Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 2451-2500 | பொதுத் தமிழ்

[1] திரு.வி.க. அவர்களின் பெற்றோர் பெயரினைக் குறிப்பிடுக?

a. சீனிவாசன் - கோமளம்.

b. சண்முகசிகாமணிக்கவிராயர் - சிவகாமசுந்தரி அம்மையார்.

c. விருத்தாசலனார் - சின்னம்மையார்.

d. அரங்கத்திருக்காமு - துளசியம்மாள்.

Answer: விருத்தாசலனார் - சின்னம்மையார்.


[2] தமிழ்த்தென்றல்" எனச் சிறப்பிக்கப்படுபவர் யார்?

a. திருவள்ளுவர்.

b. வள்ளலார்.

c. திரு.வி.க.

d. பாரதிதாசன்.

Answer: திரு.வி.க.


[3] திரு.வி.க. அவர்கள் இயற்கை எய்திய ஆண்டு எது?

a. 26.08.1883.

b. 1920.

c. 1.2.1876.

d. 17.9.1953.

Answer: 17.9.1953.


[4] மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்”, முருகன் அல்லது அழகு போன்ற நூல்களை இயற்றியவர் யார்?

a. குமரகுருபரர்.

b. பரிதிமாற்கலைஞர்.

c. திரு.வி.க.

d. சங்கரதாசு சுவாமிகள்.

Answer: திரு.வி.க.


[5] திருக்குறள் மொத்தம் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?

a. 133.

b. 107.

c. 44.

d. 430.

Answer: 107 மொழிகள்.


[6] திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் மற்றும் குறட்பாக்களின் எண்ணிக்கை யாது?

a. 133 அதிகாரங்கள், 133 குறட்பாக்கள்.

b. 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள்.

c. 10 அதிகாரங்கள், 100 குறட்பாக்கள்.

d. 13 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள்.

Answer: 133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள்.


[7] குறள் வெண்பாக்களால் அமைந்த நூல் எது?

a. புறநானூறு.

b. முதுமொழிக்காஞ்சி.

c. திருக்குறள்.

d. திரிகடுகம்.

Answer: திருக்குறள்.


[8] உலகப் பொதுமறை” என அழைக்கப்படும் நூல் எது?

a. அகநானூறு.

b. திருக்குறள்.

c. பொதுமை வேட்டல்.

d. திருவருட்பா.

Answer: திருக்குறள்.


[9] முதற்பாவலர், நான்முகனார், மாதானுபங்கி, பெருநாவலர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்?

a. திரு.வி.க.

b. திருவள்ளுவர்.

c. வள்ளலார்.

d. கம்பர்.

Answer: திருவள்ளுவர்.


[10] வாய்மை எனப்படுவது யாது?

a. உண்மை பேசுதல்.

b. மெதுவாகப் பேசுதல்.

c. பிறர் போற்றும்படி பேசுதல்.

d. மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.

Answer: மற்றவர்களுக்குத் தீங்கு தராத சொற்களைப் பேசுதல்.


[11] தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்?

a. வள்ளலார்.

b. டாக்டர் கிரௌல்.

c. கால்டுவெல்.

d. அ. அகத்தியலிங்கம்.

Answer: கால்டுவெல்.


[12] தமிழ்மொழி அழகான சித்திர வேலைப்பாடு அமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று கூறியவர் யார்?

a. கால்டுவெல்.

b. அ. அகத்தியலிங்கம்.

c. டாக்டர் கிரௌல்.

d. திரு.வி.க.

Answer: டாக்டர் கிரௌல்.


[13] எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்பது ____ நூற்பா.

a. திருக்குறள்.

b. நன்னூல்.

c. தொல்காப்பிய.

d. தண்டியலங்காரம்.

Answer: தொல்காப்பிய.


[14] கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிட்ட மொழியியல் அறிஞர் யார்?

a. கால்டுவெல்.

b. வள்ளலார்.

c. அ. அகத்தியலிங்கம்.

d. டாக்டர் கிரௌல்.

Answer: அ. அகத்தியலிங்கம்.


[15] மலையைக் குறிக்கும் வடசொல் எது?

a. குறிச்சி.

b. பட்டி.

c. கிரி.

d. கோ.

Answer: கிரி.


[16] மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்ற பாடலடி இடம் பெறும் நூல் எது?

a. அகநானூறு.

b. நற்றிணை.

c. முதுமொழிக்காஞ்சி.

d. புறநானூறு.

Answer: புறநானூறு.


[17] பண்டைய தமிழக மன்னர்களின் அற உணர்வு, வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, புலவர்களின் பெருமிதம் போன்றவற்றை அறிய உதவும் நூல் எது?

a. திருக்குறள்.

b. புறநானூறு.

c. திரிகடுகம்.

d. அகநானூறு.

Answer: புறநானூறு.


[18] அரசனைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?

a. கிழார், கீரன், மோசி.

b. மன்னன், வேந்தன், கோவூர்.

c. கோ, மன்னன், வேந்தன்.

d. வேழம், மாதங்கம், பகடு.

Answer: கோ, மன்னன், வேந்தன்.


[19] பகைவரைத் தண்டிப்பதைவிட, அவருக்கு உதவி செய்தல் சிறந்தது என்று கூறும் நூல் எது?

a. திரிகடுகம்.

b. புறநானூறு.

c. திருக்குறள்.

d. முதுமொழிக்காஞ்சி.

Answer: முதுமொழிக்காஞ்சி.


[20] முதுமொழிக்காஞ்சி என்பது ____ திணையின் துறைகளுள் ஒன்று.

a. மருதம்.

b. முல்லை.

c. குறிஞ்சி.

d. காஞ்சி.

Answer: காஞ்சி.


[21] முதுமொழிக்காஞ்சி எனும் நூலின் ஆசிரியர் யார்?

a. நல்லாதனார்.

b. மதுரைக் கூடலூர் கிழார்.

c. பெருஞ்சித்திரனார்.

d. திருவள்ளுவர்.

Answer: மதுரைக் கூடலூர் கிழார்.


[22] முதுமொழிக்காஞ்சியின் வேறு பெயர்?

a. நீதிநெறி விளக்கம்.

b. அறவுரைக்கோவை.

c. முக்கூடல்.

d. மணநூல்.

Answer: அறவுரைக்கோவை.


[23] கற்றலைவிடவும் சிறந்தது எது?

a. கல்விச் செல்வம்.

b. நோயற்ற வாழ்வு.

c. செல்வம்.

d. ஒழுக்கமுடைமை.

Answer: ஒழுக்கமுடைமை.


[24] மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் இவ்வுலக வாழ்வை நீத்த ஆண்டு எது?

a. 6.4.1815.

b. 1.2.1876.

c. 17.9.1953.

d. 22.12.1887.

Answer: 1.2.1876.


[25] யார் காப்பார் என்று தமிழன்னை ஏங்கிய போது நான் காப்பேன் என்று எழுந்தார் ஒருவர்” அவர் யார்?

a. மீனாட்சி சுந்தரனார்.

b. உ.வே.சாமிநாதன்.

c. திருத்தக்கதேவர்.

d. இளங்கோவடிகள்.

Answer: உ.வே.சாமிநாதன்.


[26] மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் குறிப்பிடத்தக்க மாணவர்கள் யாவர்?

a. உ.வே.சாமிநாதர், சிதம்பரம், அன்னத்தாச்சியார்.

b. குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர்.

c. சடையப்ப வள்ளல், ஆதித்தன்.

d. சீனிவாசன், கோமளம்.

Answer: குலாம்காதர் நாவலர், சவரிராயலு, தியாகராசர், சாமிநாதர்.


[27] தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்பட்டவர் யார்?

a. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்.

b. உ.வே.சாமிநாதர்.

c. திரு.வி.க.

d. பாரதிதாசன்.

Answer: உ.வே.சாமிநாதர்.


[28] நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே தூது சென்றவர் யார்?

a. ஒளவையார்.

b. எயிற்றியனார்.

c. கோவூர் கிழார்.

d. மீனாட்சி சுந்தரனார்.

Answer: கோவூர் கிழார்.


[29] திரிகடுகம் எவ்வகை நூலில் அடங்கும்?

a. எட்டுத்தொகை நூல்.

b. பத்துப்பாட்டு நூல்.

c. ஐம்பெருங்காப்பியம்.

d. பதிணென்கீழ்கணக்கு நூல்.

Answer: பதிணென்கீழ்கணக்கு நூல்.


[30] திரிகடுகம் எனும் நூல் எத்தனை வெண்பாக்களை கொண்டது?

a. 1330 வெண்பாக்கள்.

b. 400 வெண்பாக்கள்.

c. 100 வெண்பாக்கள்.

d. 430 வெண்பாக்கள்.

Answer: 100 வெண்பாக்கள்.


[31] திரிகடுகம் குறிப்பிடும் மூன்று மருந்துப் பெயர்கள் யாவை?

a. மஞ்சள், வேப்பிலை, கசகசா.

b. சுக்கு, மிளகு, திப்பிலி.

c. இஞ்சி, பூண்டு, கடுக்காய்.

d. கிராம்பு, ஏலக்காய், பட்டை.

Answer: சுக்கு, மிளகு, திப்பிலி.


[32] கணிதமேதை இராமானுஜர் பிறந்த ஊர் எது?

a. காஞ்சிரபுரம்.

b. திருச்சி.

c. ஈரோடு.

d. திருவாவடுதுறை.

Answer: ஈரோடு.


[33] கணிதமேதை இராமானுஜம் அவர்களின் பெற்றோர் பெயரினைக் குறிப்பிடுக?

a. விருத்தாசலனார் - சின்னம்மையார்.

b. சீனிவாசன் - கோமளம்.

c. சண்முகசிகாமணிக்கவிராயர் - சிவகாமசுந்தரி அம்மையார்.

d. சிதம்பரம் - அன்னத்தாச்சியார்.

Answer: சீனிவாசன் - கோமளம்.


[34] இராமானுஜர் அவர்கள் தாம் வெளியிட்ட எந்த கட்டுரை கணித வல்லுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது?

a. தொகையீட்டுச் சமன்பாடுகள்.

b. எண் கோட்பாடு.

c. பெர்னெளலிஸ் எண்கள்.

d. பகுமுறை எண்கணிதம்.

Answer: பெர்னெளலிஸ் எண்கள்.


[35] இராமானுஜம் அவர்களுக்கு இங்கிலாந்து பல்கலைக்கழகத்ததால் எஃப். ஆர்.எஸ். பட்டம் வழங்கப்பட்ட ஆண்டு?

a. 1914.

b. 1918.

c. 1920.

d. 1971.

Answer: 1918.


[36] இராமானுஜர் அவர்கள் இயற்கை எய்திய ஆண்டு எது?

a. 22.12.1887.

b. 1918.

c. 1920.

d. 1962.

Answer: 1920.


[37] கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணிதமேதை என்று யார் கூறினார்?

a. லிட்டில்வுட்.

b. ஹார்டி.

c. இந்திராகாந்தி.

d. பேராசிரியர் சூலியன் கக்சுலி.

Answer: இந்திராகாந்தி.


[38] ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள்” எனும் தலைப்பில் நூலை வெளியிட்டவர் யார்?

a. லிட்டில்வுட்.

b. ஹார்டி.

c. ஆர்தர்பெர்சி.

d. ஈ.எச்.நெவில்.

Answer: ஹார்டி.


[39] சிவ­கங்கைப் பகு­தியை ஆண்டு வந்த மன்னர் யார்?

a. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.

b. நலங்கிள்ளி.

c. நெடுங்கிள்ளி.

d. மருதுபாண்டியர்.

Answer: மருதுபாண்டியர்.


[40] ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும்" என்ற தனிப்பாடல் திரட்டுதொகுப்பில் உள்ள பாடலைப் பாடியவர் யார்?

a. அந்தகக்கவி வீரராகவர்.

b. காளமேகப்புலவர்.

c. குமரகுருபரர்.

d. நல்லூர் நத்தத்தனார்.

Answer: காளமேகப்புலவர்.


[41] அகநானூற்றைத் தொகுத்தவர் யார்?

a. பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.

b. உருத்திர சன்மனார்.

c. நல்லூர் நத்தத்தனார்.

d. நச்சினார்க்கினியர்.

Answer: உருத்திர சன்மனார்.


[42] இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் யார்?

a. அந்தகக்கவி வீரராகவர்.

b. காளமேகப்புலவர்.

c. குமரகுருபரர்.

d. பாரதிதாசன்.

Answer: காளமேகப்புலவர்.


[43] வைணவ சமயத்திலிருந்து சைவசமயத்திற்கு மாறிய புலவர் யார்?

a. அந்தகக்கவி வீரராகவர்.

b. காளமேகப்புலவர்.

c. குமரகுருபரர்.

d. திருத்தக்கதேவர்.

Answer: காளமேகப்புலவர்.


[44] 1917 ஆம் ஆண்டு ப்ரோ புரோச் நகரில் நடந்த எத்தனையாவது கல்வி மாநாட்டில் காந்தியடிகள் தலைமை உரை நடத்தினார்?

a. 1வது கல்வி மாநாடு.

b. 2வது கல்வி மாநாடு.

c. 3வது கல்வி மாநாடு.

d. 4வது கல்வி மாநாடு.

Answer: 2வது கல்வி மாநாடு.


[45] நீதி­நெறி விளக்கம், முத்துக்­குமார­சாமி பிள்ளை­த்தமிழ், கந்தர் கலி வெண்பா, மீனாட்­சிய­ம்மை பிள்ளை­த்தமிழ், மதுரைக் கலம்பகம் போன்ற நூல்­களை இயற்றிய­வர் யார்?

a. மீனாட்சி சுந்தரனார்.

b. காளமேகப்புலவர்.

c. குமரகுருபரர்.

d. அந்தகக்கவி வீரராகவர்.

Answer: குமரகுருபரர்.


[46] குமரகுருபரர் வாழ்ந்த காலம்?

a. கி.பி. 12ஆம் நூற்றாண்டு.

b. கி.பி. 16ஆம் நூற்றாண்டு.

c. கி.பி. 17ஆம் நூற்றாண்டு.

d. கி.பி. 18ஆம் நூற்றாண்டு.

Answer: கி.பி. 17ஆம் நூற்றாண்டு.


[47] நாண்மணிமாலை என்பது எதனை குறிக்கும்?

a. சுக்கு, மிளகு, திப்பிலி.

b. முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்.

c. அறம், பொருள், இன்பம், வீடு.

d. உவமை, உருவகம், தொல்காப்பியம், சிலப்பதிகாரம்.

Answer: முத்து, பவளம், மரகதம், மாணிக்கம்.


[48] தமிழகத்தின் "வேர்ட்ஸ் வொர்த்” எனப் புகழப்படுபவர் யார்?

a. பாரதிதாசன்.

b. கவிஞர் கண்ணதாசன்.

c. ந.பிச்சமூர்த்தி.

d. வாணிதாசன்.

Answer: வாணிதாசன்.


[49] வாணிதாசன் அவர்களின் இயற்பெயர் என்ன?

a. ச.வீரபாபு.

b. எத்திராசலு (எ) அரங்கசாமி.

c. முத்தையா.

d. கனகசுப்புரத்தினம்.

Answer: எத்திராசலு (எ) அரங்கசாமி.


[50] தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று கூறும் நூல் எது?

a. சிலப்பதிகாரம்.

b. புறநானூறு.

c. சிறுபாணாற்றுப்படை.

d. பரிபாடல்.

Answer: சிறுபாணாற்றுப்படை.




GENERAL TAMIL MCQ FOR TNPSC | TRB | 2451-2500 | பொதுத் தமிழ்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement