நற்றிணையின் உருவம் :
- திணை - அகத்திணை
- பாவகை - ஆசிரியப்பா
- பாடல்கள் - 400
- புலவர்கள் - 175
- அடி எல்லை - 9 - 12
தொகுப்பு :
- தொகுத்தவர் - தெரியவில்லை
- தொகுப்பிதவர் - பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
வேறுபெயர்கள் :
- நற்றிணை நானூறு
- தூதின் வழிகாட்டி
நூல் பெயர்க்காரணம் :
- நல் + திணை - நற்றிணை
- திணை - நிலம், குடி, ஒழுக்கம்
- நற்றிணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
- திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.
உரை, பதிப்பு :
- நற்றிணைக்கு முதலில் உரை எழுதியவர் - பின்னந்தூர் நாராயணசாமி.
- நற்றிணையை முதலில் பதிப்பித்தவர் - பின்னந்தூர் நாராயணசாமி.
கடவுள் வாழ்த்து :
- இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பாரதம் பாடிய.
- பெருந்தேவனார்.
- இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் - திருமால்.
நற்றிணையில் தொடரால் பெயர் பெற்றவர்கள்:
- மலையனார்
- தனிமகனார்
- தும்பிசேர்கீரனார்
- வண்ணப்புறச் சுந்தரத்தனார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
நற்றிணை குறிப்பிடும் அரசர்கள்:
- அதியமான் அஞ்சிக் காரி
- அழிசி குட்டுவன்
- ஆய் சேந்தன்
- உதியன் நன்னன்
- ஓரி பாண்டியன் நெடுஞ்செழியன்
- கிடைக்காதவை:
- 234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
- “சான்றோர் வருந்திய வருத்தமும்” எனத் தொடங்கும் இறையனார்
- களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.
பொதுவான குறிப்புகள்:
- வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை
- கூறப்பட்டுள்ளது.
- பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு
- வழிகாட்டியாகக் குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு
- இதில் கூறப்பட்டுள்ளது.எனவே நற்றிணையை “தூதின் வழிகாட்டி”
- என்பர்.
- உழவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது சுறா மீன்
- தாக்கியதால் ஏற்பட்ட காயம் நரம்பினால் தைத்ததை கூறுகிறது
- எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையபெற்றது நற்றிணை
- நல் என்று அடைமொழி பெற்று போற்றப்படுவது நற்றிணை
- ஓரறிவு உயிர்களையும் விரும்பும் உயரிய பண்பு, விருந்தோம்பல்,
- அறவழியில் பொருளிட்டல் முதலியன பற்றிக் கூறுகிறது
- நற்றினை பேரெல்லை 12 இருப்பினும் போதனார் இயற்றிய 110, 379
- ம் பாடல்கள் 13அடி உடையது
- வணிகர்களுக்கு வழங்கப்படும் பட்டம் காவிதி, எட்டி
- குழுவாக வணிகம் செய்வோர்க்கு வணிக சாந்து என்று பெயர்
ஆசிரியர்களில் சிலர் :
- நக்கண்ணையார் பெண்பாற் புலவர் பெருங்கோழி நாய்கன் மகள்
- நக்கண்ணையார் கூறப்படுவார் உறையூர் வீரை வேண்மான் வெளியன்
- தித்தன் என்னும் சோழ மன்னனின் மகன் போரவை கோப்பெருநற்கிள்ளி
- மல்லன் என்பானை போரில் வென்றதை கூறுகிறது புறநானூற்றில் 83 84
- 85 பாடல்களைப் பாடியுள்ளார் மிளைகிழான் நல்வேட்டனார்
- மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால் மிளைகிழான் நல்வேட்டனார்
- இவர் நற்றிணையில் 4 பாடல்களும் குறுந்தொகையில் 1 பாடல்
- இயற்றியுள்ளார்
முக்கிய அடிகள்:
- விளையா டாயமோடு வெண்மணல் அழுத்தி
- மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
- நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்பப்
- நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
- முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
- நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
- நீரின்றி அமையா உலகம்போலத்
- தம்மின்றி அமையா நம்நயந்து அருளி – (கபிலர்)
- இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
- சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
- ஒருமுலை இழந்த திருமா உண்ணி
- நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
- வெல்வம் அன்று
- இறவுப்புற தன்ன பிணர்படு தடவுமுதற்- நக்கண்ணயார்
No comments:
Post a Comment