அலகு 1: தமிழ் மொழி மற்றும் இலக்கணம்
குற்றியலுகரம் மற்றும் முற்றியலுகரம்
- முற்றியலுகரச் சொற்கள்: புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு
- குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்கும் அசை: காரம் (எ.கா: மகாரம், ஏகாரம்)
- நெடில்தொடர் குற்றியலுகர எடுத்துக்காட்டுகள்: பாகு, மாசு, பாடு, காது, ஆறு
- உயிர்த்தொடர் குற்றியலுகர எடுத்துக்காட்டுகள்: அரசு, ஒன்பது, கயிறு, வரலாறு
- குற்றியலிகர எடுத்துக்காட்டுகள்: கொக்கியாது, தோப்பியாது, நாடியாது, எனப்படுவதியாது
- "கேண்மியா", "சென்மியா" என்பவை குற்றியலிகரத்திற்கு எடுத்துக்காட்டுகள்.
- தற்போது வழக்கில் இல்லாத குற்றியலிகரம்: உரைநடை வழக்கில்
- சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராத குறுக்கம்: ஔகாரக் குறுக்கம்
- ஐகாரக் குறுக்கத்தின் மாத்திரை அளவு ("வேட்கை" என்னும் சொல்லில்): ஒன்று
- மகரக் குறுக்கம் மற்றும் ஆயுதக் குறுக்கத்தின் மாத்திரை குறைவு: அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறையும்.
- ஆயுதக் குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு: முஃடீது, கஃறீது
- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம்: மேட்டுப்பாளையம் (கோவை)
- இந்திய வனமகன்: ஜாதவ்பயேங் (குறிப்பு: தலைப்பு மட்டும் உள்ளது)
| ஆங்கிலச் சொல் | தமிழ்ச் சொல் |
|---|---|
| Paddy | நெற்பயிர் |
| Cultivation | பயிரிடுதல் |
| Agronomy | உழவியல் |
| Harvest | அறுவடை |
| Poet | கவிஞர் |
| Foreigner | அயல்நாட்டினர் |
| Tiger | புலி |
பாஞ்சை வளம் (நாட்டுப்புறப் பாடல்)
- கட்டபொம்மன் கதையைத் தொகுத்து வெளியிட்டவர்: நா.வானமாமலை
- நா.வானமாலை வெளியிட்ட நூல்: வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல்
- பாஞ்சாலங்குறிச்சியில் முயல் விரட்டுவது: நாயை
- வாரணம்: யானை
- பரி: குதிரை
- கமுகு: பாக்கு
- பர்மா சென்ற ஆண்டுகள்: 1936, 1955
- அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு: 1995
- 3 மணி நேரம் விவேகானந்தர் பற்றி உரையாற்றிய இடம்: சாயல்குடி
- இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளவர்: தேவரின் சிலை
- வரையறை: குழுவுக்கு மட்டும் புரியும் வகையில் குறிப்பிடுவது.
- எடுத்துக்காட்டுகள்:
- "பொன்னைத் 'பறி' எனல்" (பொற்கொல்லர் வழக்கு)
- "ஆடையை 'காரை' எனல்" (யானைப் பாகர் வழக்கு)
கப்பற்கலை நூல்கள்
- "எண்பது நாளில் உலகைச் சுற்றி" என்ற புதினத்தின் ஆசிரியர்: ஜூல்ஸ் வெர்ன்
- "பூமியின் மையத்தை நோக்கிய ஒரு பயணம்" என்ற நூலின் ஆசிரியர்: ஜூல்ஸ் வெர்ன்
| வகை | எடுத்துக்காட்டுகள் |
|---|---|
| பெயர் இயற்சொல் | திண்ணை, மண், பொன் |
| வினை இயற்சொல் | நடந்தான், வந்தான் |
| இடை இயற்சொல் | அவனை, அவனால் |
| உரி இயற்சொல் | மாநகர் |
| திரிசொல் | வங்கூழ், அழுவம் |
- திரிசொல் வகை: நான்கு வகைப்படும்.
திருக்குறள் வீ.முனுசாமி நூல்கள்
- திருக்குறளில் நகைச்சுவை
- வள்ளுவர் உள்ளம்
- வள்ளுவர் காட்டிய வழி
| ஓரெழுத்து ஒருமொழி | பொருள் |
|---|---|
| நா | நாவு |
| நீ | முன்னிலை ஒருமை |
| நே | அன்பு |
| நை | இழிவு |
| பா | பாடல் |
| பூ | மலர் |
| போ | செல் |
| மை | அஞ்சனம் |
| மோ | முகத்தல் |
| யா | அகலம் |
| வா | அழைத்தல் |
| வை | புல் |
| வௌ | கவர் |
- பெயர்ப்பகுபத வகைகள்: 6
- காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு: இடைநிலை
ஓவியக்கலை
- ஓவியம் வரையப்படும் துணியின் பெயர்கள்: எழினி, திரைச்சீலை, கிழி, படாம்
- தற்போது துணி ஓவியத்தின் பெயர்: கலம்காரி ஓவியங்கள்
- கருத்துப்பட ஓவியத்தின் மற்றொரு வடிவம்: கேலிச்சித்திரம்
- நாட்காட்டி ஓவியம் வரையும் முன்னோடி: கொண்டையராஜு
- சரசுவதி மஹால் நூலகம் இயங்கி வரும் ஆண்டு: கி.பி 1122 முதல்
- உ.வே.சா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு: 1942
- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு: 1869
- மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் திறக்கப்பட்ட ஆண்டு: 2016
- அடிப்பகுதி நீளம் மற்றும் அகலம்: 25 அடி நீளம், 25 அடி அகலம்
- பற்றிய செய்திகள் உள்ள நூல்கள்: சிலப்பதிகாரம், பட்டினப்பாலை
- நகரப் பகுதி: பட்டினப்பாக்கம்
- கடற்பகுதி: மருவூர்ப்பாக்கம்
- அழிந்ததற்கான காரணம்: கடற்கோள்
- தொழிற்பெயர் வரும் இடம்: படர்க்கை
அறநூல்
- முன்றுறை அரையனார் எழுதிய நூல்: பழமொழி நானூறு
- பழமொழி நானூறு நூல் வகை: பதினெண்கீழ்க்கணக்கு
| சொல் | பொருள் |
|---|---|
| வறத்திருந்த | வறண்டிருந்த |
| மடமகள் | இளமகள் |
| நல்கினால் | கொடுத்தால் |
| முன்றில் | வீட்டின் முன் இடம் |
| சீலை | புடவை |
| மடை | வயலுக்கு நீர் வரும் வழி |
| கழலுதல் | உதிர்தல் |
| கூலம் | தானியம் |
- அணிகலன்களும் பொற்காசுகளும் உருவாக்கும் இடம்: அக்கசாலை (அகச்சாலை)
- தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள ஊர்: திருநெல்வேலி
- தாமிரபரணி ஆற்றின் கிழக்குக் கரையில் உள்ள ஊர்: பாளையங்கோட்டை
- டி.கே.சிதம்பரநாதரின் சிறப்புப் பெயர்: ரசிகமணி
- டி.கே.சிதம்பரநாதர் தொடங்கிய இலக்கிய அமைப்பு: வட்டத்தொட்டி
நாலாயிர திவ்யப் பிரபந்தம் (புதுமை விளக்கு)
- பொய்கை ஆழ்வார் பிறந்த ஊர்: திருவெஃகா
- பூதத்தாழ்வார் பிறந்த ஊர்: மாமல்லபுரம்
- நாரணன்: திருமால்
| சொல் | பொருள் |
|---|---|
| தகளி | அகல்விளக்கு |
| வித்து | விதை |
| ஈன | பெற |
| நிலன் | நிலம் |
| களை | வேண்டாத செடி |
| வன்சொல் | கடுஞ்சொல் |
- பாடல்களின் எண்ணிக்கை: 225
சொற்பொருள்
- சாந்தம்: அமைதி
- மகத்துவம்: சிறப்பு
- தாரணி: உலகம்


0 Comments