ஆளுமை மற்றும் வழிகாட்டல் பற்றிய கேள்வி-பதில்கள்
ஆளுமைக் கோட்பாடுகள் மற்றும் வகைகள்:
- ஆக்பர்ன் குறிப்பிடும் ஆளுமை வகைகள் யாவை?
* தன்னலக்காரன், புரட்சியாளன், தலைவன் மற்றும் தற்பெருமைக்காரன். - கேட்டல் என்பவர் ஆளுமையின் எத்தனை முதன்மை பண்புக் கூறுகளைக் குறிப்பிட்டார்?
* 16 பண்புக் கூறுகள். - மனிதர்களை அகமுகன், புறமுகன் என்று வகைப்படுத்தியவர் யார்?
* கார்ல் யூங். - ஆளுமையின் அடித்தளமாக அமைவது எது?
* இட் (Id). - ஃப்ராய்டின் ஆளுமை வளர்ச்சியின் படிநிலைகள் எத்தனை?
* ஐந்து. - உள இயக்கக் கோட்பாடு என்று அழைக்கப்படுவது எது?
* ஃப்ராய்டின் ஆளுமை வகைப்பாடு. - புதிய ஃப்ராய்டியன் கோட்பாடுகளை உருவாக்கியவர்கள் யார்?
* யூங் மற்றும் ஆட்லர். - தாழ்வுச் சிக்கல் (Inferiority Complex) எனும் கருத்தை உருவாக்கியவர் யார்?
* ஆட்லர்.
- கபால அளவையை (Phrenology) உருவாக்கியவர் யார்?
* கால் (Gall). - முக அளவையை உருவாக்கியவர் யார்?
* லாம்பரோஸோ. - ஆளுமையை அளவிடும் முறைகள் யாவை?
* அகவய முறை மற்றும் புறத்தோற்று நுண்முறைகள். - ஆளுமையை அளவிட முதன்முதலில் வினா வரிசையை தயாரித்தவர் யார்?
* உட்வொர்த். - பொருத்தப்பாடு பட்டியலை (Adjustment Inventory) உருவாக்கியவர் யார்?
* பெல். - பலவாளுமைப் பண்புகள் பற்றிய பட்டியல்களை (MMPI - மின்னஸோட்டா சோதனை) உருவாக்கியவர்கள் யார்?
* ஹாதவே மற்றும் மெக்கின்லே. - பல பண்புகளின் அளவுகளை தொகுத்து கூறும் வரைபடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
* ஆளுமையின் படிமம் (Psychograph). - புறத்தோற்று நுண்முறைகளின் முக்கிய வகைகள் யாவை?
* புலன்காட்சி நுண்முறை, உருவாக்கப்படும் நுண்முறை மற்றும் பொருளுரைக்கும் நுண்முறை. - ஹெர்மன் ரோர்ஷாக் தயாரித்த மைத்தடச் சோதனையில் எத்தனை அட்டைகள் உள்ளன?
* 10 அட்டைகள். - பொருள் இணைத்தறி சோதனை (TAT) நடத்தியவர்கள் யார்?
* முர்ரே மற்றும் மார்கன். - தடையில்லா அல்லது கட்டுபாடற்ற இணைத்தறி சோதனையை உருவாக்கியவர்கள் யார்?
* யூங் மற்றும் ரோஸனாப்.
- நாட்டத்திற்கு (Aptitude) வரையறை செய்தவர்கள் யார்?
* பின்ஹாம் மற்றும் டிராக்ஸ்லர். - "குறிப்பிட்ட ஒரு தொழிலை அல்லது செயல்திறனைக் கற்பதற்கு ஒருவனிடமுள்ள இயற்கைத் திறனை அளவிடுவதே நாட்டச் சோதனையாகும்" என்று கூறியவர் யார்?
* பின்ஹாம். - இசை நாட்டச் சோதனையை உருவாக்கியவர் யார்?
* சீஷோர். - பல்நாட்டச் சோதனைகளில் அடங்குபவை எவை?
* சொல் ஆய்வு மற்றும் கருத்தியல் ஆய்வு. - தொழிற் கவர்ச்சிப் பட்டியலை உருவாக்கியவர் யார்?
* கூடர் (Kuder). - "அபிப்ராயம் என்பது ஒருவரது வார்த்தைகள் மூலம் வெளிப்படுகிறது, அவற்றை நேரிடையாக அளவிட முடியும்" என்று கூறியவர் யார்?
* தர்ஸ்டன். - மனப்பான்மைக்கும் சார்பெண்ணத்திற்கும் உள்ள வேற்றுமையை குறிப்பிட்டவர் யார்?
* ஸிம்சன். - ஆல்போர்ட் மற்றும் ஸ்டேக்னர் கூற்றுப்படி மனப்பான்மை எத்தனை நிலைகளின் வழியாக உருவாகின்றது?
* நான்கு நிலைகள்.
- "ப் ராய்டின் பெயரையும் கருத்துகளையும் உள்ளடக்காத உளவியல் வரலாறு உண்மை வரலாறாகாது" என கூறியவர் யார்?
* போரிங் (Boring). - மனமுறிவிற்கான (Frustration) காரணங்கள் யாவை?
* துலங்கல் வலுப்படுத்துதல் நிறுத்தப்படுதல், தடைப்படுதல் மற்றும் மனப்போராட்டங்கள். - மனப்போராட்டங்களின் (Conflicts) வகைகள் யாவை?
* அணுகுதல்-அணுகுதல், அணுகுதல்-விலகுதல் மற்றும் விலகுதல்-விலகுதல். - மாணவர்களிடையே மனக்குழப்பம் ஏற்படக் காரணங்களில் ஒன்று எது?
* கல்வி முறையில் உள்ள குறைபாடுகள். - பொருத்தப்பாட்டின் தரத்தைக் கண்டறிய உளவியலறிஞர்கள் எந்த அடிப்படையை நிர்ணயித்துள்ளனர்?
* உடல் நலம், பணியில் திறமை, சமூக ஏற்பு மற்றும் உள அமைதி. - மாணவர்களிடம் பிரச்சினைக்குரிய நடத்தையைத் தோற்றுவிக்கும் காரணிகள் யாவை?
* குடும்பக் காரணி, சமூகக் காரணி மற்றும் பள்ளி சார்ந்த காரணி. - "பிறப்பிலேயே குற்றம் புரியும் இயல்போடு சிலர் பிறக்கிறார்கள்" என்ற கருத்தை முன்வைத்தவர் யார்?
* லாம்பிரோஸோ. - "மனநலம் என்பது ஒருவனது ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டினைக் குறிப்பதாகும்" என்றவர் யார்?
* ஹேட்ஃபீல்டு. - தொடக்கநிலை மனநோய்கள் (Neurosis) எவை?
* அன்சைடி நீயுரோசிஸ், பீதிநோய் மற்றும் அப்சசிவ் நோய். - தீவிர உளத்தடுமாற்ற நோய்கள் (Psychosis) எவை?
* ஸ்கீசோபெரனியா, மேனிக் டிப்ரசிவ் மற்றும் பெரனோயா. - ஆளுமைக் கோளாறு நோய்கள் எவை?
* போதை பொருட்களுக்கு அடிமையாதல், பாலுணர்வு முரண்பாடு மற்றும் குற்றம் புரிதல். - மாணவர்களின் மனநலத்தை மேம்படுத்தும் வழிமுறைகள் யாவை?
* அடிப்படை வசதிகள், பயனுள்ள கல்வி ஏற்பாடு மற்றும் தேர்வுமுறை சீர்திருத்தம். - ஆசிரியர் மனநலத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் யாவை?
* குறைந்த ஊதியம், வசதிகள் கிட்டாமை மற்றும் வகுப்பில் நிலவும் மாணவர் ஒழுங்கின்மை.
- வழிகாட்டுதல் (Guidance) என்பதற்கான வரையறை வழங்கியவர்கள் யார்?
* ஆர்தர் ஜெ. ஜோன்ஸ் மற்றும் குரோ & குரோ. - வழிகாட்டுதலின் முக்கிய வகைகள் யாவை?
* கல்வியில் வழிகாட்டல், தொழில் தேர்வில் வழிகாட்டல் மற்றும் தனிநபர் பிரச்சினைக்குத் தீர்வு காணல். - மறைமுக (நெறிசாரா) அறிவுரை பகர்தலை உருவாக்கியவர் யார்?
* கார்ல் ரோஜர்ஸ். - நெறிசாரா அறிவுரை பகர்தல் எவ்வாறு வர்ணிக்கப்படுகிறது?
* மாணவர் மைய அறிவுரை பகர்தல். - "மாணாக்கர்களின் வளர்ச்சிக்குத் தேவையான பல்வகை பணிகளின் தொகுப்பே வழிகாட்டுதல் ஆகும்" என்றவர் யார்?
* நியூஸம். - திறமையிருந்தும் குறைசாதனையுடையோராகத் திகழ்வதற்கான காரணிகள் யாவை?
* குடும்பச் சூழ்நிலை, சமுதாயச் சூழ்நிலை மற்றும் பள்ளிச் சூழ்நிலை சார்ந்த காரணிகள். - கல்வியில் வழிகாட்டுதலில் அடங்குபவை எவை?
* வாசிக்கும் திறனை மேம்படுத்துதல், தகவல் திரட்டும் பணி மற்றும் பின்தொடர் செயல்பணி. - கல்வி நிலையங்களில் அறிவுரை தேவைப்படும் மாணவர்கள் யார்?
* நடத்தைப் பிரச்சினையுடையோர் மற்றும் கல்விப் பிரச்சினையுடையோர்.
- "மனச்சோதனைகளும் அளவிடுதலும்" என்ற நூலை எழுதியவர் யார்?
* கேட்டல். - "ஆய்வுச் செயல் ஐந்து முக்கிய படிநிலைகளைக் கொண்டது" என விளக்கியவர் யார்?
* ஜான் டூயி. - உளவியல் என்பது எதனை ஆராயும் அறிவியல்?
* மனித நடத்தையை ஆராயும் அறிவியல். - கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எது?
* கல்வி உளவியல். - பிறந்த குழந்தையால் உடனடியாக நடக்க முடியாததற்குக் காரணம் என்ன?
* உடல் உறுப்புகள் முதிர்ச்சி அடையாமை. - தன்னைப் பற்றித் தானே அறிந்துகொள்ளப் பயன்படும் முறை எது?
* அகநோக்கு முறை. - பிறரைப் பற்றி அறிந்து கொள்ளப் பயன்படும் உளவியல் முறை எது?
* புறநோக்கு முறை (உற்றுநோக்கல் முறை). - தர்க்கவியல் (Logic) எந்த இயலின் ஒரு பகுதியாகும்?
* தத்துவவியல் (மெய்விளக்கவியல்). - "உன்னையே நீ அறிவாய்" எனக் கூறியவர் யார்?
* சாக்ரடீஸ். - "சைக்காலஜி" (Psychology) எனும் சொல் எந்த மொழிச் சொல்?
* கிரேக்க மொழிச் சொல். - 'சைக்கி' (Psyche) என்பது எதைக் குறிக்கும் சொல்?
* ஆன்மாவைக் (மனதைக்) குறிக்கும் சொல். - 'லாகஸ்' (Logos) என்பது எதைக் குறிக்கும் சொல்?
* அறிவியலைக் (ஆராய்தலைக்) குறிக்கும் சொல். - உற்று நோக்கலின் படிகள் எத்தனை?
* நான்கு படிகள். - உற்று நோக்கலின் இறுதிப்படி எது?
* நடத்தையைப் பொதுமைப் படுத்துதல். - பண்டைக் காலத்தில் 'உளவியல்' என்ற சொல்லின் பொருள் என்ன?
* ஆன்மா பற்றியது. - வாழ்க்கைச் சம்பவத்துணுக்கு முறை எந்த முறையுடன் அதிகத் தொடர்புடையது?
* உற்றுநோக்கல் முறை. - கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் எவை?
* மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்றல் சூழ்நிலை மற்றும் ஆசிரியர். - பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன?
* கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல். - "மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும்" என்று கூறுவது எது?
* தர்க்கவியல். - உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை எது?
* பரிசோதனை முறை. - வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை எது?
* உற்று நோக்கல் முறை. - மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை எது?
* மதிப்பீட்டு முறை. - பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை எது?
* அகநோக்கு முறை.
- "உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல" என்று கூறியவர் யார்?
* கான்ட். - "உளவியல் என்பது மனது பற்றியது" என்று கூறியவர் யார்?
* கான்ட். - "உளவியல் என்பது நனவு நிலைப் பற்றியது" - இதனை வலியுறுத்தியவர் யார்?
* வில்லியம் ஜேம்ஸ் மற்றும் வுண்ட். - "உளவியல் என்பது மன அறிவியல் அல்ல" என்று கூறியவர் யார்?
* வாட்சன். - "உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே" - இதனைக் கூறியவர் யார்?
* சிக்மண்ட் பிராய்டு. - தற்கால உளவியல் கோட்பாடு எதைப் பற்றியது?
* மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும். - "உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும்" இதனைக் கூறியவர் யார்?
* வில்லியம் மக்டூகல். - "உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றி படிப்பதாகும்" என கூறியவர் யார்?
* குரோ மற்றும் குரோ.
- "நாம் கோபத்தில் இருக்கும் போது நமது முகம் சிவப்பாகிறது" - இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை எது?
* அகநோக்கு முறை. - எவ்விதக் கருவியும் இன்றி பிறருடைய நடத்தையை அறிந்து கொள்ள உதவும் முறை எது?
* உற்று நோக்கல் முறை. - நன்கு தூங்கிய குழந்தைக்கும் தூங்காத குழந்தைக்கும் இடையேயான கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை எது?
* பரிசோதனை முறை. - தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை எது?
* பரிசோதனை முறை. - மனித நடத்தையை ஆராய்வதற்கு உதவும் ஓர் அறிவியல் பூர்வமான முறை எது?
* பரிசோதனை முறை. - கல்வி நிலையங்களில் மாணவர்களின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமான பதிவேடு எது?
* திரள் பதிவேடு. - ஒரு மாணவனின் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியின் தகவல் குறிப்பு எதில் பதியப்படுகிறது?
* வாழ்க்கைத் துணுக்கு முறை. - மனச் செயல்கள் எதனை மையமாக கொண்டு செயல்படுகின்றன?
* பெருமூளை. - "கல்வி உளவியல் கல்வியுடன் சம்பந்தப்பட்ட நடத்தை மற்றும் ஆளுமைத் திறனின் முழு அளவையும் உள்ளடக்கியது" இதனைக் கூறியவர் யார்?
* சி.இ. ஸ்கின்னர். - "பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் ஆகும்" இதனைக் கூறியவர் யார்?
* ஏ.குரோ மற்றும் சி.குரோ. - வாக்கெடுப்பு (Referendum) எந்த உளவியல் முறையின் ஓர் வகையாகும்?
* வினாவரிசை முறை.
- "ஒருவனுக்குத் தரப்படும் கல்வியும், பயிற்சியும், அவன் வளரும் சூழ்நிலையும் அவனை உருவாக்குகின்றன, மரபு நிலைக்கு எங்குப் பங்கும் இல்லை" எனக் கூறியவர் யார்?
* வாட்சன். - குழந்தைகள் உடல் தசைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வளர்ச்சி எது?
* இயக்க வளர்ச்சி. - அறிவு, மனவெழுச்சி, மனப்பான்மை இவை மூன்றும் சேர்ந்தது எது?
* மன வளர்ச்சி. - அடிப்படை மனவெழுச்சிக்குரிய காரணியாக அமையாதது எது?
* பொறாமை. - சிக்கலான மனவெழுச்சிக்குரிய காரணி எது?
* பொறாமை அல்லது கூச்சம். - நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக எந்த வயதில் முடிவடையும்?
* 15 முதல் 16 வயதில். - முதிர்ச்சி, கற்றல் இவை எதைக் குறிப்பிடுகின்றன?
* வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்.
- கார்ல் - பியர்சனின் ஆய்வு எதனுடன் தொடர்புடையது?
* மரபு நிலை. - கார்ல் - பியர்சன் மேற்கொண்ட ஆய்வுப் பொருள் எது?
* டார்வின் - கால்டன் குடும்பங்கள். - ஒவ்வொரு மனித உயிரணுவிலும் உள்ள குரோமோசோம் ஜோடிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
* 23 ஜோடிகள் (46 குரோமோசோம்கள்).


0 Comments