Monday, February 21, 2022

TNPSC G.K - 70 | ஜி-20 நாடுகளின் பட்டியல்

சர்வதேச பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டதே ‘நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுனர்களின் அமைப்பு.’

இது இருபது உலக நாடுகள் மற்றும் அதில் உள்ள நிதி வளங்களின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்களைக் கொண்ட கூட்டமைப்பாகும்.

இதனையே ‘Group of Twenty’ (20-களின் குழு) என்றும், சுருக்கமாக ‘ஜி-20’ என்றும் அழைக்கிறார்கள்.

இதில் இடம் பிடித்துள்ள 20 நாடுகளின் பட்டியல் பின் வருமாறு:- இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம்.

ஜி-20அமைப்பின் தலைவராக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன.

அந்த வகையில் வரும் டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை, அந்த தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வருகிறது.

No comments:

Popular Posts