Tuesday, August 31, 2021

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2021 | நடப்பு நிகழ்வுகள் 2021 | சமிபத்திய நிகழ்வுகள் 2021


❇️ ஆகஸ்ட் 1 : ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி அணி 49 ஆண்டுகளுக்குப் பிறகும் மகளிர் ஹாக்கி அணி முதன் முறையாகவும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.


❇️ ஆகஸ்ட் 2: ஒலிம்பிக் வரலாற்றில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெகான் நான்கு தங்கம் உள்பட ஏழு பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.


❇️ ஆகஸ்ட் 4: ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை வெல்டர் வெயிட் பிரிவில் இந்தியாவின் லவ்லீனா போர்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் வென்றார்.


❇️ ஆகஸ்ட் 5: ஒலிம்பிக் மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிச் சுற்றில் தோல்வியடைந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். மல்யுத்தத்தில் சுஷில்குமாருக்குப் பிறகு வெள்ளி வென்ற வீரரானார் ரவிக்குமார்.


❇️ ஆகஸ்ட் 5: அரசியலமைப்புச் சட்டம் 161-பிரிவின் கீழ் ஆளுநர் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுள் கைதிகளை முன்பே விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


❇️ ஆகஸ்ட் 5: ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று சாதித்தது.


❇️ ஆகஸ்ட் 6: விளையாட்டில் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது இனி மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது என்கிற பெயரில் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.


❇️ ஆகஸ்ட் 7: டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளம் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். விடுதலை பெற்ற பிறகு தடகளத்தில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.


❇️ ஆகஸ்ட் 7: ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் பூனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.


❇️ ஆகஸ்ட் 8: டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் 48-வது இடத்தை இந்தியா பிடித்தது. 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்தது.


❇️ ஆகஸ்ட் 9: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 619 விக்கெட்டுகளுடன் 3ஆம் இடத்திலிருந்த அனில் கும்ப்ளேவை ஆண்டர்சன் பின்னுக்குத் தள்ளினார்.


❇️ ஆகஸ்ட் 9: தமிழ்நாட்டின் நிதி நிலைமையையும் கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் தொடர்பாகவும் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். இதில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.


❇️ ஆகஸ்ட் 11: இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் பட்டியலை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களே தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.


❇️ ஆகஸ்ட் 12: குஜராத்தில் அங்கலேஷ்வர் எனும் இடத்தில் கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.


❇️ ஆகஸ்ட் 13: திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழ்நாடு அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். முதன் முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட் தாக்கலானது.


❇️ ஆகஸ்ட் 14: தமிழ்நாடு வரலாற்றில் சட்டப்பேரவையில் வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.


❇️ ஆகஸ்ட் 13: பழம்பெரும் சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292-வதுகுரு மகாசன்னிதானமான அருணகிரி நாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் உடல் நலக் குறைவால் காலமானார்.


❇️ ஆகஸ்ட் 14: ஆகஸ்ட் 14ஆம் தேதி தேசப் பிரிவினை நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


❇️ ஆகஸ்ட் 14: 2021ஆம் ஆண்டுக்கான தமிழ்நாட்டின் சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வானது. சிறந்த நகராட்சியாக உதகமண்டலம், பேரூராட்சியாக திருச்சியில் உள்ள கல்லக்குடி தேர்வாயின.


❇️ ஆகஸ்ட் 15: ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாட்டுப் படைகள் விலகத் தொடங்கிய நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர். ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டுக்குத் தப்பியோடினார்.


❇️ ஆகஸ்ட் 15: நாட்டின் 75-வது சுதந்திர தின பவள விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடியும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றினார்கள்.


❇️ ஆகஸ்ட் 15: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின்படி இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்ற பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


❇️ ஆகஸ்ட் 16: 2020ஆம் ஆண்டில் உலகின் 50 மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் சீனாவின் ஹோடான் முதலிடத்தையும் இந்தியாவின் காசியாபாத் இரண்டாமிடத்தையும் பிடித்தன. தூய்மையான நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஜூட்புரி முதலிடத்தைப் பிடித்தது.


❇️ ஆகஸ்ட் 18: சுடோகு எனும் புதிர் விளையாட்டை உருவாக்கிய ஜப்பானைச் சேர்ந்த மகி காஜி காலமானார். இவர், சுடோகு விளையாட்டின் தந்தை என்றழைக்கப்படுகிறார்.


❇️ ஆகஸ்ட் 20: உச்ச நீதிமன்றத்துக்குப் புதிதாக ஒன்பது நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரை செய்தது.


❇️ ஆகஸ்ட் 20: இந்திய ஹாக்கி ஆடவர், மகளிர் அணிகளுக்கான ஸ்பான்சர்ஷிப் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்தது.


❇️ ஆகஸ்ட் 23: மதுரை ஆதீனத்தின் 293-ஆவது சன்னிதானமாக ஹரிகர தேசிக பரமாச்சாரிய சுவாமிகளுக்குப் பட்டம் சூட்டப்பட்டது.


❇️ ஆகஸ்ட் 24: மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.


❇️ ஆகஸ்ட் 24: டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர் தேக் சந்த்தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். இத்தொடரில் 163 நாடுகளைச் சேர்ந்த 4,537 பேர் பங்கேற்றுள்ளனர்.


❇️ ஆகஸ்ட் 25: மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை மாநில காவல்துறையினர் கைது செய்தனர். 2001இல் மத்திய அமைச்சர்களாக இருந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதற்குப் பிறகு நடந்த நிகழ்வு இது.


❇️ ஆகஸ்ட் 26: ஆர்க்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய தீவான கிரீன்லாந்தில் உறைநிலைக்கு மேலே வெப்பம் சென்றதால், 70 ஆண்டுகளில் முதன் முறையாகப் பனிப்பொழிவுக்குப் பதிலாக அதிக மழைப் பொழிவு ஏற்பட்டது.


❇️ ஆகஸ்ட் 26: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே ஐ.எஸ். கோராசன் என்கிற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் உள்பட சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர்.


❇️ ஆகஸ்ட் 29: டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பவினா பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரா ஒலிம்பிக் வரலாற்றில் டேபிள் டென்னிஸில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கம் இது.


❇️ ஆகஸ்ட் 30: கரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்குப் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்தது.


❇️ ஆகஸ்ட் 31: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறின.


No comments:

Popular Posts