ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 11


ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 11
கம்பர் குறித்த தகவல்கள்
கேள்விவிடை
உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா என்ற வாழ்த்துப் பாடலைப் பாடியவர் யார்?கம்பர்.
கம்பர் பிறந்த ஊர் எது?மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்.
கம்பரை ஆதரித்த வள்ளல் யார்?திருவெண்ணெய்நல்லூர்ச் சடையப்ப வள்ளல்.
கம்பர் வாழ்ந்த காலம் எந்நூற்றாண்டு?கி.பி.12.
வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் யார்?வால்மீகி.
கம்பர் தாம் எழுதிய இராமாயண நூலுக்கு இட்ட பெயர் யாது?இராமாவதாரம்.
திருக்குறள் குறித்த தகவல்கள்
கேள்விவிடை
திருக்குறள் எவ்வகை வெண்பாவால் ஆன நூல்?ஈரடி வெண்பாவால் ஆனது.
"இயற்கை வாழ்வில்லம்” என்று அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?திருக்குறள்.
திருவள்ளுவரின் காலம் எந்நூற்றாண்டு?கி.மு.31.
திருக்குறளின் முப்பெரும் பிரிவுகள் எவை?அறம், பொருள், இன்பம்.
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் மொத்தம் எத்தனை?133.
திருக்குறளின் பெருமையை போற்றிப் பாராட்டிய நூல் எது?திருவள்ளுவ மாலை.
திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் எத்தனைப்பேர்?பதின்மர் (பத்துபேர்).
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்?ஜி.யு.போப்.
ஏழு சீர்களால் அமைந்த வெண்பாக்களைக் கொண்ட நூல் எது?திருக்குறள்.
உணவே மருந்தாகும் என்று கூறும் நூல் எது?திருக்குறள்.
மொழி மற்றும் திராவிடம் குறித்த தகவல்கள்
கேள்விவிடை
இந்தியாவில் பேசப்படும் நான்கு மொழிக்குடும்பங்கள் எவை?1. இந்தோ ஆசிய மொழிகள், 2. திராவிட மொழிகள், 3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள், 4. சீன திபெத்திய மொழிகள்.
திராவிட மொழிகளை எத்தனை வகையாகப் பிரிப்பர்?மூன்று வகையாக.
திராவிட பெருமொழிகள் எனப்படுபவை எவை?தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்.
தமிழ் மொழியிலுள்ள மிகப் பழமையான நூல்?தொல்காப்பியம்.
இந்தியாவை மொழிகளின் காட்சிச்சாலை எனக் குறிப்பிட்டவர் யார்?ச.அகத்தியலிங்கம்.
"திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூலின் ஆசிரியர் யார்?கால்டுவெல்.
திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தவர் யார்?கால்டுவெல்.
பல்வேறு ஆளுமைகள் மற்றும் நூல்கள் குறித்த தகவல்கள்
கேள்விவிடை
அறிஞர் அண்ணாவை "தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா" எனப் பாராட்டியவர் யார்?கல்கி.
சிறுபஞ்சமூலம் என்னும் நூலின் ஆசிரியர் யார்?காரியாசான்.
சிறுபஞ்சமூலத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து மூலிகை பொருள்கள் எவை?கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி.
பாஞ்சாலி சபதம் என்னும் நூலை இயற்றியவர்?பாரதியார்.
பாரதியின் முப்பெரும் படைப்புகள் எவை?குயில்பாட்டு, கண்ணன்பாட்டு, பாஞ்சாலி சபதம்.
பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களைக் கொண்டது?5.
பாட்டுக்கொரு புலவன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என்றெல்லாம் போற்றப்பட்டவர் யார்?பாரதியார்.
தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி என்றுப் போற்றப்படுபவர் யார்?பாரதியார்.
வியாசரின் பாரதத்தை தழுவி பாரதியார் இயற்றிய குறுங்காப்பியம் எது?பாஞ்சாலி சபதம்.
பாரதியார் பிறந்த ஊர் எது?தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம்.
"தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை" என்றுக் கூறியவர் யார்?பாரதிதாசன்.
மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா எனப் பெண்ணின் பெருமையைப் பாடியவர் யார்?கவிமணி.
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று தமிழரின் சிறப்பைப் பாடியவர் யார்?நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார்.
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று கூறியவர் யார்?நாமக்கல் கவிஞர்.
இலக்கிய வரலாற்றில் "உரைநடைக் காலமாகத்” திகழ்வது எக்காலம்?20ம் நூற்றாண்டு.
"உவமை கவிஞர்” என்றழைக்கப்படுபவர் யார்?சுரதா.
காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?நாமக்கல் கவிஞர்.
கண்ணதாசனின் இயற்பெயர் யாது?முத்தையா.
கண்ணதாசன் இயற்றிய எந்த புதினத்திற்கு சாகித்ய அகாதமியின் பரிசு கிடைத்தது?சேரமான் காதலி.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை யார் கூற்று?கண்ணதாசன்.
செல்வத்துப் பயனே ஈதல் என்ற பாடல் வரி இடம் பெறும் நூல் எது?புறநானூறு.
பத்துப்பாட்டில் உள்ள திருமுருகாற்றுப்படையையும், நெடுநல்வாடையையும் இயற்றியவர் யார்?நக்கீரனார்.
பண்டையத் தமிழ் மன்னர்களின் வீரம், கொடை, கல்வி முதலியவற்றை அறிய உதவும் நூல் எது?புறநானூறு.
குறுந்தொகை என்ற நூலைத் தொகுத்தவர் யார்?பூரிக்கோ.
குறுந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்?பாரதம் பாடிய பெருந்தேவனார்.
திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர் யார்?பரஞ்சோதி முனிவர்.
திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை?3.
திருவிளையாடற் புராணத்தில் உள்ள படலங்கள் எத்தனை?64.
"தமிழ்த்தென்றல்” என்று அழைக்கப்பட்டவர் யார்?திரு.வி.க.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதனை முழு மூச்சாகக் கொண்டவர் யார்?திரு.வி.க.
நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன் எனக் கூறியவர் யார்?திரு.வி.க.
மேடைத்தமிழின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?திரு.வி.க.
உமர்கய்யாம் பாடல்களை தமிழில் மொழிப்பெயர்த்தவர் யார்?கவிமணி.
கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மகள் யார்?மணிமேகலை.
மணிமேகலையின் ஆசிரியர் யார்?கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.
"இரட்டைக் காப்பியங்கள்" என்பவை எவை?சிலப்பதிகாரம், மணிமேகலை.
மணிமேகலை எச்சமயத்தை சார்ந்த காப்பியம்?பௌத்தம்.
“பசிப்பிணி என்னும் பாவி” என்று கூறும் நூல் எது?மணிமேகலை.
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்" என்று கூறியவர் யார்?திருமூலர்.
சுரதாவின் இயற்பெயர் யாது?இராசகோபாலன்.
யார் மீது கொண்ட பற்றின் காரணமாக சுரதா அவர்கள் தம் பெயரை சுப்புரத்தினதாசன் என மாற்றிக் கொண்டார்?பாவேந்தர் பாரதிதாசன் மீது.
கர்மவீரர், கல்விக்கண் திறந்த முதல்வர் என்றெல்லாம் புகழப்பெறுபவர் யார்?காமராசர்.
காமராசர் முதலமைச்சராக பதவி வகித்த ஆண்டுகள்?1954-1963.
யாருடைய ஆட்சி காலத்தில் கட்டாய கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது?காமராசர்.
உயர்நிலைப் பள்ளிவரை இலவசக் கல்வியைக் கொண்டுவந்தவர் யார்?காமராசர்.
தலைவர்களை உருவாக்குபவர் என அழைக்கப்பட்டவர் யார்?காமராசர்.
ஏட்டில் எழுதா கவிதைகள் என்று அழைக்கப்படுவது எதனை?நாட்டுப்புறப்பாடல்கள்.
தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?நாமக்கல் கவிஞர்.
ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பிய பெண்களுள் குறிப்பிடத் தகுந்தவர் யார்?தில்லையாடி வள்ளியம்மை.
மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி பெயர் என்ன?இராணி மங்கம்மாள்.
தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி யார்?இராணி மங்கம்மாள்.
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது?துரை மாணிக்கம்.
பாவேந்தர் பாரதிதாசனின் தலைமாணாக்கர் யார்?பெருஞ்சித்திரனார்.
வரலாறு மற்றும் அறிவியல் சார்ந்த தகவல்கள்
கேள்விவிடை
தமிழர்கள் கடல்வழி வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடுகள் எவை?கிரீசு, எகிப்து, சீனா.
தமிழர் கிரேக்கத்தையும் உரோமானியரையும் எவ்வாறு அழைத்தனர்?யவனர்.
கடலில் செல்லும் பெரிய கப்பல்?நாவாய்.
சேர மன்னருக்குரிய துறைமுகம் எது?முசிறி.
பாண்டிய நாட்டின் துறைமுகம் எது?கொற்கை.
சோழநாட்டின் துறைமுகம் யாது?காவிரிப்பூம்பட்டினம்.
'யாதும் ஊரே; யாவரும் கேளிர் என்று கூறியவர் யார்?கணியன் பூங்குன்றனார்.
சங்க கால ஏற்றுமதி பொருட்களில் முதலிடம் பிடித்தது எது?முத்து.
அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் அமைந்துள்ள பார்வையற்றோருக்கான பள்ளி எது?பெர்கின்ஸ் பள்ளி.
உலகில் எட்டாவது அதிசயம் எனப் பாராட்டப்பட்டவர் யார்?கெலன் கெல்லர்.
பார்வையற்றோருக்கான எழுத்து முறையை உருவாக்கியவர் யார்?பிரெய்லி.
சீட்டுக்கவியின் வேறு பெயர்கள் யாது?ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம்.
ஆனந்தரங்கர் எங்கு திவானாகப் பதவி வகித்தார்?புதுவையில்.
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்பிற்கு அவர் இட்ட பெயர் யாது?தினப்படிச் செய்திக்குறிப்பு, சொஸ்த லிகிதம்.
இந்தியாவின் பெப்பிசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் அழைக்கப்பட்டவர் யார்?ஆனந்தரங்கர்.
வரலாற்றுக் கருவூலமாகத் திகழ்வது யாருடைய நாட்குறிப்பு?ஆனந்தரங்கர் நாட்குறிப்பு.
முத்தொள்ளாயிரம் யாரைப் பற்றிய நூல்?மூவேந்தர்கள் (சேர, சோழ, பாண்டியர்) பற்றியது.
பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் எது?கலிங்கத்துப் பரணி.
கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் யார்?செயங்கொண்டார்.
உலகில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமைப் பெற்ற நாடுகள் எத்தனை?193.
பண்டைத் தமிழர்களின் வீர விளையாட்டு எது?ஏறு தழுவுதல்.
மஞ்சட்காமாலையை போக்க உதவும் மூலிகை எது?கீழாநெல்லி.
நினைவாற்றலை பெருக்க உதவுவது எது?வல்லாரை.
உயிர்வளிப் (ஓசோன்) படலத்தைச் சிதைப்பதில் பெரும் பங்கு வகிப்பது எது?குளோரோ ஃபுளுரோகார்பன்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement