Monday, February 21, 2022

TNPSC G.K - 69 | திருக்குறள் சிறப்புகள்

  • திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் - 14 ஆயிரம்.
  • தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெற வில்லை.
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் - 42 ஆயிரத்து 194.
  • அனிச்சம், குவளை ஆகிய இரண்டு மலர்கள் மட்டும்தான், திருக்குறளில் இடம் பிடித்துள்ளன.
  • திருக்குறளில் இடம்பெற்ற ஒரே பழம், நெருஞ்சிப் பழம்.
  • தமிழ் உயிர்எழுத்துக்களில் ஒன்றான ‘ஔ’ மட்டும், திருக்குறளில் இடம்பெறவில்லை.
  • திருக்குறள் நூலில் இடம் பெற்ற இரண்டு மரங்கள், பனை மற்றும் மூங்கில்.
  • திருக்குறளில், ‘9’ என்ற எண் இடம்பெற வில்லை. அதே சமயம் ‘7’ என்ற எண், எட்டு குறள்களில் இடம்பெற்றுள்ளது.
  • திருவள்ளுவர், திருக்குறளில் பாடியிருக்கும் ஒரே விதை ‘குன்றின்மணி’
  • திருக்குறள் இதுவரை 80 மொழிகளில், மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
  • நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும், திருக்குறளை மொழி பெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.

No comments:

Popular Posts