12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27

12-ஆம் வகுப்பு விலங்கியல் | பாடம் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் | பாடப்புத்தக மதிப்பீட்டு வினாக்கள் | Q.No 27

கேள்வி 27 : மண்ணின் பண்புகள் குறித்து குறிப்பு வரைக.


முழுமையான மதிப்பெண்கள் பெறுவதற்கான விடை :

  • மண்ணின் நயம் : மண்ணில் உள்ள துகள்களின் அளவைப் பொறுத்து மண்ணின் நயம் அமைகிறது. மண் துகள்களின் அளவின் அடிப்படையில் மணல், வண்டல், களிமண் என பல மண் வகைகள் உள்ளது.
  • மண் புரைமை : ஒரு குறிப்பிட்ட கனஅளவு உள்ள மண்ணின் துகள்களுக்கு இடையே உள்ள இடைவெளி புரைவெளி எனப்படும். அதாவது புரைவெளிகளால் நிரம்பியுள்ள மண்ணினுடைய கன அளவின் ஒட்டுமொத்த பருமனின் சதவீதமே மண் புரைமை ஆகும்.
  • மண்ணின் ஊடுருவ விடும் தன்மை (அ) உட்புகவிடும் தன்மை : புரைவெளி ஊடாக நீர் மூலக்கூறுகள் நகர்வதை தீர்மானிக்கும் மண்ணின் தன்மை, மண்ணின் ஊடுருவ விடும் தன்மை எனப்படும். மண்ணின் ஊடுருவ விடும் தன்மை புரைவெளியின் அளவினை நேரடியாகச் சார்ந்துள்ளது.
  • மண் வெப்பநிலை : மண் சூரியனிடமிருந்தும், சிதையும் கரிமப்பொருட்களிலிருந்தும் மற்றும் புவியின் உட்புறத்திலிருந்தும் வெப்ப ஆற்றலைப் பெறுகிறது.
  • மண் நீர் : மண்ணில் காணப்படும் நீர் முக்கியமான கரைப்பானகவும், கடத்தும் காரணியாகவும் செயல்படுவது மட்டுமில்லாது மண்ணின் நயம், மண் துகள்களின் கட்டமைப்பு ஆகியவற்றையும் பராமரித்து, பல்வேறு தாவரங்களும், விலங்குகளும் வாழத்தகுதியான வாழிடங்களாக மாற்றுகின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement