அலகு 1: எங்கள் தமிழ், ஒன்றல்ல இரண்டல்ல, பேச்சுமொழியும் எழுத்துமொழியும்
- எழுத்தின் வரிவடிவம் எது? - ஒலி
- தெலுங்கு எந்த மொழியின் கிளைமொழிகளில் ஒன்று? - தமிழ்
- உலக வழக்கு என்பது எந்த மொழியைக் குறிக்கிறது? - பேச்சு மொழி
- "குரலாகும்" என்பதைப் பிரித்தெழுதக் கிடைப்பது? - குரல் + ஆகும்
அலகு 2: காடு, விலங்குகள் உலகம், இந்திய வனமகன்
- வாழை கன்றை எவ்வாறு செய்யும்? - ஈன்றது
- உலகில் உள்ள யானைகளின் வகைகள் எத்தனை? - இரண்டு (ஆசிய யானை, ஆப்பிரிக்க யானை)
- ஐகாரம் தனித்து ஒலிக்கும்போது அதன் மாத்திரை அளவு? - 2 மாத்திரை
- ஐகாரம் சொல்லின் முதலில் வரும்போது அதன் மாத்திரை அளவு? - ஒன்றரை
- ஐகாரம் சொல்லின் இறுதியில் வரும்போது அதன் மாத்திரை அளவு? - ஒரு மாத்திரை
- ஔகாரம் சொல்லின் முதலில் வரும்போது அதன் மாத்திரை அளவு? - ஒன்றரை
அலகு 3: பாஞ்சை வளம், முத்துராமலிங்க தேவர், கப்பலோட்டிய தமிழர்
- "சிற்றில்" என்ற சொல்லின் பொருள்? - சிறு வீடு
- "கல் அளை" என்ற சொல்லின் பொருள்? - கற்குகை
- முத்துராமலிங்க தேவர் கல்வி பயின்ற பள்ளி? - மதுரை பசுமலைப் பள்ளி
- தென்னிந்தியாவில் வாய்பூட்டுச் சட்டத்தால் பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர்? - முத்துராமலிங்க தேவர்
- குற்றப்பரம்பரைச் சட்டம் நீக்கப்பட்ட ஆண்டு? - 1948
- முத்துராமலிங்க தேவரை "தேசியம் காத்த செம்மல்" என்று பாராட்டியவர்? - திரு.வி.க
- பார் அறிந்த கொற்கை துறைமுகத்தில் பறந்த கொடி யாருடையது? - பாண்டியரின் மீன் கொடி
- வ.உ.சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி? - பின்கே
- வள்ளலைப் புகழ்ந்து மற்றவருக்குப் பரிசு பெற வழிகாட்டுவது? - ஆற்றுப்படை இலக்கியம்
அலகு 4: கவின்மிகு கப்பல், தமிழரின் கப்பற்கலை
- "வானம் ஊன்றிய மதலை" என்று பாடியவர்? - கடியலூர் உருத்திரங்கண்ணனார்
- "போழ" என்ற சொல்லின் பொருள்? - பிளக்க
- "கோடு உயர்" என்ற சொல்லின் பொருள்? - கரை உயர்ந்த
- மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லப் பயன்படுத்தியது? - வங்கத்தில் (கப்பலில்)
- கடல் புலால் நாற்றம் உடையதாகக் கூறும் நூல்? - அகநானூறு
- "கடலோடா கால்வல்" என்ற குறள் உணர்த்தும் தமிழரின் கலை? - கப்பற்கலை (வலிமையான சக்கரங்களைக் கொண்ட தேர் கடலில் ஓடாது)
- "கலைசெய் கம்மியர் வருகெனக் கூஇய்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்? - மணிமேகலை
- காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள்? - பாய்மரக் கப்பல்கள்
- திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டுகள்? - சாவி, ஜன்னல், பண்டிகை, ரயில்
அலகு 5: இன்பத்தமிழ் கல்வி, அழியாத செல்வம், வாழ்விக்கும் கல்வி
- "அன்னதோர்" என்ற சொல்லின் பொருள்? - அப்படி ஒரு
- பாரதிதாசன் பெண்களுக்கு நிகராகக் கூறுவது? - மயில்
- பழமொழி நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டது? - 400
- சுப்புரபாரதிமணியன் எழுதிய சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று? - கதை சொல்லும் கலை
- "ஓ" (நெடில்) என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்? - மதகுநீர் தாங்கும் பலகை
- "மி" என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்? - வான்
- "மூ" என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்? - மூப்பு
- "மே" என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்? - அன்பு
- "நொ" (குறில்) என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்? - நோய்
- "து" (குறில்) என்னும் ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்? - உண்
அலகு 6: ஒரு வேண்டுகோள், பேசும் ஓவியம், தமிழ் ஒளிர் இடங்கள்
- "கலையுலகப் பிரம்மாக்களே" என்று பாடியவர்? - தேனரசன்
- தேனரசன் நடத்திய இதழ்கள்? - வானம்பாடி, குயில், தென்றல்
- சீவக சிந்தாமணியில் குணமாலை அஞ்சிய காட்சி ஓவியமாக வரையப்பட்டது எதைக் கண்டு? - யானை
- "இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்? - பரிபாடல்
- தருமிக்குப் பாண்டிய மன்னன் வழங்கியது? - பொற்கிழி
- மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைந்த இடம்? - மதுரை
- பூம்புகார் கடற்கரையில் உள்ள சிற்பக்கலைக்கூடத்தில் யாருடைய வரலாற்றை விளக்கும் 49 சிற்பத் தொகுதிகள் உள்ளன? - கண்ணகி
அலகு 7: விருந்தோம்பல், வயலும் வாழ்வும், திருநெல்வேலி சீமை
- "ஓடை எல்லாம் தாண்டிப் போயி" என்ற பாடலின் ஆசிரியர்? - கி.வா.ஜகந்நாதன்
- "மாடுகட்டிப் போரடித்தால் மாளாது" என்பது எந்த வகைப் பாடல்? - நாட்டுப்புறப்பாடல்
- பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம்? - திருநெல்வேலி
- "வேணுவனம்" என்பதன் பொருள்? - மூங்கில் காடு
- "வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்" என்ற பாடலின் ஆசிரியர்? - திரிகூடராசப்ப கவிராயர்
- பழந்தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடம்? - ஆதிச்சநல்லூர்
- "கொற்கையின் பெருந்துறை முத்து" என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்? - அகநானூறு
- யவனர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள்? - கிரேக்கர்கள், ரோமானியர்கள்
- "காவற்புரை" என்பதன் பொருள்? - சிறைச்சாலை
- பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறனை நெல்லை மக்கள் வரவேற்ற இடம்? - பாண்டியபுரம்
- மங்கையர்க்கரசியை மகளிர் எதிர்கொண்டு வரவேற்ற இடம்? - திருமங்கை நகர்
- வீரராகவர் மனைவியின் பெயர்? - மீனாட்சி அம்மையார்
- திருநெல்வேலியில் பிறந்த புலவர்கள் (எடுத்துக்காட்டு)? - குமரகுருபரர், திரிகூடராசப்ப கவிராயர்
- தமிழிின் பால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு அறிஞர்கள்? - ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர்
- பாரதியார் பிறந்து வளர்ந்த இடம்? - எட்டயபுரம்
- தேசிக விநாயகனார் தமிழை ஆர்வத்தோடு கற்ற இடம்? - திருநெல்வேலி
- எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பாடல்களைப் பாடியவர்? - கடிகைமுத்துப் புலவர்
- சீவலபேரி என்கிற முக்கூடலுக்கு அருகில் உள்ள நதி? - தாமிரபரணி
- பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் யாரைத் தரிசித்தார்? - காந்திமதி தாய்
- சங்கரன் கோவிலுக்கு வடக்கே 8 மைலில் உள்ள ஊர்? - கருவை நல்லூர்
- பிள்ளைப்பெருமாள் யாரைப் பற்றிப் பாடியுள்ளார்? - ஸ்ரீவைகுண்டத்துப் பெருமாள்
- நம்மாழ்வார் தமது ஈடுபாட்டை எந்த நூலில் வெளியிட்டுள்ளார்? - திருவாய்மொழி
- சீதக்காதி என்ற வணிகர் வாழ்ந்த ஊர்? - காயல்பட்டினம்
- "பூமாது இருந்தேன்" என்று பாடியவர்? - நமச்சிவாயப் புலவர்
- திருப்புகழ் பாடியவர்? - அருணகிரிநாதர்
- காவடிச்சிந்து பாடியவர்? - அண்ணாமலையார்
- கருவை நல்லூரின் வேறு பெயர்? - கரிவலம் வந்த நல்லூர்
- "உற்றாரை யான் வேண்டேன்" என்று பாடியவர்? - மாணிக்கவாசகர்
- திருநெல்வேலிச் சீமை உள்ளடக்கிய பகுதிகள்? - திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி
- டி.கே.சிதம்பரநாதரின் புகழ்கள்? - கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக்காவலர்
அலகு 8: புதுமை விளக்கு, அறம் என்னும் கதிர், ஒப்புரவு நெறி
- "சுடர் ஆழியான்" என்பதன் பொருள்? - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
- "இடர் ஆழி" என்பதன் பொருள்? - துன்பக்கடல்
- "சொல் மாலை" என்பதன் பொருள்? - பாமாலை
- அந்தாதி என்றால் என்ன? - ஒரு பாடலின் இறுதி, அடுத்த பாடலுக்கு முதலாக அமைவது
- முதலாழ்வார்கள் யார்? - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
- "அன்புநீர் பாய்ச்சி" என்று பாடியவர்? - முனைப்பாடியார்
- தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள்? - நாயன்மார் அடிச்சுவட்டில், குறட்செல்வம்
- தவத்திரு குன்றக்குடி அடிகளார் நடத்திய இதழ்கள்? - அருளோசை, அறிக அறிவியல்
- "ஜென்" (Zen) என்பதன் பொருள்? - தியானம் செய்
- "இகழ்வார்ப் பொறுத்தல் தலை" - இதில் பயின்று வந்துள்ள அணி? - உவமை அணி
- "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி" - இதில் பயின்று வந்துள்ள அணி? - எடுத்துக்காட்டு உவமை அணி
- "பொன்மழை பொழிந்தது போல" - இதில் பயின்று வந்துள்ள அணி? - இல்பொருள் உவமை அணி
அலகு 9: மழைப்பொழிவு, கண்ணியமிகு தலைவர், ஆகுபெயர்
- சே.பிருந்தா எழுதிய நூல்கள்? - வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை
- காயிதே மில்லத் பற்றிப் பெரியார் கூறியது? - "இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது, அவர் நல்ல உத்தமமான மனிதர்"
- "கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை" என்பது? - முதுமொழி
- காயிதே மில்லத் உருவாக்கிய கல்லூரிகள்? - ஜமால் முகமது கல்லூரி, பரூக் கல்லூரி
- விடுதலைப் போராட்டத்தின்போது காயிதே மில்லத் கலந்து கொண்டது? - ஒத்துழையாமை இயக்கம்
- பாவண்ணன் எழுதிய நூல்கள்? - வேர்கள் தொலைவில் இருக்கின்றன, நேற்று வாழ்ந்தவர்கள்
- பொருளாகுபெயருக்கு எடுத்துக்காட்டு? - மல்லிகை சூடினாள்
- இடவாகுபெயருக்கு எடுத்துக்காட்டு? - சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது
- காலவாகுபெயருக்கு எடுத்துக்காட்டு? - டிசம்பர் சூடினாள்
- சினையாகுபெயருக்கு எடுத்துக்காட்டு? - தலைக்கு ஒரு பழம் கொடு
- பண்பாகுபெயருக்கு எடுத்துக்காட்டு? - இனிப்பு தின்றான்
- தொழிலாகுபெயருக்கு எடுத்துக்காட்டு? - பொங்கல் உண்டான்
- "இல்லை இல்லை", "பிடி பிடி" என்பவை எதற்கான எடுத்துக்காட்டுகள்? - அடுக்குத்தொடர்


0 Comments