12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 26

கேள்வி 26 : இனக்கூட்டம் நெறிப்படுத்தப்படுதல் குறித்து எழுதுக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • ஒவ்வொரு விலங்கினக்கூட்டத்தின் அடிப்படை நோக்கம் அதன் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும். இருப்பினும், இந்த அதிகரிப்பு எல்லையற்றதாக இருப்பதில்லை.
  • சுற்றுச்சூழல் தாங்கும் திறன் எல்லையை அடைந்தவுடன், இனக்கூட்டத்தின் எண்ணிக்கை நிலையான தன்மையுடன் காணப்படும் அல்லது சுற்றுச்சூழல் நிலைகளுக்கு ஏற்றவாறு ஏற்ற இறக்கத்துடன் இருக்கும்.
  • இனக்கூட்டத் தொகையைக் கட்டுப்படுத்தும் காரணிகள் பின்வருமாறு:
    • அடர்த்தி சாராத புறக் காரணிகள் (Density-Independent External Factors):
      • உயிரினங்களுக்குக் கிடைக்கும் இடப்பரப்பு மற்றும் வசிப்பிடம்
      • தட்பவெப்பநிலை
      • உணவு
    • அடர்த்தி சார்ந்த அகக் காரணிகள் (Density-Dependent Internal Factors):
      • போட்டி
      • கொன்றுண்ணுதல் (Predation)
      • வெளியேற்றம் (Emigration)
      • உள்ளேற்றம் (Immigration)
      • நோய்கள்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement