Saturday, September 25, 2021

GS-29-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | ஐரோப்பியர் வருகை | ஒரு வரி வினா விடை

ஐரோப்பியர் வருகை
போர்ச்சுகீசியர்.

  • ஆட்டோமானிய துருக்கியர்கள் கான்ஸ்டான்டின் நோபிள் நகரத்தை எப்போது கைப்பற்றினார்கள் - கி.பி.1453.
  • இந்தியாவிற்கு புதிய கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் யார் - போர்ச்சுகீசியர்கள்
  • எந்த போர்ச்சுகீசிய மன்னர் மாலுமிகளுக்கு பயிற்சி கொடுக்க பள்ளி ஒன்றைத் தொடங்கினார் - இளவரசர் ஹென்றி.
  • போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த யார் எப்போது முதன் முதலில் கடல் பயணத்தை மேற்க்கொண்டனர் - பார்த்தலோமியோ டயஸ் - 1487 .
  • யார் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனைக்கு வந்தடைந்தார் - பார்த்தலோமியோ டயஸ்.
  • ஆப்பிரிக்காவின் தென் கோடி முனைக்கு புயல் முனை எனப் பெயரிட்டவர் யார் - பார்த்த லோமியோ டயஸ்.
  • புயல் முனை எவ்வாறு அழைக்கப்படுகிறது - நன்னம்பிக்கை முனை.
  • வாஸ்கோடகாமா எப்போது இந்தியாவின் கோழிக்கோடு (கள்ளிக்கோட்டை) வந்தடைந்தார் - மே 27,1498.
  • வாஸ்கோடகாமாவை வரவேற்றது உபசரித்த கள்ளிக்கோட்டை மன்னர் யார் - சாமாரின் .
  • 2வது முறையாக வாஸ்கோடகாமா எப்போது இந்தியா வந்தார் - 1501.
  • இந்தியாவில் போர்ச்சுகீசியர் முதல் ஆளுநர் யார் - பிரான்சிஸ் கோ-டி-அல்மெய்டா (கி.பி. 1505- கி.பி. 1509).
  • நில நீர்க் கொள்கை பின்பற்றிய போர்ச்சுக்கீசியர் ஆளுநர் யார் - பிரான்சிஸ்கோ-டி-அல்மெய்டா.
  • பிரான்சிஸ்கோ - டி-அல்மெய்டா எப்போது எகிப்தியர்களால் கொல்லப்பட்டார் - கி.பி1509.
  • போர்ச்சுகீசியரின் 2 வது ஆளுநர் - அல்போன்ஸே-டி-அல்புகர்க்.
  • அல்போன்ஸே டி அல்புகர்க் எப்போது பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றினார் - 1510.
  • இந்தியாவில் போர்ச்சுகீசியர் ஆதிக்கத்தை உண்மையாக நிலை நாட்டியவர் யார் - அல்புகர்க்.
  • பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் என்ற இடத்தில் துறைமுகத்தை கட்டிய போர்ச்சுகீசியர் ஆளுநர் யார் - அல்போன்ஸே -டி-அல்புகர்க்.
  • அல்புகர்க் எப்போது எங்கு இறந்தார் -1515, கோவா.
  • தலைக்கோட்டை போர் எப்போது நடைபெற்றது - கி.பி 1555.
  • போர்ச்சுகீசியர்கள் யாருடன் மட்டுமே உறவு கொண்டிருந்தனர் - விஜயநகரப் பேரரசு.
  • போர்ச்சுகீசியர் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது எது - விஜயநகர பேரரசு வீழ்ச்சி.
  • 1580 ல் போர்ச்சுக்கல் யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்தது - ஸ்பெயின்.

டச்சுக்காரர்கள்.

  • டச்சு கிழக்கிந்திய கம்பெனி எப்போது நிறுவப்பட்டது - கி.பி 1602.
  • டச்சுக்காரர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் - ஹாலந்து.
  • டச்சுக்காரர்கள் தலைமை இடமாக செயல்பட்டது எது - பழவேற்காடு புலிகப்.
  • அம்பாயனா படுகொலை எப்போது நடைப்பெற்றது - கி.பி.1623
  • அம்பாய்னபடுகொலை என்றால் என்ன - இந்தோனேசியா அம்பாய்னா என்ற இடத்தில் ஆங்கில வியாபாரிகளை டச்சுக்காரர்கள் கொன்றனர்.

ஆங்கிலேயர்கள்.

  • 1588 ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஸ்பானிய ஆர்மடா என்ற கப்பலையார் தோற்கடித்தனர் - ஆங்கிலேயர்கள்.
  • எத்தனை வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியை தோற்றுவித்தனர் - 100 லண்டன் வியாபாரிகள்
  • எப்போது கிழக்கிந்திய கம்பெனிக்கு இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கினார்கள் - மசம்பர் 31, 1600.
  • 1608 ம் ஆண்டு இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸ் கொடுத்த வியாபாரம் செய்ய கோரிய அனுமதி கடிதத்துடன் யார் ஜஹாங்கீர் அவைக்கு வருகை புரிந்தார் - வில்லியம் ஹாக்கின்ஸ்.
  • வணிக குழு அமைக்க ஜஹாங்கீர்யாருக்கு அனுமதி வழங்கினர் - சர் தாமஸ் ரோ (1615) சென்னை நகரை உருவாக்கியவர் யார் - பிரான்ஸிஸ் டே (1639).
  • புனித ஜார்ஜ் கோட்டை எப்போது கட்டப்பட்டது - 1640.
  • டச்சுக்காரர்கள் இந்தியாவில் போட்டியிட முடியாமல் யாரிடம் தங்கள் வாணிப தளங்களை விற்றனர் - ஆங்கிலேயர்கள்.
  • ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனி யாரிடமிருந்து பெறப்பட்டது - 2ம் சார்லஸ் 1699 ல் யாருடைய அனுமதி பெற்று கல்கத்தாவில் வாணிப மையத்தை ஏற்படுத்தினார் - முகலாய மன்னர் ஒளரங்கசீப்.
  • யாருடைய நினைவாக வில்லியம் கோட்டை கட்டப்பட்டது - இங்கிலாந்து மன்னர் 3ம் வில்லியம்

டேனியர்கள்.

  • டேனியர்கள் எந்த நாட்டை சார்ந்தவர்கள் - டென்மார்க்.
  • டேனியர்கள் முதல் வணிய தலம் எங்கு எப்போது ஏற்படுத்தப்பட்டது - தரங்கம்பாடி (1620)

பிரெஞ்சுக்காரர்கள்.

  • பிரான்ஸ் மன்னர் 14ம் லூயியின் அமைச்சரான கால்பர்ட் என்பவரின் முயற்சியால் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனி எப்போது தோற்றுவிக்கப்பட்டது - 1664.
  • பிரெஞ்சுக்காரர் தலைமை இடமாக மாறியது - பாண்டிச்சேரி.
  • பாண்டிச்சேரியை நிறுவியவர் யார்? - பிரங்காய் மார்ட்டின்.
  • பிரெஞ்சு கவர்னராக டியூப்ளே எப்போது பொறுப்பேற்றார் - 1742

கர்நாடகப் போர்.

  • முதல் கர்நாடகப் போர் காலம் - கி.பி 1746 - கி.பி 1748
  • முதல் கர்நாடகப் போருக்கு காரணம் என்ன - ஐரோப்பாவில் நடைபெற்ற ஆஸ்திரிய வாரிசுரிமை போர்
  • முதல் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது - அய்லா ஷ பேல் உடன்படிக்கை (1748)
  • 2ம் கர்நாடகப் போர் காலம் - கி.பி. 1748- கி.பி 1754
  • 2ம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது - பாண்டிச்சேரி உடன்படிக்கை (1755)
  • ஆற்காட்டு வீரர் என அழைக்கப்படுபவர் - ராபர்ட் கிளைவ்
  • 3ம் கர்நாடகப் போர் காலம் - கி.பி 1756 - கி.பி 1763
  • எந்த போரின் விளைவாக 3ம் கர்நாடகப் போர் தொடங்கியது - ஐரோப்பாவில் ஏற்பட்ட ஏழாண்டுப்போர்
  • 3ம் கர்நாடகப் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது - பாரிஸ் உடன்படிக்கை (1763)
  • வந்தவாசிவீரர் என அழைக்கப்படுபவர் - சர் அயர் கூட்

பிளாசிப்போர்

  • இருட்டறை துயர சம்பவம் எப்போது - 1757
  • 1757 பிளாசிப்போர் யாருக்கு இடையே நடைப்பெற்றன - சிராஜ் உத் தௌலா, இராபர்ட் கிளைவ் (ஆங்கிலேயர்)
  • இந்தியாவில் ஆங்கில ஆட்சி கால் ஊன்ற அமைந்த போர் எது? - பிளாசிப்போர்

பக்சார் போர்

  • 1764 ல் பக்சார் போர் யாருக்கு இடையே நடைபெற்றன - மீர் காசிம், ஷஜா உத்தௌலா, 2ம் ஷா ஆலம்கூட்டுப்படைக்கும் ஆங்கிலேயருக்கும்
  • எந்த உடன் படிக்கை மூலம் பக்சார் போர் முடிவுக்கு வந்தது - அலகாபாத் உடன்படிக்கை (1765)
  • எந்த போர் ஆங்கிலேயரை வங்காளத்தில் உண்மையான ஆட்சியாளராக மாற்றியது - பக்சார் போர்

இராபர்ட்கிளைவ்

  • வங்காளத்தில் முதல் ஆளுநர் யார்? - இராபர்ட் கிளைவ் .
  • இராபர்ட் கிளைவ் எங்கு இரட்டை ஆட்சி முறையை அறிமுகப்படுத்தினார் - வங்காளம்.
  • கம்பெனி ஊழியர்கள் மற்றும் அவர்களின் விதவைகளுக்கு உதவ கிளைவின் நிதி உருவாக்கியவர் யார் - இராபர்ட் கிளைவ்.

மைசூர் போர்கள்

  • முதலாவது மைசூர் போர் காலம் - (1767 - 1769).
  • 1 ம் மைசூர் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது - மதராஸ் உடன்படிக்கை.
  • 2 ம் மைசூர் போர் காலம்- (1780-1784).
  • 2 ம் மைசூர் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது - மங்களூர் உடன்படிக்கை (1784).
  • 3 ம் மைசூர் போர் காலம் - (1790-1792).
  • 3 ம் மைசூர் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது - சீரங்கப்பட்டினம் (1792).
  • 4 ம் மைசூர் போர் காலம் - 1799.
  • எந்த மைசூர் போரின் போது திப்பு சுல்தான் இறந்தார் - 4ம் மைசூர் போர் (மே, 4, கிபி 1799).
  • 4 ம் மைசூர் போரில் ஆங்கிலேயர் வெற்றி பெற காரணம் - வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டம்.


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts