Friday, August 18, 2023

TNPSC CURRENT AFFAIRS AUGUST 2023


  ஜூலை 30 :


 • 2019 முதல் 2021-ம் ஆண்டுவரை 13 லட்சத்து 13 ஆயிரம் பெண்களும், சிறுமிகளும் காணாமல் போய் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டது.
 • கடந்த ஆண்டை போல், இந்த ஆண்டும் சுதந்திர தினத்தன்று வீடு தோறும் தேசிய கொடி ஏற்றுங்கள் என்று பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்தார்.
 • பேராசிரியர் நன்னன் எழுதிய புத்தகங்கள் நாட்டு டைமை ஆக்கப்படும் என்று அவரது நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
 • ஜூலை 30- வெளிநாடு வாழ் இந்தியர்களில் 66 சத வீதம் பேர் வளைகுடா நாடு களில் வசிப்பதாக வெளியுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.

 • ஜூலை 31 :


 • பாக்ஸ்கான் நிறுவனம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரூ.1,600 கோடி முதலீடு செய் கிறது. இதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதற்கான ஒப்பந் தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் கையெழுத்தானது.
 • மணிப்பூர் விவகாரத்தில் வழக்கு பதிவு செய்ய தாமதம் ஏன்? என்றும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என் னென்ன? என்றும் மத்திய- மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு சரமாரி கேள்வி எழுப்பியது.
 • பழனி கோவிலுக்குள் மாற்று மதத்தினர் செல்ல தடை அறிவிப்பு பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

 • ஆகஸ்டு 1 :


 • நாடு முழுவதும் 4,001 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு ரூ.54,545 கோடி என்பது ஆய்வறிக்கையில் தெரியவந்தது.
 • பேனா நினைவு சின்னத் துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டன. அரசியலுக்காக கோர்ட்டை பயன்படுத்த வேண்டாம் என நீதிபதி தெரிவித்தார்.
 • 2023-24-ம் ஆண்டில் சாதனை அளவாக 6.77 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
 • 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அறிவித்த பிறகு, ரூ.3.14 லட்சம் கோடி மதிப்புள்ள 88 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 • ஆகஸ்டு 2 :


 • பயிரை சேதப்படுத்தியதற் காக விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள் ளது.
  நாடு முழுவதும் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அறிவித்து உள்ளது.
  மத்திய ஆயுத படைகள் மற்றும் டெல்லி போலீசில் 1 லட்சத்து 14 ஆயிரம் காலி யிடங்கள் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி கூறினார்.

 • ஆகஸ்டு 3 :


 • நாடாளுமன்ற மக்களவை யில் கடும் அமளிக்கு இடையே டெல்லி நிர்வாக மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
 • நாட்டிலேயே முதல்முறை யாக இரு மாநிலங்களை இணைக்கும் வகையில் தமிழ் நாட்டில் உள்ள ஓசூர் மற்றும் கர்நாடகாவின் பெங்களூரு இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

 • ஆகஸ்டு 4 :


 • மோடி பற்றிய அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அவரது தண்டனையை நிறுத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டு உள்ளது.
 • தேனி எம்.பி. ரவீந்திரநாத் தின் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட்டு தீர்ப் புக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக் கால தடை விதித்துள்ளது.

 • ஆகஸ்டு 5 :


 • செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.22 லட்சம் மற்றும் 60 சொத்து ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்துள்ளனர்.
 • நிலவின் தென்துருவ ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’விண்கலம் வெற்றிகரமாக நிலவு சுற்றுப்பாதைக்குள் நுழைந்தது.
 • ஆதிச்சநல்லூரில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 ஆயிரம் தொல்லியல் பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அருங்காட்சியகம் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
 • அமெரிக்கா புலனாய்வு முகமையின் உயர் பொறுப்பில் இந்திய
  வம்சாவளி பெண் ஷோஹினி சின்கா நியமனம் செய்யப்பட்டார்.
 • இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனை களுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது என்று இலங்கையின் மத்திய வங்கி அறிவித்தது.
  உலகம்
 • வெளிநாடு வாழ் இந்தியர்களில் 66 சத வீதம் பேர் வளைகுடா நாடு களில் வசிப்பதாக வெளி யுறவு துறை அமைச்சகம் கூறியுள்ளது.
 • அமெரிக்கா புலனாய்வு முகமையின் உயர் பொறுப்பில் இந்திய
  வம்சாவளி பெண் ஷோஹினி சின்கா நியமனம் செய்யப்பட்டார்.
 • இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனை களுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது என்று இலங்கையின் மத்திய வங்கி அறிவித்தது.
  விளையாட்டு
 • உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் 17 வயது இந்திய வீராங்கனை அதிதி தங்கம் வென்று சாதனை படைத்தார்.
 • இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய 3 நாடுகள் இடையேயான ஆக்கி போட்டி யில் இந்திய பெண்கள் அணி முதலிடம் பிடித்தது.
 • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கடைசி டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.
 • ஆசிய விளையாட்டுக்கான இந்திய கால்பந்து அணி அறிவிக்கப்பட்டது. தமிழக வீரர் சிவசக்தி இடம் பிடித்தார்.
 • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் எளிதில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் வசப்படுத்தியது. தொடர்ச்சியாக 13-வது முறையாக தொடரை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
 • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி போட்டியை அட்ட காசமாக தொடங்கியது.
 • உலக செஸ் தரவரிசையில் தமிழக வீரர் குகேஷ் 9-வது இடத்தை பிடித்தார்.
 • உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது.

No comments:

Popular Posts