TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-53
தமிழ் இலக்கியம் மற்றும் வரலாறு (வினா விடைத் தொகுப்பு)
திருக்குறள் மற்றும் சிறப்புப் பெயர்கள்
- 201. மக்கள் வாழ்வில் அடையத்தக்க உறுதிப்பொருள்கள்: அறம், பொருள், இன்பம்.
- 202. 'திருக்குறள் முப்பால்' எனப் பெயர் பெறக் காரணம்: அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டிருப்பதால்.
- 203. திருக்குறளுக்கு வழங்கும் வேறு சிறப்புப் பெயர்கள்: வாயுறை வாழ்த்து, பொதுமறை, பொய்யாமொழி.
- 204. திருக்குறளை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர்: வீரமாமுனிவர்.
- 205. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: ஜி.யு.போப்.
- 206. உருசிய நாட்டில் திருக்குறள் பாதுகாக்கப்பட்டுள்ள இடம்: அணு துளைக்காத கிரெம்ளின் மாளிகையில் உள்ள சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகம்.
- 207. இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் வைக்கப்பட்டுள்ள நூல்: விவிலியம் (பைபிள்).
- 208. வீரமாமுனிவர் பிறந்த நாடு: இத்தாலி.
- 209. வீரமாமுனிவரின் இயற்பெயர்: கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி.
- 210. வீரமாமுனிவர் எவ்வாறு தம் பெயரைத் தனித் தமிழாக்கினார்: தைரியநாதன் என்ற பெயரை வீரமாமுனிவர் எனச் சூட்டிக்கொண்டார்.
- 211. வீரமாமுனிவர் வெளியிட்ட முதல் அகரமுதலி: சதுரகராதி.
- 212. வீரமாமுனிவர் இயற்றிய கிறித்தவக் காப்பியம்: தேம்பாவணி.
- 213. 'குட்டித்தொல்காப்பியம்' என்று அழைக்கப்படும் வீரமாமுனிவரின் இலக்கண நூல்: தொன்னூல் விளக்கம்.
- 214. குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்களின் இயற்பெயர்: சுல்தான் அப்துல் காதிறு.
- 215. குணங்குடி மஸ்தான் சாகிபு யாரால் ஈர்க்கப்பட்டார்: தாயுமானவர் பாடல்களால்.
- 216. ஆறுமுக நாவலர் பிறந்த ஊர்: யாழ்ப்பாணம் நல்லூர்.
- 217. ஆறுமுக நாவலரின் இயற்பெயர்: ஆறுமுகனார்.
- 218. ஆறுமுக நாவலரை "வசன நடை கைவந்த வல்லாளர்" எனப் பாராட்டியவர்: பரிதிமாற்கலைஞர்.
- 219. புதுக்கவிதைக்கு வித்திட்டவர்: பாரதியார்.
- 220. சமுதாயப் புரட்சிக்கு வித்திட்டவர்: பாரதிதாசனார்.
- 221. பொதுவுடைமைக்கு வித்திட்டவர்: திரு.வி.கலியாணசுந்தரனார்.
- 222. தனித்தமிழுக்கு வித்திட்டவர்: மறைமலையடிகள்.
- 223. பேச்சுக்கலைக்கு மற்றும் சிறுகதைக்கு வித்திட்டவர்கள்: அறிஞர் அண்ணாதுரை, புதுமைப்பித்தன்.
- 224. ஜி.யு.போப் அவர்களின் விரிவாக்கம்: ஜியார்ஜ் யுக்ளோ போப்.
- 225. ஜி.யு.போப் பிறந்த நாடு: பிரான்சு நாட்டின் எட்வர்டு தீவு.
- 226. "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தம் கல்லறையில் எழுத வேண்டும் என இறுதிமுறியில் எழுதி வைத்தவர்: ஜி.யு.போப்.
- 227. குற்றியலுகரம் பிரித்து எழுதுக: குறுமை + இயல் + உகரம்.
- 228. குறில் எழுத்து ஒலிக்க வேண்டிய மாத்திரை அளவு: ஒரு மாத்திரை.
- 229. நெடில் எழுத்து ஒலிக்க வேண்டிய மாத்திரை அளவு: இரண்டு மாத்திரை.
- 230. மெய் எழுத்துகள் ஒலிக்க வேண்டிய மாத்திரை அளவு: அரை மாத்திரை.
- 236. இலக்கணப் பிழை இல்லாமல் வழங்கி வருதல்: இலக்கணமுடையது.
- 237. 'நகர்ப்புறம்' என்பதைப் 'புறநகர்' எனவும், 'கால்வாய்' என்பதை 'வாய்க்கால்' எனவும் மாற்றி வழங்குதல்: இலக்கணப்போலி.
- 238. தகுதியான சொற்களைப் பேசுதல்: தகுதி வழக்கு.
- 239. அமங்கலமான சொல்லை நீக்கி மங்கலமான சொல்லால் வழங்குதல்: மங்கலம்.
- 240. பலர் முன்னே கூற இடர்ப்பாடாகத் தோன்றும் சொற்களை நீக்கித் தகுந்த சொற்களால் கூறுதல்: இடக்கரடக்கல்.
- 231. கணினியை முதன்முதலில் கண்டறிந்தவர்: சார்லஸ் பாப்பேஜ்.
- 232. கணினி உருவாக முதல் படிவமாக அமைந்தது: மணிச்சட்டம்.
- 233. கணக்கிடும் கருவியைக் கண்டறிந்தவர்: பிளேஸ் பாஸ்கல்.
- 234. முதல் செயல்திட்ட வரைவாளர் எனப் போற்றப்பட்டவர்: ஆங்கிலக் கவிஞர் பைரனின் மகள் லேடி லவ்லேஸ்.
- 235. "இணையம்" என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர்: ஜான் டாஸ்டல் என்னும் அமெரிக்கர்.
- 266. கடிகாரத்தின் பெண்டுலத்தை (ஊசலை) அமைத்து நேரத்தைக் கணக்கிடும் முறையைக் கண்டறிந்தவர்: கலீலியோ கலிலி.
- 267. சூரியனைச் சுற்றியே புவி நகர்கிறது என்ற வானியல் கொள்கையின் ஆசிரியர்: கோபர்நிகஸ்.
- 241. தென்னாட்டின் ஜான்சிராணி என்று காந்தியடிகளால் அழைக்கப்பட்டவர்: கடலூர் அஞ்சலையம்மாள்.
- 242. அஞ்சலையம்மாளின் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர்: லீலாவதி (அவரைத் தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றபோது).
- 243. "தத்தெடுக்கப்பட்ட மகள்" என்று காந்தியடிகளால் செல்லமாக அழைக்கப்பட்டவர்: அம்புஜத்தம்மாள்.
- 244. அம்புஜத்தம்மாள் நிறுவிய தொண்டு நிறுவனத்தின் பெயர்: சீனிவாச காந்தி நிலையம்.
- 245. அம்புஜத்தம்மாள் தம் எழுபதாண்டு நினைவாக எழுதிய நூல்: நான் கண்ட பாரதம்.
- 246. சொற்கள் இரண்டு முதலாகத் தொடர்ந்து வந்து பொருள் தருவது: தொடர்.
- 247. இரு சொற்களுக்கிடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது: வேற்றுமைத்தொகை.
- 248. காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்: வினைத்தொகை.
- 249. காவடிச்சிந்து பாடலை இயற்றியவர்: அண்ணாமலையார்.
- 250. அண்ணாமலையார் பிறந்த ஊர்: திருநெல்வேலி மாவட்டத்துச் சென்னிகுளம்.
- 251. விக்கிரம சோழன் உலா என்ற பாடலை இயற்றியவர்: ஒட்டக்கூத்தர்.
- 252. ஒட்டக்கூத்தரின் சிறப்புப்பெயர்: கவிச்சக்கரவர்த்தி.
- 253. ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல்கள்: மூவருலா, தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்.
- 254. ஒட்டக்கூத்தரின் காலம்: பன்னிரண்டாம் நூற்றாண்டு.
- 255. உலா என்பது எந்த இலக்கிய வகைகளுள் ஒன்று: தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
- 256. மகளிரின் பருவங்கள்: ஏழு வகைப்படும்.
- 257. மகளிரின் ஏழுவகைப் பருவங்கள்: பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்.
- 258. மலரின் பருவங்கள்: ஏழு வகைப்படும் (அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்).
- 249. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்: குமரகுருபரர்.
- 269. குமரகுருபரர் பிறந்த ஊர்: திருவைகுண்டம்.
- 270. குமரகுருபரர் புலமை மிக்க மொழிகள்: தமிழ், வடமொழி, இந்துஸ்தானி.
- 271. பிள்ளைத்தமிழ் வகைகள்: இரண்டு வகைப்படும் (ஆண்பாற்பிள்ளைத்தமிழ், பெண்பாற்பிள்ளைத்தமிழ்).
- 272. பிள்ளைத்தமிழில் உள்ள மொத்தப் பருவங்கள்: பத்துப்பருவங்கள்.
- 273. ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான பருவங்கள்: ஏழு பருவங்கள்.
- 274. ஆண்பாலுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்: சிற்றில், சிறுபறை, சிறுதேர்.
- 275. பெண்பாலுக்குரிய இறுதி மூன்று பருவங்கள்: கழங்கு, அம்மானை, ஊசல்.
- 259. போரில் தொண்ணூற்றாறு விழுப்புண்கள் பெற்ற சோழ மன்னன்: சோழன் விசயாலயன்.
- 260. தில்லைக்குப் பொன்வேய்ந்த சோழன்: முதல் பராந்தகன்.
- 261. "ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் ஆறு வினாக்கள் செய்தியினை அறியச் செய்யும்" என்று கூறியவர்: அறிஞர் கிப்ளிங்.
- 262. திருவருட்பா என்ற நூலை இயற்றியவர்: இராமலிங்க அடிகளார்.
- 263. இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர்: சிதம்பரத்துக்கு அருகிலுள்ள மருதூர்.
- 264. 'வலவன் ஏவா வானூர்தி' என்ற வரி இடம்பெற்றுள்ள நூல்: புறநானூறு.
- 265. வானூர்தி ஓட்டுபவனைத் தமிழில் அழைக்கும் சொல்: வலவன்.
- 276. தமிழ் இலக்கண வகைகள்: ஐந்து வகைப்படும் (எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி).
- 277. 'யாப்பு' என்பதன் பொருள்: கட்டுதல்.
- 278. செய்யுள் உறுப்புகள்: ஆறு வகைப்படும் (எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை).
- 279. ஓரெழுத்து தனித்தோ இணைந்தோ ஒலித்தால் அது: அசை.
- 280. அசை வகைகள்: இரண்டு வகைப்படும் (நேரசை, நிரையசை).
- 281. அசைகள் பல சேர்ந்து அமைவது: சீர்.
- 282. பா-வின் வகைகள்: நான்கு வகைப்படும் (வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா).
- 283. அணி என்பதன் பொருள்: அழகு.
- 284. உவமானத்தின் இயல்புகளை உவமேயத்தின் மேல் ஏற்றிக் கூறுவது: உருவக அணி.
- 285. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றியவர்: காரியாசான்.
- 286. காரியாசான் சார்ந்த சமயம்: சமண சமயம்.
- 287. சிறுபஞ்சமூலம் இடம்பெறும் நூல்கள் வகை: பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
- 288. ஐம்பெருங்காப்பியங்கள்: சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.
- 289. சிலப்பதிகாரத்தின் காண்டங்கள்: மூன்று காண்டங்கள் (புகார், மதுரை, வஞ்சி).
- 290. சிலப்பதிகாரத்தின் சிறப்பு: முத்தமிழ்க் காப்பியம், நாடகக்காப்பியம், முதற்காப்பியம்.
- 291. "நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு" எனக் கூறியவர்: பாரதியார்.
- 292. சிலப்பதிகாரத்தை இயற்றியவர்: இளங்கோவடிகள்.
- 293. பாவேந்தர் பாரதிதாசனின் இயற்பெயர்: கனக சுப்புரத்தினம்.
- 294. கம்பராமாயணத்தை இயற்றியவர்: கம்பர்.
- 295. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர்: இராமாவதாரம்.
- 296. "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்" என்று கம்பரைப் புகழ்ந்து பாடியவர்: பாரதியார்.
- 297. அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஊர்: மராட்டிய மாநிலத்தில் அம்பவாடே.
- 298. இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வகுக்க அமைக்கப்பட்ட குழு உறுப்பினர்கள்: எழுவர் குழு.
- 299. இந்திய அரசு "பாரத ரத்னா" என்னும் உயரிய விருதை அம்பேத்கருக்கு வழங்கிய ஆண்டு: 1990.
- 300. "ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரித்தே" என்ற நூற்பா இடம்பெற்றுள்ள நூல்: நன்னூல்.


0 Comments