Sunday, October 02, 2022

TNPSC G.K - 150 | குப்தப் பேரரசு.

  • குப்தர் வம்சத்தின் முதல் அரசர் - ஸ்ரீ குப்தர்.

  • முதலாம் சந்திர குப்தர் மஹாராஜாதிராஜா' என சிறப்புப் பெயர் பெற்றார்.

  • இந்திய நெப்போலியன்', 'கவிராஜா', 'சாஹாரி' என்ற பட்டப்பெயர்கள் சமுத்திரகுப்தருக்கு உரியவை.

  • இரண்டாம் சந்திர குப்தர் விக்கிரமாதித்யர் என்ற சிறப்பு பெயர் பெற்றார்.

  • முதல் சீனப் பயணியான பாஹியான், இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்தார் .

  • 'நவரத்தினங்கள்' என்ற ஒன்பது அறிஞர்கள் இரண்டாம் சந்திர குப்தர் அவையை அலங்கரித்தனர் .

  • குப்தர் காலம் இந்தியாவின் பொற்காலம்' என அழைக்கப்படுகிறது.

  • நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் : குமார குப்தர்.

  • குப்தர் கால ஓவியங்கள் மஹாராஷ்டிராவில் ஔரங்காபாத் அருகிலுள்ள அஜந்தா குகைகளில் காணப்படுகின்றன .

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் 'தியோகார்' என்ற இடத்தில் அமைந்துள்ள தசாவதாரக் கோயில், குப்தர் காலத்தைச் சேர்ந்தது.

  • மெஹருலி' என்ற இடத்திலுள்ள துருப்பிடிக்காத இரும்புத்தூண் குப்தர் கால கலைச் சின்னங்களில் ஒன்று.

  • குப்தர் காலம், இந்து சமயம் மற்றும் சம்ஸ்கிருத மொழியின் மறுமலர்ச்சிக் காலமாகும்.

No comments:

Popular Posts