12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 25

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 25

கேள்வி 25 : J வடிவ மற்றும் S வடிவ வளைவுகளை வேறுபடுத்துக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

J வடிவ வளைவு (J-Shaped Curve) S வடிவ வளைவு (S-Shaped Curve)
ஒரு இனக்கூட்டத்தின் அளவு வேகமாகப் பெருகிக் கொண்டே செல்கிறது. சில இனக்கூட்டங்களில் உயிரினங்களின் எண்ணிக்கை முதலில் மெதுவாகவும், பின்னர் வேகமாகவும் உயர்கிறது.
திடீரெனத் தோன்றும் கட்டுப்படுத்தும் காரணிகளால் வளர்ச்சி விகிதம் உடனடியாகத் தடை செய்யப்படுகிறது. சுற்றுச்சூழல் தடைகளின் அதிகரிப்பால் வளர்ச்சி வேகம் மெதுவாகக் குறைந்து, சமநிலையை எட்டி, தொடர்ந்து பராமரிக்கப்படுகிறது.
வளர்ச்சி விகிதம் மிக வேகமாக இருக்கும். சீரான வளர்ச்சியைக் கொண்டிருக்கும்.
இவை பொதுவாகப் பூச்சியினங்களில் காணப்படுகின்றன. இவை பொதுவாகச் சிறிய பாலூட்டிகளில் காணப்படுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement