6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் | Tamil Part-58


TNPSC TRB TET 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான தமிழ் 100 வினா-விடை | Tamil Part-58
பெரியபுராணம் மற்றும் சேக்கிழார் பற்றிய தகவல்கள் (701-713)
  • 701. பெரியபுராணத்தை அருளியவர்: சேக்கிழார்.
  • 702. சேக்கிழார் பிறந்த ஊர்: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்றத்தூர்.
  • 703. சேக்கிழாரின் இயற்பெயர்: அருண்மொழித்தேவர்.
  • 704. சேக்கிழார் தலைமையமைச்சராகத் திகழ்ந்த மன்னன்: அநபாயச் சோழன்.
  • 705. சேக்கிழார் பெற்ற பட்டம்: உத்தம சோழப் பல்லவர்.
  • 706. தெய்வச் சேக்கிழார், தொண்டர்சீர் பரவுவார் எனச் சிறப்பிக்கப்படுபவர்: சேக்கிழார்.
  • 707. சேக்கிழாரின் காலம்: கி.பி. 12 ஆம் நூற்றாண்டு.
  • 708. பெரியபுராணத்தில் உள்ள தொகையடியார்கள் பற்றிய குறிப்பு: 9.
  • 709. பெரியபுராணத்தில் உள்ள தனியடியார்கள் பற்றிய குறிப்பு: 63.
  • 710. பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்ட பெயர்: திருத்தொண்டர் புராணம்.
  • 711. "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுக்கப் பாடப்பெற்ற நூல்: பெரியபுராணம்.
  • 712. பெரியபுராணத்தைப் "பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ" என்று புகழ்ந்தவர்: மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்.
  • 713. "உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியந்தான் பெரியபுராணம்" என்றவர்: திரு.வி.கலியாணசுந்தரனார்.
அப்பூதியடிகளார் பற்றிய தகவல் (714)
  • 714. தம் வீட்டிலுள்ள அனைத்துப் பொருள்களுக்கும் திருநாவுக்கரசர் எனப் பெயர் சூட்டியவர்: அப்பூதியடிகளார்.
திரைப்படம் தொடர்பான தகவல்கள் (715-721)
  • 715. ஒளிப்படம் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் (1830): எட்வர்டு மைபிரிட்சு.
  • 716. படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்: ஈஸ்ட்மன்.
  • 717. இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தவர் (1894): பிரான்சிஸ் சென்கின்சு.
  • 718. திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் எந்தப் பொருளால் ஆனது: செல்லுலாய்டு.
  • 719. நடிப்பாற்றல் மிக்கவரையும் நடிப்பைக் கற்றுத் தருபவரையும் அழைக்கும் விதம்: இயக்குநர்.
  • 720. ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தவர்: எடிசன்.
  • 721. கருத்துப்படத்தை (Cartoon animation) உருவாக்கியவர்: வால்ட் டிஸ்னி.
பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன் பற்றிய தகவல்கள் (722-732)
  • 722. எம்.ஜி. இராமச்சந்திரன் பிறந்த ஊர்: இலங்கையிலுள்ள கண்டி.
  • 723. எம்.ஜி.ஆர் பிறந்த ஆண்டு மற்றும் நாள்: 1917 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 17 ஆம் நாள்.
  • 724. எம்.ஜி.ஆரின் பெற்றோர்: கோபாலமேனன், சத்யபாமா.
  • 725. "புரட்சி நடிகர்", "மக்கள் திலகம்" என்று போற்றப்பட்டவர்: எம்.ஜி.இராமச்சந்திரன்.
  • 726. அறிஞர் அண்ணா அவர்கள் எம்.ஜி.இராமச்சந்திரனைப் போற்றிய விதம்: இதயக்கனி.
  • 727. எம்.ஜி.ஆர் சென்னை மாநிலச் சட்ட மன்ற மேலவை உறுப்பினரான ஆண்டு: 1963 ஆம் ஆண்டு.
  • 728. 1967-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற தொகுதி: பரங்கிமலைத் தொகுதி.
  • 729. எம்.ஜி.ஆர் புதிய கட்சியைத் தொடங்கிய ஆண்டு: 1972 ஆம் ஆண்டு.
  • 730. எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராகப் பதவி ஏற்ற ஆண்டு: 1977 ஆம் ஆண்டு.
  • 731. எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம்: சென்னைப் பல்கலைக்கழகம்.
  • 732. இந்திய அரசு எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் 'பாரத ரத்னா' விருதை வழங்கிய ஆண்டு: 1988 ஆம் ஆண்டு.
பண்டைய தமிழகம், தொல்லியல் மற்றும் தமிழ் பற்றிய தகவல்கள் (733-740)
  • 733. "மனித நாகரிகத் தொட்டில்" என்று அழைக்கப்படுவது: இலெமுரியா (குமரிக்கண்டம்).
  • 734. கிறித்து பிறப்பதற்கு முன்பே கிரேக்கம், உரோமபுரி, எகிப்து ஆகிய நாடுகளுக்குத் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள்கள்: அரிசி, மயில்தோகை, சந்தனம்.
  • 735. கி.மு.பத்தாம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்குத் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட பொருள்கள்: யானைத் தந்தமும், மயில்தோகையும், வாசனைப் பொருள்களும்.
  • 736. "கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரி இடம்பெற்ற நூல்: மணிவாசகம் (திருவாசகம்).
  • 737. "பண்ணொடு தமிழொப்பாய்" என்ற வரி இடம்பெற்ற நூல்: தேவாரம்.
  • 738. தொல்லியலை ஆங்கிலத்தில் குறிப்பிடுவது: ஆர்க்கியாலஜி.
  • 739. இந்தியத் தொல்லியல் துறையினர் 1963-ஆம் ஆண்டு பூம்புகார் அருகில் கடல் அகழாய்வு மேற்கொண்ட இடம்: கீழார்வெளி.
  • 740. பண்டைய காலத்தில் இறந்தோரை அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் வைத்துப் புதைக்கும் தாழிகளின் பெயர்: முதுமக்கள் தாழிகள்.
திருநாவுக்கரசர் பற்றிய தகவல்கள் (741-750)
  • 741. திருநாவுக்கரசர் பிறந்த ஊர்: கடலூர் மாவட்டத்திலுள்ள திருவாமூர்.
  • 742. திருநாவுக்கரசரின் பெற்றோர்: புகழனார், மாதினியார்.
  • 743. திருநாவுக்கரசரின் தமக்கையார்: திலகவதியார்.
  • 744. திருநாவுக்கரசருக்குப் பெற்றோர் இட்ட பெயர்: மருணீக்கியார்.
  • 745. திருநாவுக்கரசரின் வேறு பெயர்கள்: தருமசேனர், அப்பர், வாசீசர், தாண்டக வேந்தர்.
  • 746. சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை: நால்வர்.
  • 747. திருநாவுக்கரசரின் பாடல்கள் போற்றப்படும் விதம்: தேவாரம்.
  • 748. திருநாவுக்கரசரின் காலம்: கி.பி. ஏழாம் நூற்றாண்டு.
  • 749. சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் இடம்பெற்றுள்ள திருமுறைகள்: 4, 5, 6-ஆம் திருமுறைகள்.
  • 750. "நாமார்க்கும் குடியல்லோம்" என்னும் திருநாவுக்கரசரின் பாடல் யாருக்கு "அச்சமில்லை அச்சமில்லை" எனப் பாடத் தூண்டியது: மகாகவி பாரதியார்.
சொற்களின் மூலம் மற்றும் இலக்கிய வரிகள் (751-755)
  • 751. உலகம் என்னும் தமிழ்ச்சொல் பிறந்த சொல்: உலவு.
  • 752. "ஞாலம்" என்னும் சொல் தோன்றிய சொல்: ஞால் (தொங்குதல்).
  • 753. "தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" என்ற வரி இடம்பெற்ற நூல்: பதிற்றுப்பத்து.
  • 754. "அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்" என்ற வரி இடம்பெற்ற நூல்: பெருங்கதை.
  • 755. "ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் - உளன்" என்று பாடியவர்: கம்பர்.
அகப்பொருள் இலக்கணம் - முதற்பொருள் மற்றும் திணைகள் (756-772)
  • 756. அகப்பொருள் இலக்கணத்தில் அன்பின் ஐந்திணைகள்: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
  • 757. அகவொழுக்கம் நிகழ்தற்குக் காரணமாக விளங்கும் முதற்பொருள்: நிலமும் பொழுதும்.
திணைநிலம்
758. குறிஞ்சிமலையும் மலை சார்ந்த இடமும்
759. முல்லைகாடும் காடு சார்ந்த இடமும்
760. மருதம்வயலும் வயல் சார்ந்த இடமும்
761. நெய்தல்கடலும் கடல் சார்ந்த இடமும்
762. பாலைமணலும் மணல் சார்ந்த இடமும்
  • 763. பொழுது எத்தனை வகைப்படும்: இரண்டு வகைப்படும் (பெரும்பொழுது, சிறுபொழுது).
பெரும்பொழுதுமாதங்கள்
764. கார்காலம்ஆவணி, புரட்டாசி
765. குளிர்காலம்ஐப்பசி, கார்த்திகை
766. முன்பனிக்காலம்மார்கழி, தை
767. பின்பனிக்காலம்மாசி, பங்குனி
768. இளவேனிற்காலம்சித்திரை, வைகாசி
769. முதுவேனிற்காலம்ஆனி, ஆடி
  • 770. சிறுபொழுதுகள்: காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை.
  • 771. எற்பாடு (எல் + பாடு) என்பதன் பொருள்: எல் - ஞாயிறு, பாடு - மறையும் நேரம்.
  • 772. ஆறு பெரும்பொழுதுகளும் வரும் நிலங்கள்: மருதம், நெய்தல்.
சீறாப்புராணம் மற்றும் உமறுப்புலவர் பற்றிய தகவல்கள் (773-782)
  • 773. சீறாப்புராணத்தை இயற்றியவர்: உமறுப்புலவர்.
  • 774. உமறுப்புலவரின் ஆசிரியர்: எட்டயபுரம் கடிகை முத்துப் புலவர்.
  • 775. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல்: சீதக்காதி (அப்துல் காதிர் மரக்காயர்).
  • 776. சீதக்காதியின் மறைவுக்குப் பின் உமறுப்புலவருக்கு உதவிய வள்ளல்: அபுல்காசிம்.
  • 777. உமறுப்புலவர் இயற்றிய மற்றொரு நூல்: முதுமொழிமாலை.
  • 778. உமறுப்புலவரின் காலம்: கி.பி. 17 ஆம் நூற்றாண்டு (பதினேழாம் நூற்றாண்டு).
  • 779. இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் வரலாற்றைக் கூறும் நூல்: சீறாப்புராணம்.
  • 780. சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்கள்: மூன்று (விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜ்ரத்துக் காண்டம்).
  • 781. சீறாப்புராணம் எத்தனை விருத்தப் பாக்களால் ஆனது: 5027 விருத்தப்பாக்கள்.
  • 782. சீறா - என்பதன் பொருள்: வாழ்க்கை.
காந்தியடிகள் பற்றிய தகவல்கள் (783-785)
  • 783. காந்தியடிகள் சிறுவனாக இருந்தபோது அவரைப் பெரிதும் கவர்ந்து, உண்மையே பேசவேண்டும் என்று உறுதிபூணச் செய்த நாடகம்: அரிச்சந்திரன் நாடகம்.
  • 784. தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட எந்தச் சட்டங்களைக் காந்தியடிகள் எதிர்த்துப் போராடினார்: கறுப்புச் சட்டங்கள்.
  • 785. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட ஆண்டு: 1948 ஆம் ஆண்டு சனவரி 30.
புறப்பொருள் இலக்கணம் - புறத்திணைகள் (786-799)
  • 786. புறப்பொருள் எவற்றைப் பற்றிக் கூறுகிறது: வாழ்க்கைக்கும் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் ஆகியவற்றைப் பற்றிக் கூறுவது.
  • 787. புறத்திணைகள் எத்தனை வகைப்படும்: 12 வகைப்படும்.
திணைசெயல் / பொருள்
788. வெட்சித் திணைபகை நாட்டின் ஆநிரைகளைக் கவர்ந்து வருவது.
789. கரந்தைத் திணைகவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகளை மீட்டு வருவது.
790. வஞ்சித் திணைமண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டின் மீது படையெடுப்பது.
791. காஞ்சித் திணைதன் நாட்டைப் பிடிக்க வந்த பகைவனோடு எதிர்த்துப் போரிடுவது.
792. நொச்சித் திணைபகைவரால் முற்றுகையிடப்பட்ட தம் கோட்டையைக் காக்க உள்ளிருந்தே போரிடுவது.
793. உழிஞைத் திணைபகைவனின் கோட்டையைச் சுற்றி வளைப்பது.
794. தும்பைத் திணைபகை மன்னர்கள் இருவரும் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு போரிடுவது.
795. வாகைத் திணைபோரில் வெற்றி பெற்ற மன்னன் சூடும் பூ (வெற்றியைப் பற்றிக் கூறுவது).
796. பாடாண் திணைஒரு மனிதனின் வீரம், கொடை, புகழ் பற்றிக் கூறுவது.
797. பொதுவியல் திணைவெட்சி முதல் பாடாண் வரை உள்ள திணைகளுக்குப் பொதுவானவற்றைக் கூறுவது.
798. கைக்கிளைஒருதலைக் காமத்தைக் குறிக்கும் திணை.
799. பெருந்திணைபொருந்தாக் காமத்தைக் குறிக்கும் திணை.
கலித்தொகை பற்றிய தகவல் (800)
  • 800. கலித்தொகையைத் தொகுத்தவர்: நல்லந்துவனார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement