும் பாடுபட்டவர் - சர்சையது அகமது கான்.
  • சையது அகமதுகானின் தினசரி பத்திரிக்கை - தாசில் உத் அஃலக்.

சமரச சுத்த சன்மார்க்க சங்கம்.

  • சமரச சுத்த சன்மார்க்க சங்கம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது - 1865.
  • வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் - இராமலிங்க அடிகள்.
  • சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை யார் தோற்றுவித்தார் - இராமலிங்க அடிகள்.
  • இராமலிங்க அடிகள் எங்கு எப்போது பிறந்தார் - சிதம்பரம் (மருதூர்),1823 அக்டோபர் 5.
  • சத்திய ஞான சபையை யார் எப்போது தொடங்கினார் - 1872, இராமலிங்க அடிகளார்.
  • இறைவன் ஜோதி வடிவானவன் என்றும் அரும்பெரும் ஜோதியாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டவர் - இராமலிங்க அடிகளார்.
  • திருவருட்பா என்ற நூலை எழுதியவர் யார் - வள்ளலார்.
  • வள்ளலார் சத்திய தருமசாலையை எங்கு எப்போது நிறுவினார் - 1867, வடலூர்.
  • வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றவர் - வள்ளலார்.
  • ஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறை கண்ட வாசகம் என்னும் நூலை எழுதியவர் - வள்ளலார்.
  • ஜீவ காருண்யம் என்பதன் பொருள் - உயிர்களிடத்து அன்பு செலுத்துதல்.
  • மனித இனத்திற்கு செய்யும் தொண்டே மோட்சத்தை அடைவதற்கான வழி என்பது யார் போதனைகளில் மிக முக்கியமானது - வள்ளலார்.
  • வள்ளலார் பக்திப் பாடல்கள் தொகுக்கப்பட்டு எவ்வாறு அழைக்கப்படுகிறது - திருவருட்பா.

ஸ்ரீவைகுண்ட சுவாமி.

  • ஸ்ரீவைகுண்ட சுவாமி எப்போது எங்கு பிறந்தார் - 1809 கன்னியாகுமரி சாமித்தோப்பு.
  • ஸ்ரீவைகுண்ட சுவாமி இயற்றிய சமய நூல்கள் - அகிலத்திரட்டு அம்மானை. அருள் நூல்.

தர்ம பரிபாலன் இயக்கம்.

  • தர்ம பரிபாலன் இயக்கத்தை தோற்றுவித்தவர் - ஸ்ரீநாராயண குரு.
  • தர்ம பரிபாலன் இயக்கம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது - 1903.

சுயமரியாதை இயக்கமும், பெரியாரும்.

  • பெரியார் என்ன காரணத்திற்காக ஆயிரம் தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார் - கள்ளுக்கடை மறியல்.
  • வைக்கம் அறப்போராட்டம் எப்போது நடைப்பெற்றது - 1924.
  • பெரியார் வைக்கம் வீரர் என ஏன் அழைக்கப்படுகிறார் - வைக்கம் என்ற இடத்தில் ஆலயம் இருந்த சாலையில் தீண்டத்தகாதவர்கள் நடந்து செல்ல விதிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து போராடியதால்.
  • வ.வே.சு ஐயரின் சேரன் மாதேவி குருகுலத்தின் வருணாசிரம நடவடிக்கையை யார் எதிர்த்தார் - பெரியார்.
  • பெரியார் சுயமரியாதை இயக்கத்தை எப்போது தொடங்கினர் - 1925.
  • பெரியாரின் தமிழ் ஏடுகள் - குடியரசு, புரட்சி, விடுதலை.
  • ஈ.வே.ராவுக்கு யார் எப்போது பெரியார் என பட்டம் வழங்கப்பட்டது - 1938, தமிழ்நாடு பெண்கள் மாநாடு (டாக்டர் S.தருமாம்பாள்) .
  • யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரை எவ்வாறு போற்றியது - தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ்.

What's App share  | Telegram Share


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |
TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
கல்விச்சோலை

TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT

No comments:

Post a Comment

Labels

  • TNPSC APTITUDE AND MENTAL ABILITY
  • TNPSC BOTANY
  • TNPSC CHEMISTRY
  • TNPSC CURRENT AFFAIRS
  • TNPSC CURRENT EVENTS
  • TNPSC DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
  • TNPSC GENERAL SCIENCE
  • TNPSC GENERAL STUDIES
  • TNPSC GENERAL TAMIL
  • TNPSC GEOGRAPHY
  • TNPSC HISTORY AND CULTURE OF INDIA
  • TNPSC HISTORY AND CULTURE OF TAMIL NADU
  • TNPSC INDIAN ECONOMY
  • TNPSC INDIAN NATIONAL MOVEMENT
  • TNPSC INDIAN POLITY
  • TNPSC SYLLABUS
  • TNPSC ZOOLOGY
  • TNPSC இந்திய ஆட்சியியல்
  • TNPSC இந்திய தேசிய இயக்கம்
  • TNPSC இந்தியப் பொருளாதாரம்
  • TNPSC இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
  • TNPSC தமிழ்நாட்டின் வரலாறும் பண்பாடும்
  • TNPSC திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
  • TNPSC நடப்பு நிகழ்வுகள்
  • TNPSC புவியியல்
  • TNPSC பொது அறிவியல்
  • TNPSC பொது அறிவு
  • TNPSC-APTITUDE-AND-MENTAL-ABILITY
  • TNPSC-CURRENT-EVENTS
  • TNPSC-DEVELOPMENT-ADMINISTRATION-IN-TAMIL NADU
  • TNPSC-GENERAL-SCIENCE
  • TNPSC-GENERAL-STUDIES
  • TNPSC-GENERAL-TAMIL
  • TNPSC-GEOGRAPHY
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-INDIA
  • TNPSC-HISTORY-AND-CULTURE-OF-TAMIL-NADU
  • TNPSC-INDIAN-ECONOMY
  • TNPSC-INDIAN-NATIONAL-MOVEMENT
  • TNPSC-INDIAN-POLITY
  • TRB_STUDY_MATERIALS
  • TRB-TET
  • கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger
Copyright © 2025 Kalvisolai - No 1 Educational Website | Powered by Blogger