ஒன்பதாம் வகுப்பு தமிழ் 100 வினா விடைகள் 9th Tamil Part 14
தலைப்பு வாரியான வினாக்கள் மற்றும் விடைகள்
வாழ்த்து / கம்பர் / திருக்குறள் / நன்னூல்
- நன்னூல் கொண்டுள்ள அதிகாரங்கள் எத்தனை?
விடை: இரண்டு (எழுத்து, சொல்). - தொல்காப்பியத்தின் வழிநூல் எனக் கருதப்படுவது எது?
விடை: அகத்தியம். - முன்னூல் தொல்காப்பியம் எனில், பின்னூல் எது?
விடை: நன்னூல். - அறம், பொருள், இன்பம், வீடு அடைதலைப் பயனாய் கூறுவது எந்நூல்?
விடை: நன்னூல். - திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மரின் பெயர்கள் யாவை?
விடை: தருமர், தாமத்தர், பரிதி, திருமலையர், பரிப்பெருமாள், மணக்குடவர், நச்சர், பரிமேலழகர், மல்லர், காளிங்கர்.
- நடுத்திராவிட மொழிகள் எனப்படுபவை எவை?
விடை: தெலுங்கு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலாமி, பர்ஜி, கதபா, கோண்டா, நாயக்கி, பெங்கோ, ஜதபு. - இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருந்த நாகரிகம் எது?
விடை: திராவிட நாகரிகம். - திராவிடர்கள் பேசிய மொழியே எவ்வாறு அழைக்கப்படுகிறது?
விடை: திராவிட மொழியாகும். - பிறமொழிகள் தோன்றி வளர அடிப்படையாக அமைந்த மொழி எது?
விடை: மூலமொழி. - ஒரு மூலமொழியிலிருந்து தோன்றி வளரும் மொழியை எவ்வாறு அழைப்பர்?
விடை: கிளைமொழி. - "திராவிட மொழிகள், திராவிட இனம், திராவிட நாகரிகம் முதலிய சொற்றொடர்களில் திராவிடம் எனும் சொல் பெயரடையாக வந்துள்ளது" என்று கூறியவர் யார்?
விடை: கால்டுவெல்.
- “இரவின் அறுவடை” நூலின் ஆசிரியர் யார்?
விடை: புவியரசு. - புகழ் பெற்ற எழுத்தாளரான ஜார்ஜ் பெர்னாட்ஷா எந்த நாட்டைச் சார்ந்தவர்?
விடை: அயர்லாந்து. - காரியாசன் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர்?
விடை: சமணம். - சிறுபஞ்சமூலம் எவ்வகை நூல்களுள் ஒன்று?
விடை: பதினெண் கீழ்க்கணக்கு. - பிறரிடம் இரந்து செல்லாமை எதற்கு அழகு?
விடை: காலுக்கு. - ஆராய்ச்சிக்கு அழகு எது என சிறுபஞ்சமூலம் கூறுகிறது?
விடை: முடிவை துணிந்துரைத்தல். - இசைக்கு அழகு எது?
விடை: கேட்போர் நன்றெனப் புகழ்தல். - பெரும்பான்மை பொது அறக்கருத்துகளையும் சிறுபான்மை சமய அறக்கருத்துகளையும் கொண்டுள்ள நூல் எது?
விடை: சிறுபஞ்சமூலம். - இந்திர மாநகரை ஆண்டுவந்தவர்கள் யாவர்?
விடை: பாண்டவர்கள். - துரியோதனின் மாமன் பெயர் யாது?
விடை: சகுனி. - துரியோதனின் தந்தை பெயர் யாது?
விடை: திருதராட்டிரன். - திருதராட்டிரனின் தம்பி பெயர் யாது?
விடை: விதுரன். - திருதராட்டினன் அமைத்துள்ள மண்டபத்தைக் காண பாண்டவர்களை அழைக்கத் தூது சென்றவர் யார்?
விடை: விதுரன். - பாரதியாரின் துணைவியார் பெயர் யாது?
விடை: செல்லம்மாள். - பாஞ்சாலி சபதம் எத்தனை பாகங்களைக் கொண்டது?
விடை: இரண்டு பாகம். - பாஞ்சாலி சபதத்தில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை எத்தனை?
விடை: 412. - பாஞ்சாலி சபதத்தில் உள்ள சருக்கங்களின் பெயர்கள் யாவை?
விடை: சூழ்ச்சிச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச்சருக்கம். - திருதராட்டிரனின் புதல்வர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?
விடை: கௌரவர்கள். - பாரதியாரின் பெற்றோர் யாவர்?
விடை: சின்னசாமி இலக்குமி அம்மையார்.
- பாரதியார் வாழ்ந்த காலம் யாது?
விடை: 11.12.1882 - 11.09.1921. - "இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்" என்று பாடியவர் யார்?
விடை: பாரதியார். - "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற இந்தவையம்" என்று பாடியவர் யார்?
விடை: பாரதிதாசன். - "சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும், சபைகளிலே தமிழுெந்து முழங்க வேண்டும்" எனப் பாடியவர் யார்?
விடை: கவிமணி. - "பாட்டாளி மக்களது பசிதீர வேண்டும், பணமென்ற மோகத்தின் விசைதீர வேண்டும்" என்று பாடியவர் யார்?
விடை: நாமக்கல் கவிஞர். - "ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற" என்று பாடியவர் யார்?
விடை: முடியரசன். - 'எழுத்து' என்னும் இதழில் புதுக்கவிதை எழுதியவர்கள் யாவர்?
விடை: எஸ்.வைத்தீஸ்வரன், தருமு சிவராமு, மணி, சி.சு.செல்லப்பா. - "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் எல்லாமே எரிகின்றன" என்ற புதுக்கவிதையின் ஆசிரியர் யார்?
விடை: வல்லிக்கண்ணன். - "உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமையில்லா மனிதகுலம் உயர்வு தாழ்வு வளர்க்குது" என்று பாடியவர் யார்?
விடை: பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம். - இருபதாம் நூற்றாண்டின் கவிதை வளர்ச்சியில் யாருடைய கவிதைகள் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன?
விடை: பாரதியின் கவிதைகள். - இந்திய ஒருமைப்பாட்டின் உயர்வினை விளக்கும் பாரதியின் கவிதை வரி எது?
விடை: முப்பதுகோடி முகமுடையாள். - கற்றோரைக் களிப்பில் ஆழ்த்துவன யாருடைய கவிதைகள்?
விடை: கவிமணியின் கவிதைகள். - நாமக்கல்லாரின் கவிதைகளில் எச்சிந்தனை மிளிர்கின்றன?
விடை: காந்திய சிந்தனை. - பாரதிதாசனைத் தொடர்ந்து இயற்கையின் அழகை எழிலுறப் படம்பித்துக் காட்டுவதில் யாருடைய கவிதைகள் சிறந்து விளங்குகின்றன?
விடை: வாணிதாசன். - "செந்தமிழ் சொல் லெடுத்து இசை தொடுப்பேன் வண்ணச் சந்தத்திலே கவிதைச் சரம் தொடுப்பேன்" என்று பாடியவர் யார்?
விடை: கண்ணதாசன். - "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்" என்ற பாடலின் மூலம் வாழ்வியல் சிந்தனையை கூறுபவர் யார்?
விடை: கண்ணதாசன். - "அழகுத்தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ?" என்று குழந்தையின் நடையினை வர்ணித்தவர் யார்?
விடை: கண்ணதாசன். - "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்று பாடியவர் யார்?
விடை: கண்ணதாசன். - "உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்" என்ற பாடலைப் பாடியவர் யார்?
விடை: கண்ணதாசன். - கண்ணதாசன் பிறந்த சிறுகூடல்பட்டி என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: சிவகங்கை மாவட்டம். - ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடித் திருவிழா போன்ற புதினங்களைப் படைத்தவர் யார்?
விடை: கண்ணதாசன்.
- வாயசம் என்பதன் பொருள் யாது?
விடை: காகம். - சிறை என்பதன் பொருள் யாது?
விடை: இறக்கை. - புறப்பொருள் பற்றி நானூறு பாடல்களைக் கொண்ட நூல் எது?
விடை: புறநானூறு. - "கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" என்ற பாடல் வரி இடம்பெறும் நூல் எது?
விடை: குறுந்தொகை. - குறைந்த அடியளவால் பாடற்பெற்ற பாடல்களின் தொகுப்பு நூல் எது?
விடை: குறுந்தொகை. - வங்கிய சேகரபாண்டியனின் மகன் பெயர் யாது?
விடை: வங்கிய சூடாமணி பாண்டியன். - இறைவனுக்கு சண்பகமாலை சாத்தி வழிபடுவதற்காக சண்பக நந்தவனத்தை ஏற்படுத்தியவன் யார்?
விடை: வங்கிய சூடாமணி பாண்டியன். - பாண்டியரின் குலத்தெய்வம் எது?
விடை: சொக்கநாதன் (அ) சுந்தர பாண்டியன். - தென்னவன் என்று அழைக்கப்படுபவர் யார்?
விடை: பாண்டியன். - மீன்கொடியை உடையவன் யார்?
விடை: பாண்டியன். - பரஞ்சோதியார் பிறந்த திருமறைக்காடு என்னும் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: நாகை மாவட்டத்தில். - சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அலுகால் பீடத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் எது?
விடை: திருவிளையாடற்புராணம். - திருவிளையாடற் புராணத்தைப் போற்றி கலி வெண்பா, மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?
விடை: பரஞ்சோதி முனிவர். - திருவிளையாடற் புராணத்தின் மூன்று காண்டங்களின் பெயர்கள் யாவை?
விடை: மதுரைக்காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க்காண்டம். - திருவிளையாடற் புராணத்தில் உள்ள மொத்த பாடல்கள் எத்தனை?
விடை: 3363. - திருவிளையாடற் புராணத்திற்கு உரை எழுதியவர் யார்?
விடை: பண்டிதமணி ந.மு.வேங்கடசாமி. - உடல் முழுவதும் கண்களையுடையவன் யார்?
விடை: இந்திரன்.
- பழந்தமிழரின் பொருளீட்டச் செல்வதை தொல்காப்பியர் குறிக்கும் 'காலில் பிரிவு' என்பதன் பொருள் யாது?
விடை: தரைவழிப் பிரிதல். - தொல்காப்பியர் குறிக்கும் 'கலத்தில் பிரிவு' என்பதன் பொருள் யாது?
விடை: நீர்வழிப் பிரிதல். - தமிழ்நாட்டில் விற்கப்பட்ட பிற நாட்டுப் பொருள்கள் எவை?
விடை: முத்து, பவளம், ஆரம், அகில், வெண்துகில், சங்கு. - "விளைந்து முதிர்ந்த விழுமுத்து" என கூறும் நூல் எது?
விடை: மதுரைக்காஞ்சி. - தமிழ் சொல்லான 'அரிசி' என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?
விடை: ஒரைஸா. - தமிழ் சொல்லான 'கருவூர்' என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?
விடை: கரோரா. - தமிழ் சொல்லான 'காவிரி' என்பதற்கு கிரேக்கத்தில் வழங்கும் பெயர் யாது?
விடை: கபிரில். - கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்பதைக் கூறும் நூல் எது?
விடை: புறநானூறு. - பொன்னைச் சுமந்து வந்த யவனர்கள், அதற்கு ஈடாக மிளகைப் பெற்றுச் சென்ற செய்தியைக் கூறும் நூல் எது?
விடை: அகநானூறு. - கடற்கரையை அடுத்து இருக்கும் ஊர் எது?
விடை: பட்டினம் பாக்கம். - பழந்தமிழகத்தின் வணிகப்பொருட்களைப் பற்றிக் குறிப்பிடும் நூல்கள் யாவை?
விடை: பட்டினப்பாலை, மதுரைக்காஞ்சி. - கெலன் கெல்லர் இயற்கை எய்திய ஆண்டு மற்றும் நாள் எது?
விடை: 1968 சூன் முதல் நாள். - அந்தகக்கவி வீரராகவர் பிறந்த ஊர் யாது?
விடை: காஞ்சி மாவட்டம், பூதூர். - பிறவிலேயே கண்ணொளி இழந்த கவிஞர் யார்?
விடை: அந்தகக்கவி வீரராகவர். - தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் வீரராகவர் இயற்றிய பாடல்கள் எத்தனை?
விடை: 39. - ஆனந்தரங்கர் யாரிடம் கல்வி பயின்றார்?
விடை: எம்பார். - சொஸ்த என்பதன் பொருள் யாது?
விடை: தெளிந்த அல்லது உரிமையுடைய. - லிகிதம் என்பதன் பொருள் யாது?
விடை: கடிதம் அல்லது ஆவணம்.
- மு.வரதராசனாரின் தம்பி எழில் எதைப் பற்றி வகுத்து அனுப்புமாறு கடிதம் எழுதியிருந்தார்?
விடை: ஆக்கவேலை முறை பற்றி. - “அடக்கி ஒழுகுவதற்கு யாரும் இல்லை. அதனால் தான் வீழ்ச்சி நேர்ந்தது" என்று கூறியவர் யார்?
விடை: விவேகானந்தர். - செயங்கொண்டாரின் காலம் யாது?
விடை: கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு. - "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" என்று கூறும் நூல் எது?
விடை: பன்னிரு பாட்டியல். - பிரான்சு நாட்டின் ஒரு பகுதியாகவும் பரப்பளவில் சிறியதாகவும் பெரும்பாலும் தமிழர்கள் வாழும் பகுதியாகவும் உள்ள தீவு எது?
விடை: ரியூனியன் தீவு. - திரு.வி.க தமிழ் இலக்கியங்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் யாரிடம் கற்றார்?
விடை: கதிரைவேலர். - திரு.வி.க நடத்திய இதழ்கள் யாவை?
விடை: தேசபக்தன், நவசக்தி. - உமர்கய்யாம் அவர்களின் முழுப்பெயர் யாது?
விடை: கியாதுதீன் அபுல்பாத் உமர்கய்யாம்.
- இளங்கோவடிகளும், சீத்தலைச் சாத்தனாரும் எந்த சங்கத்தைச் சார்ந்த புலவர்கள்?
விடை: கடைசங்க காலப் புலவர்கள். - சொல்லில் ஏற்படும் குற்றங்கள் எவை என மணிமேகலை கூறுகிறது?
விடை: பொய்பேசுதல், புறங்கூறுதல், கடுஞ்சொல், பயனற்றசொல். - சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் எவை?
விடை: அன்புடைமை, நாணம், பிறர்க்கு உதவுதல், உயிர்களிடத்து இரக்கம், உண்மை பேசுதல். - காமராசர் மணிமண்டபம் அமைந்துள்ள இடம் எது?
விடை: கன்னியாகுமரி. - தில்லையாடி வள்ளியம்மை பிறந்த இடம் யாது?
விடை: தென்ஆப்பிரிக்காவில் ஜோகன்ஸ்பர்க். - விசயரங்கச் சொக்கநாதன் எந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்?
விடை: 1688.


0 Comments