ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 12
தமிழ் இலக்கியம் மற்றும் புலவர்கள்
| எண் | வினா | விடை |
|---|
| 1. | ஏர் எழுபது, சிலை எழுபது, சரசுவதி அந்தாதி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? | கம்பர் |
| 2. | கம்பர் எந்த மன்னனின் அவைப்புலவராக விளங்கினார்? | இரண்டாம் குலோத்துங்க சோழன் |
| 3. | கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியர் என்றெல்லாம் போற்றப்பட்டவர் யார்? | கம்பர் |
| 4. | கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை? | ஆறு காண்டங்கள் |
| 5. | “உலகம் யாவையும் தாமுள வாக்கலும்” என்ற வாழ்த்துப் பாடல் இடம் பெறுள்ள காண்டம் எது? | பாலகாண்டம் |
| 6. | நாயனார், தேவர், தெய்வப் புலவர், மாதானுபங்கி என்றெல்லாம் அழைக்கப்படுபவர் யார்? | திருவள்ளுவர் |
| 7. | திருக்குறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் மொத்தம் எத்தனை? | 38 |
| 8. | திருக்குறளில் பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் மொத்தம் எத்தனை? | 70 |
| 9. | திருக்குறளில் இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் மொத்தம் எத்தனை? | 25 |
| 10. | திருக்குறள் எவ்வகை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது? | பதிணென்கீழ்க்கணக்கு |
| 11. | திருக்குறள் உரைகளில் யாருடைய உரை சிறந்ததாக கருதப்படுகிறது? | பரிமேலழகர் |
| 12. | விக்டோரியா மகாராணியார் காலையில் கண்விழித்ததும் முதலில் படிக்கும் நூல் எது? | திருக்குறள் |
திராவிட மொழிகள்
| எண் | வினா | விடை |
|---|
| 13. | இந்திய மானிடவியல் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எத்தனை மொழிகள் பேசப்படுவதாக தெரிவிக்கின்றது? | 325 |
| 14. | நம் நாட்டில் பேசப்பட்டு வரும் மொழிகளின் எண்ணிக்கை எத்தனை? | 1300க்கு மேல் |
| 15. | தென் திராவிட மொழிகள் என்பவை எவை? | தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா, இருளா |
| 16. | வடதிராவிட மொழிகள் என்பவை எவை? | குரூக், மால்தோ, பிராகுய் |
| 17. | உலக நாகரிகங்கள் அனைத்திற்கும் தாயாகவும், வழிகாட்டியாகவும் விளங்குவது எந்நாகரிகம்? | இந்திய நாகரிகம் |
| 18. | உலக நாடுகளின் பழமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று என்பது எந்த அகழ்வாய்க்குப் பிறகு நிறுவப்பட்டுள்ளது? | மொகஞ்சதாரோ-ஹரப்பா |
| 19. | தமிழையும் அதன் கிளை மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளை ஒரு காலத்தில் எவ்வாறு அழைத்தனர்? | தமிளியன் (அல்லது) தமுலிக் |
| 20. | தமிழ் திரமிள > திரவிட > திராவிட என உருவாயிற்று என்று கூறுபவர் யார்? | ஈராஸ் பாதிரியார் |
| 21. | எண்பது விழுக்காடு அளவிற்குத் திராவிட மொழிக் கூறுகளைக் கொண்டுள்ள ஒரே திராவிடமொழி எது? | தமிழ் |
| 22. | பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையை பெற்ற மொழியே எவ்வாறாக அழைக்கப்படும்? | செவ்வியல் மொழி |
| 23. | திராவிடம் என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர் யார்? | குமாரிலபட்டர் |
நீதி நூல்கள் மற்றும் காப்பியங்கள் (சிறுபஞ்சமூலம் / பாஞ்சாலி சபதம்)
| எண் | வினா | விடை |
|---|
| 24. | நீதிபதியாக இருந்த தமிழ் நாடக ஆசிரியர் யார்? | பம்மல் சம்பந்தனார் |
| 25. | "கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்கும் கணமும் நான் சகித்திட மாட்டேன்" என்று கூறியவர் யார்? | வள்ளலார் |
| 26. | "பாரதியார் உலக கவி!" என்ற வரிகள் கொண்ட பாடலை எழுதியவர் யார்? | பாரதிதாசன் |
| 27. | "நிலமகளே வெல்வாள்!" என்ற தலைப்பில் பாடலை எழுதியவர் யார்? | முடியரசன் |
| 28. | காரியாசான் யாருடைய மாணவர்? | மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் |
| 29. | காரியாசான் உடன் பயின்ற மாணவர் யார்? | கணிமேதாவியர் |
| 30. | சிறுபஞ்சமூலத்தில் கடவுள் வாழ்த்துடன் சேர்த்து மொத்தம் எத்தனை வெண்பாக்கள் உள்ளது? | 97 வெண்பாக்கள் |
| 31. | சிறுபஞ்சமூலம் கண்ணுக்கு அழகு என எதை கூறுகிறது? | இரக்கம் கொள்ளல் |
| 32. | சிறுபஞ்சமூலம் அரசனுக்கு அழகு என எதை கூறுகிறது? | குடிமக்களை வருந்தாமல் காத்தல் |
| 33. | அத்தினாபுரத்தை ஆண்டு வந்த மன்னன் யார்? | துரியோதனன் |
| 34. | பாரதியாரின் உரைநடைநூல்கள் எவை? | ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு |
| 35. | விதுரனைத் தூதுவிடல் என்ற பாடல் பாஞ்சாலி சபதத்தின் எந்த சருக்கத்தில் அமைந்துள்ளது? | சூழ்ச்சிச் சருக்கம் |
| 36. | பாரதி படைப்பில் உரிமைக் காப்பியமாகத் திகழ்வது எது? | பாஞ்சாலி சபதம் |
இக்காலக் கவிதைகள் / கண்ணதாசன் கவியின்பம்
| எண் | வினா | விடை |
|---|
| 37. | "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள், தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்று கூறியவர் யார்? | பாரதியார் |
| 38. | "எங்கள் பகைவர் எங்கோ இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டேன்" என்று பாடியவர் யார்? | பாரதிதாசன் |
| 39. | மணிக்கொடி என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் யாவர்? | ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.இராசகோபாலன், க.நா.சுப்பிரமணியன் |
| 40. | புதுக்கவிதையைப் பரவலாக்கப் பாடுபட்டவர்கள் யார்? | கோவை வானம்பாடி குழுவினர் |
| 41. | மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி மக்களை நோக்கி திருப்பிய பெருமைக்குரியவர் யார்? | பாரதியார் |
| 42. | "முல்லைக்கோர் காடுபோலும் முத்துக்கோர் கடலேபோலும்" என்ற பாடல் வரி மூலம் சுரதா யாரை உவமையாக பாராட்டியுள்ளார்? | மறைமலையடிகள் |
| 43. | பாரதியாரின் வசன கவிதைகள் யாருடைய கவிதை சாயலில் அமைந்திருக்கும்? | வால்ட்விட்மன் |
| 44. | கண்ணதாசனின் பெற்றோர் பெயர் யாது? | சாத்தப்பன், விசாலாட்சி |
| 45. | "பசுமை நிறைந்த நினைவுகளே! பாடித் திரிந்த பறவைகளே” என்று பசுமை மாறா நினைவுகளைப் பாடியவர் யார்? | கண்ணதாசன் |
| 46. | ஆட்டனத்தி, ஆதிமந்தி, மாங்கனி, இயேசுகாவியம் போன்றவைகள் யாருடைய படைப்புகள்? | கண்ணதாசன் |
| 47. | தென்றல், முல்லை, கண்ணதாசன், கடிதம், தமிழ்மலர் போன்ற இதழ்களை தொடங்கி அவற்றின் ஆசிரியராக இருந்தவர் யார்? | கண்ணதாசன் |
சங்க இலக்கியம் மற்றும் பக்தி இலக்கியம் (புறநானூறு / குறுந்தொகை / திருவிளையாடற் புராணம்)
| எண் | வினா | விடை |
|---|
| 48. | "இருட்பகை இரவி இருளெனத் தம்மையும் கருதிக் காய்வனோ" என்ற பாடலின் ஆசிரியர் யார்? | மனோன்மணியம் பெ.சுந்தரனார் |
| 49. | "வாரிக் களத்தடிக்கும் வந்தபின்பு கோட்டைபுகும் போரில் சிறந்து பொலிவாகும்" என்று தொடங்கும் பாடலைப் பாடியவர் யார்? | காளமேகப்புலவர் |
| 50. | இறையனார் களவியல் உரைக்கு உரை கண்டவர் யார்? | மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் |
| 51. | புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்? | ஜி.யு.போப் |
| 52. | "நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று" என்று தொடங்கும் குறுந்தொகை பாடலை இயற்றியவர் யார்? | தேவகுலத்தார் |
| 53. | குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் அடிவரையறை யாது? | 401 பாடல்கள், 4-8 அடிவரையறை |
| 54. | சண்பகப் பாண்டியன் என்று அழைக்கப்பட்டவன் யார்? | வங்கிய சூடாமணி பாண்டியன் |
| 55. | பரஞ்சோதியார் பிறந்த ஊர் எது? | திருமறைக்காடு (வேதாரண்யம்) |
| 56. | பரஞ்சோதி முனிவரின் தந்தை பெயர் யாது? | மீனாட்சி சுந்தர தேசிகர் |
| 57. | வேதாரண்ய புராணம் என்னும் மொழிப்பெயர்ப்பு நூலை இயற்றியவர் யார்? | பரஞ்சோதி முனிவர் |
| 58. | கந்தபுராணத்தின் ஒரு பகுதியான ஆலாகிய மான்மியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் எது? | திருவிளையாடற்புராணம் |
| 59. | பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவன் யார்? | நக்கீரன் |
பயணங்கள் / சுயசரிதைகள் / நாட்குறிப்பு (கடற்பயணம் / கெலன் கெல்லர் / ஆனந்தரங்கர் நாட்குறிப்பு)
| எண் | வினா | விடை |
|---|
| 60. | பழந்தமிழர்கள் பொருளீட்ட செல்வதை தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பிடுகிறார்? | பொருள் வயிற் பிரிவு |
| 61. | கரும்பு யாருடைய காலத்தில் சீனாவிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்து பயிரிடப்பட்டது? | அதியமானின் முன்னோர் காலத்தில் |
| 62. | "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று மொழிந்தவர் யார்? | ஔவையார் |
| 63. | கொற்கைத் துறைமுகத்தில் "முத்துக்குளித்தல்" மிகச் சிறப்பாக நடந்ததைக் குறிப்பிடும் "வெனிசு" நாட்டறிஞர் யார்? | மார்க்கோபோலோ |
| 64. | கெலன் கெல்லர் பிறந்த ஆண்டு எது? | 1880 |
| 65. | யாருடைய உதவியால் கெலன் கெல்லர் பள்ளியில் சேர்ந்தார்? | அலெக்சாண்டர் கிரகாம்பெல் |
| 66. | பார்வையற்றோருக்கான “தேசிய நூலகத்தை” உருவாக்கியவர் யார்? | கெலன் கெல்லர் |
| 67. | திருக்குறளில் ஏழு என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது? | எட்டுக் குறட்பாக்களில் |
| 68. | "ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத்து விரகன்" என்று தொடங்கும் சீட்டுக்கவிப் பாடலை எழுதியவர் யார்? | அந்தகக்கவி வீரராகவர் |
| 69. | அந்தகக்கவி வீரராகவர் வாழ்ந்த ஊர் எது? | பொன்விளைந்த களத்தூர் |
| 70. | ஆனந்தரங்கர் பிறந்த ஊர் மற்றும் ஆண்டு எது? | சென்னைப் பெரம்பூர், 1709 |
| 71. | உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி யார்? | பெப்பிசு |
| 72. | ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றியவர் யார்? | அரிமதி தென்னகன் |
சிற்றிலக்கியம் / கலிங்கத்துப்பரணி / திரு.வி.க / உமர்கய்யாம்
| எண் | வினா | விடை |
|---|
| 73. | சேரமன்னரின் அடையாளச் சின்னம் எது? | வில் |
| 74. | சோழ மன்னரின் அடையாளச் சின்னம் எது? | புலி |
| 75. | இசையாயிரம், உலா, மடல் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? | செயங்கொண்டார் |
| 76. | கலிங்கத்துப் பரணியில் உள்ள தாழிசைகள் மொத்தம் எத்தனை? | 599 |
| 77. | கலிங்கத்துப் பரணியைத் "தென்தமிழ்த் தெய்வபரணி” எனப் புகழ்ந்தவர் யார்? | ஒட்டக்கூத்தர் |
| 78. | திரு.வி.க. அவர்கள் பிறந்த ஊர் மற்றும் நாள் எது? | சென்னைக்கு அருகில் துள்ளம், 26.8.1883 |
| 79. | பெண்ணின் பெருமை, இமயமலை அல்லது தியானம் முதலிய நூல்களை இயற்றியவர் யார்? | திரு.வி.க. |
| 80. | திரு.வி.க.வின் உரைநடையை மலை என்று புகழ்ந்தவர் யார்? | தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் |
| 81. | கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் எது? | கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் |
| 82. | பாரசீகக் கவிஞர் உமர்கய்யாம் வாழ்ந்த நூற்றாண்டு எது? | பதினோராம் நூற்றாண்டு |
காப்பியங்கள் / மூலிகைகள் / காமராசர்
| எண் | வினா | விடை |
|---|
| 83. | மணிமேகலைக்கு மணிமேகலா தெய்வம் வழங்கிய மூன்று மந்திரங்கள் யாவை? | பசியற்றிருக்கவும், விரும்பும் உருவம் எடுக்கவும், வான்வழிச் செல்லவும் |
| 84. | மணிமேகலை யாருடைய உதவியால் அமுதசுரபி பாத்திரத்தைப் பெற்றாள்? | தீவதிலகையின் உதவியால் |
| 85. | மணிமேகலை முதன்முதலில் யாரிடம் பிச்சைப் பெற்றாள்? | ஆதிரையிடம் |
| 86. | சாத்தனாரின் காலம் எந்நூற்றாண்டு? | கி.பி. இரண்டாம் நூற்றாண்டு |
| 87. | மணிமேகலையில் உள்ள காதைகள் மொத்தம் எத்தனை? | 30 |
| 88. | தூதுவளையை ஞானப்பச்சிலை என்று கூறியவர் யார்? | வள்ளலார் |
| 89. | படுக்கைப் புண் குணமாகவும், சொறி சிரங்கை நீக்கவும் பயன்படும் மூலிகை எது? | குப்பைமேனி |
| 90. | சுரதா தமிழக அரசின் எந்த விருதினைப் பெற்றுள்ளார்? | பாவேந்தர் விருது |
| 91. | காமராசர் பிறந்த ஊர் எது? | விருதுநகர் |
| 92. | காமராசர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது? | 1937 |
| 93. | பள்ளி வேலை நாட்களை 180லிருந்து 200 ஆக உயர்த்தியவர் யார்? | காமராசர் |
மகளிர் பெருமை / பிற செய்திகள்
| எண் | வினா | விடை |
|---|
| 94. | கவிஞர் வெ.இராமலிங்கனார் பிறந்த ஊர் எது? | நாமக்கல் மாவட்டம் மோகனூர் |
| 95. | "நம்பிக்கைதான் அவரது ஆயுதம்” என்று தில்லையாடி வள்ளியம்மை குறித்து காந்தியடிகள் எந்த இதழில் எழுதி உள்ளார்? | இந்தியன் ஒப்பீனியன் |
| 96. | கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலையின் பெயர் என்ன? | மங்கம்மாள் சாலை |
| 97. | இரட்சணிய யாத்திரிகம் என்னும் நூலின் ஆசிரியர் யார்? | எச்.ஏ.கிருட்டினனார் |
| 98. | கிறித்துவக் கம்பர் எனப் புகழப்பெற்றவர் யார்? | எச்.ஏ.கிருட்டினனார் |
| 99. | பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் எது? | சேலம் மாவட்டம் சமுத்திரம் |
| 100. | மூன்றும் ஆறும், கோடையும் வசந்தமும், ஊசிகள் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? | மீரா |
0 Comments