ஜூலை 23 :- தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க மணிப்பூரில் சாதகமற்ற சூழ் நிலை நிலவுவதால், அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டுவீரர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து பயிற்சி பெறலாம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2028-ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
- டிரைவர், கண்டக்டர்களுக்கு 8 மணி நேரத்துக்கு மேல் பணி ஒதுக்கக் கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஜூலை 24 : - கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தர்மபுரியில் தொடங்கிவைத்தார். இதற்கென தமிழகம் முழுவதும் 36 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
- மணிப்பூர் பிரச்சினை குறித்து நாடாளு மன்றத்தில் விவாதிக்க வருமாறு அமித்ஷா விடுத்த அழைப்பை எதிர்க்கட்சிகள் ஏற் காமல் அமளியில் ஈடுபட்டதால் இரு அவை களும் முடங்கின.
போலீசார், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் 250 போலீஸ் நிலையங்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்து வதற்கு ரூ.10 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். - சென்னை விமான நிலையத்தில் பயணி கள் கூட்ட நெரிசலை குறைக்க உள்நாட்டு முனையம் விரிவுபடுத்தப்படுகிறது.
- பேரிடர் அபாயங்களை செல்போன் மூலம் உஷார்படுத்தும் திட்டத்தை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்த உள்ளது. இதன்மூலம், செல்போன் ‘சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டி ருந்தாலும் எச்சரிக்கை அலாரம் ஒலிக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25 :- இன்னும் ரூ.84 ஆயிரம் கோடி, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன என்று மத்திய அரசு தெரிவித்தது.
- கடந்த 1-ந் தேதி நிலவரப்படி, இந்தியா வின் மக்கள் தொகை 139 கோடி என்று மதிப்பிடப்பட்டு இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
- மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு மறைக்க எதுவும் இல்லை. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விவாதிக்க தயார் என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கூறினார்.
- இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு கன மழை கொட்டியதால் பாலங்கள், வீடுகள் வெள்ளத்தில் சேதம் அடைந்தன.
- கொரியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் சாய் ராஜ்-சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் கோப்பையை வென்று தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்தது.
- இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் கடைசி நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டதையடுத்து ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா தக்கவைத்தது.
- இளையோர் ஆசிய கோப்பை கிரிக் கெட் இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் கோப்பையை வென்றது.
- வெஸ்ட் இண்டீசுக்கு எதி ரான கடைசி டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. இதனால் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- சென்னையில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி யில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக் கப்பட்டது.
- 2-வது டெஸ்டில் இலங் கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றியோடு தொடரை வசப்படுத்தியது.
- 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு பப்புவா நியூகினியா தகுதி பெற்றது.
- அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டி ஜூன் 4-ந் தேதி தொடங்குகிறது.
- என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணி மீண்டும் தொடங்கியது. இதில் வயல்களில் நெற்பயிர்களை பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அழித்ததால் விவசாயிகள்
வேதனையடைந்தனர். - அரிசி ஏற்றுமதி தடையை நீக்க இந்தியாவை ஊக்குவிப்போம் என்று சர்வ தேச நிதியம் தெரிவித்துள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் செயல்படாத ஆழ் துளை கிணறுகள், குவாரிகுழிகளை உடனே கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள் ளார்.
- நாட்டில் கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
உலகம் - உக்ரைனுக்கு ரூ.32 ஆயிரம் கோடி ராணுவ உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.
தென்கொரிய கடற்பகுதியில் குறுகிய தூர ஏவுகணைகளை ஏவி வட கொரியா சோதனை நடத்தியது. - ஜப்பானில் வரலாறு காணாத அளவுக்கு மக்கள்தொகை வீழ்ச்சி அடைந்துள்ளது.
- ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
- பாகிஸ்தானுக்கு சீனா ரூ.19 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்கியது.
ஜூலை 27 :- மணிப்பூர் கலவரத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு பரிந்துரைத்து உள்ளது.
- சென்னையை அடுத்த மறைமலை நகர் அருகில் தாவரவியல் பூங்கா அமைக்க இங்கிலாந்து அரசுடன் தமிழ்நாடு அரசு புரிந் துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு உள்ளது.
- தமிழ்நாட்டில் முழுமையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத 80 என்ஜினீயரிங் கல்லூரிகளின் அங்கீகாரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- சென்னை, கோவையில் நில வழிகாட்டி மதிப்பு உயர உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
'சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியா எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருப்போம்' என சென்னையில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு நாடுகளின் மந்திரிகள் தெரிவித்தனர்.
ஜூலை 28 :- கையகப்படுத்தப்பட்ட நிலத்தை எடுக்க 20 ஆண்டுகள் காத்திருந்ததை போல, பயிரை அறுவடை செய்ய 2 மாதங்கள் காத் திருக்க முடியாதா? என்று என்.எல்.சி. நிர்வாகத்துக்கு சென்னை ஐகோர்ட்டுகடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியதற்காக செஸ் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட சிறந்த மனிதர் விருது முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப் பட்டது.
- ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வர உள்ளது என்றும், அந்த இடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
- ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிக்காக சென்னையில் ரூ.16 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட ஆக்கி விளையாட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஜூலை 29 :- மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
- உலக உணவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடி காரணமாக உலகளவில் லட்சக்கணக்கானோருக்கு உணவு உதவியை நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஐ.நா. தள்ளப்பட்டுள்ளது.
- ஆனைமலை மிகச்சிறந்த புலிகள் காப்பகம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Saturday, August 05, 2023
TNPSC CURRENT AFFAIRS JULY 2023
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
ஆசாரக்கோவையின் உருவம்: ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் இயற் பெயர் =முள்ளியார் தந்தை =பெருவாயின் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெ...
-
இழப்பு மீட்டல் : காயமடைந்த உடல் பகுதியிலிருந்து உடல் பாகங்கள் (அல்லது) திசுக்கள் மறுவளர்ச்சி அடைவது இழப்பு மீட்டல் எனப்படும். 1740ல் ஆபி...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் -...
-
உட்கருவுறுதல் என்றால் என்ன? ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் உட்கருவுறுதல்...
No comments:
Post a Comment