Wednesday, October 05, 2022

TNPSC G.K - 180 | பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு - பாடறிந்து ஒழுகுதல்.

ஆசாரக்கோவை :


  • நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
  • இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
  • ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
  • நல்லினத் தாரோடு நட்டல் - இவையெட்டும்
  • சொல்லிய ஆசார வித்து - பெருவாயின் முள்ளியார்

சொல்லும் பொருளும்  :


  • நன்றியறிதல் – பிறர் செய்த உதவியை மறவாமை
  • ஒப்புரவு - எல்லோரையும் சமமாகப் பேணுதல்
  • நட்டல் - நட்புக் கொள்ளுதல்.

நூல் வெளி :


  • ஆசாரக்கோவை -பெருவாயின் முள்ளியார்.
  • பிறந்த ஊர் -கயத்தூர்.
  • ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள்.
  • இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
  • இந்நூல் 100 வெண்பாக்களைக் கொண்டது.

கண்மணியே கண்ணுறங்கு :


  • ஆராரோ ஆரிரரோ
  • ஆராரோ ஆரிரரோ
  • நந்தவனம் கண் திறந்து
  • நற்றமிழ்ப் பூ எடுத்து
  • பண்ணோடு பாட்டிசை த்துப்
  • பார்போற்ற வந்தாயோ !

சொல்லும் பொருளும் :


  • நந்தவனம் - பூஞ்சோலை
  • பண் - இசை
  • பார் - உலகம்
  • இழைத்து - பதித்து

தொகைச்சொற்களின் விளக்கம் :


  • முத்தேன் - கொம்புத்தேன், மலைத்தேன், கொசுத்தேன்
  • முக்கனி - மா, பலா, வாழை
  • முத்தமிழ் - இயல், இசை, நாடகம்

பொதுவான குறிப்புகள் :


  • தாலாட்டு வாய்மொழி இலக்கியங்களுள் ஒன்று.
  • தால் என்பதற்கு நாக்கு என்று பொருள்.
  • நாவை அசைத்துப் பாடுவதால் தாலாட்டு (தால் + ஆட்டு) என்று பெயர் பெற்றது.

தமிழர் பெருவிழா :


  • விரும்பிக் கொண்டாடுவது விழா எனப்படும்
  • பொங்கல் விழா -இது தமிழர் திருநாள் என்றும் போற்றப்படுகிறது. அறுவடைத்திருவிழா என்றும் அழைப்பர்.

போகித்திருநாள் :


  • பழையன கழிதலும் புதியன புகுதலும்” (நன்னூல் நூற்பா -462)
  • மழைக்கடவுளை வழிபடும் நோக்கில் அக்காலத்தில் போகிப் பண்டிகை இந்திரவிழாவாகக் கொண்டாடப்பட்டது.

பொங்கல் திருநாள் :


  • தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாள் ஆகும்.
  • பொங்கல் என்பதற்குப் பொங்கிப்பெருகி வருவது என்று பொருள்
  • தை முதல் நாளில் திருவள்ளுவராண்டு தொடங்குகிறது.
  • தை இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாள் கொண்டாடப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் :


  • பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல்.
  • மாடு என்ற சொல்லுக்குச் செல்வம் என்னும் பொருளும் உண்டு
  • மஞ்சுவிரட்டு என்பது மாடுகளை அடக்கித் தழுவும் வீர விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு மாடுபிடித்தல், ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் என்றும் அழைக்கப்படுகிறது
  • திருவள்ளுவர் கி. மு (பொ . ஆ. மு) 31இல் பிறந்தவர். எனவே, திருவள்ளுவராண்டைக் கணக்கிட நடைமுறை ஆண்டுடன் 31 ஐக்கூட்டிக்கொள்ள வேண்டும்.
  • (எ.கா.) 2018 + 31 = 2049

தெரிந்து தெளிவோம் :


  • அறுவடைத் திருநாள் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியம், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
  • பஞ்சாப் மாநிலத்தில் லோரி என்றும்
  • குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் உத்தராயன் என்றும் கொண்டாடப்படுகிறது.

மனம் கவரும் மாமல்லபுரம் :


  • நரசிம்மவர்மன் மற்போரில் சிறந்தவன் அதனால், மாமல்லன் என்றும் பெயர்.
  • தந்தை மகேந்திரவர்ம பல்லவர்

மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள் :


  1. அர்ச்சுனன் தபசு
  2. கடற்கரைக் கோவில்
  3. பஞ்சபாண்டவர் ரதம்
  4. ஒற்றைக்கல் யானை
  5. குகைக்கோவில்
  6. புலிக்குகை
  7. திருக்கடல் மல்லை
  8. கண்ணனின் வெண்ணெய் பந்து
  9. கலங்கரை விளக்கம்
  • அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி இந்தச் சிற்பத்தில் உள்ளதால் இப்பாறைக்கு ‘அர்ச்சுனன் தபசு’ என்று பெயர். இதனைப் ‘பகீரதன் தவம்’ என்றும் கூறுவர்
  • தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடம் மாமல்லபுரம்

சிற்பக் கலை வடிவமைப்புகள் :


  • நான்கு வகைப்படும்.
  • குடைவரைக் கோயில்கள்
  • ஒற்றைக் கல் கோயில்கள்.
  • கட்டுமானக் கோயில்கள்
  • புடைப்புச் சிற்பங்கள்
  • இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்

மயங்கொலிகள் :


  • உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடுள்ள ஒலிகளை மயங்கொலிகள் என்கிறோம்.
  • ண, ன, ந, ல, ழ, ள, ர, ற ஆகிய எட்டும் மயங்கொலி எழுத்துகள் ஆகும்.

ண, ன, ந- எழுத்துகள் :


  • ண - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதி - ணகரம்.
  • ன - நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதி-னகரம்.
  • ந - நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதி - நகரம்
  • (ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துக்கள்
  • டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும், தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும், றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • ட என்னும் எழுத்துக்கு முன் ண் வரும் (எ.கா.) கண்டம், வண்டி, நண்டு
  • ற என்னும் எழுத்துக்கு முன் ன் வரும் (எ.கா.) மன்றம், நன்றி, கன்று.

ல, ள, ழ – எழுத்துகள் :


  • ல- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் பற்களின் அடியைத் தொடுவதால் லகரம் தோன்றும். இது ‘வ’ போல இருப்பதால் ‘வகர லகரம்’ என்கிறோம்.
  • ள- நா (நாவின் இருபக்கங்கள் தடித்து) மேல் அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடுவதால் ளகரம் தோன்றும். இதனைப் பொது ளகரம் என்கிறோம். இது ‘ன’ போல இருப்பதால் ‘னகர ளகரம்’ என்று கூறுவர்.
  • ழ- நாவின் நுனி மேல்நோக்கி வளைந்து வருடுவதால் ழகரம் தோன்றும்.ளகரமும் ழகரமும் ஒரே இடத்தில் ஒலிக்கப்படும். ‘ழ’ தமிழுக்கே சிறப்பானது. எனவே இதனைச் சிறப்பு ழகரம் என்று அழைக்கிறோம். இது ‘ம’ போல இருப்பதால் ‘மகர ழகரம்’ என்று கூறுவது இலக்கண மரபு.

ர, ற - எழுத்துகள் :


  • ர - நாவின் நுனி மேல் அண்ணத்தில் முதல் பகுதியைத் தொட்டு வருடுவதால் ரகரம் தோன்றுகிறது. இஃது இடையின எழுத்து என்பதால் இடையின ரகரம் என்கிறோம்.
  • ற - நாவின் நுனி மேல் அண்ணத்தில் மையப்பகுதியை உரசுவதால் றகரம் தோன்றுகிறது. இது வல்லின எழுத்து என்பதால் வல்லின றகரம் என்கிறோம்.

கலைச்சொல் அறிவோம் :


  • Welcome - நல்வரவு
  • Sculptures - சிற்பங்கள்
  • Chips - சில்லுகள்
  • Readymade Dress - ஆயத்த ஆடை
  • Makeup - ஒப்பனை
  • Tiffin - சிற்றுண்டி

No comments:

Popular Posts