ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 13
வாழ்த்து, கம்பர், திருக்குறள்
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | கம்பர் பிறந்த ஊர்: தேரழுந்தூர். இது எந்த மாவட்டத்தில் உள்ளது? | நாகப்பட்டினம் மாவட்டம் |
| 2. | சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்? | கம்பர் |
| 3. | வால்மீகி இராமாயணத்தைத் தழுவி தமிழில் இராமாயணத்தை எழுதியவர் யார்? | கம்பர் |
| 4. | திருக்குறளில் உள்ள 'திரு' என்பதன் பொருள் யாது? | செல்வம், சிறப்பு, அழகு, மேன்மை, தெய்வத்தன்மை |
| 5. | நற்குணங்கள் நம்மைவிட்டு நீங்காதிருக்க நாம் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டியது எது? | பொறுமை |
| 6. | 'வான்மறை' என்னும் சொல் குறிக்கும் இலக்கியம் எது? | திருக்குறள் |
| 7. | திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர் யாவர்? | தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குடவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர் |
| 8. | நன்னூலின் ஆசிரியர் யார்? | பவணந்தி முனிவர் |
| 9. | நன்னூல் எந்த நூலின் வழிநூல் ஆகும்? | தொல்காப்பியத்தின் வழிநூல் |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | நடுத்திராவிட மொழிகள் எவை? | தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு |
| 2. | இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருந்த நாகரிகம் எது? | திராவிட நாகரிகம் |
| 3. | திராவிடர் பேசிய மொழியே எது? | திராவிட மொழி |
| 4. | பிறமொழிகள் தோன்றி வளர அடிப்படையான மொழி எது? | மூலமொழி |
| 5. | ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர்? | கிளைமொழி |
| 6. | 'திராவிடம்' என்னும் சொல் பெயரடையாக வந்துள்ள சொற்றொடர்களைக் (திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம்) குறிப்பிட்டவர் யார்? | கால்டுவெல் |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | “இரவின் அறுவடை” நூலின் ஆசிரியர் யார்? | புவியரசு |
| 2. | புகழ் பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் பெர்னாட்ஷா எந்த நாட்டைச் சார்ந்தவர்? | அயர்லாந்து |
| 3. | "கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை" என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது? | சிறுபஞ்சமூலம் |
| 4. | காரியாசன் சார்ந்த சமயம் எது? | சமணம் |
| 5. | சிறுபஞ்சமூலம் எவ்வகை நூல்களுள் ஒன்று? | பதினெண் கீழ்க்கணக்கு |
| 6. | பிறரிடம் இரந்து செல்லாமை எதற்கு அழகு? | காலுக்கு |
| 7. | ஆராய்ச்சிக்கு அழகு எது என சிறுபஞ்சமூலம் கூறுகிறது? | முடிவை துணிந்துரைத்தல் |
| 8. | இசைக்கு அழகு எது? | கேட்போர் நன்றெனப் புகழ்தல் |
| 9. | பெரும்பான்மை பொது அறக்கருத்துகளையும் சிறுபான்மை சமய அறக்கருத்துகளையும் கொண்டுள்ள நூல் எது? | சிறுபஞ்சமூலம் |
| 10. | இந்திர மாநகரை ஆண்டுவந்தவர்கள் யார்? | பாண்டவர்கள் |
| 11. | துரியோதனின் மாமன் பெயர் யாது? | சகுனி |
| 12. | துரியோதனின் தந்தை பெயர் யாது? | திருதராட்டிரன் |
| 13. | திருதராட்டிரனின் தம்பி பெயர் யாது? | விதுரன் |
| 14. | திருதராட்டினன் அமைத்துள்ள மண்டபத்தை காண பாண்டவர்களை அழைக்கத் தூது சென்றவர் யார்? | விதுரன் |
| 15. | பாரதியாரின் துணைவியார் பெயர் யாது? | செல்லம்மாள் |
| 16. | பாஞ்சாலி சபதம் எத்தனை பாகங்களைக் கொண்டது? | இரண்டு பாகம் |
| 17. | பாஞ்சாலி சபதத்தில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை? | 412 |
| 18. | பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் பெயர்கள் யாவை? | சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம் |
| 19. | திருதராட்டிரனின் புதல்வர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? | கௌரவர்கள் |
| 20. | பாரதியாரின் பெற்றோர் யாவர்? | சின்னசாமி இலக்குமி அம்மையார் |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | "இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்" என்று பாடியவர் யார்? | பாரதியார் |
| 2. | "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற இந்தவையம்" என்று பாடியவர் யார்? | பாரதிதாசன் |
| 3. | "சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும், சபைகளிலே தமிழுெந்து முழங்க வேண்டும்" எனப் பாடியவர் யார்? | கவிமணி |
| 4. | "பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்" என்று பாடியவர் யார்? | நாமக்கல் கவிஞர் |
| 5. | "ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற" என்று பாடியவர் யார்? | முடியரசன் |
| 6. | 'எழுத்து' என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் யாவர்? | எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு.செல்லப்பா |
| 7. | "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் எல்லாமே எரிகின்றன" என்ற புதுக்கவிதையின் ஆசிரியர் யார்? | வல்லிக்கண்ணன் |
| 8. | "உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமையில்லா மனிதகுலம் உயர்வு தாழ்வு வளர்க்குது" என்று பாடியவர் யார்? | பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் |
| 9. | இருபதாம் நூற்றாண்டின் கவிதை வளர்ச்சியில் யாருடைய கவிதைகள் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன? | பாரதியின் கவிதைகள் |
| 10. | இந்திய ஒருமைப்பாட்டின் உயர்வினை விளக்கும் பாரதியின் கவிதை வரி எது? | முப்பதுகோடி முகமுடையாள் |
| 11. | கற்றோரைக் களிப்பில் ஆழ்த்துவன யாருடைய கவிதைகள்? | கவிமணியின் கவிதைகள் |
| 12. | "கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுப்பவனும் நீதானோ” எனத் தாலாட்டுப் பாடியவர் யார்? | கவிமணி |
| 13. | நாமக்கல்லாரின் கவிதைகளில் எச்சிந்தனை மிளிர்கின்றன? | காந்திய சிந்தனை |
| 14. | பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம்பித்துக் காட்டுவதில் யாருடைய கவிதைகள் சிறந்து விளங்குகின்றன? | வாணிதாசன் |
| 15. | "செந்தமிழ் சொல் லெடுத்து இசை தொடுப்பேன் வண்ணச் சந்தத்திலே கவிதைச் சரம் தொடுப்பேன்" என்று பாடியவர் யார்? | கண்ணதாசன் |
| 16. | "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்" என்ற பாடலின் மூலம் வாழ்வியல் சிந்தனையை கூறுபவர் யார்? | கண்ணதாசன் |
| 17. | "அழகுத்தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?" என்று குழந்தையின் நடையினை வர்ணித்தவர் யார்? | கண்ணதாசன் |
| 18. | "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று பாடியவர் யார்? | கண்ணதாசன் |
| 19. | "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" என்ற பாடலைப் பாடியவர் யார்? | கண்ணதாசன் |
| 20. | கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டி எந்த மாவட்டத்தில் உள்ளது? | சிவகங்கை மாவட்டம் |
| 21. | ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடித் திருவிழா போன்ற புதினங்களைப் படைத்தவர் யார்? | கண்ணதாசன் |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | வாயசம் என்பதன் பொருள் யாது? | காகம் |
| 2. | சிறை என்பதன் பொருள் யாது? | இறக்கை |
| 3. | புறப்பொருள் பற்றி நானூறு பாடல்களைக் கொண்ட நூல் எது? | புறநானூறு |
| 4. | "கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது? | குறுந்தொகை |
| 5. | குறைந்த அடியளவால் பாடற்பெற்ற பாடல்களின் தொகுப்பு நூல் எது? | குறுந்தொகை |
| 6. | வங்கிய சேகரபாண்டியனின் மகன் பெயர் யாது? | வங்கிய சூடாமணி பாண்டியன் |
| 7. | இறைவனுக்கு சண்பகமாலை சாத்தி வழிபடுவதற்காக சண்பக நந்தவனத்தை ஏற்படுத்தியவன் யார்? | வங்கிய சூடாமணி பாண்டியன் |
| 8. | பாண்டியரின் குலத்தெய்வம் எது? | சொக்கநாதன் (அ) சுந்தர பாண்டியன் |
| 9. | தென்னவன் என்று அழைக்கப்படுபவர் யார்? | பாண்டியன் |
| 10. | மீன்கொடியை உடையவன் யார்? | பாண்டியன் |
| 11. | பரஞ்சோதியார் பிறந்த திருமறைக்காடு என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது? | நாகை மாவட்டம் |
| 12. | சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அலுகால் பீடத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் எது? | திருவிளையாடற்புராணம் |
| 13. | திருவிளையாடற் புராணத்தைப் போற்றி கலி வெண்பா, மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? | பரஞ்சோதி முனிவர் |
| 14. | திருவிளையாடற் புராணத்தின் மூன்று காண்டங்களின் பெயர்கள் யாவை? | மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க்காண்டம் |
| 15. | திருவிளையாடற் புராணத்தில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை? | 3363 |
| 16. | திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்? | பண்டிதமணி ந.மு.வேங்கடசாமி |
| 17. | "கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" என்று தொடங்கும் பாடல் இடம் பெறும் நூல் எது? | குறுந்தொகை |
| 18. | உடல் முழுவதும் கண்களையுடையவன் யார்? | இந்திரன் |
| எண் | கேள்வி | விடை |
|---|---|---|
| 1. | பொருள் வயிற்பிரிவு எத்தனை வகைப்படும்? | தரைவழிப் பிரிதல், நீர்வழிப் பிரிதல் என இருவகைப்படும் |
| 2. | தமிழர்களின் எந்த பொருள்கள் மேற்காசிய நாடுகளில் விற்கப்பட்டன? | ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு |
| 3. | கப்பல் கட்டும் தொழிலாளர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்? | கலம்செய் கம்மியர் |
| 4. | ஆழி, ஆர்கலி, முந்நீர், பௌவம், பரவை எதனைக் குறிக்கும் பெயர்கள்? | கடலைக் குறிக்கும் பெயர்கள் |
| 5. | கொற்கை முத்தினை சிறப்பித்துக் கூறும் பத்துப்பாட்டு நூல்கள் எவை? | மதுரைக்காஞ்சி, சிறுபாணாற்றுப்படை |
| 6. | சீனாவிலிருந்து தமிழகத்திற்கு இறக்குமதியான பொருள்கள் யாவை? | சீனத்துப்பட்டும் சர்க்கரையும் |
| 7. | "மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்" என்பது யாருடைய கூற்று? | பாரதி |
| 8. | இத்தாலி நாட்டு பாதிரியாரான வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன? | கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி |
| 9. | வீரமாமுனிவருக்கு மதுரைச் சங்கத்தார் அளித்த பட்டப்பெயர் என்ன? | தைரியநாதர் |
| 10. | மருதநில அரசனது கோட்டையைப் புறநானூறு எதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறது? | நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு |
| 11. | புகார் நகரத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்களின் கொடி அசைவதைப் பற்றிக் குறிப்பிடும் நூல் எது? | பட்டினப்பாலை |
| 12. | காற்றின் துணைகொண்டு இயங்கிய பெரிய நாவாய்க்கு வழங்கப்பட்ட பெயர் என்ன? | பாய்மரக்கப்பல் |
| 13. | பாஸ்டன் நகரில் உள்ள காதுகேளாதோருக்கான பள்ளி எது? | ஹோரஸ்மான் |
| 14. | அன்னிசல்லிவான் இறந்தபிறகு ஹெலன் கெல்லருக்கு மொழிப் பெயர்ப்பாளராக பணியாற்றியவர் யார்? | பாலிதாம்சன் |
| 15. | ஹெலன் கெல்லர் பயின்ற கல்லூரி எது? | கேம்பிரிட்ஜ் ரெட்கிளிப் |
| 16. | வாஷிங்டன் நகரின் புகழ்பெற்ற பெண்மணி யார்? | ஹெலன் கெல்லர் |
| 17. | திருக்குறளில் எத்தனை அதிகாரங்களின் பெயர் 'உடைமை' என்னும் சொல்லில் அமைந்துள்ளது? | பத்து அதிகாரம் |
| 18. | கந்தருவம், கோடை, மா, கிள்ளை போன்றவைகள் எதனைக் குறிக்கும் பெயர்கள்? | குதிரையைக் குறிக்கும் பெயர்கள் |
| 19. | அந்தகக்கவி வீரராகவரின் தந்தை பெயர் யாது? | வடுகநாதர் |
| 20. | இலங்கை மன்னன் பரராசசேகரபாடிடம் வீரராகவர் பெற்ற பரிசு யாது? | ஒரு யானை, பொற்பந்தம், ஓர் ஊர் |
| 21. | திருக்கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களை இயற்றியவர் யார்? | அந்தகக்கவி வீரராகவர் |
| 22. | தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் உள்ள பாடல்கள் மொத்தம் எத்தனை? | 1113 |
| 23. | ஆனந்தரங்கரின் தந்தை பெயர் யாது? | திருவேங்கடம் |
| 24. | ஆனந்தரங்கருக்கு 'மன்சுபேதார்' என்னும் பட்டத்தை வழங்கியவர்கள் யார்? | முசபர்சங் |
| 25. | முசபர்சங் ஆனந்தரங்கருக்கு வழங்கிய குதிரைகள் எத்தனை? | மூவாயிரம் |
| 26. | ஆனந்தரங்கர் கோவை என்னும் நூலை இயற்றியவர் யார்? | தியாகராச தேசிகர் |


0 Comments