TNPSC TRB TET இந்தியா சுதந்திரம் பெற்றது வரை 100 வினா-விடை | History Part-23
ஐரோப்பியர் வருகையும் வர்த்தக மையங்களும்| எண் | கேள்வி | விடை |
|---|
| 1 | இம்மென்பாடக் குறிப்புகளை மறுபிரதி எடுப்பவர்கள் எந்தச் சட்டத்தை மீறினால் தண்டிக்கப்படுவார்கள்? | இந்திய காப்புரிமைச் சட்டம் |
| 2 | 1453ல் கான்ஸ்டாண்டிநோபிள் கைப்பற்றப்பட்டபின், துருக்கியர்கள் வட ஆப்பிரிக்காவைத் தவிர வேறு எங்கு நுழைந்தனர்? | பால்கன் தீபகற்பம் |
| 3 | இந்தியாவிற்குப் புதிய கடல் வழியைக் கண்டுபிடிப்பதில் எந்த ஐரோப்பிய நாட்டை ஒப்பிடும்போது போர்ச்சுகல் மிகவும் ஆர்வமாக இருந்தது? | ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும்போது |
| 4 | 1487-ல் தென்னாப்பிரிக்காவின் தெற்கு முனையை அடைந்த பார்த்தலோமியா டயஸை ஆதரித்த போர்ச்சுக்கல் மன்னர் யார்? | இரண்டாம் ஜான் |
| 5 | வாஸ்கோடகாமாவின் வழியைப் பின்பற்றி பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் கள்ளிக்கோட்டையை வந்தடைந்த ஆண்டு எது? | 1500 ஆம் ஆண்டு |
| 6 | 1501-ல் வாஸ்கோடகாமா 20 கப்பல்களுடன் வந்தபோது எந்தெந்த இடங்களில் வர்த்தக மையங்களை நிறுவினார்? | கண்ணனுார், கள்ளிக்கோட்டை மற்றும் கொச்சின் |
| 7 | போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரமாயிற்று எந்த நகரம்? | கொச்சின் |
| 8 | இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையைப் பலப்படுத்துவதே யாருடைய முக்கிய நோக்கமாக இருந்தது? | பிரான்சிஸ்கோ அல்மெய்டாவின் |
| 9 | அல்புகர்க்குவிற்குப் பிறகு போர்ச்சுக்கீசிய கவர்னரானவர் யார்? | நினோ-டி-குன்கா |
| 10 | கோவாவில் "இந்திய மருத்துவ தாவரங்கள்" என்ற நூல் அச்சிட்டு வெளியிடப்பட்ட ஆண்டு என்ன? | 1563ல் |
| 11 | இந்தியப் பொருட்களான பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி, மற்றும் அபினி ஆகியவற்றை வர்த்தகம் செய்த ஐரோப்பியர்கள் யார்? | டச்சுக்காரர்கள் |
| 12 | 1502 முதல் பழவேற்காட்டின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருந்தவர்கள் யார்? | போர்ச்சுக்கீசியர்கள் |
| 13 | நாகப்பட்டினம், புன்னக்காயல், பரங்கிப்பேட்டை, கடலூர் மற்றும் தேவனாம்பட்டினம் ஆகியன யாருடைய கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகளாகும்? | டச்சுக்காரர்களின் |
| 14 | இங்கிலாந்து இராணி எலிசபெத் 1600 டிசம்பர் 31 அன்று வழங்கிய அனுமதி பட்டயம் யாருக்கு வழங்கப்பட்டது? | கவர்னர் மற்றும் லண்டன் வர்த்தகர்கள் நிறுவனத்திற்கு |
| 15 | 1639-ல் மெட்ராசை சந்திரகிரி மன்னரிடமிருந்து குத்தகைக்குப் பெற்ற ஆங்கில வணிகர் யார்? | பிரான்சிஸ் டே |
| 16 | காளிகட்டம் மற்றும் கோவிந்தபூர் கிராமங்களுடன் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1698-ல் ஜமீன்தாரி உரிமையைப் பெற்ற மூன்றாவது கிராமம் எது? | சுதாநுதி |
| 17 | 1757-ல் பிளாசிப் போர் மற்றும் 1764-ல் பக்சார் போருக்குப் பிறகு ஓர் அரசியல் சக்தியாக மாறிய கம்பெனி எது? | ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி |
| 18 | டேனிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தை உருவாக்கப் பட்டயத்தை வெளியிட்டவர் யார்? | டென்மார்க் அரசர் நான்காம் கிரிஸ்டியன் |
| 19 | டேனியர்களின் இந்தியத் தலைமையிடமாக விளங்கிய பகுதி எது? | செராம்பூர் |
| 20 | டேனியர்களால் தரங்கம்பாடி எவ்வாறு அழைக்கப்பட்டது? | டானஸ்பெர்க் |
| 21 | பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தை 1664-ல் உருவாக்கிய கால்பர்ட் யாருடைய அமைச்சர்? | மன்னர் பதினான்காம் லூயியின் |
| 22 | இந்தியாவில் முதல் பிரெஞ்சு வணிக மையத்தை சூரத் நகரில் நிறுவியவர் யார்? | கரோன் |
| 23 | பிரான்சின் இரண்டாவது வர்த்தக மையத்தை மசூலிப்பட்டினத்தில் நிறுவ மார்காரா யாருடைய அனுமதியைப் பெற்றார்? | கோல்கொண்டா சுல்தானின் |
கிராம சமூகமும் வாழ்க்கை முறையும் & விவசாயிகளின் புரட்சிகள்| எண் | கேள்வி | விடை |
|---|
| 24 | காலனி ஆதிக்கத்திற்கு முன் இந்தியப் பொருளாதாரம் எதனை அடிப்படையாகக் கொண்டிருந்தது? | வேளாண்மையை |
| 25 | ஆங்கில அரசு இந்தியாவில் அறிமுகப்படுத்திய மூன்று பெரிய நிலவருவாய்த் திட்டங்கள் எவை? | நிலையான நில வருவாய்த் திட்டம், மகல்வாரி திட்டம், இரயத்துவாரி திட்டம் |
| 26 | ஆங்கில ஆட்சியின் கீழ் நிலையான நில வருவாய்த் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? | காரன்வாலிஸ் பிரபு |
| 27 | அவுரி புரட்சி என அழைக்கப்படும் இண்டிகோ கலகம் நடைபெற்ற காலகட்டம் என்ன? | 1859-1960 |
| 28 | பஞ்சாப் விவசாயிகள் இயக்கம் நடைபெற்ற காலகட்டம் என்ன? | 1890-1900 |
வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை & கர்நாடக, மைசூர், மராத்திய போர்கள்| எண் | கேள்வி | விடை |
|---|
| 29 | புதிய நிலவியல் கண்டுபிடிப்புகளின் சகாப்தமாக ஐரோப்பா விளங்கிய நூற்றாண்டு எது? | 15-ஆம் நூற்றாண்டு |
| 30 | 1757-ல் நடைபெற்ற பிளாசிப்போரில் சிராஜ்-உத்-தௌலாவுக்கு உதவிய ஐரோப்பியப் படை எது? | பிரெஞ்ச் கூட்டணி |
| 31 | எந்தப் போரின் வெற்றியால் ஆங்கிலேயரது அரசியல் அதிகாரம் அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு நீடித்தது? | பிளாசிப்போர் வெற்றி |
| 32 | 1764-ல் நடைபெற்ற பக்சார் போரில் ஆங்கிலப் படைத்தளபதியாக செயல்பட்டவர் யார்? | ஹெக்டர் மன்றோ |
| 33 | பக்சார் போரில் தோல்வியடைந்த அயோத்தி நவாப் மற்றும் முகலாயப் பேரரசர் யார்? | சுஜா-உத்-தௌலா மற்றும் இரண்டாம் ஷா-ஆலம் |
| 34 | வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையைக் கொண்டு வர இராபர்ட் கிளைவ் யார் யாருடன் தனித்தனியாக ஒப்பந்தம் செய்து கொண்டார்? | சுஜா-உத்-தௌலா மற்றும் இரண்டாம் ஷா-ஆலத்துடனும் |
| 35 | எந்தப் போர்களின் விளைவாக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அரசியல் அதிகாரம் வலுப்பெற்றது? | கர்நாடகப் போர்கள் |
| 36 | 1746 முதல் 1748 வரை நடைபெற்ற முதல் கர்நாடகப் போருக்குக் காரணம் என்ன? | ஐரோப்பாவில் ஏற்பட்ட ஆஸ்திரிய வாரிசுரிமைப் போர் |
| 37 | 1749 முதல் 1754 வரை நடைபெற்ற இரண்டாம் கர்நாடகப் போருக்கான காரணம் என்ன? | கர்நாடகம் மற்றும் ஹைதராபாத் பகுதிகளில் ஏற்பட்ட வாரிசுரிமைப் பிரச்சனை |
| 38 | 1756 முதல் 1763 வரை நடைபெற்ற மூன்றாம் கர்நாடகப் போருக்குக் காரணம் என்ன? | ஐரோப்பாவில் வெடித்த ஏழாண்டுப் போர் |
| 39 | அய்-லா-சப்பேல் உடன்படிக்கை மூலம் முடிவுற்ற கர்நாடகப் போர் எது? | முதல் கர்நாடகப் போர் |
| 40 | பாண்டிச்சேரி உடன்படிக்கை மூலம் முடிவுற்ற கர்நாடகப் போர் எது? | இரண்டாம் கர்நாடகப் போர் |
| 41 | பாரிஸ் உடன்படிக்கை மூலம் முடிவுற்ற கர்நாடகப் போர் எது? | மூன்றாம் கர்நாடகப் போர் |
| 42 | 1746-ல் சாந்தோம் என்ற இடத்தில் நடைபெற்ற அடையாறு போர் எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது? | சென்னையின் அடையாறு நதிக்கரை |
| 43 | நன்கு பயிற்சி பெற்ற ஐரோப்பியப் படை இந்தியப் படையை வென்ற முதல் நிகழ்வான போர் எது? | அடையாறு போர் |
| 44 | 1749-ல் நடைபெற்ற ஆம்பூர் போரில் கர்நாடக நவாப் அன்வர்தீனைத் தோற்கடித்த கூட்டுப் படைகள் எவை? | பிரெஞ்ச் டியூப்ளே, சந்தா சாகிப், முசாபர் ஜங் கூட்டுப் படைகள் |
| 45 | எந்தப் போரின் வெற்றியின் மூலம் டியூப்ளேயின் அதிகாரம் உச்ச நிலையை அடைந்தது? | ஆம்பூர் போர் |
| 46 | 1751-ல் நடந்த ஆற்காட்டுப் போரின் தோல்வியால் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் யாரைப் பாரிசுக்குத் திரும்ப அழைத்தது? | டியூப்ளேவை |
| 47 | 1760 ஜனவரி 22-ல் நடைபெற்ற வந்தவாசிப் போரில் லாலி தலைமையிலான பிரெஞ்சுப் படையை தோற்கடித்த ஆங்கிலேய தளபதி யார்? | ஜெனரல் அயர் கூட் |
| 48 | 1767 - 1769ல் நடைபெற்ற முதல் ஆங்கிலேய மைசூர் போரில் தோல்வியுற்ற படை எது? | ஆங்கிலப் படை |
| 49 | மதராஸ் உடன்படிக்கை எந்தத் தேதியில் கையெழுத்தானது? | 1769, ஏப்ரல் 4 |
| 50 | இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில் ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்ட முக்கூட்டணியில் இருந்தவர்கள் யார்? | ஹைதர் அலி, ஹைதராபாத் நிஜாம், மராத்தியர்கள் |
| 51 | மங்களூர் உடன்படிக்கை எந்தத் தேதியில் கையெழுத்தானது? | 1784, மார்ச் 7 |
| 52 | ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை எந்த ஆங்கிலேய மைசூர் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது? | மூன்றாம் ஆங்கிலேய மைசூர் போர் |
| 53 | 1799-ல் நடைபெற்ற நான்காம் ஆங்கிலேய மைசூர் போரில் போர் முடிவுக்கு வரக் காரணம் என்ன? | திப்பு சுல்தானின் மரணம் |
| 54 | 1775 முதல் 1818 வரை மொத்தம் எத்தனை ஆங்கிலேய மராத்தியப் போர்கள் நடைபெற்றன? | மூன்று |
இந்தியாவில் ஆங்கிலேயரின் நிர்வாக அமைப்பு மற்றும் சீர்திருத்தங்கள்| எண் | கேள்வி | விடை |
|---|
| 55 | ஆங்கிலேயரின் இந்திய நிர்வாக அமைப்பு இயங்கிய நான்கு முதன்மை நிறுவனங்கள் எவை? | குடிமைப்பணிகள், இராணுவம், காவல் மற்றும் நீதித்துறை |
| 56 | சிவில் சர்வீஸ் (குடிமைப் பணிகள்) என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்திய நிறுவனம் எது? | ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி |
| 57 | குடிமைப் பணியில் சட்டங்களை முறையாகச் செயல்படுத்துதலுடன் இணைந்த மற்றொரு முதன்மைப் பணி என்ன? | வரி வசூலித்தல் |
| 58 | வெல்லெஸ்லி பிரபு 1800-இல் வில்லியம் கோட்டையில் எந்தத் துறைகளில் பயிற்சி வழங்க கல்லூரியை நிறுவினார்? | மொழி, இலக்கியம், அறிவியல் |
| 59 | இங்கிலாந்தில் உள்ள ஹெய்லிபரி என்ற இடத்தில் கிழக்கிந்தியக் கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு என்ன? | 1806-இல் |
| 60 | போட்டித்தேர்வு மூலம் அரசு ஊழியர் நியமனம் என்ற கருத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்திய சட்டம் எது? | 1833-ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் |
| 61 | திறந்த முறையிலான போட்டித்தேர்வு முறையில் கம்பெனி ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையை உறுதி செய்த சட்டம் எது? | 1858-ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் |
| 62 | 1860-ல் தேர்வெழுத அதிகபட்ச வயது 22 ஆகக் குறைக்கப்படக் காரணமான ஆணையம் எது? | ஒழுங்குமுறை ஆணையம் |
| 63 | வயது வரம்புக் குறைத்தல் மற்றும் லண்டனுக்குச் சென்று தேர்வு எழுதுதல் ஆகிய காரணங்களால் எந்த இந்தியர்கள் மட்டுமே ஐ.சி.எஸ் தேர்வு எழுத முடிந்தது? | வசதி படைத்த இந்தியர்கள் மட்டுமே |
| 64 | 1869-இல் ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மூன்று இந்தியர்கள் யார்? | சுரேந்திரநாத் பானர்ஜி, ரமேஷ் சந்திர தத் மற்றும் பிகாரி லால் குப்தா |
| 65 | 1892-இல் ஐ.சி.எஸ் தேர்விற்கான வயது வரம்பு 21-லிருந்து எவ்வளவாக உயர்த்தப்பட்டது? | 23 ஆக |
| 66 | 1912- இல் அமைக்கப்பட்ட இஸ்லிங்டன் பிரபு தலைமையிலான ராயல் கமிஷனில் இடம்பெற்றிருந்த இந்திய உறுப்பினர்கள் யார்? | கோபால கிருஷ்ண கோகலே, சர் அப்துர் ரஹிம் |
| 67 | இந்திய ஆட்சிப்பணியில் 33 சதவீத இந்தியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்தவர்கள் யார்? | மாண்டேகு மற்றும் செம்ஸ் போர்டு |
| 68 | இந்திய ஆட்சிப்பணி, காவல்பணி, காடுகள் பணி ஆகிய நியமனங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என லீ பிரபு குழு பரிந்துரைத்தது? | இந்தியாவுக்கான அரசு செயலரின் கட்டுப்பாட்டில் |
| 69 | இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியை நிறுவுவதிலும் விரிவுபடுத்துவதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய படை எது? | இராணுவம் (சிப்பாய் இராணுவம்) |
| 70 | ஜமீன்தார்களைக் காவல் பணிகளிலிருந்து விடுவித்த காரன்வாலிஸ் முறையான காவல்துறையை உருவாக்கிய ஆண்டு என்ன? | 1791-இல் |
| 71 | 1772-இல் இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்ட பின் வரி வசூல் மற்றும் நீதி வழங்கும் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டது யார்? | ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி |
| 72 | ஆங்கிலேயர் காலத்தில் சிவில் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஆகியவை எவ்வாறு அழைக்கப்பட்டன? | திவானி அதாலத் மற்றும் பௌஜ்தாரி அதாலத் |
| 73 | வங்காளத்தில் ஜூரி முறையை 1832-ல் கொண்டு வந்தவர் யார்? | வில்லியம் பெண்டிங் பிரபு |
| 74 | மதராஸ் உயர் நீதிமன்றத்தின் முதல் இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? | சர் திருவாரூர் முத்துச்சாமி |
| 75 | 1848-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வாரிசு இழப்புக் கொள்கையால் 1850-ல் இணைக்கப்பட்ட பகுதி எது? | பகத் |
தலைமை ஆளுநர்களின் சீர்திருத்தங்கள்| எண் | கேள்வி | விடை |
|---|
| 76 | ஆங்கிலேயர் கிழக்கிந்திய வணிகக் குழுவிற்கு அரசப் பட்டயத்தை வழங்கிய இங்கிலாந்து அரசி யார்? | முதலாம் எலிசபெத் |
| 77 | 1690-ல் மூன்று கிராமங்களை விலைக்கு வாங்கிய ஜாப் சார்னாக் எந்தக் குழுவின் முகவர் ஆவார்? | ஆங்கில வணிகக் குழுவின் முகவர் |
| 78 | வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்தில் வரி வசூல் செய்யும் பொறுப்பை எந்தக் குழு முழுமையாக ஏற்றது? | வணிகக் குழுவே |
| 79 | வணிகக் குழுவின் அரசியல் அமைப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்த சட்டம் எது? | 1773 ஒழுங்குமுறை சட்டம் |
| 80 | 1774-ல் நடைபெற்ற ரோஹில்லா போரில் ஈடுபட்ட ரோகில்கண்ட் ஆட்சியாளர் யார்? | ஹபிஸ் ரகமத் கான் |
| 81 | வாரன் ஹேஸ்டிங்ஸ் மற்றும் மகாஜதி சிந்தியாவுக்கும் இடையே 1782-ல் ஏற்பட்ட உடன்படிக்கை எது? | சால்பாய் உடன்படிக்கை |
| 82 | வங்காள நவாப்பின் அன்னையும், பாட்டியும் வரலாற்று நிகழ்வுகளில் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? | அயோத்தி பேகம்கள் |
| 83 | காரன் வாலிஸ் பிரபு தனது எந்தச் சகப் பணியாளரின் உதவியுடன் முழுமையான சட்டத்தை உருவாக்கினார்? | ஜார்ஜ் பார்லோ |
| 84 | தம்மை "வங்கப்புலி" என்று கூறிக்கொண்ட பேரரசுக் கொள்கையுடைய ஆளுநர் யார்? | வெல்லஸ்லிப் பிரபு |
| 85 | மராத்தியக் கூட்டணியை முறியடித்த இந்தியத் தலைமை ஆளுநர் யார்? | ஹேஸ்டிங்ஸ் பிரபு |
| 86 | "சமாச்சார் தாபன்" என்ற வங்காள மொழி வார இதழை 1818-ல் தோற்றுவித்தவர் யார்? | சீராம்பூர் சமயபரப்பாளரான மார்ஷ்மேன் |
| 87 | வில்லியம் பெண்டிங் பிரபு எந்தத் தத்துவங்களை உள்ளடக்கி 1833-ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தை வழிநடத்தினார்? | பெந்தாம் என்பவரின் தாராள மற்றும் பயன்பாட்டுத் தத்துவங்களை |
| 88 | கீழ்மட்ட நீதிமன்றங்களில் அந்தந்தப் பகுதியின் மொழிகளிலேயே வழக்குகள் நடைபெற அனுமதித்த ஆளுநர் யார்? | வில்லியம் பெண்டிங் பிரபு |
| 89 | தக்காணத்தில் தக்கர்களுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடங்கித் திறமையுடன் செய்ததால் கர்னல் சீலிமேன் எவ்வாறு அழைக்கப்பட்டார்? | "தக்கீ சிலீமேன்" என்று |
| 90 | டல்ஹௌசி பிரபுவின் எந்தக் கொள்கை 1857-ஆம் ஆண்டு பெரும் புரட்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது? | வாரிசு இழப்புக் கொள்கை |
| 91 | ராணிகஞ்ச் நிலக்கரி சுரங்கத்தையும் கல்கத்தாவையும் இணைக்கும் இரயில் பாதை தொடங்கப்பட்ட ஆண்டு என்ன? | 1854-ஆம் ஆண்டு |
பாளையங்களின் தோற்றம் & தென்னிந்திய கிளர்ச்சிகள் / வேலூர் கலகம்| எண் | கேள்வி | விடை |
|---|
| 92 | மதுரையில் நாயக்கர் அரசால் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டபோது ஒவ்வொரு பாளையமும் யாருடைய கீழ் கொண்டுவரப்பட்டது? | பாளையக்காரரின் கீழ் |
| 93 | எந்த உடன்படிக்கையால் பாளையக்காரர்களின் மீது ஆங்கிலேய அதிகாரம் செலுத்தப்பட்டது? | 1792 ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட கர்நாடக உடன்படிக்கை |
| 94 | கட்டபொம்மன் கட்ட வேண்டிய கப்பத்தொகை 1798 மே 31-ஆம் நாள் கணக்குப்படி எவ்வளவாக நிலுவையில் இருந்தது? | 3310 பகோடாக்கள் |
| 95 | திருநெல்வேலிக்கு பிரிட்டிஷ் படைகளைச் செல்ல 1799 மே திங்களில் உத்தரவிட்டவர் யார்? | வெல்லெஸ்லி பிரபு |
| 96 | 1799 செப்டம்பர் 5-ஆம் நாள் பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் படையை நகர்த்தியவர் யார்? | மேஜர் பானர்மேன் |
| 97 | வேலுநாச்சியார் திண்டுக்கல் அருகில் எந்த இடத்தில் கோபால நாயக்கர் பாதுகாப்பில் வாழ்ந்தார்? | விருப்பாச்சியில் |
| 98 | மருது பாண்டியர் என்று அழைக்கப்பட்ட சின்ன மருது ஆங்கிலேயர்களுக்கெதிரான தீவிர நடவடிக்கைகளால் எவ்வாறு அழைக்கப்பட்டார்? | "சிவகங்கை சிங்கம்" |
| 99 | 1801 பிரகடனத்தின் ஒரு நகல் திருச்சி கோட்டைச் சுவரிலும் மற்றொரு நகல் எங்கு ஒட்டப்பட்டது? | ஸ்ரீரங்கம் வைஷ்ணவ கோயில் சுவரிலும் |
| 100 | வேலூர் கலகத்தின் போது உடனடிக் காரணமாக இருந்த அக்னியூ தலைப்பாகையில் பொறிக்கப்பட்டிருந்த ஐரோப்பியத் தொப்பியை ஒத்திருந்த சின்னம் எது? | சிலுவைச் சின்னம் |
0 Comments