Monday, October 04, 2021

GS-36-INDIAN NATIONAL MOVEMENT | இந்திய தேசிய இயக்கம் | முகலாயப் பேரரசு | ஒரு வரி வினா விடை

முகலாயப் பேரரசு

பாபர்

  • இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார் - பாபர்
  • 1526 ஏப்ரல் 21 ல் நடைபெற்ற முதலாம் பானிப்பட்டுப் போரில் பாபர் யாரை முறியடித்தார் - இப்ராஹிம் லோடி
  • முதலாம் பானிப்பட்டு போரில் பாபர் வெற்றிக்கு எது வழிவகுத்தது - பீரங்கி
  • தம்மை இந்துஸ்தானத்தின் பேரரசர் என்று அறிவித்துக் கொண்டவர் யார் - பாபர்
  • 1527 ஆம் ஆண்டுகான்வா போரில் பாபர் யாருடன் போரில் ஈடுபட்டார் - ரானா சங்கா
  • கி.பி.1528ம் ஆண்டு சந்தேரி போரில் பாபர் யாருடன் போரில் ஈடுபட்டார் - மாளவத்தை ஆட்சி செய்த மேதினிராய்
  • கி.பி.1529 காக்ரா போரில் பாபர் யாருடன் போரில் ஈடுபட்டார் - முகமது லோடி
  • பாபர் எங்கு எப்போது மறைந்தார் -1530, ஆக்ரா
  • பாபர் சுயசரிதை துசுக் - இ-பாபரி (பாபரின் நினைவுகள்) எந்த மொழியில் எழுதப்பட்டது. - துருக்கி

ஷெர்ஷா சூர் (ஆப்கானிய குறுக்கீடு

  • எந்தாண்டு சௌசா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஷெர்ஷாகானிடம் உமாயூன் தோல்வியுற்றார் - 1539
  • 1540 பில்கிரம் போரில் (கன்னோஜ்போர்) ஷெர்கான் யாரை தோற்கடித்தார் - ஹிமாயூன் (1540-1545)
  • சூர் மரப்பை தோற்றுவித்தவர் யார் - ஷெர்ஷா
  • கி.பி 1539ம் ஆண்டு சௌசா என்ற இடத்தில் நடைபெற்ற போரில் ஷெர்ஷா யாரை தோற்கடித்தார் - உமாயூன்
  • ஷெர்ஷாவின் இயற்பெயர் என்ன - பரீத்
  • ஷெர்ஷா எந்தாண்டு டெல்லியின் ஆட்சியாளரனார் - 1540
  • ஷெர்ஷா அறிமுகப்படுத்திய வெள்ளி நாணயத்தின் பெயர் என்ன - தாம்
  • ஷெர்ஷாவின் நான்கு முக்கிய பெருவழிச் சாலைகள் 1. சோனார்கான் - சிந்து 2. ஆக்ரா - புர்ஹாம்பூர் 3. ஜோத்பூர் - சித்தூர் 4. லாகூர் - முல்தான்
  • பத்மாவத் என்ற நூலை எழுதியவர் யார் - மாலிக் முகமது ஜெயசி
  • அலாவுதின் கில்ஜியின் குதிரைகளுக்கு சூடுபோடுதல் போன்ற நடைமுறைகளை யார் பின்பற்றினார் - ஷெர்ஷா
  • புராணகியா யாருடைய கட்டிடக் கலைக்கு உதாரணம் - ஷெர்ஷா
  • ஷெர்ஷாவின் நிர்வாகத்தில் திவானி - இ-விசாரத் என்பது - வரவு மற்றும் செலவு
  • ஷெர்ஷாவின் நிர்வாகத்தில் திவானி - இஆரிஷ் என்பது - இராணுவம்
  • ஷெர்ஷாவின் நிர்வாகத்தில் திவானி -இ-ரசாலத் என்பது - வெளியுறவு மற்றும் தூதரகம்
  • ஷெர்ஷாவின் நிர்வாகத்தின் திவானி - இ -இன்ஷா என்பது - அரசு ஆணைகள் மற்றும் கடித போக்குவரத்து
  • அக்பரின் முன்னோடியார் - ஷெர்ஷா
  • நவீன நாணய முறையின் தந்தை என யார் அழைக்கப்படுபவர் - ஷெர்ஷா
  • ஷெர்ஷாவின் கல்லறை எங்கு உள்ளது - சசாரம் (பீகார்)

அக்பர்

  • அக்பர் எங்கு எப்போது பிறந்தார் -1542 நவம்பர்
  • அமர்க்கோட்டை 30. 1556ம் ஆண்டு 2ம் பானிப்பட்டு போரில் அக்பர் யாரை தோற்கடித்தார் - ஹெமு
  • முதல் ஐந்தாண்டு கால ஆட்சியின் போது அக்பருக்கு அரசப்பிரதியாக யார் செயல்பட்டார் - பைரம்கான்
  • 1576ம் ஆண்டு ஹால் திகாட் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் மான் சிங் தலைமையிலான முகலாயப் படைகள் யாரை முறியடித்தன - ராணா பிரதாப் சிங்
  • ஜிசியா மற்றும் புனிதப் பயண வரியினை ரத்து செய்த - அக்பர்
  • அக்பரின் வளர்ப்புத்தாய் - மாகம் அனாகா
  • யாருடைய காலம் அந்தப்புர அரசாங்க காலம் என்று அழைக்கப்படுகிறது - அக்பர் (மாகம் அனாகா, 2 ஆண்டு
  • அக்பர் ஆட்சியில் எந்த ராஜபுத்திரர்களை அரசின் உயர் பதவியில் நியமனம் செய்தார் - இராஜாமான் சிங், இராஜ பகவான் தாஸ், இராஜா தோடர்மால், பீர்பால்
  • தவறுபடா ஆணையிணை பிரகடனப் படுத்திய முகலாய அரசர் - அக்பர்
  • இராஜா தோடர்மால் பாகவத புராணத்தை என்ன மொழியில் மொழிப் பெயர்த்தார் - பாரசீக மொழி
  • அயினி அக்பரி மற்றும் அக்பர் நாமா என்ற நூலை எழுதியவர் யார் - அபுல் பாசல்
  • இதிகாச நூல்களாகிய இராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தவர் யார் - அபுல் பைசி
  • அக்பர் அவையிலிருந்த இசை ஞானி யார் - தான்சேன்
  • கி.பி. 1575ம் ஆண்டு யார் இபாதத் கானா என்ற தொழுகை இல்லத்தைக் கட்டினார். - அக்பர்
  • தீன் இலாஹி (அல்லது) தெய்வீக மதத்தினை அக்பர் எப்போது வெளியிட்டார் - கி.பி.1582
  • மன்சப்தாரி முறையை அறிமுகப் படுத்திய முகலாய மன்னர் யார்? - அக்பர்
  • மன்சப் என்பதன் பொருள் - தரம் அல்லது தகுதி
  • பதேப்பூர் சிக்ரி என்ற நகரத்தை உருவாக்கியவர் யார் - அக்பர்
  • புலந்தார் வாசா என்ற நுழைவு வாயிலை கட்டியவர் யார் அக்பர்
  • அக்பரி-மஹால், ஜஹாங்கிரி மஹால், பஞ்ச்மஹால், ஜோத்பாய் அரண்மனை கட்டியவர் யார் - அக்பர்
  • அக்பர் எப்போது இறந்தார் - கி.பி. 1605 (63 வயது)

ஜஹாங்கீர்

  • ஜஹாங்கீர் (அல்லது) உலகினை வெல்பவர் என்ற சிறப்பு பெயருடன் எப்போது அரியணை ஏறினார் - கி.பி.1605
  • ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன்தேவ்யை கொன்ற முகலாய யார் - ஜஹாங்கீர்
  • ஜஹாங்கீர் அவைக்கு வந்த ஆங்கிலேயர் யார் - வில்லியம் ஹாக்கின்ஸ், சர் தாமஸ் ரோ
  • ஜஹாங்கீரின் சுய சரிதையின் பெயர் என்ன - துசுக் - இ- ஜஹாங்கிரி
  • நீதிச் சங்கிலி மணி என்ற புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப் படுத்தியவர் யார் - ஜஹாங்கீர்
  • உலகின் ஒளி என்ற சிறப்புப் பெயரினை பெற்றவர் யார் - நூர்ஜஹான்
  • நூர்ஜஹானின் காலம் என்றழைக்கப் படும் காலம் எது - கி.பி 1611 முதல் கி.பி 1626
  • நூர் மஹால் (அரண்மனையின் ஒளி) என்ற சிறப்புப் பெயரை பெற்றவர் - மெகருன்னிஷா
  • ஜஹாங்கீர் ஷாலிமர் மற்றும் நிஷாத் என்ற பூந்தோட்டங்களை எங்கு உருவாக்கினார் LOL CO- ஸ்ரீநகர்

ஷாஜஹான்

  • ஷாஜஹான் இயற்பெயர் என்ன - குர்ரம்
  • உலகின் அரசன் என அழைக்கப்படுபவர் யார் - ஷாஜஹான்
  • மொகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுவது யாருடைய காலம் - ஷாஜஹான் (கி.பி.1628-1658)
  • கட்டிடக் கலையின் இளவரசர் என்றும் பொறியாளர் பேரரசர் என்று அழைக்கப்படுபவர் - பேரரசர் ஷாஜஹான்
  • ஷாஜஹானாபாத் என்ற புதிய அழகிய தலைநகரை உருவாக்கியவர் யார் - ஷாஜஹான்
  • டெல்லியில் செங்கோட்டையை உருவாக்கி யவர் யார் - ஷாஜஹான்
  • செங்கோட்டையிலுள்ள மாளிகைகள் என்ன - ரங் மஹால், மோதி மஹால், முத்து மஹால், திவான் - இ-காம், திவான் -இ-காஸ்
  • முத்து மசூதி என்ற அழைக்கப்படுகின்ற மோதிபள்ளிவாசலை ஆக்ராவில் கட்டியவர் யார் - ஷாஜஹான்
  • எந்த சிற்பியின் தலைமையில் தாஜ்மஹால் கட்டப்பட்டது - உஸ்தாத் இஷா

ஒளரங்கசீப்

  • ஆலம்கீர் என்ற சிறப்புப் பட்டத்தினை சூட்டிக்கொண்டவர் யார் - ஔரங்கசீப்
  • ஔரங்கசீப் என்ன முஸ்லீம் பிரிவை சார்ந்தவர் - சன்னி
  • இஸ்லாமிய புனித நூலான குரானை தவறாமல் தினந்தோறும் படித்து வந்த முகலாய மன்னர் யார் - ஔரங்கசீப்
  • ஒன்பதாவது சீக்கிய குரு யார் - தேஜ்பகதூர்
  • கல்சா என்ற இராணுவ அமைப்பினை உருவாக்கி ஔரங்சீப்பை இறுதிவரை எதிர்த்த சீக்கியர் யார் - குரு கோவிந்த் சிங்
  • ஔரங்கசீப் மராத்திய தலைவர் சிவாஜியை அழிக்க தக்காணத்தின் ஆளுநரான யாரை அனுப்பினார் - செயிஷ்டகான் (கி.பி. 1660) முஸ்லீம் அல்லாதவர்கள் மீது ஜிசியா மற்றும் புனிதப் பயண வரியினை மீண்டும் விதித்தவர் யார் - ஔரங்கசீப்
  • ஔரங்கசீப், தக்காண புற்றுநோய் என யாரை அழைத்தார் - சிவாஜி
  • ஒளரங்கசீப் எப்போது இறந்தார் - கி.பி. 1707
  • முகலாய காலத்தில் தலைமை அமைச்சர் எவ்வாறு அழைக்கப்பட்டார் - வசீர்
  • முகலாய நிர்வாகம் எவ்வாறு பிரிக்கப் பட்டது - பேரரசு - மாகாணங்கள் - சுபா-சர்க்கார் - பர்கானாக்காள் - கிராமங்கள்
  • ஜப்தி முறையை அறிமுகப்படுத்தியவர் யார் - அக்பர்
  • யாருடைய சமயக் கொள்கை முகலாய பேரரசு வீழ்ச்சியடைய காரணம் - ஔரங்கசீப்
  • யாருடைய படையெடுப்பு மொகலாயப் பேரரசினை முற்றிலுமாக அழிவுறச் செய்தது. - நாதிர்ஷா மற்றும் அகமது ஷா அப்தாலி


| kalvisolai.in | tnpsc | trb | study materials | audio study materials |

No comments:

Popular Posts