பொருள் அறிதல்:
- நிரந்தரம் - காலம் முழுமையும்
- வைப்பு - நிலப்பகுதி
- சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்
- வண்மொழி - வளமிக்க மொழி
- தொல்லை - பழமை, துன்பம்
- முகில் - மேகம்
- சம்பிரமுடன் - முறையாக
- சேகரம் - கூட்டம்
- விண்ணம் - சேதம்
- வாகு - சரியாக
- காலன் - எமன்
- தடம் - அடையாளம்
- அகம்பாவம் - செருக்கு
- தொடி - வளையல்
பிரித்தெழுதுதல்:
15. இருதிணை - இரண்டு + திணை
16. ஐம்பால் - ஐந்து + பால்
17. நீளுழைப்பு - நீள் + உழைப்பு
18. பகைவன்+ என்றாலும் - பகைவனென்றாலும் (சேர்த்து எழுதுதல்)
இலக்கணம்:
19. மேல்வாய் நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் மெய்யெழுத்துக்கள் - ற், ன்
20. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் உயிர் எழுத்துக்கள் - உ, ஊ
21. வினைமுற்று வரும் இடங்கள் - மூன்று இடத்திலும் (தன்மை, முன்னிலை, படர்க்கை)
22. ஒரு செயல் நடைபெறுவதற்குத் தேவையான ஆறு உறுப்புகள் - செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள்
23. எச்சம் எத்தனை வகைப்படும்? - இரண்டு
24. "நடந்து" - இலக்கணக்குறிப்பு - வினையெச்சம்
25. "பேசிய" - இலக்கணக்குறிப்பு - பெயரெச்சம்
26. "எடுத்தனன் உண்டான்" - இலக்கணக்குறிப்பு - முற்றெச்சம்
27. "பெரிய" - இலக்கணக்குறிப்பு - குறிப்புப் பெயரெச்சம்
28. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது - சொற்றொடர்
29. "திருவாசகம் படித்தான்" - எவ்வகைத் தொகை? - இரண்டாம் வேற்றுமைத்தொகை
30. "தலை வணங்கு" - எவ்வகைத் தொகை? - மூன்றாம் வேற்றுமைத்தொகை
31. "தலையின் இழிந்த மயிர்" - ஐந்தாம் வேற்றுமையில் எந்த பொருளில் வரும்? - நீங்கல்
32. "பால் குடம்" (பாலைக் கொண்ட குடம்) - எவ்வகைத் தொகை? - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
33. "பொற்சிலை" (பொன்னால் ஆகிய சிலை) - எவ்வகைத் தொகை? - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
34. "மாட்டுக்கொட்டகை" (மாட்டுக்குக் கட்டப்பட்ட கொட்டகை) - எவ்வகைத் தொகை? - நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
35. பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கு இடையே 'ஆன', 'ஆகிய' பண்பு உருபுகள் மறைந்து வருவது - பண்புத்தொகை
36. "வெண்ணிலவு" - இலக்கணக்குறிப்பு - பண்புத்தொகை
37. "பனைமரம்" - இலக்கணக்குறிப்பு - இருபெயரொட்டுப் பண்புத் தொகை
38. "மலர்விழி" - இலக்கணக்குறிப்பு - உவமைத்தொகை
39. "இரவுபகல்" - இலக்கணக்குறிப்பு - உம்மைத்தொகை
40. "பசுவும் கன்றும்" - இலக்கணக்குறிப்பு - எண்ணும்மை
தொடர்கள்:
41. ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் - செய்தித் தொடர்
42. "முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்" - எவ்வகைத் தொடர்? - செய்தித் தொடர்
43. "நண்பா படி" - எவ்வகைத் தொடர்? - விளித்தொடர்
44. "சென்றனர் வீரர்" - எவ்வகைத் தொடர்? - வினைமுற்றுத் தொடர்
45. "வரைந்த ஓவியம்" - எவ்வகைத் தொடர்? - பெயரெச்சத் தொடர்
46. "தேடிப் பார்த்தான்" - எவ்வகைத் தொடர்? - வினையெச்சத் தொடர்
47. "கவிதையை எழுதினார்" - எவ்வகைத் தொடர்? - வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
48. "சாலவும் நன்று" - எவ்வகைத் தொடர்? - உரிச்சொல் தொடர்
கோணக்காத்துப் பாடல்:
49. பறவைகள் எங்கு பறந்து செல்கின்றன? - விசும்பில்
50. கோணக்காத்துப் பாடலில், எந்த ஊரில் உள்ள தென்னம்பிள்ளைகள் எல்லாம் அழிந்தன? - வாங்கல்
51. கோணக்காத்துப் பாடலில், எந்த நாட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன? - தொண்டைமான் நாடு
52. கோணக்காத்துப் பாடலில், எந்த ஊரில் உள்ள ஏராளமான ஆடு மாடுகள் இறந்தன? - தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி
பழங்குடியினர் & தமிழர் மருத்துவம்:
53. செவ்விந்தியர்கள் நிலத்தை எவ்வாறு மதிக்கின்றனர்? - தாயாக
54. தொடக்க காலத்தில் மனிதர்கள் மருத்துவத்திற்கு எதைப் பயன்படுத்தினர்? - தாவரங்களை
55. தமிழர் மருத்துவத்தில் மருந்து என்பது எதன் நீட்சியாகவே உள்ளது? - உணவின்
வெட்டுக்கிளியும் சருகுமானும்:
56. "வெட்டுக்கிளியும் சருகுமானும்" கதையில் நீலப்பூவின் இதழ்களுக்கு இடையே வசித்து வந்தது எது? - பச்சை வெட்டுக்கிளி
57. "வெட்டுக்கிளியும் சருகுமானும்" கதையில் வரும் சருகுமானின் பெயர் என்ன? - கூரன்
58. வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற கதையைத் தமிழாக்கம் செய்தவர் யார்? - மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
மரபு:
59. "பூக் கொய்" என்பது எவ்வகை மரபு? - வினை மரபு
60. "பால் பருகு" என்பது எவ்வகை மரபு? - வினை மரபு
61. பானை செய்தலை எவ்வாறு அழைப்பர்? - பானை வனைதல்
நூல்/நூலாசிரியர்:
62. "கல்லாதவர் பயனில்லாத களர் நிலம் போன்றவர்" என்று கூறியவர் யார்? - திருவள்ளுவர்
63. நீலகேசி நூலானது கடவுள் வாழ்த்து நீங்கலாக எத்தனை சருக்கங்களைக் கொண்டது? - 10
64. "உடலின் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்" - பாடலின் ஆசிரியர் யார்? - கவிமணி தேசிய விநாயகம்
65. "கதர் பிறந்த கதை" என்ற நூலின் ஆசிரியர் யார்? - கவிமணி
66. உமர்கய்யாம் பாடல்களை மொழிபெயர்த்தவர் யார்? - கவிமணி
67. சுஜாதா எழுதிய நூல்கள் - என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள்
68. நீதிநெறி விளக்கத்தில் கடவுள் வாழ்த்து உட்பட எத்தனை வெண்பாக்கள் உள்ளன? - 102
69. "கல்வி கரையில கற்பவர் நாள்சில" - இப்பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? - நாலடியார்
70. "ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்" - இப்பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? - கலித்தொகை
71. கலித்தொகையில் "செறிவு" எனப்படுவது யாது? - முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல்
72. கலித்தொகையில் "பொறுமை" எனப்படுவது யாது? - தம்மை இகழ்பவரையும் பொறுத்துக் கொள்ளல்
73. "கூம்பொடு மீப்பாய் களையாது" என்று பாய்மரக் கப்பல் பற்றி கூறும் நூல் எது? - புறநானூறு
74. "குழல்இனிது யாழ்இனிது" என்று கூறியவர் யார்? - திருவள்ளுவர்
75. "மத்து+தளம் = மத்தளம்" என்று கூறியவர் யார்? - அடியார்க்கு நல்லார்
76. "கலைஉணக் கிழிந்த முழவு மருள் பெரும்பழம்" - என்ற பாடல் வரி இடம்பெற்ற நூல் எது? - புறநானூறு
பொது அறிவு/தினம்:
77. உலக ஈர நில நாள் - பிப்ரவரி 2
78. உலக இயற்கைச் சீரழிவு தடுப்பு தினம் - அக்டோபர் 5
79. உலக வனவிலங்கு நாள் - அக்டோபர் 6
80. புகழாலும் பழியாலும் அறியப்படுவது - நடுவுநிலைமை
இசைக்கருவிகள்:
81. இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்? - 4
82. தோல் கருவிக்கு எடுத்துக்காட்டு - முழவு, முரசு
83. நரம்புக்கருவிக்கு எடுத்துக்காட்டு - யாழ், வீணை
84. காற்று கருவிகளுக்கு எடுத்துக்காட்டு - குழல், சங்கு
85. கஞ்சக் கருவிகளுக்கு எடுத்துக்காட்டு - சேகண்டி, சாலரா
86. பெரிய உடுக்கைக்கு என்ன பெயர்? - தவண்டை
87. சிறிய உடுக்கைக்கு என்ன பெயர்? - குடுகுடுப்பை
88. கொம்புகள் இக்காலத்தில் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன? - வெண்கலம், பித்தளை
89. வேடர் வேட்டையின் போது பயன்படுத்தும் இசைக்கருவி - கொம்பு
90. வலமாக சுழிந்து இருக்கும் சங்கு - வலம்புரிச்சங்கு
91. சேகண்டியின் வேறு பெயர் - சேமங்கலம்
பிற:
92. பிரம்பு என்பது எவ்வகைத் தாவரம்? - கொடிவகை
93. ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது - அகராதி
உவமைகள்:
94. "மடை திறந்த வெள்ளம் போல" - உவமையின் பொருள் - தடையின்றி மிகுதியாக
95. "உள்ளங்கை நெல்லிக்கனி போல" - உவமையின் பொருள் - வெளிப்படைத்தன்மை
96. "காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல" - உவமையின் பொருள் - தற்செயல் நிகழ்வு
97. "கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல" - உவமையின் பொருள் - எதிர்பாராத நிகழ்வு
98. "பசுமரத்து ஆணி போல" - உவமையின் பொருள் - எளிதில் மனதில் பதிதல்
99. "விழலுக்கு இறைத்த நீர் போல" - உவமையின் பொருள் - பயனற்ற செயல்
100. "நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினார் போல" - உவமையின் பொருள் - ஒற்றுமையின்மை


0 Comments